உறையும் பாவம்

சொல்லொன்று
கழுத்தை மெல்ல அறுக்கையில்
பிசிறாய் விழும்
கூரிய துகளொன்று
அறுந்த நரம்பு ஒன்றையெடுத்து
மெல்லத் தைத்துக்கொண்டிருக்கிறது.
வழிந்தோடும் உதிரமெங்கும்
கருஞ்சிவப்பில்
பாவம் உறைந்திருக்கிறது.


No comments: