நம் வீடு தவிர்த்து, நண்பர்கள் வீட்டில் தங்கும் போது வெறுமையாய் கிடைக்கும் நேரம் எப்பொழுதுமே சுவாரசியம் நிறைந்த ஒன்று. அங்கு கிடக்கும் புத்தகங்கள், படங்கள், புகைப்பட தொகுப்புகள் என அவர்களின் சுவை பற்றி அறிந்து கொள்வதில் இருக்கும் சுகம் கொஞ்சம் அலாதியானது. அப்படி ஒரு தங்கலில் எனக்கு கிடைத்த வாய்ப்பு ஒரு அழகிய புத்தக அலமாரி. அலமாரி நிறைந்து கிடந்தால், ஆகா இவ்வளவா என்ற பிரமிப்பு, அதைக் கிண்டிப்பார்க்கும் ஆர்வத்தை கொஞ்சம் குறைத்து விடுவதாகவே உணர்வதுண்டு. நான்கடுக்கு கொண்ட அந்த அலமாரியின் இரண்டு தட்டுகளில் மட்டும் புத்தகம் அழகாய் கிடந்தன. இருக்கும் நேரத்தையும், சோம்பேறித்தனத்தையும் கணக்கிலிட்டு சின்னதாய் இருக்கும் சில புத்தகங்களை மட்டும் கையகப்படுத்திக் கொண்டு உட்கார்ந்தேன்.
அப்படிக் கைக்கொண்டதிலும் மிகக் குறைந்த தடிமனான புத்தகமே முதல் தேர்வாய் மாற புரட்ட ஆரம்பித்தேன். கருப்பு நிறத்தில் அட்டைப் படமும், ஆயிஷா என்ற தலைப்போடும் இருந்தது.
”ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியர் எழுதிய முன்னுரை” என்ற தலைப்போடு அந்தப் புத்தக வரிகள் துவங்க, முன்னுரைதான் புத்தகமோ என்ற நினைப்போடு வரிகளை மேய, மிக அழகாய் உள்ளிழுத்துக்கொண்டு போகிறது வரிகள். சீரான வேகத்தில் போகும் வாசிப்பை, காந்தம் குறித்து ஆசிரியை நடத்தும் வகுப்பில் ”மிஸ்” என்ற குரலோடு எழும் ஆயிஷாவின் குரல் தடம் மாற்றுகிறது.
”மிஸ்” என்று எழுந்தவளை ”என்ன வாந்தி வருதா” என வக்கிர வார்த்தையில் கேள்வி கேட்கும் ஆசிரியை என் உயர்நிலைப் பள்ளி வாத்தியார்கள் சிலரை கண்ணுக்குள் போட்டு நிரப்பியது.
ஆனாலும் அன்று ஆயிஷா துரத்தித் துரத்திக் கேட்கும் கேள்விகளில் செக்குமாடாய் கல்வி கற்பிப்பதில் செத்துப் போயிருந்த ஆசிரியை முதல் முறையாய் ஆசிரியையாக பிறப்பெடுக்கிறார். தொடர்ந்து ஆயிஷா கேள்விகளால் ஆசிரியையோடு மிகப் பெரிய உறவுக் கோட்டையை எழுப்புகிறாள். அது அந்த ஆசிரியை புதிதாய் வாசிக்க, கற்றுக்கொள்ள, தேட உயிர்ப்புத் தருகிறது.
அதேசமயம், பத்தாம் வகுப்பு மாணவியாய் இருந்து கொண்டு பதினொன்றாம் வகுப்பு மாணவிக்கு கணக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த அறிவு(!) மெச்சப்படாமல், குற்றமாக தூக்கிலப்படுகிறது. அறிவைக் கொலை செய்யும் போது உருவாகும் வலி கொடியது என்பது எவருக்குப் புரிகிறது. அறிவைத் தூர்வாரும் ஆயிஷாவின் கேள்விகள், பல ஆசிரியைகளை அடித்துத் துன்புறுத்துகிறது. நாம் கண்டு கடந்து வந்த பல ஆசிரியைகளின் உலகத்தை ரெஜினா என்ற ஆசிரியை மூலம் நினைவும் படுத்துகிறது.
