தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி வெறி கொண்டு முழங்கிய தமிழ் இனத்தில்தான், சொட்டுப்பாலுக்கு வக்கில்லாமல், சாலையோர அழுக்கு மூட்டைகளோடு மூட்டைகளாகக் கிடக்கும் குழந்தைகளும், சினிமா நடிகனின் கட்-அவுட்டுக்கு பால் வார்க்கும் புண்ணியவான்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எளிதாய் உணவு கிடைப்பவனுக்கு பசி என்பது ஒரு சுகமான அனுபவம், உணவுக்கு வழியில்லாதவர்களுக்கு பசி மிகக்கொடிய, உயிரை உருக்கும் நோய்தானே!
சுயநலச் சூறாவளி சுற்றிச் சுற்றி தாக்கினாலும், பொது நலனில் அக்கறை கொண்டு ஆங்காங்கே அர்பணிப்புத் தன்மையோடு ஏதாவது ஒரு வகையில் யாரோ ஒரு சிலர் செய்யும் தியாகங்களே உலகை இன்னும் வாழ்வதற்கு அர்த்தமுள்ளதாக வைத்திருக்கின்றது.
இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு நண்பர் ஆரூரன் மூலமாக எனக்கு அந்த மெஸ் அறிமுகமானது. அது ஈரோடு, பவர்ஹவுஸ் ரோடில் நல்லசாமி மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் A.M.V மெஸ். சுவையான உணவுப் பதார்த்தங்களை அநேகமாக ஈரோட்டில் யாரும் தராத விலையில் அவர்கள் தருவதாகவே நினைக்கிறேன். சாப்பிடச்சென்ற போது கவனித்ததில் ஆச்சர்யமாக இருந்தது, தங்கள் மெஸ்ஸில் உடல் ஊனமுற்றோருக்கு 10% தள்ளுபடி, கண் பார்வையற்றவர்களுக்கு 20% தள்ளுபடி என்று அறிவிப்பு பலகை வைத்திருந்தது. இன்னொரு பக்க சுவற்றில் கரும்பலகை சீட்டில் எழுதியிருந்து இன்னும் ஆச்சரியத்தை கிளப்பியது. ஒரு ரூபாய் விலையில் மதிய உணவை வழங்குவதாகவும், அதற்கு நல்லெண்ணத்தோடு நிதியுதவி செய்தவர்கள் பெயரை நன்றியோடு குறிப்பிட்டிருந்தார்கள்.
இது குறித்து உணவகத்தில் உரிமையாளர் திரு. வெங்கட்ராமன் அவர்களிடம் கேட்டபோது, ”ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப் பட்டிருப்பவர்கள் பெரும்பாலும் வசதி இல்லாதவர்களாகவும், கிராமப்புறத்தை சார்ந்தவர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கான உணவு மருத்துவமனையில் வழங்கப்படும். அதே சமயம் நோயாளிகளுக்கு துணையாக ஒருவர் உடன் இருப்பர், அவர்களுக்கான உணவிற்கு அவர்கள் வெளியில்தான் செல்ல வேண்டும். சில நேரங்களில் விபத்துகளில் சிக்கி 108மூலம் மருத்துவமனைக்கு வரும் ஏழைகளுக்கு அடுத்த நாள் உணவு என்பதே கேள்விக்குறிதானே!? ஒருவேளை உணவிற்கான செலவு என்பது பலருக்கு இயலாத ஒன்று. அதை மனதில் கொண்டு தினமும் மருத்துவமனையில் 20 பேருக்காக ஒரு ரூபாயில் உணவு வழங்க, அதற்கான டோக்கன்களை மருத்துவமனையில் தருகிறோம். மருத்துவமனையில் அவர்கள் தேர்ந்தெடுத்து அனுப்பும் 20 பேருக்கு ஒரு ரூபாயில் மதிய சாப்பாட்டை அளிக்கிறோம்” என்றார்.
