May 12, 2017

தீயின் சுவை



பருகிச் செரி
க்கும் பிரியங்களும்
நனைத்துத் துடைக்கும் ரகசியங்களும்
பெயரறியாக் காட்டுப்பூ ஒன்றின்
வாசனையை மீட்டுவது

ற்றிய முத்தக்கங்கில்
மெல்ல முளைக்கும் தீயின் சுவை
நதியொன்றின் முதற் துளியின்
குளிர்மை கொண்டது

கருணை சூழ் வருடல்களும்
அன்பு நுரைக்கும் சொற்களும்
கண்டு வியந்த ஓவியமொன்றை
மீண்டும் தீட்டுவது

அடைமழையில் நனைந்திறுகும்
மூத்த பறவையின் இறக்கையொத்த
நினைப்பை உலர்த்திட
கண்ணசைப்பொன்று போதும் இப்போது!

2 comments:

விதைக்கப்படும் துயரங்கள்

  நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...