ஒரு வெற்றியும் தோல்வியும்


அது ஒரு வழக்கமான செவ்வாய்கிழமை, பணி முடிந்து கிளம்பும் போது, ஒரு செய்தி என் அரட்டை பெட்டியில் விழுந்தது

“அண்ணா, சாரு உங்களுக்கு பிடிக்குமா
எனக்கு சுத்தமா பிடிக்காது, ஏன்?
“அந்த ஆளு ஒரு சாமியாருக்கு சொம்பு தூக்குனாராம், அந்த சாமியார் இப்போ ஒரு பிரச்சனையில மாட்டிக்கிட்டாராம், சன் நியூஸ் பாருங்க

அப்பொழுது ஆரம்பித்த ஒரு வித போராட்டம் கிட்டத்தட்ட ஓய்ந்த நிலையில் யோசிக்கிறேன்.

தொலைக்காட்சியில் பார்த்து, அதை வாய் கொள்ளாச் சிரிப்போடு முடிந்த வரை அனைவரிடமும் பகிர்ந்து, அதன் பின் இணையத்தில் தேடி இன்னும் கூடுதல் காட்சிகள் பார்த்து, முதல் நாள் முகம் மறைந்திருந்த பெண்ணின் முகம் தெரிந்த போது கூடுதல் ஆர்வத்துடன் பார்த்து (ரசித்து), அடுத்தடுத்து நிறைய பதிவுகளைப் படித்து, சிலவற்றிற்கு பின்னூட்டமும் போட்டு ஒருவழியாய் திருவிழாவைக் கொண்டாடிய மனநிலையோடு ஓய்ந்து மனம் அமைதிப் பட்ட நேரத்தில், எனக்குள் ஏன் இத்தனை போராட்டம் என நினைத்துப் பார்க்கும் போது கொஞ்சம் வெட்கமாய் இருக்கிறது.

அந்த சாமியாரை ஒரு போதும் நான் வணங்கியதில்லை, போதனையை கேட்டதில்லை, ஆனாலும் அந்த மனிதன் மாட்டிக்கொண்டபோது மகிழ்ச்சி, குதூகலம், கோபம், வெறுப்பு என சகலமும் என்னுள்ளே வந்து போனது. அது எதன் பொருட்டு என்னுள்ளே நிகழ்ந்திருக்கும்.

என்னை விட குறைந்த வயதில் மிகப் பெரிய அளவில் சொத்தும், புகழும் சேர்த்ததின் விளைவாகவோ அல்லது ஒரு சினிமா நடிகையுடன் கொண்ட உறவின் மேல் ஏற்பட்ட ஒரு இனம் புரியாத பொறாமையின் வெளிப்பாடாக என் உணர்வுகள் வர்ணம் மாறியிருக்குமோ?

அடுத்து ஊரில் உள்ள பணக்காரர்கள் கொண்டாடிய ஒருவன், வெறும் ஐந்து நிமிட படத்தில் சிதறுண்டு போனதை நினைக்கும் போது, ங்கொய்யாலே ஒரு மனிதனின் பேச்சு பற்றும் சில சித்து விளையாட்டுத் தனத்தை எந்தக் கேள்விக் குட்படுத்தாமல் புனிதப்படுத்தி, என்னமா ஆட்டம் போட்டீங்கஎன்று நினைத்து ரௌத்திரம் கொண்ட மனதின் மாய ஆட்டமாகவும் இருக்கலாம்.

எழுத்து (அ) பேச்சுக்கும் தன்னுடைய செயல்பாட்டிற்கும் அதிக இடைவெளி கொண்டிருக்கும் மனிதர்களோடு நெருங்குவது எனக்கு இயலாத ஒன்று. அந்த நிமிடம் வரை அந்த சாமியாரை கொண்டாடிய எழுத்தாளன், அடுத்த சில மணி நேரங்களில் தன் நிலைப்பாட்டை திருப்பிப் போட்டதை நினைக்கும் போது, மனக்குரங்கு அந்த எழுத்தாளனை ஓங்கி ஓங்கி குத்தி எக்காளமாகச் சிரித்தது...

ஒரு வழியாய் எல்லாம் இப்போது அடங்கிப் போயிருக்கிறது. அவர்கள் பற்றி எந்த செய்தி வந்தாலும் இதழோரம் ஒரு குறும் புன்னகையோடு கடக்க முடிகிறது. இதில் வென்றது மனதா, உள்ளே ஆடிய உணர்வா? என்று பார்த்தால் அது இரண்டும் இல்லை, காலம்தான் மௌனமாய் அதன் போக்கில் இதையும் இப்போது கடந்து செல்ல துணை புரிகிறது.
_____________________________________________

30 comments:

அமர பாரதி said...

உண்மைதான் கதிர். வெட்கப்பட வேண்டிய விஷயம். புஷ் மீது செருப்பு வீசப்பட்ட போது அதை போஸ்டர் அடித்து ஊர்வலம் போனார்கள் தமிழ் நாட்டில். மனம் முழுவதும் மண்டிக் கிடக்கும் வெறுப்பும் அடுத்தவர் கஷ்டத்தில் சந்தோஷப்படும் மனநிலையுமே காரணம்.

