தேங்காய் மண்டை(!)
காவல்துறை பணி தேர்வுக்கு சென்றவரை உயரம் போதவில்லையென்று நான்கு வருடங்களாக திருப்பியனுப்பி விட்டார்களாம். எப்படியாவது போலிஸில் சேர விரும்பிய மூளை கிரிமினல்(!) தனமாக யோசித்தது, உயரத்தை அதிகரிக்க, தலைமேல் ஒரு தேங்காய் மட்டையை வைத்து அதற்குமேல் விக் வைத்து (அதிக உயரமில்லை ஜெண்டில்மேன் வெறும் 3 செ.மீ.தான்) நேராக சேலம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த காவலர் தேர்வுக்குச் சென்றிருக்கிறார். ஒப்பனை போதவில்லைபோலும், விளைவு.... போலிஸ் வேலை தேடிப்போனவருக்கு, வழக்கு பதிவானதுதான் மிச்சம்.....
ஜெயா டிவி காலை மலர் நிகழ்ச்சி:
நாளை 06.10.2010 புதன்கிழமை காலை 8.10 மணி முதல் 8.40 மணிவரை நான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காலைமலர் நிகழ்ச்சி ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
விரிந்த பச்சை:
நேற்று திருப்பூர் செல்ல வேண்டி, பேருந்தை தவிர்த்து மாலை நேர பயணிகள் ரயிலைப் பிடித்தோம். பகல் நேர ரயில் பயணம் ஆயிரமாயிரம் சுவாரஸ்யங்களை கொண்டு வந்து சேர்க்கிறது. நாம் அதிகம் புழங்கிய இடங்களாக, ஊர்களாக இருந்தாலும் கூட, ரயிலடிகள் வித்தியாசமான கோணத்தில் தெரிகிறது.
ஈரோடு தாண்டியதிலிருந்து ஊத்துக்குளி தாண்டும் வரை எங்கு காணினும் பசுமை கண்களை நிரப்பியது. புதிதாய் துளிர்க்கும் பயிர்கள் இளம்பச்சை (கிளிப்பச்சை) நிறத்திலும், முதிர்ந்த, விளைந்த பயிர்கள் அடர் பச்சையும் என, ரயில் படிகளில் நின்று பார்க்கும் வெளியெங்கும் பச்சையாய் விரிந்து கிடந்தது.
ஊத்துக்குளி தாண்டிய, ரயிலடியோரம் விவசாய நிலங்களைக் காண முடிவதில்லை. ஆங்காங்கே தென்படும் பனை மரங்கள் கூட, சாயக் கழிவுகளின் புண்ணியத்தில் மாண்டு போய், மொட்டை மரங்களாக நின்று கொண்டிருக்கின்றன. நச்சு மரங்கள் எனும் முள் மரங்கள் மட்டும் நச்சு சாயக்கழிவுகளையும் தின்று குடித்து செழிப்பாகவே இருக்கின்றன.
ஈரோடு தாண்டியதிலிருந்து ஊத்துக்குளி தாண்டும் வரை எங்கு காணினும் பசுமை கண்களை நிரப்பியது. புதிதாய் துளிர்க்கும் பயிர்கள் இளம்பச்சை (கிளிப்பச்சை) நிறத்திலும், முதிர்ந்த, விளைந்த பயிர்கள் அடர் பச்சையும் என, ரயில் படிகளில் நின்று பார்க்கும் வெளியெங்கும் பச்சையாய் விரிந்து கிடந்தது.
ஊத்துக்குளி தாண்டிய, ரயிலடியோரம் விவசாய நிலங்களைக் காண முடிவதில்லை. ஆங்காங்கே தென்படும் பனை மரங்கள் கூட, சாயக் கழிவுகளின் புண்ணியத்தில் மாண்டு போய், மொட்டை மரங்களாக நின்று கொண்டிருக்கின்றன. நச்சு மரங்கள் எனும் முள் மரங்கள் மட்டும் நச்சு சாயக்கழிவுகளையும் தின்று குடித்து செழிப்பாகவே இருக்கின்றன.