ஒரு பிளாஸ்டிக் பையில், சாப்பாடு, சாம்பார், ரசம், மோர், பொறியல், அப்பளம் என பார்சல் சாப்பாடு தயாராக மதிய நேரங்களில் டோக்கனோடு வருபவர்களின் பசியாற்ற காத்திருக்கிறது.
கையில் டோக்கனோடு சாப்பாடு வாங்க வரும் நபர்களைப் பார்க்கும் போது, அவர்கள் கண்களில் ஒரு நம்பிக்கையும், மகிழ்ச்சியையும் ஒரு சேரக் காண முடிந்தது. ஒரு ரூபாய்க்கு சாப்பாடு குறித்து அவர்களிடம் கேட்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக உணர்வதாக சொல்கிறார்கள். மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, உணவு எடுத்துக்கொள்ளும் நிலையில் இருக்கும் தங்கள் உறவுக்காரரான நோயாளியோடு பகிந்துகொள்வதாக நெகிழ்ந்து கூறுகின்றனர்.
சாதாரணமாக தங்கள் மெஸ்ஸில் 25 ரூபாய்க்கு விற்கும் சாப்பாட்டை 24 ரூபாய் தள்ளி வெறும் ஒரு ரூபாய்க்கு கொடுக்கும் நல்ல மனதினரை நினைக்கும் போது வணங்கத் தோன்றுகிறது.
ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்திற்கு பங்களிக்க விரும்பும் நபர்களிடமிருந்து நன்கொடையை ஏற்றுக்கொண்டு, நன்கொடையளிக்கும் நல்லவர்களின் பெயர்களை தினமும் பெயர்பலகையில் வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
நன்கொடை அளிக்க விரும்புவோர் அணுக வேண்டிய முகவரி Mr.N.Venkataraman, Srii AMV Mess, Near Nallasamy Hospital, Power House Road, ERODE-638001 Cell: 99443-80076. நேரிடையாக வங்கியில் செலுத்த விரும்புவோருக்கு…. V.Venkataraman ING Vysya Bank, Erode Branch SB A/c. 405010065939 / IndusInd Bank Erode SB A/c.0034-B75420-050.
73 comments:
இவரைப் பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி.. கண்டிப்பாய் கரம் கொடுப்போம்.
ரொம்ப நல்ல விஷயம். இப்படியும் மனிதர்கள் இருப்பதை அறிய மகிழ்ச்சியாய் இருக்கிறது. நல்ல பகிர்வு கதிர். நன்றி.
இந்த மாதிரி நல்லவிசயங்களை தொடர்ந்து எழுதுங்கள்..
அருமையான பகிர்வு கதிர்... தீபாவளிக்கு ஊருக்கு வர்றேன்... போகலாம்.
கதிர் இந்த இடுகைஅயின் மூலம் ரெண்டு நல்லது செய்திருக்கிறீர்கள்.
ஒன்று ஒரு ரூபாய் உணவுகுறித்த விவரம்,உதவி.ரெண்டு தோழர் ஆரூரானின் முகம் பார்க்க புகைப்படம்.திருமிகு.வெங்கட்ராமனுக்கு அன்பும் வணக்கமும்.
Good samaritan...
பகிர்வுக்கு நன்றி. எல்லோரும் இன்புற்றிருக்க அல்லாமல் வேரொன்றும் அறியோம் பராபரமே..........
உலகத்தில் பசியை பற்றி அதிகம் கவலைப் பட்ட மனிதன் வள்ளலாராக தான் இருக்க முடியும். பாரதி போல அவர் ஆவேசம் கொள்ள வில்லை. பசிக்கு வழிவகை செய்திருக்கிறார்.
இந்த இனிய பணி செம்மையாய் செயல்பட வாழ்த்துகள். சைதையில் மனித நேய உணவு விடுதி என்ற பெயரில் யாரும் வழங்க முடியாத அளவிற்கு மிகக் குறைந்த விலையில் வழங்குகிறார்கள்.
