தமிழ் இலக்கியச் சூழலில் குறிப்பிடத்தக்க சக்தியாக வலம் வந்து கொண்டிருப்பவர் எழுத்தாளர் பெருமாள் முருகன். காலச்சுவடு இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிக்கும் இவர் நாமக்கல் அண்ணா அரசினர் கலைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இது வரை 15 நூல்களையும், 125 ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். இவருடைய நிழல் முற்றம், கூளமாதாரி ஆகிய புதினங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
தென்கொரியாவில் உள்ள அரசு சார்பு அமைப்பான கொரியன் இலக்கிய மொழிபெயர்ப்பு நிறுவனம் எழுத்தாளர்களுக்கான உறைவிட முகாம் ஒன்றை நடத்திவருகிறது. சென்னையில் உள்ள இந்திய கொரிய கலாசார மையத்துடன் இணைந்து பரிமாற்றம், படைப்பாற்றல் குறித்த எழுத்தாளர் உறைவிட முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தது. தென்கொரியாவில் செப்டம்பர் மாதம் முழுவதும் தங்கியிருந்து பண்பாட்டு பரிமாற்றம் மேற்கொள்ள உலகம் முழுவதும் இருந்து 6 நபர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அந்த முகாமில் கலந்து கொள்ள ஆசியக் கண்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே நபர், எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆவார்.
2006-இல் நடைபெற்ற முகாமில் இந்தியா சார்பில் இந்தி எழுத்தாளர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டார். இதன்பிறகு தமிழ்ப் படைப்பாளரான பெருமாள் முருகன் 2010-இல் தேர்வாகி கலந்து கொண்டு வெற்றிகரமாக திரும்பியுள்ளார். இதையொட்டி, நாமக்கல் அருகே மோகனூரில் இருக்கும் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரித் தாளாளர் பேராசிரியர்.சு.பழனியாண்டி அவர்கள் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுக்கு பாராட்டு விழாவை நடத்த முடிவு செய்தார்.
அச்சமயம் பெருமாள் முருகன் அவர்களின் ’கங்கணம்’ நூல் குறித்த விமர்சனத்தை, எங்கள் அரிமா சங்க இதழான ’சுவடுகள்’ இதழில் வாசித்த பேரா. பழனியாண்டி அவர்கள் என்னையும் அந்தப் பாராட்டு விழாவில் கங்கணம் குறித்த பார்வைகளைப் பதிவு செய்யுமாறு அழைத்தார்.
விழாவில் அரிமா மாவட்ட முன்னாள் ஆளுநர் அரிமா.கே.தனபாலன், வேலூர் நாங்கள் இலக்கிய அமைப்பைச் சார்ந்த கவிஞர். செல்மா காமராசன், பெங்களூரிவில் வருமான வரித்துறை இணை ஆணையராக பணியாற்றும் திரு. முரளி ஐ.ஆர்.எஸ் ஆகியோரோடு நானும் கலந்து கொண்டேன்.
திரு.முரளி ஐ.ஆர்.எஸ் அவர்கள் ப.வேலூர் அருகே ஒரு கிராமத்தைச் பூர்வீகமாகக் கொண்டு தற்சமயம் பெங்களூருவில் பணியாற்றுகிறார். ஒரு முறை எதேச்சையாய் காலை 5 மணிக்கு கங்கணம் புதினத்தை வாசிக்க எடுத்தவர், இடையில் நிறுத்த மனமில்லாமல், அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்து வாசித்து முடித்தார் என்பது சுவாரசியம் மிகுந்த தகவல்.
பாராட்டு விழா இன்று காலை மோகனூர் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரியில் பேரா.பழனியாண்டி அவர்கள் மிக நேர்த்தியான தலைமையைரையோடு துவங்கியது. கவிஞர் செல்மா காமராசன், திரு. முரளி, அரிமா. தனபாலன் ஆகியோர் மிகச் சிறந்ததொரு பாராட்டுரைகளை வழங்கினார்கள். குறிப்பாக திரு.முரளி கங்கணம் குறித்த அவரது பார்வையை அழகாக பகிர்ந்து கொண்டார். நானும் கங்கணம் புதினத்தை வாசிக்க நேர்ந்த பின்னணி, வாசித்த அனுபவம், அதில் வரும் கதாபாத்திரங்களின் இயல்பான, அப்பட்டமான தன்மை குறித்த எனது பார்வைகளை பகிர்ந்து கொண்டேன்.
