May 28, 2017

பிரிய இறகொன்று



யானையொன்றின் பிளிறலில்
வனம் அதிர்கிறது
கிளை விட்டு வேகமாய்
இறக்கையடிக்கிறாய்
படபடப்பில்
றகொன்று
பிரிந்து மிதக்கிறது

இறங்கி வரும்
றகைப் பற்றுவதும்
அதிலிருக்கும்
பிரியத்தை வாசிப்பதும் தவிர்த்து
வேரடியில்
அமர்ந்திருக்கும் நான்

வேறென்ன செய்ய!

3 comments:

Kasthuri Rengan said...

நச் ...
வேறென்ன செய்யலாம் ?
உணர்வைக் கடத்தும் ரசவாசம் கவிதையில்

ராஜி said...

ஒன்னும் செய்ய வேண்டாம். ரசித்தலே போதுமானது

ராமலக்ஷ்மி said...

அருமை :)

பாட்டல் ராதாக்களின் கதை

கடைசி நம்பிக்கையும் கைவிட்டுப்போன தருணம். அந்த சிறிய வீட்டின் கதவினை மூடி தாளிட்டு, ஜன்னல்களை பூட்டுகிறாள் அஞ்சலம். கேஸ் ஸ்டவ்வின் இரண்டு அட...