ஜெயமோகன், நீங்க நல்லா வருவீங்க பாஸ்






//இந்திய அமைதிப்படைக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட உக்கிரமான பொய்ப்பிரச்சாரம் பற்றிய கசப்புதான் பின்னர் பேரழிவின் கடைசிக்கணங்களில் இந்தியா தலையிடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது அதை ராணுவமோ இந்திய ஊடகமோ பொதுமக்களோ ஆதரிக்காமலானதற்குக் காரணம்.//

இலங்கை சென்ற அமைதிப் படையைப் புனிதப்படுத்த முனைந்ததில் இறுதியாக, எழுத்தாளர் ஜெயமோகன் சமீபத்தில் வெளிப்படுத்தியிருந்த உன்னதமான ஒரு கண்டுபிடிப்பு

இதைப் படித்தவுடனே பிதாமகன் படத்தில் ஒரு காட்சியில் லைலா “ லூசாப்பா நீ” என்று கேட்பது போல் “லூசா பாஸ் நீங்க” என்று கேட்கவே தோன்றியது.

ஒரு படைப்பாளனுக்கான கர்வத்தை வாசகனே தீர்மானிக்கிறான் என்பதை மீண்டும் மீண்டும் படைப்பாளன் நிரூபிப்பது நமது சமகால அவலம் என்பதில் மறுப்பேதுமில்லை.

அந்த கட்டுரையில், மேலே குறிப்பிட்ட கடைசிப் பத்தியைப் படித்த போது சிரிப்பும், ”அய்ய்ய்ய்யே” என்ற உணர்வுமே வந்தது.

//இந்திய அமைதிப்படைக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட உக்கிரமான பொய்ப்பிரச்சாரம் பற்றிய கசப்புதான்//


அமைதிப்படை அக்மார்க் நல்லவங்களாகவே ஜெயமோகனுக்கும், பக்தர்களுக்கும், தேச பக்தி (!) மிகுந்தோருக்கும் இருந்துவிட்டே போகட்டும். அக்மார்க் நல்லவங்களான அமைதிப் படைக்கு எதிராக ஊடகங்களும், புலிகளும், புலி ஆதரவானவர்களும் கட்டவிழ்த்துவிட்ட (அவர் சொல்லும்) பொய்பிரச்சாரம் மட்டும்தான் இறுதி பேரழிவில் இந்திய ராணுவத்தை நவதுவாரங்களை அடைத்து வைத்துக்கொண்டு அமைதி காக்க வைத்ததா?

கோரப்பசியில் திரிந்த இந்திய அரசியலின் கீழ் இயங்கும் ராணுவம் தன்னிச்சையாக என்ன செய்திட முடியும்.

”இந்திய ராணுவம் ஆயுதம் கொடுக்கவில்லை, நேரடியாக வீரர்களை அனுப்பவில்லை, ஆனால் இறுதிக்கட்டப் போரில் அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும், ரேடார் உட்பட உதவி புரிந்தது. இந்திய உதவியில்லாமல் இலங்கையால் எதும் செய்திருக்க முடியாது” என்று சொன்னோர், புலிகளோ, புலிகளின் ஆதரவாளர்களோ இல்லை. நீண்ட வருடங்களாக ஐ.நா சபையின் சார்பில், இலங்கையில் தங்கி கன்னிவெடி அகற்றும் பணியில் இருக்கும் இந்திய ராணுவத்தைச் சார்ந்த வீரர்கள்தான். ஓமந்தை அருகே 2010ல் நான் நேரிடையாகச் சந்தித்து பேசும்போது அவர்கள் பகிர்ந்துகொண்ட உண்மை இது. இன்றும் கூட அவர்கள் அங்கே, அதே பணியில்தான் இருக்கின்றார்கள் என நம்புகிறேன். அவசியப்படின் ஜெயமோகன் ஒரு எட்டு போய் அவர்களைச் சந்தித்துவிட்டு வரலாம், நன்றாக சோறாக்கி, பருப்பு கொழம்பு வைத்து சோறு போட்டார்கள், இப்போதும் போடுவார்கள் என்றே நினைக்கின்றேன்.


