பகிர்தல் (30.10.2010)

நுட்பத்தின் கனம்:

மூன்று வருடங்களாக அவதானித்துக் கொண்டு வருகிறேன். வழக்கமாக கடிதம் கொடுக்க வரும் பையன். எப்போதும் முகத்தை இருக்கமாகவே வைத்திருப்பான். இயந்திரத்தனமாய் கடிதத்தை மேசை மேல் கிட்டத்தட்ட போடுவது போல் வைத்துவிட்டு, கையொப்பம் பெற்றுச் செல்பவன். கடந்த இரண்டு வருடம் போலவே, மூன்றாவது ஆண்டாக கவனிக்கிறேன், ஏனோ நேற்றிலிருந்து வணக்கம் சொல்ல ஆரம்பித்துவிட்டான். இன்று கூடுதலாக சிரித்தான். அவன் போன பின் தான் ஆச்சரியப்பட்டாசு மனதிற்குள் வெடித்தது அட தீபாவளி வருதுல்ல. ஊர்ல எல்லோருமே நுட்பமாத்தான் யோசிக்கிறாங்க போல. நானும் பல இடங்களில் அந்தப் பையன் பயன்படுத்தும் நுட்பத்தை கூடுதலான அல்லது குறைவான கனத்தோடு பயன்படுத்தாமலா இருந்திருப்பேன்.

பன்னாட்டு முனையம்:

சமீபத்தில் சென்னை பன்னாட்டு விமான நிலைய முனையத்தில் கண்ட சில காட்சிகள் நான் இண்டியேண்ட்டா என்று பெருமையாய் மார்தட்டிக் கொள்ளும் வகையில்தான் இருந்தது. இது போல்தான் இந்தியாவின் மற்ற ஊர்களிலும், பன்னாட்டு முனையங்கள் இருக்கின்றதா எனத் தெரியவில்லை. 


ஒரு கழிவறைக்குச் சென்று விட்டு திரும்பும் போது நண்பர் “மாப்ள நம்ம லட்சணத்த பாரேன் எனச் சுட்டிக் காட்டினார், தானாக கதவு மூட கருவியை பொருத்திவிட்டு பார்த்திருப்பார்கள் போல, திறக்கும் போதெல்லாம் சுவற்றில் இடித்ததோ என்னவோ,  சுவற்றையே குடைந்து விட்டார்கள். குடைந்த இடத்தை கொஞ்சம் பூசி மெழுக ஒப்பந்தப் பணத்தில் காசு இல்லாமல் இருந்திருக்குமோ என்னவோ. முக்கியமான நகைச்சுவை என்ற வென்றால் கழிவறைக்குள் ஒரு EXIT என்ற பலகை வேறு. எங்கே உட்கார்ந்து யோசிச்சாங்களோ தெரியல!

மகிழ்ச்சி:

சில வாரங்களுக்கு முன் எழுதிய ஒரு வேளை சாப்பாடு ஒரு ரூபாய் இடுகைக்கு கிடைத்த வரவேற்பு மிகப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது. வாசித்த பலர் அந்த உணவுச்சாலை உரிமையாளரைத் தொடர்பு கொண்டு வாழ்த்தியதும், பொருளாதார உதவி புரிந்ததும் நன்றிக்குரியது. அந்த இடுகையை BUZZ மற்றும் மின் மடல்கள், குழுமங்கள் வாயிலாக நிறையப் பேர் தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டிருந்திருக்கின்றனர். திரு.வெங்கட்ராமன் சார்பாகவும் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


பதிவர் லக்கியின்  உதவியால் நான் எழுதிய கட்டுரையை ஒட்டிய ஒருபக்கச் செய்தி புதிய தலைமுறை வார இதழில் படங்களுடனும் திரு.வெங்கட்ராமன் அவர்களைப் பற்றிய விபரங்களுடனும் வெளிவந்துள்ளது. புதிய தலைமுறை மற்றும் பதிவர் யுவகிருஷ்ணா ஆகியோருக்கு நன்றிகள்.