ரொம்ப நல்ல செயல். வாழ்த்துக்கள்.
அந்த நல்ல மனிதனின் முன்பு தலைவணங்குகிறேன்.. பகிர்வுக்கு நன்றி கதிர்..:-)))
முதலில், அவரது சேவைக்கான எம் பாராட்டுதல்களும் ஆதரவும்!!
அடுத்தபடியாக, அண்ணன் காசி அவர்கள் குறிப்பிட்டதுதான் நினைவுக்கு வருகிறது. வலைப்பதிவன் ஆகிவிட்டாலே, பொதுச்சேவை என்பது மனதில் கசியத் துவங்கி விடுகிறது.... எழுதுகிறோமே... அந்த எண்ணங்கள் கசிவூக்கியாகிறது என்பது நிதர்சனம்...
ஆரூரனாகட்டும், கதிர் ஆகட்டும்... ஏற்கனவே சமூகப் பங்களிப்புகளில் தொடர்புடையவர்கள்....
அந்த வகையிலே, அவர்களது நல்லவர்களை இனம் காணும் பணி மென்மேலும் தொடரவும் எம் ஆதரவுகளை உரித்தாக்குகிறோம்!
//அடுத்தபடியாக, அண்ணன் காசி அவர்கள் குறிப்பிட்டதுதான் நினைவுக்கு வருகிறது. வலைப்பதிவன் ஆகிவிட்டாலே, பொதுச்சேவை என்பது மனதில் கசியத் துவங்கி விடுகிறது.... எழுதுகிறோமே... அந்த எண்ணங்கள் கசிவூக்கியாகிறது என்பது நிதர்சனம்...//
பழமைபேசி அண்ணனை வழிமொழிகிறேன்... கதிருக்கு மனம்நெகிழ்ந்த வாழ்த்துக்கள்... வெங்கட்ராமனுக்கும்தான்!
இப்படிப்பட்ட நல்ல மனிதர்களை அறிந்ததில் மகிழ்ச்சி கதிர்
இந்த மாதிரி நல்ல விசயங்களை பற்றி நிறைய எழுதுங்கள் நண்பரே.என்னுடைய ஆதரவு உண்டு.என்னால் முடிந்த உதவி செய்கிறேன்.வாழ்த்துக்கள்
ரொம்ப நல்ல விஷயம். பகிர்விற்கு நன்றி சார்.
என்னால் இயன்றதை கட்டாயம் செய்கிறேன்.
மழை இன்னும் நிறைய வருசங்களுக்கு ஈரோட்டில் மட்டும் நிறைய பெய்யும் போல கதிர் :)
நல்ல பகிர்வு.
nalla visayam . venkat ramanukku vaalththukkal. thanks for sharing.
ஃபன்டாஸ்டிக் சார்!
நல்ல மனசுகாரங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
//
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி வெறி கொண்டு முழங்கிய தமிழ் இனத்தில்தான், சொட்டுப்பாலுக்கு வக்கில்லாமல், சாலையோர அழுக்கு மூட்டைகளோடு மூட்டைகளாகக் கிடக்கும் குழந்தைகளும், சினிமா நடிகனின் கட்-அவுட்டுக்கு பால் வார்க்கும் புண்ணியவான்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
//
வெட்கக்கேடு, இந்த நிலை என்று தான் மாறுமோ?
திரு. வெங்கட்ராமன் அவர்களுக்கு உதவ முயல்வோம்!
சில இடுகைகளில் உங்களின் எழுத்து மொழி எனக்கு பிடிப்பதில்லை. சில சமயம் பரிகாசமாகக்கூட எனக்குள் சிரித்திருக்கிறேன். ஆனாலும் தொடர்ந்து உங்களின் தளத்திற்கு வந்து வாசிக்க தவறுவதில்லை. அந்த அடிக்ஷனுக்கு காரணம் இது போன்ற சிறந்த விஷயங்களை வெளிக்கொணரும் உங்கள் நல் உள்ளம் மட்டுமே.....
