உறையும் தனிமை


தனிமையில் இருக்கும் வீட்டை
பூட்டும் போது தனிமையையும்
உள்ளே வைத்தே பூட்டுகிறோம்

-*-

சோம்பேறித்தனத்திற்கு
வர்ணம் பூசும் போது மட்டும்
சுறுசுறுப்பாக செயல்படுகிறோம்

-*-

மனதுக்குள் கறை இருப்பதை
வசதியாய் மறந்து நிழற்படங்களில்
படிவது குறித்து பயம் கொள்கிறோம்!

-*-

எல்லாக் கோபங்களையும்
பலவீனமானவர்களின் தலையில்
வீரத்தோடு சூட்டி மகிழ்கிறோம்!

-*-11 comments:

ஓலை said...

True & Nice.

koodal bala said...

உண்மை உண்மை .கவிதை அருமை !

பா.சதீஸ் முத்து கோபால் said...

அருமை அருமை

கே.ஆர்.பி.செந்தில் said...

கூட்டத்தில் இருந்தாலும்
தனிமையில் அலைகிறது
மனசு...

கும்க்கி said...

தொடர் கவிதை மழை பொழிவதின் மர்மம் என்னவோ....

அம்மா” ஆட்சியில் எவ்வளவு மாற்றம்....அப்பப்பா..

அன்புடன் அருணா said...

/எல்லாக் கோபங்களையும்
பலவீனமானவர்களின் தலையில்
வீரத்தோடு சூட்டி மகிழ்கிறோம்!/
இது ரொம்ப சரி!!!

ராமலக்ஷ்மி said...

நான்கும் நன்று.

சுறுசுறுப்பு சூப்பர்:)!

VELU.G said...

//தனிமையில் இருக்கும் வீட்டை
பூட்டும் போது தனிமையையும்
உள்ளே வைத்தே பூட்டுகிறோம்
//

excellent

ஹேமா said...

எல்லாமே எப்பவும்போல இயல்பாயிருக்கு !

ஸ்ரீராம். said...

தனிமை அருமை. நான்குமே நல்லாயிருக்கு.

ரோகிணிசிவா said...

//எல்லாக் கோபங்களையும்
பலவீனமானவர்களின் தலையில்
வீரத்தோடு சூட்டி மகிழ்கிறோம்!//
சூப்பர்ப்ப்