//பின்னர் பேரழிவின் கடைசிக்கணங்களில் இந்தியா தலையிடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது அதை ராணுவமோ இந்திய ஊடகமோ பொதுமக்களோ ஆதரிக்காமலானதற்குக் காரணம்//

தமிழகம் தவிர்த்து ஏனையோருக்கு ஈழத்தமிழன் எந்த வித தொப்புள் கொடி உறவும் இல்லாதபோது, இந்தியாவில் நடக்கும் அக்கிரமங்களை கண்டும் காணாமல் போகும் இந்தியன், ஈழத்து சனங்கள் குறித்து பொங்க வேண்டிய அவசியம் என்ன?

இந்தியா தலையிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தபோது, ராஜீவ் மரணத்துக்கான பழிவாங்கலாக, புலிகளின் அழிவை ரசித்துக் காத்திருந்த இந்திய அரசியலுக்கு போரை நிறுத்தி மக்களை / புலிகளைக் காப்பதில் என்ன அவசியம் இருந்துவிடப்போகிறது. அந்த அரசின் கீழ் இயங்கும் இந்திய ராணுவம் என்ன சாகசத்தை செய்துவிடப்போகிறது.

//இந்திய ஊடகமோ//
ஊடக நேர்மை மேல் ஜெயமோகன் வைத்திருக்கும் அலாதியான நம்பிக்கைக்கு ஒரு பெரிய சல்யூட், அன்னா ஹசாரே உண்ணாவிரதம் vs  ஐரோம் ஷர்மிளா உண்ணாவிரதம் குறித்து ஊடகத்தின் வியாபாரத்தை, இதோ இப்பத்தானே பார்த்தோம்.

//பொதுமக்களோ ஆதரிக்காமலானதற்கு//
பொதுமக்கள்னா யாரு? ஜெயமோகனின் வாசகர்களா?  தமிழர்களா? காஷ்மீர், அஸ்ஸாம் வரை இருக்கும் இந்தியர்களா? ராஜீவைக் கொன்னது புலிகள் எனும் பரப்புரை இருக்கும்போது தமிழன் தவிர்த்து, ஈழத்தில் செத்த தமிழன் / புலிகள் மேல், இந்தியனுக்கு என்ன அக்கறை வேத்து வடியப்போகுது


இறுதிக்கட்டப் போரின் போது மத்திய, மாநில அரசாங்கம் செய்த பசப்புகளும், கயமைத்தனங்களும், இறையாண்மை அச்சுறுத்தல்களும்தான் மக்களை மௌனிக்கச் செய்ததே தவிர, அமைதிப் படையை இழித்ததற்கான அறச்சீற்றம் அல்லவே. 

ஜெயமோகனின் கட்டுரை குறித்து ஜெயமோகனுக்கு நெருக்கமான ஒரு ஈரோட்டு நண்பரிடம் பேசும்போது, ”இது ஜெமோக்கு தேவையில்லாத வேலைங்க, எதோ திட்டத்தோட, நோக்கத்தோட செயல்படுற மாதிரி இருக்குங்க” என்றார் கடும் வருத்தத்தோடு. ஜெயமோகன் எழுத்தில் நேர்மையும், அறமும் இருக்க வேண்டும் என எப்போதும் விரும்பும் நபரும் கூட அவர்.


பிடித்த எழுத்தாளர் என்பதற்காக, அவர் எதை எழுதினாலும் கொண்டாட ஆள் இருக்கும்வரை ”ஜெயமோகன், நீங்க நல்லா வருவீங்க பாஸ்”! என்று மட்டும் சொல்லத்தோன்றுகிறது,

-0-

15 comments:

vasu balaji said...

உவ்வே:(

சத்ரியன் said...
This comment has been removed by the author.
சத்ரியன் said...

கதிர்,

இந்திய அமைதிப்படையின் யோக்கியதையைப் பற்றி அப்படையில் இடம்பெற்றிருந்த ஒரு (இந்திய) ராணுவ அதிகாரி அவருடைய சுயசரிதையில் எழுதியிருக்கிறாராம்.

அந்நூல் ஒன்றை மாண்புமிகு ‘ஜெமோ’விற்கு அனுப்பி கூடவே அமர்த்தி படிக்க வைத்தல் நலம்.

அல்லது

நல்லதொரு மனநல காப்பகத்தில் சேர்த்து விடுதல் நலம்.

Joe said...

உன்னையெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது, நீயெல்லாம் நல்லா வருவேடா, வரணும் ;-)

ம.தி.சுதா said...

அவருக்காக சில ஆதாரங்களை கொடுத்துள்ளேன் சகோதரம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்திய ராணுவம் பற்றி ஈழத்திலிருந்து ஒரு ஆதார மடல்

'பரிவை' சே.குமார் said...

சுயசொரிதல் செய்து கொள்ளும் இவர்களைப் போன்றவர்களுக்கு நாம் எதுவும் சொல்லவே வேண்டாம்.

கழிவுகளை எப்படி ஒதுக்கி வைப்போமே அப்படியே இந்த கழிசடைகளையும் தூக்கி எறிவோம்.

தமிழ்நதி said...

நீங்கள் சொன்னதுபோல, ஜெயமோகன் என்னதான் அபத்தமாக எழுதினாலும், அதைக் கொண்டாட சில விசிலடிச்சான் குஞ்சுகள் இருக்கும்வரை ஒன்றும் செய்வதற்கில்லை.

வாசகன் என்பவன் அப்படியே 'பின்தொடர்ந்து செல்லும் நிழலாக'இல்லாமல், நியாயத்தைப் பேசுபவனாக இருக்கவேண்டும். இப்படி அபத்தாபத்தமான கருத்துக்களை உதிர்த்து தனது அறிவைத் தானே வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கத் தேவையில்லை அவர்.

நேரம் அனுமதித்தால் இந்திய அமைதிப் படை பற்றி நான் இட்டிருக்கும் பதிவினையும் சென்று வாசித்துப் பாருங்கள். அதுதான் 'அமைதி'ப் படையின் இலட்சணம்!

தமிழ்நதி said...

சுட்டி இங்கே.... http://tamilnathy.blogspot.ca/2012/05/blog-post_17.html

VR said...

சரியாக முள்ளிவாய்க்கால் விழ்ச்சியின் மூன்றாம் ஆண்டு நினைவின்போது, இவருடைய முதலை கண்ணீர் மூலம் செய்யும் கீழ்த்தரமான விசமப்பிரச்சாரம் தான் இது போன்ற பரப்புரைகள். எவருக்கும் சிந்தனை அறிவு துளிர் விட்டுவிட கூடாது. இதுபோன்ற தேசபக்தி கட்டுரைகளாலே அவர்கள் மூளையை மழுங்கடித்துவிடுவார். மனநோயாளிகளை சரிப்படுத்தி விடலாம். சமுகத்தின் சிந்தனையில் மனநோயை பரப்புவர்களை?

VR said...

.... // இது ஜெமோக்கு தேவையில்லாத வேலைங்க, எதோ திட்டத்தோட, நோக்கத்தோட செயல்படுற மாதிரி இருக்குங்க” என்றார் கடும் வருத்தத்தோடு.... // ஈழத்தின் விழ்ச்சிக்கு பிறகு மூன்று ஆண்டுகளாகியும் குறிப்பிடும்படியான முன்னேற்றமோ சம உரிமை தருவதற்கான அறிகுறிகளோ தென்படவில்லை..... இந்திய அரசாங்கமும் சிங்கள பேரினவாதத்தை நன்றாகவே சொரிந்துகொடுத்து ஊக்குவிக்கின்ற நிலையில், சிந்திக்க தெரிந்த சில மனிதர்களும் யதார்த்தத்தை அறியமுற்படக்கூடாது என்ற நுண்அரசியலின் வெளிப்பாடு தான், சுயமோகனின் கட்டுரை.

-/பெயரிலி. said...