கடுப்பு (அ) ஆச்சர்யம்:

ஒரு ரூபாய்க்கு ஏழைகளுக்கு மதிய உணவை வழங்கிவரும் திரு. வெங்கட்ராமன் அவர்கள் சொன்னதில் ஆச்சரியத்தையும் கூடவே கடுப்பையும் ஏற்படுத்திய சுவாரசியமான தகவல். ஒரு ரூபாய்க்கு சாப்பாடு வழங்குவதை ஊக்கு(!)விக்கிறோம் பேர்வழி என ஒரு தம்பதி தங்கள் மகனின் பிறந்த நாளுக்கு 15 ரூபாய் கொடுத்து பதினைந்து பேருக்கு உணவு வழங்குங்கள் என்று கூறினார்களாம், அடுத்து வெளிநாட்டில் வசிக்கும் ஒருவர், நான் 5000 ரூபாய் தந்தால், 5000 பேருக்கு உணவு கொடுப்பீர்களா  என்றும் கேட்டிருக்கிறார். உண்மையிலேயே அவர்களுக்கு புரிதலில் ஏதும் பிரச்சனையா என்ற ஆச்சரியமும், மனிதர்களில் இப்படியுமா என்ற கடுப்புமே வருகிறது, என்ன செய்ய?

விடாத எந்ந்ந்ந்ந்...திரன்:

இந்த மாதம் பேசுவதற்காக ஏறிய மூன்று மேடைகளிலும், பேசியவர்களில் பெரும்பாலானோர் தவறாமல் குறிப்பிட்ட ஒரு வார்த்தை எந்ந்ந்ந்...திரன். எதைப் பேசினாலும், அதற்கு ஒரு விளம்பரம் என்று நினைக்கும் நிறுவனத்திற்கு எல்லோருமே ஏதோ ஒரு வகையில் உழைத்துக்கொண்டுதான் இருக்கின்றோம், இங்கு எழுதுவது உட்பட. (பொறுப்பி : இன்ன்ன்ன்னும் படம் பார்க்கல)


சுட்டதில் பிடித்தது:

தன்கையே தனக்குதவி

துணுக்குகள்:

உதகை மலை ரயில் மலையளவு பிரச்சனைகளை சந்திக்கின்றது... (செய்தி )

இந்த எதுகை மோனைக்கு ஒன்றும் குறைச்சலில்லை

-000000-

ஸ்ரீரங்கத்தில் ஜெ. 100 ரூவா நோட்டுகளில் காணிக்கை. (செய்தி)
மக்களோட பாடு பரவாயில்ல போல 500 / 1000 ரூவா நோட்டாத்தான் ஓட்டுக்கு வாங்குறாங்க

-000000-

திருப்பதி கோவிலில் ஊழல் தலைவிரித்தாடுகிறது...(செய்தி)
அட புடிச்சு மொட்டையடிச்சு விடுங்கப்பா!!!!  (எப்பவோ விகடனில் வந்த ட்விட்டு)

-000000-

காலங்காத்தால பொசு பொசுன்னு பெய்யுற மழை..  சுகமோ சுகம்

-000000-

தமிழ்நாட்டில் 10,430 தனியார் பள்ளிகள் உள்ளன...(செய்தி)

கல்வியை மட்டும்தானே(!) வித்துட்டோம்.
சரக்கு சப்ளை கவர்மெண்ட் கைவசம்தானே இருக்கு..

-000000-

36 comments:

dheva said...

சுவாரஸ்யமான பகிர்தல் கதிர்...! அருமை...!

புதிய தலைமுறையில் கட்டுரை வெளியானமைக்கு வாழ்த்துக்கள்!

vasu balaji said...

/பின் தான் ஆச்சரியப்பட்டாசு மனதிற்குள் வெடித்தது ”அட தீபாவளி வருதுல்ல”. ஊர்ல எல்லோருமே நுட்பமாத்தான் யோசிக்கிறாங்க போல./

பாவி மனுசா! அதான் ஃபோன் பண்ணா பிசியாக உள்ளதுன்னு டயல்டோன் செட்பண்ணியிருக்கீரோ:))

/பதிவர் லக்கியின் உதவியால் நான் எழுதிய கட்டுரையை ஒட்டிய ஒருபக்கச் செய்தி புதிய தலைமுறை வார இதழில் படங்களுடனும் திரு.வெங்கட்ராமன் அவர்களைப் பற்றிய விபரங்களுடனும் வெளிவந்துள்ளது./