ஒரு திரைப்படத்தை பார்க்க சாதரணவிலை 50 ரூபாய் என்று கொள்வோம்
அந்தக் @#$%^%$&%$**^#$$%^ முதல்நாள் பார்க்க 500 @@##$$# கொடுத்து பார்க்கும் %&*()%*%&* உண்டு.
அதையே 5 மாத கழித்து பார்த்தாலும் ஒன்றும் நட்டமாகி விடப்போவடது இல்லை. அதை தயாரித்த அல்லது நடித்த யாரும் பசியில் வாடிவிடமாட்டார்கள்.
அந்தப் பணத்தை (Extra Rs 450) இப்படி உதவலாம்
***
இந்தச் செய்தியை பார்வைக்கு கொண்டு உங்களுக்கு நன்றி
இது போன்ற நல்லவர்கள்...
==============
ஆறு ரூபாய்க்கு அளவு சாப்பாடு மதுரையில். அதுவும் காய், குழம்பு,இரசம், மோர் அனைத்துடன் வாழை இலையில்.
To Serve with Love
http://timesofmadurai.org/printed-magazine/2010/january2010/people/
Part1:
http://www.youtube.com/watch?v=ecD94vTmizw
Part2;
http://www.youtube.com/watch?v=6uKIpqBgTHE
======================
//சாப்பாடு வெறும் பதினைந்து ரூபாய். சாம்பார் சாதம், தக்காளி சாதம் என்று கலவை சாப்பாடு வெறும் ஆறு ரூபாய் மட்டுமே//
http://www.luckylookonline.com/2010/04/blog-post.html
**
நல்ல பகிர்வு
மிக உன்னதமான பகிர்வு.
மிக நல்ல பதிவு கதிர். மனிதநேயமிக்க அந்த உள்ளத்திற்கு வாழ்த்துக்கள். இலவசமாக கொடுப்பதை விட ஒரு ரூபாய்க்கு கொடுப்பது மேல். ஒரு ரூபாய் அரிசி கொடுப்பவர்களின் பார்வை இதேபோல் திரும்பினால் ஒரு நாளைககு 20 பேர் என இவர் செய்யும் சேவையின் பலனை பலர் அனுபவிக்க முடியுமே.
பழமைபேசியாரை வழிமொழிகிறேன் வாழ்த்துகள் வெங்கட்ராமன்
அருமையான பகிர்வு கதிர்.
பகிர்வுக்கு நன்றிங்க கதிர்
ரொம்ப மகிழ்ச்சியான விஷயம்! எனக்கு தெரிஞ்சு நெல்லை மாவட்டம் அம்பாசமுத்ரத்திலேயும் இதேபோல் ஒரு ரூபாய்க்கு சாப்பாடு கொடுத்த ஹோட்டல் ஒன்று உண்டு. இப்போது அது இருக்கிறதா என்று தெரியவில்லை!
கதிர்,
பணம் தின்னும் மனிதகளுக்கு இடையே மாமனிதர் திரு. வெங்கட்ராமன்
திரு.வெங்கட்ராமனுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். இயன்றதை நிச்சயம் செய்வோம். பகிர்வுக்கு நன்றி கதிர்.
sure Kathir I will help them
Thanks for the post.
தலை வணங்குகிறேன்
இடுகைக்கு நன்றி கதிர். வெங்கட்ராமன் அவர்களுக்குப் பாராட்டுகள். அவருக்கு நாங்களும் எங்களால் ஆன உதவி செய்ய முன்வருகிறோம்.
