உயிர்த்தல்தறிக்கப்பட்டு எஞ்சியிருக்கும்
பெருமரத்தின் அடிக்கட்டையில்
கிளைகளாய் கைகள் நீட்டிக்
காத்திருக்கிறேன்

இளைப்பாறக் கிளைதேடும்

பறவையொன்று 
என்னில் அமரும்போது
மரமாய் உயிர் பெறுவேன்!

1 comment:

everestdurai said...

அருமை கதிர்