உண்மை ஒன்றுதான்

அக்கணத்தில் பிறப்பது செய்தி
காலம் தாழ்ந்து கசிவது ரகசியம்
அடையாளக் குறிகள் 
அழகாய்ச் சுட்டினாலும்
உண்மை என்னவோ ஒன்றுதான்

-0-

சில அழைப்பிதழ்களைக் காணும்போது
கண்ணினூடாக மனதில் படிகிறது
பலருக்குள் அடர்த்தியாய்
படிந்துகிடக்கும் சாதிச் சாயம்

-0-

நீரில் எப்போதும்
மிகக் கனமானதும்
மிகச் சூடானதும்
கண்ணீர்தான்

-0-

அலங்காரம் அற்றுப் பிறக்கும் கவிதை
வாசனைத் திரவியங்களையும்
வண்ண உடைகளையும் சூடுவதில்
தன்னைத் தொலைத்துவிடுகிறது

-0-


16 comments:

நசரேயன் said...

//அலங்காரம் அற்றுப் பிறக்கும் கவிதை
வாசனைத் திரவியங்களையும்
வண்ண உடைகளையும் சூடுவதில்
தன்னைத் தொலைத்துவிடுகிறது//


மாணவர் அணித்தலைவரை தாக்குற மாதிரி இருக்கு

ஹேமா said...

எல்லா வார்த்தைகளுமே உண்மை.கவிதைக்கு அலங்காரம் செய்யாவிட்டால் புலம்புவதாகச் சொல்கிறார்களே கதிர் !

Chitra said...

அலங்காரம் அற்றுப் பிறக்கும் கவிதை
வாசனைத் திரவியங்களையும்
வண்ண உடைகளையும் சூடுவதில்
தன்னைத் தொலைத்துவிடுகிறது


..... "அழகாய்" சொல்லி இருக்கீங்க.... :-)

ஓலை said...

Kavithaigal arumai.

பழமைபேசி said...

//வாசனைத் திரவியங்களையும்
வண்ண உடைகளையும் சூடுவதில்//

வாசனைத் திரவியங்களையும்
வண்ண உடைகளையும் தரிப்பதில்

Unknown said...

"அலங்காரத்தில் தொலையும் கவிதை", கண்ணில் படியும் சாதிச்சாயம்"
மிக அருமை.

Unknown said...

கண்ணீரின் உவமை அசத்தல்...

ராமலக்ஷ்மி said...

மூன்று!!!

நான்கு மிகச் சரி!

hariharan said...

//அக்கணத்தில் பிறப்பது செய்தி
காலம் தாழ்ந்து கசிவது ரகசியம்//

செய்தி வராமலேயெ போவது ஒரு அரசியல்.

vasu balaji said...

ஒரே கவுஜயா வருதே. சினிமா சான்ஸ் கிடைச்சிருக்குங்களாண்ணா?:))

வேய் நசரு! வாசனைதிரவியத்துக்கும் மாணவர் அணித்தலைவருக்கும் என்னவே முடிச்சு:))

தாராபுரத்தான் said...

நீரில் எப்போதும்
மிகக் கனமானதும்
மிகச் சூடானதும்
கண்ணீர்தான்
நாங்களும்..கவிதைக்ளை ரசிப்போமில்ல..

A.R.ராஜகோபாலன் said...

தனித் தன்மையுடன்
வாழ்க்கையின்
வார்த்தைகளை
விவிரிக்கும் உங்களின் பாங்கு
ஆச்சர்யம்
அற்புதம்
சொக்கி போனேன்
உங்களின் கவிதை கண்டு

Anonymous said...

உங்களிடம் வாக்குவாதம் செய்த சகோதரி தேனம்மையின் பன்முகத்தை பார்த்தீர்களா ?

கலைஞர், கலைஞர் என்று சொல்லிக்கொண்டு இருந்தவர் ஜெயலலிதா ஜெயித்தவுடன் ஜெயலலிதா போட்டோவை வைத்து கொண்டுள்ளார்.

என்னே நடிப்பு

ஸ்ரீராம். said...

எல்லாமே அருமையான கவிதைகள்.

ஈரோடு கதிர் said...

@ satiristic

கலைஞர் / ஜெ என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம்ங்க!

ஃபேஸ்புக்கில் நடந்த விவாதத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்!

இவ்வளவு மெனக்கெட்டு இதை என்னிடம் தெரிவிக்க வேண்டுமா!?

Veera D said...

*நீரில் எப்போதும்
மிகக் கனமானதும்
மிகச் சூடானதும்
கண்ணீர்தான்*

உண்மைதான்...

வீரா
15.05.2011