தி க்யூரியஸ் கேஸ் ஆப் பென்சமின் பட்டன்
போரில் இறந்த மகன் திரும்பி வரவேண்டுமென்று ஒருவர் கடிகாரத்தை பின்னோக்கி ஓடும்படியாக வடிவமைக்கிறார். அதே நேரத்தில் ஒரு குழந்தை பிறக்கிறது, 82 வயது முதுமைத் தோற்றத்தோடு குழந்தைமனதோடு, நாட்கள் நகர நகர வயது கூடக்கூட மனது முதிர்கிறது, உடல் இளமையாகிறது.
காதலியோடு கூடி குழந்தை பிறந்த பிறகு, குழந்தை வளரவளர, தான் இன்னும் இளமையாக மாறி ஒரு கட்டத்தில் குழந்தையாக மாறிவிடும் விபரீதம் உணர்ந்து, குடும்பத்தை விட்டு பிரியும் சூழல் என படத்தில் ரசிக்க நிறைய கனமான தருணங்கள் உண்டு. பல கதாபாத்திரங்களில் கண்ணுக்குள் நிற்கும் ஒன்று, தாய் அன்பை மனம் முழுதும் கருப்பினத் தாயாக வரும் குயினி. தவறவிடக் கூடாத ஒரு படம் என்றே சொல்ல வேண்டும். உதவிய நண்பர் கார்த்திக்கு நன்றி.
காதலியோடு கூடி குழந்தை பிறந்த பிறகு, குழந்தை வளரவளர, தான் இன்னும் இளமையாக மாறி ஒரு கட்டத்தில் குழந்தையாக மாறிவிடும் விபரீதம் உணர்ந்து, குடும்பத்தை விட்டு பிரியும் சூழல் என படத்தில் ரசிக்க நிறைய கனமான தருணங்கள் உண்டு. பல கதாபாத்திரங்களில் கண்ணுக்குள் நிற்கும் ஒன்று, தாய் அன்பை மனம் முழுதும் கருப்பினத் தாயாக வரும் குயினி. தவறவிடக் கூடாத ஒரு படம் என்றே சொல்ல வேண்டும். உதவிய நண்பர் கார்த்திக்கு நன்றி.
மயில்:
ஈரோடு மாவட்டத்தின் சில கிராமப் பகுதிகளில், குறிப்பாக திங்களூர் தொடங்கி விஜயமங்கலம், சென்னிமலை வரை இருக்கும் பகுதிகளில் மயில்களின் எண்ணிக்கை வெகுவாக கூடிவிட்டன. உயிரியல் பூங்காக்களிலும், படங்களில் கண்டு ரசித்த மயில்கள் இந்தப் பகுதி முழுதும் மிகச் சாதாரணமாக கூட்டம் கூட்டமாக சுத்தித் திரிவதைக்காணும் போது ஆச்சரியமாக இருக்கின்றது. மாலை நேரங்களில் மிக அழகாய் தோகை விரித்து ஆடுவதை ஆங்காங்கே காணலாம். இதில் வருத்தமான செய்தி என்னவெனில், விவசாயிகளுக்கு மயில்கள் மிகப்பெரிய எதிரிகளாக மாறிவருகின்றன. இரை தேடி விவசாய நிலங்களுக்கு படையெடுக்கும் மயில்க் கூட்டம் அடுத்த சில நிமிடங்களில் தானியப் பயிர்களை சூறையாடி செல்கின்றன.
உதாரணத்திற்கு ஒரு சூரியகாந்தி, அல்லது மக்காச் சோளச் செடி மீது அமரும் மயில், அடுத்த ஓரிரு நிமிடத்தில் மொத்தமாக் தின்று முடித்துவிடுகிறது. முப்பது நாற்பது என அணியாய் திரண்டு வரும் மயில்கள் பத்து பதினைந்து நிமிடங்களில் விவசாய நிலங்களை துவம்சம் செய்து விடுகின்றன. தேசியப் பறவையை காப்போம் என இயற்கை ஆர்வலர்கள் முழங்கும் நேரத்தில், தகரங்களைத் தட்டுவது, பட்டாசு வெடிப்பது என மயில்களின் படையெடுப்பைத் தடுக்க விவசாயிகள் போராடுவது நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
துணுக்குகள்:
ஃபேஸ்புக் / ட்விட்டரில் அவ்வப்போது கிறுக்கியவை...
