Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Oct 29, 2009

இலவசம்


திருடன் ஒரு வீட்டில் திருடுவதற்காக வருகிறான், வீட்டில் யாரும் இல்லை, நாய் மட்டுமே இருக்கிறது. நாய் திருடனையும், திருடன் நாயையும் மாறிமாறிப் பார்க்கிறார்கள். திருடன் யோசிக்கிறான் “குரைக்கிற நாய் கடிக்காது, முறைக்கிற நாய் கடிக்காமல் இருக்காது”. நாய் குரைக்காமல் முறைக்கிறது, தான் மறைத்து வைத்திருந்த வருத்த கோழிக் கறித் துண்டை போடுகிறான்.

நாய் கோழிக்கறித் துண்டை முகர்ந்து பார்த்துவிட்டு, அவன் மேல் பாய்ந்தது. இருவரும் கட்டிப்பிடித்து உருண்டபோது...

“நாயே... நானும் பார்த்தேன், நீயும் பார்த்தே அதோட நிறுத்தியிருக்கலாம். நீ எங்கே விழுந்து கடிச்சிருவியோன்னு கோழிக்கறித்துண்டை போட்டேன். மோந்து பார்த்தே தின்றிருக்கலாம் அல்லது திங்காம இருந்திருக்கலாம் அது உன் இஷ்டம், ஆனால் மோந்து பார்த்துட்டு மேல விழுந்து கடிக்கிறியே...... இது நியாயமா?” என்று திருடன் கேட்கிறான்.

அப்போது “எனக்கு லஞ்சமாக, எனக்கு இலவசமாக ஒரு கோழிக்கறித் துண்டை தருகிற வரையில் நீ மனிதனா திருடனா என என்னால் தீர்மானிக்க முடியவில்லை. எப்போது நீ லஞ்சமாக, இலவசமாக ஒரு கோழிக் கறித்துண்டு போட்டாயோ அப்போது தீர்மானித்துவிட்டேன் நீ திருடன். இனியும் உன்னை விட்டுவிடக்கூடாது என்று முடிவு செய்து கடிக்கிறேன்” என்று நாய் சொல்கிறது.

நூறு வருடங்களுக்கு முன் மாமேதை லியோ டால்ஸ்டாய் குழந்தைகளுக்காக எழுதிய கதை. (பாரதிகிருஷ்ணகுமார் அவர்களின் உரையில் கேட்ட கதை)


அதன் பின்...
திருடன்(ர்கள்) ஒரு போதும் மாறவேயில்லை.

நாய்கள் மாறிவிட்டன...

நாய்கள் மட்டுமா........!!!???



----------------------------------------------------------------

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...