இழப்பு…
அந்த நிமிடத்து மகிழ்ச்சியை
சேமிக்க ஆசை கொள்கிறோம்
அடுத்த நிமிடங்களில்

இடமாறு…
அங்கேயே இருக்கும் காற்றை
இடம்பெயர்த்து தருகிறது
காற்றாடி

இயல்பு…
வைக்கும்போதிருக்கும் விருப்பம்
எழுப்பும்போது இருப்பதில்லை
அலாரங்களின் மேல்

இலக்கு…
தெருச்சண்டை வேடிக்கைகளில்
எப்போதும் இலக்குகள் ஒன்றுதான்
சண்டையின் உச்சம்

-0-

9 comments:

ஓலை said...

ஏங்கண்ணா! இலக்கு இயல்பா இருந்தா பரவாயில்ல, இடமாறினா இழப்பாங்கோ!

ஹேமா said...

இயல்பு....அலாரம் அடிக்கிறது எல்லாருக்குமே இப்பிடித்தானா...சிரிச்சிட்டேன் !

ஊர்சுற்றி said...

அண்ணா..அனைத்தும் அருமை...

Chitra said...

"இ"ரசித்தேன்.

நசரேயன் said...

//ஏங்கண்ணா!
இலக்கு இயல்பா
இருந்தா
பரவாயில்ல,
இடமாறினா
இழப்பாங்கோ!//

இதையே கவிதையா போட்டு இருக்கலாம்

வானம்பாடிகள் said...

இயல்பு
இடமாறிடின்
இலக்கு
இழப்பு..

இப்படியும் எழுதலாம் தளபதி.

ஸ்ரீராம். said...

அலாரம் அருமை.
நசர், வானம்பாடிகள் பதிலைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது...!

இலக்கு
இடம்மாறின்
இழப்பு
இயல்பு...

!!!!

ராமலக்ஷ்மி said...

இயல்பானவற்றை இலக்குடன் இடமாற்றித் தந்துள்ளீர்கள் இழப்பு ஏதும் இல்லாமல்:)!

கே.ஆர்.பி.செந்தில் said...

இதுவும் நல்லாத்தான் இருக்கு..