அடிமையாகிவிட்ட ஒன்றை
மற்றவர்கள் ’அதற்கு
நீ
அடிமையாகி விட்டாய்’ என்று
பரிகசிப்பதைத் தவிர்க்கவே, அதை
அதீதமாய் சிலாகிக்கிறோம்!
~
டீசல்
விலை
ஏறினப்போ பஸ்நிலைய கழிவறையில சிறுநீர் கழிக்க
1 ரூவா
ஏத்தின
சமூகத்துல, மின்
கட்டண
உயர்வுக்கு எங்கெங்கு விலை
உயரப்போகுதோ தெரியல!?
~
அரசியல் தலைவர்களை கொலை
செய்தவர்களைத் தண்டிக்க துடிப்பதிலும், விடுவிக்க முயல்வதிலும் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது! #அரசியல்ல சாதாரணமப்பா!
~
காலப்போக்கில் தொலைந்து போனவை,
தீர்ந்து போனவை,
மீட்க
முடியாதவை ’மறக்க
முடியாதவை’ பட்டியலில் தானே
சேர்ந்துகொள்கின்றன!
~
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைச்ச
பிறகு
ஒழுங்கா சோறு
போட
மாட்டாங்களா!? ரொம்ப
இளைச்சு, குண்டர் சட்டம்
ஒவ்வொன்னா ரத்தாகுதே?
~
ராமஜெயம் கொலைக்காக தினத்தந்தி செய்தித்தாளோடு தேநீர்
கடையில் ஒருவர்
பொங்கிக்கொண்டிருந்தார் தேநீரைவிட சூடாக
#தேநீர்கடை அரசியல் சுவாரசியம்
~
நீ
சுறுசுறுப்பாய் இயங்குகையில் எனக்குள் கிறுகிறுப்பு நிரம்புகிறது, நீ
சோம்பல் முறிக்கையில் என்னுள் அசதி
கரைகிறது.
~
”விசுவாசம்” என்பதை
”விசு
வாசம்”னு தப்பா எழுதுறவங்களை என்ன
பண்றது!
~
தீனி
போட்டா
சமத்தா
ஓடுது,
பட்டினி போட்டா
தறிகெட்டு ஓடுது
..... கற்பனைக் குதிரை
~
மத்திய
அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே
இடைவெளி ஏற்பட்டுவிட்டது - பாஜக # அங்கே மட்டுமா, மத்திய
அரசுக்கும் மக்களுக்குமே பெரிய
இடைவெளிதானே!
~
ஐசிஐசியை ப்ரடன்சியலில் ’அப்பா
ஆகறதுக்கு லைசென்ஸ்’ தர்றாங்களாமே! - அமிதாப் சொல்றாரு # லைசென்ஸ் கூடவே
ஸ்கூல்
ஃபீஸும் கொடுத்துட்டா பரவாயில்ல
~
சரியான
நேரத்தில் தவறவிட்டுட்டு, தவறான
நேரத்தில் தவிப்பது ரயில்
மட்டுமல்ல, திருமணமும்தான்.
~
மரணம்
குறித்து ஒரு
முறையேனும் பயம்
கொள்ளாதவன், இன்னும் பிறக்காதவன் மட்டுமே!
~
கிழக்கே மீனவர்கள் தாக்குதல், மேற்கே
முல்லைப்பெரியாறு, தெற்கே
கூடங்குளம், வடக்கே
காவிரி # இந்தியன் என்பதில் பெருமிதம் கொ’ல்’
~
சினிமாவில் நடிக்க
பிரதமரிடம் அனுமதி
பெற்றேன் - நெப்போலியன்
# உங்களுக்கு அனுமதி கொடுக்க அவரு சோனியாகிட்டே அனுமதி வாங்கினாரா?
# உங்களுக்கு அனுமதி கொடுக்க அவரு சோனியாகிட்டே அனுமதி வாங்கினாரா?
~
மின்
வெட்டு
குறித்து அதிகமாக, மிக
அதிகமாக, மிகமிக
அதிகமாக தமிழன்
கோவப்படும் இடம்,
டாஸ்மாக்கில் ’கூலிங்
பீர்’
கிடைக்காத மதிய
நேரத்தில்தான்!
~
கிடைக்காத பொழுது
தேடப்படுவதாகவும், கிடைக்கும் பொழுதில் அவசியமற்றதாகவும் இருக்கின்றன. # நிறைய!
~
கோடைக்கு நீர்மோர், குடிநீர் பந்தல்
- கட்சியினருக்கு ஜெ.
வேண்டுகோள்
#”விலையில்லா நீர்,மோர்” காசுக்கு கரண்ட் தராம, எதெதையோ இலவசமா தர்றீங்க
#”விலையில்லா நீர்,மோர்” காசுக்கு கரண்ட் தராம, எதெதையோ இலவசமா தர்றீங்க
~
ஒருவனை
அடித்து துவைப்பதைவிட, அவதூறினைப் பரப்புவதே கொடும்
வன்முறை
~
பேச
நிறைய
இருப்பதும், பேச
ஒன்றுமே இல்லாததும் காதல்
~
”மாண்புமிகு அம்மாவின் அரசு,
மாண்புமிகு அம்மாவின் அரசு, மாண்புமிகு அம்மாவின் அரசு……”
- ஓ.பன்னீர்செல்வம் #‘தமிழக
அரசு’
என்பதையும் ’மாண்புமிகு அம்மாவின் அரசு’னு மாத்திடுவாங்களோ!?