அடித்து துவைக்கும் மழையை உற்றுப் பார்க்கும் போது..
மனதிற்குள்ளும் ஏதோ கரைகிறது
மனதிற்குள்ளும் ஏதோ கரைகிறது
-000000-
படபடவென மழைதூறும் நேரம்............
மண்வாசம் தேடினால்,
தார்சாலையில் தேய்ந்த டயர் வாசனைதான் மிஞ்சுகிறது...
தார்சாலையில் தேய்ந்த டயர் வாசனைதான் மிஞ்சுகிறது...
-000000-
ஒன்றைத் தூக்கி எறியக் காரணமாயிருப்பது அதன் தன்மையாவும் இருக்கும், சில சமயம் நம் மனதாகவும் இருக்கும்!!!!
-000000-
தப்புகளும், சிறு சிறு குற்றங்களும் தேவையின் அடிப்படையிலா
அல்லது கிடைக்கும் வாய்ப்பை பொறுத்தா!!!!!????
அல்லது கிடைக்கும் வாய்ப்பை பொறுத்தா!!!!!????
-000000-
போர்களின் துவக்கப்புள்ளி தெரிகிறது,
முற்றுப் புள்ளி தெரிவதேயில்லை...
முற்றுப் புள்ளி தெரிவதேயில்லை...
__________________________
21 comments:
//பாகனுக்குத் தோழனாக இருந்தால் போதும்// Nice :)
தேங்காய் கொஞ்சம் ஓவர்.
***
ஜெயாவிற்கு வாழ்த்துக்கள்.
***
நச்சு நீர் :(
***
தி க்யூரியஸ் கேஸ் ஆப் பென்சமின்...
where's the DVD now....??
***
டவிட்டர்...
//பாகனுக்குத் தோழனாக இருந்தால் போதும்//
உண்மைதான்...
***
பகிர்வுகள் சூப்பர்.... :)
பகிர்வுக்கு நன்றிங்க.திருப்பூர் முத்தமிழ் மன்ற விழா எப்படி இருந்ததுங்க......அதைப்பற்றி எழுதுவீர்களென எதிர்பார்த்தேன்......நான் கூட் சென்ற மாதம் சாய் பாபா கோவில் புதிதாகக் கட்டிக் கொண்டிருக்கிறார்களே அந்த இடத்தில் ஒரு அழகான மயில் தோகை விரித்து பறந்து வந்து உட்கார்ந்ததைப் பார்த்தேன்.....பெரிய மயில்...மிக ஆச்சரியமாக இருந்தது......
பகிர்வுகள் நன்று.
மயில்கள் பற்றிய குறிப்பு மகிழ்ச்சி. விவசாய பாதிப்பிலிருந்து காக்க வழிவகைகள் கண்டறியவேண்டும். திருநெல்வேலி மாவட்ட விவசாயப்பகுதிகள், வனாந்திரங்களில் முன்னர் அவ்வப்போது காணப்பட்ட மயில்கள் இப்போது பல்கிப் பெருகியிருக்கின்றன என்பது கூடுதல் செய்தி. கோவில்பட்டி-நெல்லை வழியில் பிரதான சாலைப் பயணத்தில் நிறைய மயில்களை நாம் காணலாம்.
இரண்டு செய்திகள் ஆவலைத்துண்டுபவை.
1) 06.10.2010,
2) பெஞ்சமின் பட்டன்
முதலாவது காத்திருக்கிறோம்,
ரெண்டாவதைத் தேடுவோம்.
