நான் ரசித்த….. அங்காடித் தெரு

ஏழ்மையின் பொருட்டு ஊருவிட்டு ஊரு வந்து நேர்த்தியான சீருடையில் கொத்தடிமையாய்(!!!!) வேலை பார்க்கும் ஒவ்வொரு சாதாரண மனிதர்களுக்கும் பின்னால் இருக்கும் வலியை அப்பட்டமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். இந்த கதைக்களத்தை தேர்ந்தெடுத்ததிற்காக வசந்த பாலனுக்கு மிகப் பெரிய வணக்கம்.பரபரப்பான அந்த பேருந்து நிறுத்தத்தில் தினசரி மிகச் சாதாரணமாக பார்க்கும் இரண்டு முகங்களோடு படம் துவங்குகிறது. துவங்குகிறது என்று
சொல்வதைவிட மனதுக்குள் ஒரு புழு போல் நெண்டி நெண்டி உள் நுழைகிறது என்றே சொல்ல வேண்டும்.

பேருந்து நிறுத்தத்தில் பேருந்து வந்து நின்ற பிறகு ‘பஸ் வந்துருச்சு” என்று ஒரு முறை சொல்லிவிட்டு பேருந்தை நோக்கி ஓடும் போது மட்டுமே அந்த இரண்டு வார்த்தை வசனம் வீணடிக்கப்பட்டதாக உணர்ந்தேன், மற்றபடி படம் முழுக்க வசனம் மிக ஆழமாக ஆட்சி செய்வதை மறுக்க முடிவதில்லை.

பயிற்சி நிமித்தமாக, துணிக்கடையில் வேலை செய்யும் நபர்களை சந்தித்தபோது அவர்களுடைய உலகம் பற்றி ஏற்கனவே அறிமுகம் இருந்திருந்தாலும்... ஒரே வண்ண உடையில், அழகழகாய் கடைகளில் சிரித்து சிரித்து நம்மிடம் எப்படியாவது ஒரு துணியை விற்று விட வேண்டும் என மல்லுக் கட்டும் விற்பனை பிரதிநிதிகளின் சிரிப்புக்கு பின்னே இத்தனை வலி இருக்கும் என்பதை ஒரு போதும் யோசித்ததேயில்லை. இனி அவர்களை பார்க்கும் போதெல்லாம் காலும் கூடவே மனதும் வலிக்கவே செய்யும்.பையன்களும், பெண்களும் தங்கும் அரங்கில் நெருக்கிக் கொண்டு, குவியலாய் தூங்குவதைப் பார்க்கும் போது, உடலெல்லாம் வெம்மையில் எரிகிறது. அண்ணாச்சிகளின் கடைகளில் நெல்லைத் தமிழோடு உழைத்துக் கொட்டும் சிறுவர்களுக்கு அப்பா இல்லாமல், அக்கா தங்கைக்கு கல்யாணம் செய்யவேண்டும் என்ற வேட்கை என்பதுதான் தகுதி என்பது கசக்கிறது. உண்மை பெரும்பாலும் கசக்கவே செய்கிறது.

சூப்பர்வைஸர் கதாநாயகியை மறைப்புக்குள் தள்ளி அடித்தபின், கன்னிப்போன உதடோடு வெளியே வந்தவளிடம் கதாநாயகன் கேட்க “மாரப் பிடிச்சு கசக்கினான்” என்ற வசனம், கடைசிவரை மார்பில் வலியாகவே தங்கியிருந்தது.

வயதுக்கு வந்த பெண்ணுக்கு நீர் ஊற்றி தீட்டுக்கழிக்க வேண்டிய சிக்கலான நேரத்தில் ”இந்த சாமிக்கு தீட்டுங்குறதே கெடையாது” என்ற வசனம் கேட்கும் போது, அந்த சாமியைக் கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது.

அந்த குள்ள மனிதரின் மனைவி தன் குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டு பேசும் வசனத்திற்குத் தான் திரையரங்கில் அதிகமான கைதட்டலைக் கண்டேன். ஆனாலும் அந்த உண்மை மிக மோசமாக கசந்தது. அந்த கைதட்டல் நம் ஒவ்வொருவரின் கன்னத்திலும் விழுந்த அறையாகவே பட்டது.