~
இவ்ளோ
தூரத்துல இருக்கிற நமக்கே
இப்படி
சுடுதே!
அங்கேயே இருக்கிற சூரியனுக்கு எவ்ளோ
சுடும்!
# வெயில்
ஜாஸ்திப்பா! :))))
~
கண்டபடி உயரும்
சென்னை
வீட்டு
வாடகை
# இன்னும் கொஞ்சநாள்ல வீட்டோட மொத்த
விலையையே ஒரு
மாச
வாடகைனு கேட்டாலும் கேப்பாங்க போல!
~
ஆயுதம்
ஏற்படுத்தும் கண்ணீரை விட
அன்பு
ஏற்படுத்தும் கண்ணீர் பெருவெள்ளமாகப் பாயக்கூடியது.
~
டாஸ்மாக் பார்
வாசல்
சுவரில் சாய்ந்தவாறு தேநீர்
அருந்துபவன் ஒரு
ஹைகூ
கவிதையாய்த் தென்படுகிறான்!
~
19 வயது நண்பனுக்கு மது
கொடுத்து, மப்பில் போதை
ஊசி
போட்டு,
கழுத்தை நெரித்து கொலை.
செய்தவர்கள் வயது
20-21
# என்னமோ நடக்குது இந்தியாவில் :(
~
”Sorry” எனும் வார்த்தை எப்போதும் உதட்டிலிருந்து, எப்போதாவது உள்ளத்திலிருந்து!
~
வறுமைக்கோடு எவ்ளோனு கணக்குப் போடத்தெரியாத கபோதிகதான் வறுமையை ஒழிக்க
திட்டமும் போடுமோ!
:(
~
நகர்புறத்தில் வறுமைக்கோடு 28 ரூபாய்னு கண்டுபிடிச்ச விஞ்ஞானிகிட்டே 1 ரூபா
கூட
போட்டுக்கொடுத்து ஒரு
நாளைக்கு பொழப்பு நடத்துனு சொல்லனும்!
~
பணப்
போராட்டத்தையே பல
நேரங்களில் மனப்
போராட்டம் எனக்கொள்கிறோம்!
~
6ஜி, 7ஜி,
8ஜி
வர்ற
வரைக்கும் 2ஜி
வழக்கை
நடத்துவாங்களோ!? #டவுட்டு!
~
பலநேரங்களில் துன்பங்களை ஆற்றுப்படுத்துபவை மற்றவர்களின் பெருந்துன்பங்களே
~
இரண்டாவது இடம்
யாருக்கு எனும்
’ஈகோ’விற்காகவே நடத்தப் பட்டிருக்கிறது
சங்கரன்கோவில் இடைத்தேர்தல்! :)
~
இந்தியாவில் ஏழைகள்
9% குறைந்துள்ளனர். வறுமைக்கோடுக்கான வருமானம் ரூ
5-10னு
சொல்லியிருந்தா இன்னும் குறைஞ்சிருப்பாங்களே.
~
பள்ளி
கல்லூரி புரிய
வைக்காத ”கெமிஸ்ட்ரியை” பருவம்
புரிய
வைக்கின்றது!
~
காலையில் வீதி
முனைகளில், பிள்ளைகளை பள்ளி
வாகனத்தில் திணித்துவிட்டு, வீடு
திரும்பும் பெண்களின் முகத்தில் ஒரு
விடுதலை உணர்வு
தெரிகிறது #நகரம்
~
சூதும்
வாதும்
நிரம்பி வழிகிறது அரசாங்கத்திடம், கேட்டால் சாணக்கியத்தனம் எனச்
சமாதானம் சொல்லப்படுகிறது. #பாவம்
சாணக்கியன்!
~
படைப்பாளியை முன்னிறுத்தியே படைப்புகளை அணுகுகிறோம்!
~
தான்
செய்யவேண்டிய வேலைக்கு கூலித்தொழிலாளியிடம், விவசாயிடம், அனாதை
ஊதியம்
பெறும்
ஆதரவற்றோரிடம் கறக்கும் கையூட்டு மலம்
தின்பதற்கு ஒப்பானது
~
யாருமற்று, நீண்டு
கிடக்கும் மாலை
நேரத்து தேசிய
நெடுஞ்சாலை போல்,
ஞாயிறு
காலை
பரபரப்பற்று அமைதியாக இருக்கின்றது!
~
மின்சாரமற்ற முன்இரவுகளில் நகரத்து குடியிருப்புப் பகுதி
நிசப்தம் கவிதையாய் தெரிகிறது. கவிதை
எல்லோருக்குமா புரிந்து (பிடித்து) விடப்போகிறது!
~
அதிமுக
என்
தலைவர்
MGR-ன்
கட்சி
என்பதால் பொறுமையாக இருக்கிறேன் - விஜயகாந்த் #அப்படியே திமுக-வும் MGR இருந்த கட்சி
தானேனு
விட்டுடு தலைவா!
~
4 comments:
அருமையான ஸ்டேட்ஸ் .......எல்லாமே சூப்பர்
உங்க உள்குத்து புரிஞ்சது பாஸ்!
இத்தனை ட்விட்டுக்களா!எந்த ட்விட்டுக்கு கருத்து சொல்வது என்பது புரியாமல் தலைப்புக்கு ஓட்டு போட்டு விடுகிறேன்.
என்ன திடீர்னு சோகமா ஆயிட்டீங்க.
Post a Comment