முத்த யுத்தம்
முத்தமெனும் பெயரில்
மோக விதையூன்றுகிறாய்
ஒத்திய உதடு பிரியும் முன்னே
உள்ளுக்குள் பூத்துக் குலுங்குகிறாய்!

முத்தம்தர திறவும் இதழ்களில்
முழுவதுமாய் சிறைப்படுத்துகிறாய்
ஒத்திக் கரையும் உதடு விலகுகையில்
ஒரு பிரசவ  வலியை ஊட்டுகிறாய்!

உதிர்ந்து விழும் பூவிதழாய்
ஒத்தியெடுக்கிறாய் இதழோடு
ஓங்கி வெடிக்கிறது
உள்ளேயொரு பெரு யுத்தம்!

வில்லில் விடுபடும் கூர் அம்பாய்
மெல்ல இதழ் பூட்டுகிறாய்
மோகத் தீயின் முதல் நெருப்பாய்
மெல்லத் தீ மூட்டுகிறாய்!

முத்த யுத்தத்தின் மோக நெருப்பில்
சத்தமில்லா சரீர யுத்தமொன்று
விடை காண வெகுண்டு மூள்கிறது
விடைகளைச் சுமந்து கொண்டே!

-

7 comments:

ஓலை said...
This comment has been removed by the author.
வரலாற்று சுவடுகள் said...

////Maththavanga seyyarathp paarththu poraamaip padaatheenga boss :-)////

பொறாமையில்லை இல்லை தலைவா, கடுப்பா இருக்கு நமக்கு ஒன்னு சிக்கலையேன்னு ஹி ஹி ஹி ..!

சே. குமார் said...

முத்தயுத்தம் அழகு.

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - முத்த யுத்தம் கவிதை அருமை - உண்மையிலேயே அனுபவித்து எழுதப் பட்ட கவிதை. வாழ்க வளமுடன் - முத்தஙகளுடன்.

நட்புடன் சீனா

arul said...

anna, eppadi ippadiyellam, pinnureenga

Anonymous said...

முத்த யுத்தம் கவிதை அருமை..

Amudha Murugesan said...

அழகு! :-)