’எதையோ’ ஜெயித்துவிடத்தான் எல்லாரும் ஓடிக்கொண்டிருக்கிறோம், ஆனால்
’எதை’
என்றுதான் தெரியவில்லை!
~
ராஜினாமா செய்ய
நான்
ரெடி!
நீங்க
ரெடியா?
- விஜயகாந்துக்கு சரத்குமார் சவால்
# அண்ணே நான் எட்டாவது பாஸ்ண்ணே!, நீங்க பத்தாவது ஃபெயில்ண்ணே!
# அண்ணே நான் எட்டாவது பாஸ்ண்ணே!, நீங்க பத்தாவது ஃபெயில்ண்ணே!
~
நடிகையுடனான வீடியோ
போலி
என
அமெரிக்க நிபுணர்களின் ஆய்வறிக்கை சொல்லிவிட்டது - நித்தியானந்தா # ஆப்கானிஸ்தான்ல ஆய்வு
பண்ண
ஆள்
கிடைக்கல போல?
~
விசையூட்டிய பெண்டுலம் # மனது
~
ஒரு
புன்னகை, அழுகையாக மாறுவது வெறும்
உதடுகளின் சுழிப்புகளில் நிகழும் மாற்றம் மட்டுமல்ல!
~
பயன்பாட்டில் இருப்பதை விட,
ஏதோ
ஒரு
ஆர்வத்தில் உருவாக்கி பயன்படுத்தாமலே கிடப்பில் போட்ட
மின்மடல் முகவரிகள் அதிகம்!
~
உணவு
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அதிக
வெளிநாட்டு முதலீடு - மத்திய
அரசு
#ஆட்சி நடத்துறதையும் அவங்ககிட்டேயே கொடுத்துடலாமே!
~
உறவுகளின் உன்னதத்தை நோய்
வாய்க்கும் தருணங்களிலே மனிதர்கள் அடர்த்தியாய் உணர்கின்றனர்.
~
ரயில்வே நிர்வாகத்திற்கும், தமிழக
அரசுக்கும் அதிக
வருமானத்தைத் தருபவை
“சரக்கு”
மட்டுமே!
#சரக்கு ரயில்களே அதிக
வருமானத்தை ஈட்டுகின்றன.
~
ஒன்றை
‘ரகசியம்’ எனப்
பெயரிடும் போதே,
அது
ரகசியம் என்பதற்கான ‘கூறுகளை’ உதிர்த்துவிடுகிறது!
~
’சோம்பேறித்தனம்’ சில
நேரங்களில் ’தலைக்கனம்’ எனவும்
மொழி
பெயர்க்கப்படுகிறது!
~
பஞ்சம்
ஒழிஞ்சா லஞ்சம்
ஒழிஞ்சிடும் - விஜயகாந்த் # ’பன்ச்’
டயலாக்
பேசாட்டி உங்களுக்கெல்லாம் நெஞ்சு
வெடிச்சுருமோ!
~
காசு
இருக்கும் சமயங்களில் உதவத்
தோன்றுவதில்லை, உதவ
நினைக்கும் சமயங்களில் காசு
இருப்பதில்லை!
~
’தனக்கு எல்லாம் தெரியும்’ என,
தானே
ஒருவன்
நினைப்பதுதான், அவனை
ஒரு
கட்டத்தில் ’தானே’விற்குள் தள்ளுகிறது!
~
குரைப்பதை குறைக்கனும்!
~
இடைத்தேர்தல் லட்சிய
திமுக
ஆதரவு
யாருக்கும் இல்லை
- டி.ராஜேந்தர்
#’பவர்ஸ்டார்’ கட்சி
ஆரம்பிக்கிறவரை எல்லா
ஆதரவையும் அணைகட்டி தேக்கி
வை
தலைவா
~
செவி
இரண்டும் ஏங்கித்தான் கிடக்கின்றன, எவர்
பிரச்சனையையும் எட்டியெட்டிக் கேட்க,
சில
நேரம்
அக்கறையாகவும், பல
நேரம்
சுவாரசித்திற்காகவும்!
~
விவசாய
நிலத்தில் புதிதாய் அமைக்கப்படும் வீட்டுமனைகளில் பறக்கும் வண்ணக்கொடிகள் வெறும்
துணியல்ல, நிலம்
விற்றவன் பரம்பரைக்கான ’கோடி’த்துணி
~
”பிளாஸ்டிக்கை ஒழிப்போம்” என
’ஃப்ளெக்ஸ்’ (Flex) பதாகை தாங்கிச்செல்வதை எப்படி
நியாயப்படுத்த என்று
தெரியவில்லை!
~
விளைபொருள் / இடுபொருள் வியாபாரி, வேளாண்
மந்திரி, மந்திரியின் கட்சியினர் என
எல்லாம் நல்லா
இருக்காங்க, நல்ல
தொப்பையோடும் விவசாயி தவிர.
~
”எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை
கால்”னு கேக்குறது, சினிமாவுல பறந்து
பறந்து
சண்டை
போடுறதவிட மோசமான
கொலைக்
குத்தமா? #டவுட்டு
~
இந்த
நொடியை
கைக்குள் இறுகப்பிடித்துக்கொள்ள நினைக்கிறேன், அதற்குள் அடுத்த
நொடி
வந்துவிடுகிறது #நிதர்சனம்!