கழிவறைத் தொழிலதிபர் பாத்திரம்... ஆஹா.... போட வைக்கிறது....

ஓயாத அலையாய் மனிதர்கள் பொங்கும் வீதியில், ”மனிதர்களை நம்பி ஆரம்பித்தேன், இது வரை மனிதர்கள் கைவிடவில்லை” என்ற அந்தக் கண் தெரியாத மனிதரின் வசனம் வாழ்க்கையின் பல சிக்கல்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஒரு வரி என்றே சொல்லலாம்.கதைக்கான பாத்திரங்கள் மிக மிகப் பொருத்தமான தேர்வு. படத்தில் எந்த ஒரு கதாபாத்திரமும் வீணடிக்கப்பட்டதாக உணர முடியவில்லை.

குறிப்பாக கனி – அஞ்சலியைப் பாராட்ட புதிதாய் சில வார்த்தைகளைத்தான் நான் தேட வேண்டும், கருங்காலி – வெங்கடேஷ்... சபாஷ் இனி அவர் நடிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தலாம். பழ.கருப்பையா நிஜ மனிதர்கள் பலரை நினைவூட்டுவதைத் தவிர்க்க முடியவில்லை, அதுவே அந்த பாத்திரத்தின் வெற்றியும் கூட.

மனிதர்களை நம்பி படத்தை இயக்கிய வசந்த பாலனையும், ஐங்கரன் நிறுவனத்தையும் மனிதர்கள் கைவிட மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

______________________________________

31 comments:

ரோகிணிசிவா said...

WAITING TO WATCH -SONGS ARE REALLY AWESOME !,
ESP ///UN PEYARAI SONNALAE ///- I LOVE TO DEDICATE FOR MY BELOVED!
AND COMING TO THE WRITTEN REVIEW, ITS CRISPY AND NICE !GOOD JOB DONE KATHIR !

பழமைபேசி said...

ஆகா....மாப்பு வீட்ல திரைப்படம் பற்றிய இடுகையா? அப்ப, படம் நல்லதொரு படமாத்தான் இருக்கும்!

துபாய் ராஜா said...

நல்ல படம்.நல்ல விமர்சனம்.

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

நாளைக்கு பார்த்துட்டு சொல்ரங்க ..

திருவாரூரிலிருந்து சரவணன் said...

கலைஞர் தொலைக்காட்சியின் வண்ணத்திரை நிகழ்ச்சியில் இந்தப் படத்தின் கிளிபிங்க்ஸ் பார்த்தேன். கண்ணீருடன் ஒருவன் அத்துமீறியதை அஞ்சலி சொல்லும்போது செவிட்டில்அறை வாங்கியது போல்தான் இருந்தது.

ச.செந்தில்வேலன் said...

மிக நேர்த்தியான பார்வை கதிர்.. கதையைச் சொல்லாமல்.

// பழமைபேசி said...
ஆகா....மாப்பு வீட்ல திரைப்படம் பற்றிய இடுகையா? அப்ப, படம் நல்லதொரு படமாத்தான் இருக்கும்!
//

இது.. இது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு :))

இய‌ற்கை said...

sollitenga illa.. parthudalam..:-)

பிரபாகர் said...

கதிர்...

உண்மையில் அருமையாய் எழுதியிருக்கிறீர்கள்... இதுபோல் தொடர்ந்து எழுதுங்கள்... உங்களுக்காக கண்டிப்பாய் நாளை பார்க்கிறேன்...

பிரபாகர்.

காமராஜ் said...

கதிர்
உண்மையிலேயே நல்ல படம்
தான் போல.
இதுவரை சொல்லப்படாத கதை மாந்தர்கள்.
வசந்தபாலனை
இன்னொரு தரமும் பாராட்டலாம்.
பகிர்தல்
ஆவலைத்தூண்டுகிறதே கதிர்.

இராமசாமி கண்ணண் said...

நல்ல விமர்சனம்.

dheva said...

நேர்மையான விமர்சனம்....கதிர் சார்.....வாழ்த்துக்கள்!

kumar said...

தெரியாத மனிதரின் வசனம் வாழ்க்கையின் பல சிக்கல்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஒரு வரி என்றே சொல்லலாம்.//////// the good flim .thanks

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றாக பகிர்ந்திருக்கிறீர்கள்.