இராசா, நாங்க எல்லாம் எட்ட இருக்குறவிக.... கொஞ்சம் வலையேத்தி வுடுங்க.... கொஞ்சம் என்ன? நெம்பவே, புண்ணியமாப் போகும் எங்களுக்கு....
இஃகிஃகி.... பாக்குற எங்களுக்கு மட்டுமில்ல, பேசுன உங்களுக்குந்தேன்..... ஒடனே, கோவத்தைப் பாரு...க்கும்...
ஜெயாடிவியில் வருவதற்கு வாழ்த்துக்கள்..
தேங்காய் விஷயம் ஆச்சர்யம்மாக இருந்தது. இப்படியும் செய்வாங்களா?
நல்ல பகிர்வு
வாழ்த்துகள் கதிர். சக்கரைன்னு எழுதி நக்கினா தித்திக்குமா. கையில கேமரா இல்லாம ஊர்ப்பயணம் போகலாமா? அவ்வளவு மயிலை ஒரு சேரப் பார்த்து படம் புடிச்சிட்டு வர வேணாமா? ட்விட்டர் க்ளிட்டர்ஸ்
//இஃகிஃகி.... பாக்குற எங்களுக்கு மட்டுமில்ல, பேசுன உங்களுக்குந்தேன்..... ஒடனே,
கோவத்தைப் பாரு...க்கும்.//
பாலா அண்ணன் எதிர் பேட்டி போடவேண்டும் என்று அன்போட கேட்டுக்கொள்கிறேன்
நல்ல பகிர்வுகள். வாழ்த்துகள்.
விஜி சொல்லி உங்களை படிக்க ஆரம்பித்தேன் பாஸ். உங்களுடைய பழைய பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன்.
everything is nice..:))
//படபடவென மழைதூறும் நேரம்............
மண்வாசம் தேடினால்,
தார்சாலையில் தேய்ந்த டயர் வாசனைதான் மிஞ்சுகிறது...//
Nice..
கதிர்..
வாழ்த்துகள். தொலைக்காட்சியின் காணொளியை வலையேற்றுங்கள்.
இங்கே என் வீட்டில் ஜெயா தொலைக்காட்சி வருவதில்லை.
பகிர்வுகள் சூப்பர்....
மயில்கள்லாம் உயிர்வாழ வேற என்னதான் செய்யும்... விவசாயிகள் நிலைமை எப்பவும்போல பத்தோட பதினொன்னு...
//கையில கேமரா இல்லாம ஊர்ப்பயணம் போகலாமா?//
அதானே... எதாச்சும் போட்டோஸ் இருக்கும்னு நெனச்சா ஒண்ணுமேயில்ல...சரி திருப்பூர் போனீங்களே என்னாச்சு.. அந்த அப்டேட்ஸும் இல்ல.. ப்ப்ச்.. சப்...
காலை மலர் பேட்டி மிக அருமை.
இரத்த தானம், கண் தானம், மரம் நடுதல், ப்ளாஸ்டிக் ஒழிப்பு, வலைப்பதிவுகளின் நன்மை என பல்வேறு விஷயங்களைப் பற்றிய சிறப்பான பகிர்வு.
நல்ல இடுகை.பாராட்டுகள்.
//.. படிகளில் நின்று பார்க்கும் ..//
இவ்ளோ வயசாகியும் இன்னும் படில நின்னுட்டுதான் போறிங்களா..??
அப்புறம் ஜெயா டிவியில் உங்களது நிகழ்ச்சி நன்றாக இருந்தது(ஆனா, அதிகாலைல தூக்கம் கலைய வச்சுட்டிங்களே..!!)
//.. அகல்விளக்கு said...
ஜெயாவிற்கு வாழ்த்துக்கள். ..//
ராசா ஏன் உங்களுக்கு வாழ்த்து சொல்லாம, ஜெயாவுக்கு வாழ்த்துகள் சொல்லுறாரு..??!!
ஜெயா டி.வி புகழ் கதிருக்கு வாழ்த்துக்கள் !
Post a Comment