சூதுசக்கரம் சுழல்கிறது
இது சூதாட்டம் தான்
ஒருமுனையில் நடத்தும் நீ
மறுமுனையில் கனவுகளை
பணயம் வைத்த நான்
நிற்கும் புள்ளியில்தான்
இருவர் வாழ்க்கையுமே

சுழன்றோயும் சக்கரத்தின் மீது
தோற்பவருக்கு குரோதமும்
வெல்பவருக்கு பிரியமும் குவியலாம்
ஆயினுமென்ன சுற்றும் பொழுதெல்லாம்
சக்கரம் சுழன்றுகொண்டேயிருக்கும்


2 comments:

Mathu S said...

சுழற்றுவோம்
சுழலட்டும் சக்கரங்கள்

ராஜி said...

சிறந்த சொல்லாடல்