பத்திரிகையாச்சி, தொலைக்காட்சியாச்சி, திரைப்படத்துல எப்பங்ணா? (ங்கொய்யால ஹீரோயின் யாருன்னு அலட்டுனா கோவை சரளாதாண்டியேய்)

/அடுத்து வெளிநாட்டில் வசிக்கும் ஒருவர் நான் 5000 ரூபாய் தந்தால், 5000 பேருக்கு உணவு கொடுப்பீர்களா என்றும் கேட்டிருக்கிறார். /

ஃபாரின் பிச்சக்காரனோ. கிடைக்காத கடுப்புல கேட்டிருப்பான் போல ப்ரம்மஹத்தி

சத்ரியன் said...

அன்னைத் தமிழ் நாட்டில் ,சென்னை முனையத்தில் நான் கண்டது... கழிவறை “....” நெனைச்சாலே மூச்சடைக்குது கதிர்.

நல்ல பகிர்தல்.

cheena (சீனா) said...

அன்பின் கதிர் /r

அருமை அருமை பகிர்ந்த அனைத்துமே அருமை - நுட்பமாக சிந்தித்தல் - கழிவறை - சாப்பாட்டின் விலை - பேசுவதெல்லாமே விளம்பரம் - சுட்ட துணுக்குகள் - ஆக மொத்தமும் அருமை - நல்வாழ்த்துகள் கதிர் - நட்புடன் சீனா

பழமைபேசி said...

// நான் 5000 ரூபாய் தந்தால், 5000 பேருக்கு உணவு கொடுப்பீர்களா என்றும் கேட்டிருக்கிறார்.//

ங்கொய்யால, என்னமா சிந்திக்கிறாய்ங்க??

Ahamed irshad said...

சிற‌ப்பான‌ ப‌கிர்வுங்க‌ க‌திர்..
அதிலும் அந்த‌ டாய்லெட் எக்ஸிட்??

என்ன‌த்த‌ சொல்ற‌து..

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல பகிர்தல்

செல்வா said...

பகிர்தல் நல்லா இருக்கு அண்ணா .,
அப்புறம் அந்த கடுப்பு அவுங்களுக்கு நீங்க சொன்னது மாதிரியே புரிதலில் கொஞ்சம் பிரச்சினை இருக்கும்னு நினைக்கிறேன் ..!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

பகிர்தல் அருமை

Unknown said...

அருமை கதிர்.
உங்களுக்கும் திரு.வெங்கடராமன் அவர்களுக்கும் செயற்கரிய செயலுக்கு நன்றி.

பின்னோக்கி said...

எக்ஸிட் போட்டோ - நல்லா யோசிச்சுருக்காங்க.

எந்திரன்.. அட பார்க்காம தப்பிச்சுடுவீங்க போல :)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

பகிர்வு சுவாரசியம்!

அந்த 15 & 5000 - அல்பத்தனம்!

கழிவறை.. ஹஹ்ஹ்ஹா.. உள்ள வந்தவனுக்கு எந்த வழியா வெளிய போகனும்ன்னு தெரியாத வியூகத்துல கழிவறை கட்டப்பட்டிருப்பதால, இப்பிடி வச்சிருக்காங்க போல :))

பவள சங்கரி said...

அருமைங்க கதிர்.........அந்த EXIT மேட்டர் சூப்பர்.......அதுக்கு வானம்பாடி சாரோட extra fitting வேற.......கிளப்புங்க....

'பரிவை' சே.குமார் said...

கலவையான பகிர்தல் ரொம்ப நல்லாயிருக்கு.

க.பாலாசி said...

நுட்பத்தின் கனம்:
இவனாவது கொரியர் பையன் பரவாயில்ல... எங்காபீஸுக்கு முந்தாநேத்துலேர்ந்து கெவர்மெண்ட் காரங்க இனாம் வாங்க வர ஆரம்பிச்சிட்டாங்க...இதுல வெளிப்படையாவே கேட்க ஆரம்பிச்சிட்டாய்ங்க.. இத எங்கப்போயீ சொல்றது..