ஆயிஷாவின் மனதிற்குள் துளிர்த்த விஞ்ஞானம் குறித்த மிகப் பெரிய தேடுதலே ஆயிஷாவை தன் பசிக்கு புசித்துக்கொள்கிறது. பக்கங்களை முடித்து, மனதிற்குள் சுவர்கள் வெடித்து, புத்தகத்தை கீழே வைக்கும் போது கண்களுக்குள் நெருப்பாய் கொதிக்கிறது, நானும், நாமும் நம்மைச் சீண்டிய பல கேள்விகளுக்காகவும், இன்னபிற அறிவுப்பூர்வமான(!) காரணங்களுக்காகவும் முடக்கிப் போட்ட ஆயிஷாக்களின் உருவங்கள்.
**********
உபரித்தகவல்: தமிழில் ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையான புத்தகம். 8 மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மிக முக்கியம்: குழந்தைகளுக்காக ஆசிரியர்களும், பெற்றோர்களும் தவறாமல் வாசிக்க வேண்டிய புத்தகம்.
புத்தகம்: ஆயிஷா | ஆசிரியர் : இரா. நடராஜன் | ஆசிரியர் வலைப்பக்கம் | பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் | விலை: ரூ.10
இணையத்தில் தரவிறக்கம் செய்து வாசிக்க:
.
31 comments:
Nice Kathir
ஏற்கனவே விதூஷ் இது பத்தி எழுதிருந்தாங்கன்னு நினைக்கிறேன். நான் வாசிச்சிட்டு சொல்றேங்க.
சுட்டிக்கும் அறிமுகத்துக்கும் நன்றி கதிர்.
ஆம்.. சிறுவயதில் படிப்புக்காக அல்ல.. பள்ளி நிகழ்வுகளில் இது போல் உனக்கென்ன தெரியும் என நிராகரிக்கப்பட்ட உணர்வு மேலெழும்பி வருகிறது இந்த விமர்சனம் படித்ததும் கதிர்..
ஏற்கெனவே படித்திருக்கிறேன்..கதிர்...Its...a teachers' Bible.
பகிர்வுக்கு நன்றி கதிர்...
மிக நேர்த்தியான எழுத்து "ஆயிஷா"
அருமையான பகிர்வு. நன்றி.
இணையச் சுட்டி கொடுத்து, நாடோடிகளுக வயித்துல பாலை வார்த்தீங்க...
ஆமா, வயித்துல பாலை வார்க்குறதுன்னா என்னங்க மாப்பு??
ஏற்கனவே படித்திருக்கிறேன் சார்
இருந்தாலும் இணைய அறிமுகம் நிறைய பேரை படிக்க உதவும்
மிக நல்ல புத்தகம்
ஏற்கனவே விதூஷ் பகிர்ந்தபோது படித்தேன். குழந்தைகளுன் சிந்திக்கும் திறன் இப்படி மழுங்கடிக்கப்படும்போது கவலையாக இருக்கிறது.
நல்ல பகிர்வு. நன்றிங்க.
எங்க வேலுசார் ஏற்கனவே என்னிடம் சொன்னார்...இப்போதுதான் படிக்கப்போகிறேன்.. நன்றிங்க பகிர்வுக்கு...
// வயித்துல பாலை வார்க்குறதுன்னா
என்னங்க மாப்பு//
அண்ணன் நீங்க தான் சொல்லணும்
Very Good Article!
அருமையான புத்தகத்தை பற்றிய பகிர்வுக்கு நன்றி.
மிக முக்யமான புத்¾கம் அதிமுக்கியமான பதிவு.கலக்குங்க கதிர்.
