தடதடக்கும் ரயில் பயணங்களில்
சலசலக்கும் மழைச்சாரல்களால்
சன்னலோரக் கம்பிகளில்
தோரணமாய் தொங்கும் துளிகளில்
அதங்கிக் குலுங்கி சீறும் பெட்டியின்
காற்றைக் கிழிக்கும் வேகத்தில்
கோபத்தோடு உட்புகும் காற்றில்
கரைந்து தெறிக்கும் சிதறலில்
பேரிரைச்சலைத் தவிர்க்க
மூடும் கண்ணாடிச் சன்னல்களில்
அலையலையாய் வழிந்தோடும்
வெள்ளத்தோரணத்தில்
பெரும் மழைத்துளி தாளம் போடும்
சேற்று வயலில் சிந்திக்கிடந்த
வியர்வைத் துளியில் பிறந்த
வெள்ளப் பிரவாகத்தில் என
உலகின் ஒட்டுமொத்த அழகையும்
ஒன்றுகூட்டித் தனக்குள்ளே
தக்கவைத்திடத் தவறுவதில்லை
மழை நேரங்கள்!
_______________
25 comments:
//உலகின் ஒட்டுமொத்த அழகையும்
ஒன்றுகூட்டி தனக்குள்ளே
தக்கவைத்திடத் தவறுவதில்லை
மழை நேரங்கள்!//
அழகு.
அழகு.
மழை நேரங்கள் எப்போதும் கவிதையானவை.
ஐயோ , மூச்சு விடாம படிச்சேன் ..
நல்லா இருக்கு அண்ணா ..!!
ரயிலைக் கவிதைக்கு பயன்படுத்தினாலும் டிக்கட் வாங்கணும்னு ஒரு சட்டம் கொண்டுவரணும். வண்டில படுத்ததுக்கு ஒரு கவிதை, மழை பேஞ்சதுக்கு ஒரு கவிதைன்னு தேத்தியாச்சு. ஈரோட்ல மழைங்களா மாப்பு. ச்செரி ச்சேரி கலாய்ச்சது போதும். தகரக் கொட்டாயில தரதரன்னு மழை பேஞ்சா மாதிரி ஓட்டம் கவிதை:).
ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காத ஒன்று மழை....
கவிதை அழகு....
அழகு.
நல்லாயிருக்குங்க.
ஒரு துளி கடல் ....
உலகின் ஒட்டுமொத்த அழகையும்
ஒன்றுகூட்டித் தனக்குள்ளே
தக்கவைத்திடத் தவறுவதில்லை
மழை நேரங்கள்!
..... அழகிய நேரங்கள்....
//தக்கவைத்திடத் தவறுவதில்லை
மழை நேரங்கள்!//
உண்மை....
"மழை என்ற நங்கை
மண்ணுலகில் வந்து
நடனமாடி சென்றாள்"
அசத்தல் ரகம் அல்ல, ஓகே.
மழை நேரத்து அழகை அப்படியே படம் பிடிச்ச மாதிரி இருக்கு கதிர்.ஆனால் இதே மழையை நான் சோகமாகப் பார்த்திருக்கிறேன்.
மனநிலையைப் பொறுத்து மழை இடம் மாறுமோ !
பெரும் மழைத்துளி தாளம் போடும்
சேற்று வயலில்
அழகுங்க..
மழையழகு வசீகரம்!
காண கண்கோடி வேண்டும்.. அதை இப்படி எழுதவும் கைவரவேண்டும்....
அதே அதே.
சூப்பர், இங்கேயும் மழையா..
கதிர்,
இப்பொழுதெல்லாம் கவிதைகள் எழுத்தப்படுவதற்கு மட்டுமே “மழை” பெய்கிறது.
மழை நேரம் - மயக்கும் நேரம்.
romba nalla iruku boss
romba nalla iruku boss
ரயில் மழை.. அழகு..
ennai muluthai arintha uyir thozhi mazhai mattume
மழை நேரங்கள் கவித்துவமானவை! அது குறித்து எழுதும் எல்லாவற்றையும் அழகாக்கி விடுகிறது மழை...
உங்களது கவிதையையும்தான் ... கவிதை அழகு !!
ஓ...ஓ...ஓ...மழை பற்றி நீங்க எழுதியது ரொம்ப ரொம்ப அழகு கதிர். மழை , ரயில், யானை ,கடலலை ,ஆகாயவிமானம் இதெல்லாம் பார்க்கபார்க்க சலிக்காது. நீங்க மழையை ரயிலில் ஏற்றியது இன்னும் சூப்ப்ப்ப்ப்பர்.
Post a Comment