ஒன்னு ரெண்டு மூனு1.
எல்லாக் காதல் கவிதைகளிலும்
யாரோ ஒருத்தியின் வாசம்
படிந்துதான் கிடக்கிறது
சிலசமயம் அவள் அறிந்து
பலசமயம் அறியாமல்


2.
காத்திருத்தலின் 
அவஸ்தைகளை அளக்க
கருவிகளும் இல்லை
கற்பனையிலும் முடிவதில்லை
காத்திருத்தலில் மட்டுமே
அறிய முடிகிறது

3.
யாரோ ஒருவரின்
ஏதோ ஒன்று
எல்லாப் படைப்புகளிலும்
கால்நீட்டிப் படுத்திருக்கிறது
உடையணிவிப்பதோ
உடைகிழிப்பதோ
பூச்சூடி முகப்பூச்சிடுவதோ
சிதைத்துக்காட்டுவதோ
மட்டும்தான் படைப்பாளி

-0-

21 comments:

வானம்பாடிகள் said...

2,3,1.

ஊர்சுற்றி said...

//காத்திருத்தலின்
அவஸ்தைகளை அளக்க
கருவிகளும் இல்லை
கற்பனையிலும் முடிவதில்லை
காத்திருத்தலில் மட்டுமே
அறிய முடிகிறது//

கலக்கல் !!! :)

# கவிதை வீதி # சௌந்தர் said...

அசத்தல் கவிதைகள்...
ரசித்தேன்...
வாழ்த்துக்கள்..

செந்தில்குமார் said...

1. வாசம் படிந்துதான் கிடக்கிறது

2 காத்திருத்தலில் மட்டுமே அறிய
முடியும்

3 படைப்பாளி....

அருமை ....ஒன்னு ரெண்டு மூனு"

*இயற்கை ராஜி* said...

ம்.. போட்டுடலாமா எதிர் கவிதை..:-)

*இயற்கை ராஜி* said...

வர வர உங்க கவிதைய ரசிக்கிற மனசு மாறி எதிர் கவிதைக்குத் தான் புத்தி போகுது:)

ராமலக்ஷ்மி said...

மூனு ரெண்டு ஒன்னு:)!

கே.ஆர்.பி.செந்தில் said...

சி..தை..த்..து..க்
காட்டுவதோ
மட்டும்தான் படைப்பாளி..

ராஜி @ இயற்கை said...

போட்டாச்சு எதிர் கவிதை:)

ராஜி @ இயற்கை said...

போட்டாச்சு எதிர் கவிதை

ஓலை said...

கவிதை எளிமை நல்லா இருக்கு.
-------------

சரக்கு எதிர் கவுஜ எடுக்குமா
பலசரக்கு எதிர் கவுஜ நிக்குமா?

ILA(@)இளா said...

ராஜியை தொடர்ந்து நானும் ’எதிரி’ கவிதை போட்டாச்சேய்ய்ய்

ஓலை said...

2.
தளபதியின்
அவஸ்தைகளை மலர வைக்க
பாலாண்ணனும் வரவில்லை
குடுகுடுப்பையினாலும் முடியவில்லை
காத்திருத்தலில் மட்டுமே
வென்றதை காண முடிகிறது.

ஓலை said...

3. தளபதி ஒருவரின்
துண்டு ஒன்று
கனவில் படைப்புகளிலும்
பறக்கவிட்டு படுத்திருக்கிறது
தோளில் போடுவதோ
மேசைக்கடியில் பேசுவதோ
முக்காடு போட்டிடுவதோ
இறுக்கி கட்டுவதோ
மட்டும் தான் விருந்தாளி.

கும்க்கி said...

:)))

ஆ.ஞானசேகரன் said...

//காத்திருத்தலின் அவஸ்தைகளை அளக்ககருவிகளும் இல்லை
கற்பனையிலும் முடிவதில்லை காத்திருத்தலில் மட்டுமே அறிய முடிகிறது//

நல்லாயிருக்கு

லதாமகன் said...

கடைசி கவிதையை மிக நெருக்கமாக உணர்ந்தேன்!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

மூன்றாவது அருமை.. :)

3 2 1

காமராஜ் said...

ஆஹா...
காத்திருத்தலை அளக்க இப்படி ஒரு கண்டுபிடிப்பா ?

மூன்றுமே வருடல் ரகம்.

ஸ்ரீராம். said...

வருடிச் செல்லும் கவிதைகள் திருடிக் கொள்கின்றன மனதை!

வீரா said...

உங்கள் கவிதைகளுக்கு நான் அடிமையாகிவிடுவேன் போல..
சிறிது சிறிதாய் கவிதையின் சுவையை உணர்கிறேன்..
நான் ஒரு நல்ல கவிதை வாசிப்பாளனானால் அதற்க்கு நீஙகளே காரணமாக இருப்பீர்கள்...