தகவலுக்கும் சுட்டிக்கும் நன்றி கதிர்.
படித்து முடித்தவுடன் நெஞ்சு கனக்கிறது அண்ணா. உண்மையில் எத்தனையோ ஆயிஷாக்கள் தற்கொலை செய்வதோ அல்லது அவர்களை ஃபிஸிகலாய் இல்லாவிட்டாலும் மனதார கொலை செய்வதும் நடந்து கொண்டுதான் உள்ளது. உண்மையில் எனக்கும் புரியவில்லை, பதினொன்றாம் வகுப்பு மாணவிக்கு கணக்குப்பாடம் சொல்லித்தருமளவு இருக்கும் பெண்ணை தூக்குதண்டனை கைதி போல் பார்ப்பது என்ன விதத்தில் சரி என்று. இன்னும் வார்த்தைகள் மௌனமாகின்றன. தன் கடைசி கேள்விக்கும் விடை தெரிந்தேதான் இறந்திருப்பாள், யாருக்கும் இதன் விடை தேட வேண்டிய அவசியம் இல்லையென்று.
கதையாகவே இருக்கக்கூடாதா என்றே இருக்கிறது. :(
மிகவும் அருமையான புத்தகம். எடுத்தவுடன் முடிக்காமல் கீழே வைக்க முடியவில்லை. அந்த கதை பெண்குளுக்கு மட்டுமல்ல பவ ஆண் மாணவர்களுக்கும் பொறுத்தமானவைதான்.
பகிர்வுக்கு நன்றி..
நன்றி அண்ணா!
இப்போதுள்ள பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் மனோநிலையை மாற்றம் செய்யக்கூடிய நாவல், இரா.நடராஜன் அவர்கள் குழந்தைகளுக்காக நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார் சிறுவர்களுக்கு பிறந்த நால் பரிசாக இதுபோன்ற நூல்களை வழங்கலாம்.
இந்த நூலை அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள்.
ரொம்ப நன்றிங்க கதிர். ஆயிஷாவின் அறைவிலிருந்து ‘சாரலிடமிருந்து” தப்பிக்கொள்வேன்.
நல்ல பகிர்வு அண்ணா...
சுட்டிக்கு நன்றி... வாசிக்கிறேன்.
பலமுறை இப்புத்தகம் குறித்து கேள்விப்படுகிறேன். அழுத்தமான சப்ஜெக்ட். படிக்கவேண்டும் என்ற ஆவலில் இருந்தேன். புத்தகம் குறித்த பகிர்வுக்கும், தந்த இணைப்புக்கும் நன்றி.
நல்ல பகிர்வு. நன்றி கதிர்.
அருமை, இந்த புத்தகம் குறித்து விதூஷ் எழுதியிருந்ததையும் படித்தேன். நிச்சயம் அனைவரும் வாங்கி படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.
நான் இந்த புத்தகத்தை கிளிநொச்சியில் வேலை பார்க்கும் போது ஒரு நுலகத்தில் வாசித்தேன் , அழுதேன் ,அபவே ஜோசிதேன் ஒவொரு ஆசிரியர்களும் பெற்றோர்களும் வாசிக்க வேண்டும் என்று . நான் ஒரு பிரதி எடுக்க நினைத்தேன் போர் சூழல் ஆகையால் மின்சார வசதி இல்லாமல் போய் விட்டது
அடியின் வலி அவளை அப்படி ஒரு சோதனைக்கு ஆளக்கியக்கியிருக்கிறது. ஆயிஷாவை அநியாயமாய் அடித்த அத்தனை பேரும் அவளைக் கொன்ற குற்றவாளிகள்.
என்னை ஒரு ஆசிரியையாக மிகவும் பாதித்த புத்தகம் இது .. பல முறை வாசித்து என்னை நானே செதிக்கிக்கொண்டேன் ...
Post a Comment