துக்கத்தின் சூடுகண்ணீர்த் துளிக்குள்
என்னவெல்லாம்
அடங்கியிருக்கிறதென
ஒரு வேதியியல் ஆராய்ச்சி
நிகழ்ந்து கொண்டிருக்கிறது

உப்பும் கதகதப்பும்
நீரும் அழுக்கும்
இன்னபிற
வேதிப்பொருட்கள் குறித்தும்
பட்டியல்
நீண்டு கொண்டேயிருக்கிறது

நீள் பட்டியலில்
அந்த ஈரத்தில்
சூடாயிருந்த துக்கம் குறித்து
ஏதும் இல்லையென்பதற்காக
இன்னொரு முறையா
கண்ணீர் சிந்தமுடியும்!


No comments: