கீச்சுகள் - 17




எதையோஜெயித்துவிடத்தான் எல்லாரும் ஓடிக்கொண்டிருக்கிறோம், ஆனால்எதைஎன்றுதான் தெரியவில்லை!

~

ராஜினாமா செய்ய நான் ரெடி! நீங்க ரெடியா? - விஜயகாந்துக்கு சரத்குமார் சவால்
#
அண்ணே நான் எட்டாவது பாஸ்ண்ணே!, நீங்க பத்தாவது ஃபெயில்ண்ணே!

~

நடிகையுடனான வீடியோ போலி என அமெரிக்க நிபுணர்களின் ஆய்வறிக்கை சொல்லிவிட்டது - நித்தியானந்தா # ஆப்கானிஸ்தான்ல ஆய்வு பண்ண ஆள் கிடைக்கல போல?

~

விசையூட்டிய பெண்டுலம் # மனது  

~

ஒரு புன்னகை, அழுகையாக மாறுவது வெறும் உதடுகளின் சுழிப்புகளில் நிகழும் மாற்றம் மட்டுமல்ல!

~

பயன்பாட்டில் இருப்பதை விட, ஏதோ ஒரு ஆர்வத்தில் உருவாக்கி பயன்படுத்தாமலே கிடப்பில் போட்ட மின்மடல் முகவரிகள் அதிகம்!

~

உணவு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அதிக வெளிநாட்டு முதலீடு - மத்திய அரசு
#ஆட்சி நடத்துறதையும் அவங்ககிட்டேயே கொடுத்துடலாமே!

~

உறவுகளின் உன்னதத்தை நோய் வாய்க்கும் தருணங்களிலே மனிதர்கள் அடர்த்தியாய் உணர்கின்றனர்.

~

ரயில்வே நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் அதிக வருமானத்தைத் தருபவைசரக்குமட்டுமே!
#சரக்கு ரயில்களே அதிக வருமானத்தை ஈட்டுகின்றன.

~

ஒன்றைரகசியம்எனப் பெயரிடும் போதே, அது ரகசியம் என்பதற்கானகூறுகளைஉதிர்த்துவிடுகிறது!

~

சோம்பேறித்தனம்சில நேரங்களில்தலைக்கனம்எனவும் மொழி பெயர்க்கப்படுகிறது!

~

பஞ்சம் ஒழிஞ்சா லஞ்சம் ஒழிஞ்சிடும் - விஜயகாந்த் # ’பன்ச்டயலாக் பேசாட்டி உங்களுக்கெல்லாம் நெஞ்சு வெடிச்சுருமோ!

~

காசு இருக்கும் சமயங்களில் உதவத் தோன்றுவதில்லை, உதவ நினைக்கும் சமயங்களில் காசு இருப்பதில்லை!

~

தனக்கு எல்லாம் தெரியும்என, தானே ஒருவன் நினைப்பதுதான், அவனை ஒரு கட்டத்தில்தானேவிற்குள் தள்ளுகிறது!

~

குரைப்பதை குறைக்கனும்!

~

இடைத்தேர்தல் லட்சிய திமுக ஆதரவு யாருக்கும் இல்லை - டி.ராஜேந்தர்
#’பவர்ஸ்டார்கட்சி ஆரம்பிக்கிறவரை எல்லா ஆதரவையும் அணைகட்டி தேக்கி வை தலைவா

~


செவி இரண்டும் ஏங்கித்தான் கிடக்கின்றன, எவர் பிரச்சனையையும் எட்டியெட்டிக் கேட்க, சில நேரம் அக்கறையாகவும், பல நேரம் சுவாரசித்திற்காகவும்!

~

விவசாய நிலத்தில் புதிதாய் அமைக்கப்படும் வீட்டுமனைகளில் பறக்கும் வண்ணக்கொடிகள் வெறும் துணியல்ல, நிலம் விற்றவன் பரம்பரைக்கானகோடித்துணி

~

பிளாஸ்டிக்கை ஒழிப்போம்எனஃப்ளெக்ஸ்’ (Flex) பதாகை தாங்கிச்செல்வதை எப்படி நியாயப்படுத்த என்று தெரியவில்லை!

~

விளைபொருள் / இடுபொருள் வியாபாரி, வேளாண் மந்திரி, மந்திரியின் கட்சியினர் என எல்லாம் நல்லா இருக்காங்க, நல்ல தொப்பையோடும் விவசாயி தவிர.

~

எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்னு கேக்குறது, சினிமாவுல பறந்து பறந்து சண்டை போடுறதவிட மோசமான கொலைக் குத்தமா? #டவுட்டு

~

இந்த நொடியை கைக்குள் இறுகப்பிடித்துக்கொள்ள நினைக்கிறேன், அதற்குள் அடுத்த நொடி வந்துவிடுகிறது #நிதர்சனம்!