~
சோம்பேறித்தனத்தைக் கொல்ல
சோம்பேறித்தனமா இருக்கு!
~
"உண்மை" பெரிதும் சுவாரசியமாக இருக்காது! :)
~
ஆடைகளுக்குள் நிர்வாணம் தான்!
~
சில
நேரங்களில் காற்றாய், சில
நேரங்களில் கல்லாய் #எதுவுமே.
~
தோல்வி
என்பது
எனக்கு
நல்ல
பாடம் -
ராகுல்காந்தி
#அய்யய்யோ இன்னும் 5 வருசத்துக்கு இந்தப்
பயபுள்ள உ.பி-யில ஒரு
வீடு
விடாம
போயி
சோறு
திங்குமே
~
மீண்டும் வாய்பாய் அவர்களின் ஆட்சி
- பொன்.ராதாகிருஷ்ணன்
# எப்படிங்ண்ணா, தமிழக காங்கிரஸ்காரங்க காமராஜர் ஆட்சினு டகால்டி விடுற மாதிரியா?
# எப்படிங்ண்ணா, தமிழக காங்கிரஸ்காரங்க காமராஜர் ஆட்சினு டகால்டி விடுற மாதிரியா?
~
பீகார்
/ உ.பி. - ராகுல் காந்தி
இருக்கிறவரைக்கும் காங்கிரசுக்கு எதிரா
இருக்கிற கட்சிகள் கவலையே
படவேண்டியதில்ல.
~
எல்லா
ஆளுங்கட்சியும் அடுத்த
தேர்தலில் எதிர்கட்சிதான் வெற்றி
பெறவேண்டுமென ஐந்து
வருசம்
ரொம்ப
மெனக்கெட்டு உழைப்பாங்க போல!
#ரொம்ப
நல்லவங்க
~
தேங்கிக்கிடக்கும் நிலையிலிருந்து இடம்பெயர்வது அவசரமானது, அவசியமானது.
~
”ஐ லவ்
யூ
சொல்லுங்கள்” மன
அழுத்தம் பறந்து
போகும்
- தட்ஸ்தமிழ்
#இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்ப
ரணகளமாக்காம விடமாட்டீங்க போல!
:)
~
நமக்கு
முன்னால போற
நாலுபேர் பதட்டமா வண்டி
ஓட்டுறதப் பார்க்கும்போதுதான் புரியுது ”திங்கட்கிழமை காலை
எல்லோருக்கும் பொதுவானது” என்பது
~
தி.மு.கவின் அடுத்த
தலைவர்
மு.க.ஸ்டாலின் தான்
- திருமா
அழகிரி: அங்கே என்னய்யா சத்தம்!
அழகிரி: அங்கே என்னய்யா சத்தம்!
திருமா:
சும்மா
பேசிட்டிருந்தோம் மாமா!
~
பள்ளிக்கூடம் இருக்கிற நாள்ல
8 மணிக்கு எழுந்திரிக்கிற புள்ளைக, விடுமுறை நாள்ல
அஞ்சே
முக்கா
மணிக்கே எழுந்திரிச்சுக்குறாங்க
#முடியவே முடியல
~
உணர்ச்சி வயமாக
முழங்குவோரைவிட, தெளிவாக பொறுமையாகப் பேசுவோரின் உரையைக் கேட்கவே மனம்
விழைகின்றது.
~
மனதில்
கருவுற்று விரல்களில் பிரசவம் #கவிதை
~
பெட்ரோல், டீசல்
விலையை
உயர்த்தும் திட்டம் இல்லை
- அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி
# இவரை எப்படி இன்னும் காங்கிரஸ்ல வெச்சிருக்காங்க!
# இவரை எப்படி இன்னும் காங்கிரஸ்ல வெச்சிருக்காங்க!
~
’ஸ்லம்டாக் மில்லியனர்’ அனில்கபூரை விட
மொக்கையா நடிக்குதே இந்த
சூர்யா
பயபுள்ள! #ஒரு
5 நிமிசம் நானும்
பார்த்து வரலாறுல எடம்
புடிச்சிட்டேன்
~
மது
அருந்தி வாகனம்
ஓட்டினால் ரூ.5000
- 10000 வரை
அபராதம்
# இனிமே டாஸ்மாக்குக்கு வெளியேயும் அரசுக்கு வருமானம். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்
# இனிமே டாஸ்மாக்குக்கு வெளியேயும் அரசுக்கு வருமானம். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்
~
உடைபடும் நிர்பந்தங்களோடு உருவாகின்றன விதிகள்!
~
நெடுந்தொலைவு தொடர்வண்டியில் தொடங்கிய இடம்
முதல்,
நிறைவடையும் இடம்
வரை
செல்பவனின் அனுபவங்கள் விசித்திரம் நிறைந்தாக இருக்கும்.
~
1 comment:
நிலைத்தகவல் பலவற்றை நான் பலமுறை ரசித்ததுண்டு,சில வற்றைப்படித்து உள்ளூர சிரித்ததுண்டு தங்கள் படைப்புகள் மென் மேலும் சிறப்போடு வர எதிர்பார்க்கின்றோம்
Post a Comment