வணக்கம் அன்பரே
இவர்களைப்போல் உள்ளவர்களால்தான் உலகம் சுபிட்சமாக இயங்கிகொண்டு இருக்கிறது மிக நெகிழ்ச்சியான பதிவு
அன்புடன்
நெல்லை பெ . நடேசன்
அமீரகம்
ரொம்பவே நெகிழவைத்த சம்பவம். திரு. வெங்கட்ராமன் அவர்களுக்கு இறைவன் மேலும் அருள் பாலிப்பானாக. மகத்தான சேவை. பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
ஐந்து பைசாக்கூட உதவாதவர்கள் மத்தியில் அவர் உயர்ந்து நிற்கிறார். அவருடைய இந்த திட்டத்துக்கு நன்கொடை அளித்தவர்களுக்கு, இறைவன், மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தை மேலும் வழங்கி அருள் பாலிப்பானாக.
நல்ல பகிர்வு கதிர் சார்.
Dear Kathir!
Thanks for the post. One clarification is required to send money to Mr.Venkatraman's account.
Is he N.Venkatraman or V.Venkataraman??
Thanks again,
Yours Truly
Thiru
மனிதநேயமிக்கவர்களை பாராட்டுவோம், மற்றவர்களுக்கும் கொண்டுசெல்வோம்.
கதிர்!சாப்பாடு விலையே 1 ரூபாய்தான்.நாம் 25 மடங்கு பணப்புழக்க தாள்களை அச்சடித்திருக்கிறோம்.
மிக நல்ல விஷயம். திரு. வெங்கட் ராமனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
பத்திரிக்கையில் வர வேண்டிய தகவல், கட்டுரை ப்ளாகில் வாசிக்க முடிகிறது. பத்திரிக்கையிலும் வந்தால் இன்னும் நிறைய பேரை சென்றடையும் என்ற எண்ணம் தோன்றுகிறது.
அண்ணே என் பங்களிப்பையும் அனுப்புகிறேன்.... திரு. வெங்கட்ராமன் அவர்களுக்கு என் வந்தனங்கள்...
Very Good Effort. Everyone has to contribute. Let this survive time and keep on going!
இப்படிபட்டவர்களை அறிமுகபடுத்த ஒரு உணர்வு வேண்டும்..கண்டிப்பாக ாரோடு வரும் போது அந்த மெஸ்சில் சாப்பிட்டு 100 கொடுத்து வருவேன்.நன்றி கதிர்.
மிக அருமையான பதிவு
http://denimmohan.blogspot.com/
மகிழ்ச்சிகளை, வாழ்த்துகளை, பாராட்டுகளைப் பகிர்ந்த, அனைவருக்கும் நன்றி.
பல மின்னாடல் குழுமங்களில், BUZZ / Facebookல் பகிர்ந்த நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.
@@ thiru
அவருடைய பெயர் V.VENKATARAMAN தான்
நன்றி திரு
வெங்கட்ராமன் அவர்களுக்கு வாழ்த்துகள்..
பகிர்விற்கு நன்றிங்க..
//தங்களால் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு அதே தொழில் மூலம் உதவ வேண்டும் என்ற நல்ல உள்ளங்களை வாழ்த்துவதும், ஊக்குவிப்பதும் மனித நேயமுள்ள அனைவருமே அடிப்படையாக செய்ய வேண்டிய ஒன்று.//
ரொம்ப நல்ல விஷயம்.
வெங்கட்ராமன் அவர்களுக்கு வாழ்த்துகள்..
பகிர்விற்கு நன்றி.
திரு வெங்கட்ராமனுக்குப் பாராட்டுக்கள்.. பகிர்வுக்கு நன்றி கதிர்;;
பகிர்வுக்கு நன்றி...
நல்ல பகிர்வு
கரம் கொடுப்போம்.........வாழ்த்துக்கள்
கதிர் அவர்களே. நானும் இரண்டு நாட்கள் முன்பு அந்த உணவகம் சென்று உணவு வாங்கி வந்தேன். என் மனைவி மற்றும் பிறந்து 3 நாட்கள் ஆனா எனது பெண்குழந்தையும் நிஷாந்த் மருத்துவமனை இல் உள்ளனர்.
இன்று இரவு கண்டிபாக அங்கு செல்வேன்.