~

சோம்பேறித்தனத்தைக் கொல்ல சோம்பேறித்தனமா இருக்கு!

~

"உண்மை" பெரிதும் சுவாரசியமாக இருக்காது! :)

~

ஆடைகளுக்குள் நிர்வாணம் தான்!

~

சில நேரங்களில் காற்றாய், சில நேரங்களில் கல்லாய் #எதுவுமே.

~

தோல்வி என்பது எனக்கு நல்ல பாடம் - ராகுல்காந்தி
#அய்யய்யோ இன்னும் 5 வருசத்துக்கு இந்தப் பயபுள்ள .பி-யில ஒரு வீடு விடாம போயி சோறு திங்குமே

~

மீண்டும் வாய்பாய் அவர்களின் ஆட்சி - பொன்.ராதாகிருஷ்ணன்
#
எப்படிங்ண்ணா, தமிழக காங்கிரஸ்காரங்க காமராஜர் ஆட்சினு டகால்டி விடுற மாதிரியா?

~

பீகார் / .பி. - ராகுல் காந்தி இருக்கிறவரைக்கும் காங்கிரசுக்கு எதிரா இருக்கிற கட்சிகள் கவலையே படவேண்டியதில்ல.

~


எல்லா ஆளுங்கட்சியும் அடுத்த தேர்தலில் எதிர்கட்சிதான் வெற்றி பெறவேண்டுமென ஐந்து வருசம் ரொம்ப மெனக்கெட்டு உழைப்பாங்க போல! #ரொம்ப நல்லவங்க

~

தேங்கிக்கிடக்கும் நிலையிலிருந்து இடம்பெயர்வது அவசரமானது, அவசியமானது.

~

லவ் யூ சொல்லுங்கள்மன அழுத்தம் பறந்து போகும் - தட்ஸ்தமிழ்
#இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்ப ரணகளமாக்காம விடமாட்டீங்க போல! :)

~

நமக்கு முன்னால போற நாலுபேர் பதட்டமா வண்டி ஓட்டுறதப் பார்க்கும்போதுதான் புரியுதுதிங்கட்கிழமை காலை எல்லோருக்கும் பொதுவானதுஎன்பது

~

தி.மு.கவின் அடுத்த தலைவர் மு..ஸ்டாலின் தான் - திருமா
அழகிரி: அங்கே என்னய்யா சத்தம்!
திருமா: சும்மா பேசிட்டிருந்தோம் மாமா!

~

பள்ளிக்கூடம் இருக்கிற நாள்ல 8 மணிக்கு எழுந்திரிக்கிற புள்ளைக, விடுமுறை நாள்ல அஞ்சே முக்கா மணிக்கே எழுந்திரிச்சுக்குறாங்க
#முடியவே முடியல

~

உணர்ச்சி வயமாக முழங்குவோரைவிட, தெளிவாக பொறுமையாகப் பேசுவோரின் உரையைக் கேட்கவே மனம் விழைகின்றது.

~

மனதில் கருவுற்று விரல்களில் பிரசவம் #கவிதை

~

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை - அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி
#
இவரை எப்படி இன்னும் காங்கிரஸ்ல வெச்சிருக்காங்க!

~

ஸ்லம்டாக் மில்லியனர்அனில்கபூரை விட மொக்கையா நடிக்குதே இந்த சூர்யா பயபுள்ள! #ஒரு 5 நிமிசம் நானும் பார்த்து வரலாறுல எடம் புடிச்சிட்டேன்

~

மது அருந்தி வாகனம் ஓட்டினால் ரூ.5000 - 10000 வரை அபராதம்
#
இனிமே டாஸ்மாக்குக்கு வெளியேயும் அரசுக்கு வருமானம். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்

~

உடைபடும் நிர்பந்தங்களோடு உருவாகின்றன விதிகள்!

~

நெடுந்தொலைவு தொடர்வண்டியில் தொடங்கிய இடம் முதல், நிறைவடையும் இடம் வரை செல்பவனின் அனுபவங்கள் விசித்திரம் நிறைந்தாக இருக்கும்.

~

2 comments:

piramanayagam said...

நிலைத்தகவல் பலவற்றை நான் பலமுறை ரசித்ததுண்டு,சில வற்றைப்படித்து உள்ளூர சிரித்ததுண்டு தங்கள் படைப்புகள் மென் மேலும் சிறப்போடு வர எதிர்பார்க்கின்றோம்

வலைஞன் said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி

வலையகம்