// மனதுக்குள் ஒரு புழு போல் நெண்டி நெண்டி உள் நுழைகிறது என்றே சொல்ல வேண்டும். // உவமைகள் இயல்பாக இருக்கவேண்டும். இந்த வரி ரொம்ப மெனெக்கெட்டு வலுவில் எழுதியதைப்போல இருக்கிறது. இயல்பாக இல்லை.

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி கதிர்.

கண்டிப்பாக நல்ல சினிமா ஜெயிக்க வேண்டும்.

கலகலப்ரியா said...

நல்லாருக்கு விமர்சனம்... பார்ப்போம்..

ஸ்ரீ.கிருஷ்ணா said...

பாத்துடலாம் ....

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

//.. பழமைபேசி said...
ஆகா....மாப்பு வீட்ல திரைப்படம் பற்றிய இடுகையா? அப்ப, படம் நல்லதொரு படமாத்தான் இருக்கும்! ..//

உங்க நம்பிக்கை வீண் போகாதுன்னு நினைக்கறேன்..

என்னளவிலும் ஒரு சிறந்த படைப்பு..

seemangani said...

//பையன்களும், பெண்களும் தங்கும் அரங்கில் நெருக்கிக் கொண்டு, குவியலாய் தூங்குவதைப் பார்க்கும் போது, உடலெல்லாம் வெம்மையில் எரிகிறது.//

சத்திய வார்த்தைகள் அண்ணே...நான் இவர்களை நேரே கண்டு...கலங்கியதுண்டு.

நிச்சயமாய் கைவிட மாட்டார்கள்...

Anonymous said...

கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் ஞாபகம் வருதுங்க

Cable Sankar said...

/மனிதர்களை நம்பி படத்தை இயக்கிய வசந்த பாலனையும், ஐங்கரன் நிறுவனத்தையும் மனிதர்கள் கைவிட மாட்டார்கள் என்றே ந0ம்புகிறேன்.//

கைவிடவில்லை கதிர்.. அருமையான கடைசி வரிகள்.

தாமோதர் சந்துரு said...

கதிர் அண்ணா எனையா உட்டுப்போட்டு போயிட்டீங்கள்ள, சொல்லியிருந்தா நாங்களும் வந்திருப்போமுல்ல.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ஆழமான விமர்சனம்.!

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

கலக்கலான விமர்சனம்!!
ஆழமான மனதை பிழியும் வரிகள்!!

இப்பொழுதே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்துவிட்டது!!!

ரோகிணிசிவா said...

"சின்ன அம்மிணி said...

கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் ஞாபகம் வருதுங்க"

-i too felt te same,and decided i sud spend my time speaking to them few friendly words than usual ,"itu enga iruku, athu enga irukku "wen i drop in kannan next time !!!!

புலவன் புலிகேசி said...

நல்ல விமர்சனம் தல..இந்த வாரம் பாத்துட வேண்டியதுதான்..

க.பாலாசி said...

நல்ல விமர்சனம்.... ஆவலுடன் இருக்கிறேன்...திரையில் காண்பதற்காக....

//சின்ன அம்மிணி said...
கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் ஞாபகம் வருதுங்க//

கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்ச விட, எங்கூரு கடைவீதிக்கு வந்துபாருங்க.... இந்த உண்மை இன்னும் வெளிச்சமாய் விரிந்துகிடக்கும்...

வெள்ளிநிலா ஷர்புதீன் said...

:)

அகல்விளக்கு said...

சின்ன அம்மிணி said...

கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் ஞாபகம் வருதுங்க


நானும் அதையேதான் நினைச்சேன்...

அகல்விளக்கு said...

சின்ன அம்மிணி said...

கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் ஞாபகம் வருதுங்க


நானும் அதையேதான் நினைச்சேன்...

சே.குமார் said...

உங்கள் விமர்சனத்தில் இருக்கும் நேர்த்தியும் அழகான ஆழமான பார்வையும் படத்தின் மீது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. பார்க்க முயல்கிறேன்...

நல்ல விமர்சனம். வாழ்த்துக்கள்.

அஹமது இர்ஷாத் said...

வசந்தபாலனுக்கு சோகத்த விட்டா வேற எதுவுமே தெரியாதா.

அங்காடி தெரு- அழுவாச்சி தெரு....