இது போன்ற நல்ல காரியம் செய்பர்களுக்கு உதவ வாய்பை தந்ததுற்கு நன்றி. நான் அதை கவனிக்காமல் 3 முறை சென்று பார்சல் வாங்கி வந்துள்ளேன். நல்லது செய்ய உதவுவோ
தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு. எல்லார்க்கும் பெய்யும் மழை.
சாப்பாட்டின் விலை என்னவோ இருபத்தந்து ரூபாய் தான். ஒரு ரூபாய்க்கு சாப்பாடு, பாக்கி இருபத்தி நான்கு ரூபாய்க்கு அன்பு பரிமாறப் படுகிறது, போலும்!
மிக மிக அருமையான பதிவு!!
கண்டிப்பாக உதவுவோம்
இப்போதான் பார்க்கிறேன் கதிர்.
நல்ல மனிதம் நிறைந்த பதிவு.
நல்ல பகிர்வு. நன்றி.
http://www.referralmeet.com
பகிர்வுக்காக உங்களுக்கு நன்றி. சேவைக்காக வெங்கட்ராமனுக்கு வாழ்த்துகள்.
பகிர்விற்கு நன்றி! நல்ல மனிதர் திரு.வெங்கட்ராமன் அவர்களுக்கு பாரட்டுகள். என்னால் முடிந்த உதவி செய்கிறேன்.
Awesome :)
Awesome :)
if i came to good status in my life i will surely help to this thing upto my level."give ur hands my friends"
Thats still its raining ! Nice sharing !
Congrats. Continue your good work.
அடுத்த முறை ஈரோடு சென்றால் நிச்சயம் இந்த மெஸ்க்கு செல்வேன்.
இந்த பதிவு நல்ல பகிர்வு.
வாழ்த்துக்கள்.
Kathir, இந்த சேவை இன்னமும் தொடர்ந்து கொண்டு இருக்கும் என்று நம்புகிறேன். Please Update me
Dear Kathir,
Kindly send your contact no. Shortly i wl visit Erode.Want 2 meet these people in person.Thanks for sending an information which is worth a million & more..... Together v can win.Am there with you for all the good things......
Rgds
Hari K V Sooryakaant
Coimbatore
எல்லா உணவகங்களும் பின்பற்றக்கூடிய நல்ல தொழில்-முன்மாதிரி. வாழ்த்துக்கள்.
நல்ல தகவல் பரிமாற்றம்...இதுபோன்ற தகவல் பரிமாற்றத்தால் நல்லவர்கள் செய்யும் உதவிகள் வெளிச்சத்திற்கு வந்து அனைவரும் பயனடையவும், இதுபோல் நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வை ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக விதைக்கவும் உபயோகப்படும்..நண்பர் வெங்கட்ராமனுக்கு பாராட்டுக்கள்..இறை என்றும் அவருடன் துணையிருக்க வேண்டி வாழ்த்துகிறேன்..பகிர்விற்கு நன்றி தோழர் கதிர்..
Sir,
First of all I stand and salute Shri Venkat. I wish to register my experience here .
[1] When I used to go the Shastry Bhavan Canteen in Chennai for mid day meals I used to meet my higher ups who are drawing salary for more than a lakh per month. Canteen is offering meals at very concessional rate (Say at Rupees 18/-)for them and for me also.(I am drawing nearly half of their salary]. I am NOT against it. But in the nearby Raj Bhavan meals cost Rs. 75/- or at the nearby cheapest mess in DPI the cost is Rs.35/-.
[2] On the other day when I went to ASSANDAS for a meeting, a meal cost me RS75/- where as for the IT professionals who are drawing salaries more than 2 lakhs per month the concessional rate is Rs.50/- I am NOT against this also.
But my cry is Government and few kind hearted people like Venkat must come forward to offer cooked food at concessional rate to all not only in Metros but in small villages too.
[Mind that it is not free]
I hope this will alleviate poverty in rural folk and stop migration of people from village to town.
Post a Comment