இந்த 15 ரூவா கொடுத்து 15 பேருக்கு கொடுக்கச்சொன்னவரக்கூட சரி அறியாமைன்னு விட்டுடலாம்.. 5000 கொடுத்து 5000 பேருக்கு தருவீங்களான்னு கேட்டவர என்னப்பண்றது...கொஞ்சங்கூட யோசிக்கமாட்டாங்களோ?

Anonymous said...

//தம்பதி தங்கள் மகனின் பிறந்த நாளுக்கு 15 ரூபாய் கொடுத்து பதினைந்து பேருக்கு உணவு வழங்குங்கள் என்று கூறினார்களாம், அடுத்து வெளிநாட்டில் வசிக்கும் ஒருவர், நான் 5000 ரூபாய் தந்தால், 5000 பேருக்கு உணவு கொடுப்பீர்களா என்றும் கேட்டிருக்கிறார். //

கூப்பிட்டு வச்சி பின்னனும் இடியட்ஸ்

க.பாலாசி said...

புதிய தலைமுறை : மகிழ்ச்சி, இன்னும் நிறையபேரை சென்றடைய இது உதவும்..

சுட்டது : cute & nice

துணுக்குகள் : ஒ.கே ரகம்..

ராமலக்ஷ்மி said...

// க.பாலாசி said...
புதிய தலைமுறை : மகிழ்ச்சி, இன்னும் நிறையபேரை சென்றடைய இது உதவும்..//

வழிமொழிகிறேன்.

பகிர்வுகள் நன்று. படம் அருமை:)!

அன்பரசன் said...

புதிய தலைமுறையில் கட்டுரை வெளியானமைக்கு வாழ்த்துக்கள்!

Unknown said...

ஒரு ரூபாய்க்கு சாப்பாடுக்கு 15 ரூபாய் அனுப்பிய பெண்ணை நினைத்து இந்திய மக்களின் மேல் நம்பிக்கை வந்து விட்டது.. இப்படியெலாம் சிந்திக்கும் மக்கள் இருக்கும்வரைக்கும் நம் நாடு முன்னேருன்னு நம்புறோம் பாருங்க...

Paleo God said...

Super :)

ஐய்யாயிரம் ரூவாய்க்கு 50% தீவாளி டிஸ்கவுண்ட் கேக்காம உட்டாங்களே பெர்ய மன்சு!!

a said...

புதிய தலைமுறையில் படைப்பு வெளியானமைக்கு வாழ்த்துக்கள்!

கலகலப்ரியா said...

|| 15 ரூபாய் கொடுத்து பதினைந்து பேருக்கு உணவு வழங்குங்கள் என்று கூறினார்களாம், அடுத்து வெளிநாட்டில் வசிக்கும் ஒருவர், நான் 5000 ரூபாய் தந்தால், 5000 பேருக்கு உணவு கொடுப்பீர்களா என்றும் கேட்டிருக்கிறார்.||

ம்ம்... வேலை வெட்டி எல்லாம் கெடாசிட்டு.... ஒத்த ரூவாக்கு சாப்டலாம்யான்னு... அங்கன துண்டைப் போட்டு பிச்சை எடுத்தாலும் எடுப்பாய்ங்க...

Chitra said...

அருமையான பகிர்தல்!!!

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

Mahi_Granny said...

வவுனியா போய் வந்ததிலிருந்து எழுத்தில் இலங்கைத் தமிழ் லேசாக கலந்து இருப்பது போல் படுகிறது. நுட்பத்தின் கனம் அப்படி சொல்ல வைக்கிறது. பகிர்ந்தது அருமை.

மதுரை சரவணன் said...

பகிர்வுக்கு நன்றீ.. புதிய தலைமுறைச் செய்திக்கு வாழ்த்துக்க்கள்’

அபி அப்பா said...

\\கல்வியை மட்டும்தானே(!) வித்துட்டோம்.
சரக்கு சப்ளை கவர்மெண்ட் கைவசம்தானே இருக்கு..\\

அண்ணாச்சி! கல்வியை தனியார் வசம் ஆக்கியதும், தனியார் வசம் இருந்த டாஸ்மாக்கை அரசு வசம் ஆக்கியதும் பிரமாதம் போங்க. அப்படியே அந்த கைங்கர்யம் செஞ்சவங்களுக்கு காரியமும் அடுத்த தேர்தல்ல செஞ்சுடுவோம்.

