வேர்களெங்கும் முட்கள்கையளித்துவிட்டுப் போன
அந்தச் சொல்லில் ஒரு முள்
சொருகப்பட்டிருந்தது

வளர்ந்து கிளைகள் நீட்டி
விருட்சமாய் விரிந்து
பரந்து நிற்கின்றது

அந்தச் சொல்லிலிருந்து
வடியும் நினைவெங்கிலும்
தைத்திருக்கின்றன
முனை முறிந்த முட்கள்

மௌனம் காக்கும்
மண்ணைக் கிளர்ந்து
வேர்களைப் பார்க்கிறேன்
வேர்களெங்கும் முட்கள்!

-

4 comments:

ராஜி said...

அருமை சகோ

Mathu S said...

செமை பாஸ்

ராமலக்ஷ்மி said...

அற்புதம்.

kumaran said...

Giving vent to d hurt feelings...Thru.. kavidhai...