ஜெயமோகனின் ஆட்டத்துக்கான திட்டம் இதுதானாக்கும் ;-)
[மேலதிகமாக என் இடுகையிலே எழுதியிருக்கின்றேன்]

From: Gnanam Gnanam
Date: 17 May 2012 09:01
Subject: Jeyamohan attents conference


கொழும்புத் தமிழ்ச்சங்க உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டில் தமிழகப் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன்

கொழும்புத் தமிழ்ச்சங்கம் ஜூன் 2,3,4ஆம் திகதிகளில் உலகத்தமிழ் மாநாடு ஒன்றினை சங்கத்தின் தலைவர் மு. கதிர்காமநாதன் தலைமையில் நடத்தவுள்ளது. இந்த மாநாட்டில் தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் சிறப்பு அதிதியாகக் கலந்து சிறப்பிப்பார் எனத் தமிழ்ச்சங்கத்தின் இலக்கியச் செயலாளர் தி. ஞானசேகரன் தெரிவித்தார். உலகறிந்த எழுத்தாளரான ஜெயமோகன் தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். நாவல், சிறுகதை, அரசியல், வரலாறு போன்ற படைப்பிலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தடம்பதித்து வெற்றிகண்டவர்.

விஷ்ணுபுரம் என்னும் சிறந்த நாவல் மூலம் உலகளவில் புகழ்பெற்ற ஜெயமோகன் அவர்கள் கொற்றவை, அனல்காற்று, இரவு, உலோகம் உட்பட பதினொரு புதினங்களையும், ஜெயமோகன் சிறுகதைகள், ஜெயமோகன் குறுநாவல்கள், போன்ற ஒன்பது தொகுதிகளையும், அரசியல் கட்டுரைத் தொகுப்புகளையும், வரலாற்று நூல்களையும், வடக்குமுகம் என்னும் நாடக நூலையும் கொற்றவை என்னும் காவியத்தையும் படைத்தவர்.


தவிரவும், இலக்கியத் திறனாய்க்வுக் கட்டுரைகளையும் மலையாளக் கவிதைகளின் பல காலகட்ட மொழிபெயர்ப்புகளையும் தமிழில் வெளியிட்டவர். மலையாளத்திலும் பல படைப்புகளைத் தந்தவர். 2010 ஆம் ஆண்டில் விஷ்ணுபுரம் நாவலுக்கான பரிசுடன் அகிலன் நினைவுப் போட்டி கதாவிருது பாவலர் விருது உட்பட பலவிருதுகளையும் ஜெயமோகன் பெற்றுள்ளார். மாநாட்டில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொள்ளச் சம்மதம் தெரிவித்துள்ள ஜெயமோகன் இலக்கிய ஆய்வரங்கில் பங்கு பற்றுவதுடன் மாலை நிகழ்வுகளில் சிறப்புரையாற்றவும் உள்ளார்.

தவிரவும் பேராளர் பதிவுக்கான முடிவுத் திகதி பலரின் வேண்டுகோளுக்கு அமைய இம்மாதம் 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்பதையும் இலக்கியச் செயலாளர் தி.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

Kind Regards
T. Gnanasekaran

அதியா வீரக்குமார் said...

உங்கள் எதிர்வினையை நான் ஆமோதிக்கிறேன்.

வீரா...

shammi's blog said...

some persons wants to exhibit themselves admit of any circumstances here jayamohan has done that....

ஈரோடு கதிர் said...

@ ம.தி. சுதா
உங்கள் பகிர்வினைப் படித்தேன்

@ தமிழ்நதி
தமிழகத்திலும் சில இலக்கியவாதிகள் மேல் கடலை எண்ணெய் வாசம் அடித்தாலும் அடிக்கும் :(

@ பெயரிலி
விரிவாகப் படித்தேன், ஏன் இன்னும் ஜெயமோகன் இலங்கைக்கு செல்லவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன்... ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.. :(

வீரத்தமிழ்மகன் said...

What jayamohan has said is not right. But to use words like, 'navathuvaaram' etc is not in good taste. Usage of such words only weaken your case.