ஒரு எழவின் கதை


முப்பது வருடங்களாகப்பிரிந்த மனைவி
திருமணத்திற்குப் பிறகு
ஒட்டு றவு அற்றுப்போன மகள்
மகன் சாவுக்குபின் பேத்திகளைக்கூட
அண்டவிடாத மருமகள் என
உறவுகளுக்காய்த் தவித்தவன்
ஒருநாள் உறக்கத்திலிருந்து
எழ மறந்து போனான்

”எழவு காங்கனும்” எனும் மையப்புள்ளிக்கு
திசைகளிலிருந்து திரும்பிய மூவருக்கும்
மறந்துபோன அவன் வாசத்திற்குப் பதில்
மரணம் தின்ற எச்சத்தின் வாசமும்
அடக்கம் பண்ணிக் காரியம் செய்ய
காசுக்கு எங்கே போவதென்ற திகைப்பும்
அடர்த்தியாய் அடித்தது  
 
இறந்தவனின் தலையணைக்குக் கீழே
இருந்த எட்டாயிரம் ரூபாய்க் காசும்
இரும்புப்பெட்டிக்குள் கிடந்த பத்திரங்களும்
அவனை எந்தப்பஞ்சாயத்துக்கும் இழுக்காமல்
நல்லபடியாய் நகர்த்திப்போன
மூன்றாம் நாள் அண்டம் பொறுக்கி
ஆற்றில் விட்டு கூரை மேல் சோறு போட்டு
பத்திரங்களின் கனத்தை பங்கு பிரித்ததில் 
தலைக்கு லட்சத்துக்குமேல் வந்தது


உறவுகள் ஒன்று கூடிப் போட்ட
மறுவிரால் விருந்தில் கோழிக்குழம்பை
சோற்றில் பிசைந்த மனைவியின்
வாயிலிருந்து நழுவியது ”எங்கூட்டுக்காரன்”
வெத்தலை மடித்துக்கொண்டே வாய்க்குள்
மென்று கொண்டிருந்தாள் மகள் “எங்கப்பன்”
யாரிடமோ அலைபேசியில் கதை
பேசும் மருமகள் உதிர்த்தாள் ”எங்க மாமனாரு”

காமத்திற்கும் நம்பிக்கையின்மைக்கும்
இடையே உரசி உரசிக் கிழியும் தருவாயில்
தூக்கியெறியப்பட்ட ஆணுறை போல்
உறவுகளில் நசுங்கிக்கிடந்த அவனின் ஆவி
அருகிலிருந்த ஊஞ்ச மரத்தின்
ஒரு கிளை நுனியில் ஆடிக்கொண்டிருந்தது

-0-

20 comments:

*இயற்கை ராஜி* said...

ம்ம்..எதிர்கவிதை போட விடாம இருக்க முயற்சியோ..? ஆனாலும் விடமாட்டோமில்ல.. அடுத்த கவிதை போடாமலா போவீங்க..இப்போ போறேன்.. அப்போ வர்றேன்

*இயற்கை ராஜி* said...

நிறைய சாவு வீடுகளில் நடைபெறும் யதார்த்த நிகழ்வு கண்முன்னே நிழலாடுகிறது

அதியா வீரக்குமார் said...

உங்கள் படைப்பு மனத்தின் அற்புதமான வெளிப்பாடு இந்தக் கவிதை.

நீங்கள் நண்பராய் வாய்த்ததற்க்குச் சந்தோசம் கொள்கிறேன்.

இதற்க்கு மேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை...

பழமைபேசி said...

நல்ல படைப்பு என்பது அனுபவத்தில் இருந்தே உயிர்க்கிறது என்பார் சான்றோர். அவர்தம் கூற்று, சில பல வினாக்களை எழுப்புகிறதே இங்கு?!

vasu balaji said...

க்ளாஸ்!

பழமைபேசி said...

//க்ளாஸ்!//

எழவு ஊட்டுல வந்து க்ளாஸ் கேக்குறாரு? மாப்பு, போச்சாது, கொஞ்சம் ஊத்திக் குடுத்துருங்க...

R A M E S H said...

அருமையான பதிவு....

MANO நாஞ்சில் மனோ said...

மனசு கனக்குதுய்யா....

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

அருமை - கவிதை அருமை - இயல்பான நிகழ்வு தான் இது. பணம் பத்தும் செய்யும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Unknown said...

நிதர்சனம்...

Jerry Eshananda said...

கடைசி ஆறு வரிகளில் ஆடி ப்போகிறது மனசு, இது போல இன்னும் வேண்டும் கதிர்.

vasu balaji said...

பழமைபேசி said...

//க்ளாஸ்!//

எழவு ஊட்டுல வந்து க்ளாஸ் கேக்குறாரு? மாப்பு, போச்சாது, கொஞ்சம் ஊத்திக் குடுத்துருங்க...//

’க்ளாஸ்’ இல்லாத எழவு ஊடு எங்கருக்கு

குடந்தை அன்புமணி said...

http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

ஹேமா said...

பாசத்தைவிட பணம்தான் வாழ்வாகிறது இப்பல்லாம் !

ஊர்சுற்றி said...

கலி காலத்தின் கவிதை வடிவம் ....Very Nice

க.பாலாசி said...

யதார்த்தம்..

நாகராஜ் said...

உயிர்ப்பான கவிதை !
எழவு வீடுகளில் உறைந்த உண்மைகள் !

A.R.ராஜகோபாலன் said...

உறவின் உருக்கத்தை
இவ்வளவு நெருக்கமாய்
நெருடலின்றி
நகர்த்திய விதம்
நர்த்தனம்
ஆடிய பிறகு
கால்களில் கண்ணீர்

நிரூபன் said...

உணர்வுகள் ஏதுமற்றவராய் இருக்கும் உறவுகள் வேஷங்கள் என்பதனை உங்களின் கவிதை நச்சென்று சொல்லுகிறது,

தெய்வசுகந்தி said...

யதார்த்தம்........