அபி அப்பா said...

\\பாவி மனுசா! அதான் ஃபோன் பண்ணா பிசியாக உள்ளதுன்னு டயல்டோன் செட்பண்ணியிருக்கீரோ:))\\

வானம்பாடிகள் அய்யா கிட்டே பேசனுமே ஒரு தடவை.

அந்நியன் said...

பதிவுலகை பற்றிய பரபரப்பு தொடர் அந்நியனின் முதல் அத்யாயம்..

Unknown said...

அன்பின் கதிர்,

எனக்கென்னமோ அந்த 15 , 5000 விஷயத்தை தவிர்த்திருக்கலாம் என்று நினைக்கிறேன். என்னிக்கும் கொடுப்பவர்கள் தான் கொடுப்பார்கள். மற்றவரெல்லாம் நல்ல இடிப்பாங்க. தவறிப் போய் ஒரு வெகுளியா சொன்ன விஷயத்தை, இப்பிடி இடிச்சுக் காமிச்சா, மனமுவந்து பணம் கொடுத்தவர்கள், ஒரு சின்ன தவறினால் வெளியில் பெருமையாக சொல்லிக்க முடியாமல் போய்விடும். அடுத்த தடவ தேவைப் படும் போது, நீங்களும் அவரிடம் கேட்க முடியாது, அவர்களுக்கும் மனம் வராது.

படிக்கிற காலத்தில் நேரில் கண்ட அனுபவம். உண்டியல்ல 10 , 15 ரூபாய் போடறவங்க மலர்ந்த முகத்தோட கொடுப்பாங்க. 10 பைசா அல்லது ஒன்னும் போடாதவங்க மூஞ்சி காமிச்சுட்டு அல்லது நல்லா வசவு கொடுத்துட்டுப் போவாங்க. இருந்தும் பேசாம வாங்கிய அனுபவம் உண்டு.

டிஸ்கி:
பழமை, சத்தியமா நான் அந்த முட்டாள் தனமான கேள்வியை கேட்கலை. தூக்கத்தில கூட அப்பிடி எனக்கு சிந்திக்கத் தெரியாது. உங்க ஈரோட்டு மாப்பு சாட்சி.

ஊர்சுற்றி said...

சுவாரசியம் நிறைந்த பகிர்வு...

1 ரூபாய் சாப்பாடு : இந்த அளவுக்கு முட்டாளா இருக்கிறவன் எப்படி வெளிநாடு போனான்!!!!!!!!!!

Anisha Yunus said...

மகிழ்ச்சி என்னும் தலைப்பில் வெளியான செய்தி அருமையான செய்தி. மளிகைக்கடை / ஹாஸ்பிடல் / ஹோட்டல் போன்று எல்லா இடத்திலும் இப்படி சிலர் மனது வைத்தால் பலரின் வாழ்வில் ஒளி பிறக்கும். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

உங்கள் தளத்தை ஃபாலோவர் விட்ஜெட்டில் சேர்த்தும் எனக்கு ஃபீட்ஸ் எதுவும் வருவதில்லை. சிறிது கவனிக்க இயலுமாண்ணா??

கருவாயன் said...

நண்பர் கதிர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

-சுரேஷ் பாபு

KARTHIK said...

// கருவாயன் said...
நண்பர் கதிர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

-சுரேஷ் பாபு //

அண்ணாரை வழிமொழிகிறேன் :-)

கதிர்கா said...

/*ஒரு தம்பதி தங்கள் மகனின் பிறந்த நாளுக்கு 15 ரூபாய் கொடுத்து பதினைந்து பேருக்கு உணவு வழங்குங்கள் என்று கூறினார்களாம்*/

நல்லவேளை, 15 ரூபாய்க்கு எங்க கூட வந்த 15 பேருக்கு சாப்பாடு கொடுன்னு கேட்கலையே??

பல கருத்துக்களை சுவையாக கோர்த்துள்ளீர்கள். நன்று

தாராபுரத்தான் said...

பகிர்வுக்கு நன்றிங்கோ