மரண வாசனை


’கடைசியா முகம்பாருங்க’
மயானத்தில் தீமூட்டும்முன்
எட்டிப்பார்க்கும் விழிகளில் படிவது
மரணத்தின் கொடூரமுகமே   

**

மரணம் எதனினும்
வலிமையானது என்பதை
மரணங்களின் வாயிலாகவே
உணர்த்துகிறது

**

பிறப்பு கல்வி காதல்
கல்யாணம் பணி தொழில்
உறுதியற்ற எதற்கும் நாள் குறிப்பவன்
ஒருபோதும் குறிக்கத்துணிவதில்லை
உறுதியான மரணத்தின் நாளை

**

ஒவ்வொரு மரணமும்
உண்மையாய் உள்வாங்குவோருக்கு
அதுவரை கற்றறியாப் பாடத்திற்கு
பாஸ்மார்க் போட்டுவிட்டுப்போகிறது

**

தன்னைத் தழுவும்வரை
தனக்கு மரணம் வருமென்பதை
யாரும் நம்புவதில்லை
நம்பும் தருணத்தில்
மரணம் விட்டுவைப்பதில்லை

**

செருக்குகள் உதிர்த்து
நெருங்கிய மரணங்களைச்
செரிக்க முடியாமல் நிற்கையில்
கைகளில் பற்றுவதையெல்லாம்
அன்பால் நிரப்பச்செய்வதும் கூட
செரிக்கமுடியாத அதே மரணம்தான்

**
ஒரு உயிரை மட்டும்
கொய்துபோவதா மரணத்தின் பணி
வாழ்க்கைமேல் உடனிருப்போர்
வைத்திருக்கும் நம்பிக்கையைக்
கொஞ்சம் உதிர்க்கச் செய்வதும்தான்

**


13 comments:

வானம்பாடிகள் said...

அண்ணோவ் 300வது இடுகை அதுல 100 கவிதை வாழ்த்துகள் அண்ணாச்சி:).

க.பாலாசி said...

அப்டியா அண்ணாச்சி...:-))))))))))
வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...

மரணத்தைப்பற்றி எத்தன எழுதினாலும் மறிப்பதில்லை..

ராமலக்ஷ்மி said...

கனம்!
----------------

300-க்கு வாழ்த்துக்கள்!
----------------

100-ம் எப்போது தொகுப்பாகும்? தலைப்பை பதிலாகத் தந்து தப்பிக்க வேண்டாம்:)!

sakthi said...

100-ம் எப்போது தொகுப்பாகும்? தலைப்பை பதிலாகத் தந்து தப்பிக்க வேண்டாம்:)!

சீக்கிரம் ஒரு கவிதை தொகுப்பை எதிர்பார்க்கின்றோம்

sakthi said...

தன்னைத் தழுவும்வரை தனக்கு மரணம் வருமென்பதையாரும் நம்புவதில்லைநம்பும் தருணத்தில் மரணம் விட்டுவைப்பதில்லை

இந்த வரிகள் தானே நிதர்சனம்

மாதேவி said...

"தருணத்தில் மரணம் விட்டுவைப்பதில்லை"

300-க்கு வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

//மரணம் எதனினும்
வலிமையானது என்பதை
மரணங்களின் வாயிலாகவே
உணர்த்துகிறது//

சூப்பர்ப்!

ஓலை said...

300 களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்.

Mahi_Granny said...

உங்கள் கவிதை எனக்கு எப்போதுமே பிடிக்கும் எனவே 100 மற்றும் 300 க்கும் வாழ்த்துக்கள்.

ஹேமா said...

அலங்காரம் இல்லாமல் இயல்பான கவிதைகள் எப்போதும்.ரசித்தபடி வாழ்த்துகள் கதிர்.

ஷர்புதீன் said...

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 55/100 மார்க். நன்றி!

Kayathri said...

மரணத்தைப் பற்றிய உங்கள் சிந்தனை அருமை...”நிரந்தரமில்லா வாழ்வில் நிரந்தரமானது மரணம்”

Anonymous said...

Description about the departure of some one who has been so close, and the words made to feel the true fragrance that who can's c them back.. very practical true..