இறுதியாக ஏற்புரை நிகழ்த்த வந்த எழுத்தாளர் பெருமாள் முருகன், தன்னுடைய கங்கணம் புதினம் 2007ல் வெளியாகி, இது வரை அதிகம் பேசப்படாத ஒன்று என்றும், சமீபத்தில் அதிகமாகப் பேசப்பட்டு வருவதாகவும் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார். மேலும் தென் கொரியா நாடு கொரிய மொழி தோன்றி 150 வருடத்தில், மொழியளவில் முன்னேறியிருப்பதையும், இலக்கியத்திற்கு கொரிய மக்கள் அளித்து வரும் மரியாதை குறித்தும், தென் கொரிய மக்களின் விருந்தோம்பல், சாக்கடைகள் கலக்காத தூய்மையான ஹான் நதி, ஊழலற்ற நிர்வாகம், தன்னலம் பாராத அரசு அமைப்பு என தென் கொரியா குறித்து ஒரு மாதத்தில் தான் அனுபவித்து வந்த பல செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்.
மாணவர்கள் |
பேரா.பழனியாண்டி - தலைமையுரை |
திரு. முரளி - உரை |
கவிஞர். செல்மா காமராசன் |
கங்கணம் குறித்த என் பார்வை |
எழுத்தாளர். பெருமாள் முருகன் ஏற்புரை |
27 comments:
அருமைங்க மாப்பு; வாழ்த்துகள்!!
எனது பாராட்டும் ...
வாழ்த்துகளும் எனது பாராட்டுகளும்.
வாழ்த்துகள்
அருமைங்க... வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!
வாழ்த்துக்கள் கதிர், தொடரட்டும் உங்கள் பணி
நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்!
பாராட்டுகிறோம்.
இலக்கியவாதி கதிருக்கு வாழ்த்துகள்.
வாழ்த்துகள் கதிர்..
உங்களுக்கு எப்படி நேரம் இருக்கிறது என்று தான் வியக்கிறேன்.
வாழ்த்துக்கள் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு
பாராட்டுக்கள் உங்களுக்கு அழகாய் பதிவிட்டமைக்கு !!!
வாழ்த்துக்கள் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு
பாராட்டுக்கள் உங்களுக்கு அழகாய் பதிவிட்டமைக்கு !!!
//வானம்பாடிகள் said...
இலக்கியவாதி கதிருக்கு வாழ்த்துகள்.
//
அப்ப பேச்சாளர்??
பெருமாள் முருகன் என்னுடைய பிரியத்துக்குரிய எழுத்தாளர்களில் ஒருவர். அவருடைய நிழல்முற்றம்,ஏறுவெயில் போன்ற புதினங்களையும் 'நீர் விளையாட்டு' போன்ற அற்புதமான சிறுகதைகளையும் வாசித்துள்ளேன். 'கங்கணம்' இன்னும வாசிக்கவில்லை. வாசிக்கத் தூண்டுகிறது உங்கள் பதிவு. விழாவைப் பற்றின பகிர்தலுக்கு நன்றி.
என்னோட வாழ்த்தும்...
எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு வாழ்த்துக்கள்!!!!!!!!!!!
வாழ்த்துகள்ணா
நல்வாழ்த்துகள் கதிர்
பெருமாள் முருகன் என் விருப்பத்திற்குரிய எழுத்தாளர். அவர் பற்றிய பகிர்வுக்கு மிக்க நன்றி கதிர் அண்ணா.
ஒரு அருமையன எழுத்தாளரை கௌரவித்த நிகழ்வு.பகிர்ந்த கதிருக்கு வாழ்த்துக்கள்.
.. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!
அவரோட புத்தகத்த படிக்கும் ஆவல் அதிகமாகுது..
வாழ்த்துகள் கதிர்.
பெருமாள் முருகனின் நீர் விளையாட்டு சமீபத்தில்தான் வாசித்தேன்.
ரொம்ப சந்தோஷம்...
ரொம்ப சந்தோஷம்...
வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
பாராட்ட பட வேண்டியவர்தான்.
அருமையான பதிவு.
திரு பெருமாள் முருகன் அவர்களின் புத்தகங்களை தேடிப் படிக்க வேண்டும்.
நன்றி.
Post a Comment