வெள்ளிநிலா said...

காலம்தான் மௌனமாய் அதன் போக்கில் இதையும் இப்போது கடந்து செல்ல துணை புரிகிறது.

:)

பழமைபேசி said...

காலம் வென்றது; வெல்கிறது; வெல்லும்!

பத்மா said...

சரி தான் .இது மாஸ் ரியாக்ஷன் .தனிப்பட்ட முறையில் உண்மையான கருத்து வேறு வேறாக இருக்கக் கூடும்.ஒரு செய்தியை பரபரபாக்குவதில் அந்த மீடியாவைவிட நாமும் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை .என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்

Unknown said...

நீங்கதான் பாக்கினு நினைச்சிட்டிருந்தேன்.. நீங்களும் போட்டுட்டீங்களா?

மணிஜி said...

இந்த மொக்கை பதிவுக்கு ஓட்டு போட்ட பாவத்திற்கு பரிகாரம் ? நித்யானந்தாவை பார்க்கும்படி மனது சொன்னாலும், மூளை ரஞ்சிதாவை பார்க்க சொல்கிறது.

நிகழ்காலத்தில்... said...

//என்னை விட குறைந்த வயதில் மிகப் பெரிய அளவில் சொத்தும், புகழும் சேர்த்ததின் விளைவாகவோ அல்லது ஒரு சினிமா நடிகையுடன் கொண்ட உறவின் மேல் ஏற்பட்ட ஒரு இனம் புரியாத பொறாமையின் வெளிப்பாடாக என் உணர்வுகள் வர்ணம் மாறியிருக்குமோ?//

இனம் புரிகிற பொறாமைதான்.,

நேர்வழியில் அன்றி நித்தி இத்தனை சொத்து சேர்த்துவிட்டாரா..

காமம் என்பதை காசு பறிக்கும் வித்தையாக்கி விட்டாரே ரஞ்சி..

என்கிற பொறாமைதான்.,

நம்மால் இப்படி இருக்க முடியாது மாப்பு, அந்த (சரியான)இயலாமைதான்
நம்மை பொறாமைப்பட வைக்கிறது

vasu balaji said...

அருமையான மொக்கை. Column செய்ததை காலம் மறக்க வைக்கிறது.

*இயற்கை ராஜி* said...

சரியான கேள்விதான்.. அடுத்தவர் விஷயங்களில் அதீத ஆர்வம் காட்டுவது எப்போதும் மனிதனின் வழக்கமாகவே இருக்கிறது

மணிஜி said...

/ வானம்பாடிகள் said...
அருமையான மொக்கை. Column செய்ததை காலம் மறக்க வைக்கிறது.//

காளான்கள் பறக்கின்றன..காக்கைகள் கரைகின்றன..குடைகள் காத்திருக்கின்றன....அம்மாவாசைகள் வீணாகிவிடுமோ?

என் தலையெழுத்து ! ஒரு அருமையான இடுகையை பின்னூட்டம் என்ற பெயரில் வீணடித்து விட்டேன். இதை மட்டும் பதிவாக போட்டிருந்தால் மகுடம் சூடீயிருப்பேன்..(எப்படியா புரியா விட்டாலும் குத்தி விடுகிறீர்கள்?)

உடன்பிறப்பு said...

உங்களைப் போலவே எல்லோரும் நாகரீகமாக எழுதினால் மிகவும் நன்றாக இருக்கும்

ராம்ஜி_யாஹூ said...

nice post.

nithi not pnly opened door but also opened our mind.

Unknown said...

ஆமாங்நா...

இந்த விஷயம் கேள்விப்பட்ட உடனே டி.வி போட்டிலிருந்து முகத்த திலுப்பிக்கிட்டங்நா..

அப்புறம் நெட்ல கோட ஏதோ படம் வந்துச்சாமுங்நா...
ரெண்டு மூனு நாளு நெட் பக்கம் கோட வரலைங்நா...


எழுத்து (அ) பேச்சுக்கும் தன்னுடைய செயல்பாட்டிற்கும் அதிக இடைவெளி கொண்டிருக்கும் மனிதர்களோடு நெருங்குவது எனக்கு இயலாத ஒன்று..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இத கவனிக்காம பின்னூட்டம் போட்டுட்டனே....

vasu balaji said...

தண்டோரா ...... said...

/ வானம்பாடிகள் said...
அருமையான மொக்கை. Column செய்ததை காலம் மறக்க வைக்கிறது.//

காளான்கள் பறக்கின்றன..காக்கைகள் கரைகின்றன..குடைகள் காத்திருக்கின்றன....அம்மாவாசைகள் வீணாகிவிடுமோ?

என் தலையெழுத்து ! ஒரு அருமையான இடுகையை பின்னூட்டம் என்ற பெயரில் வீணடித்து விட்டேன். இதை மட்டும் பதிவாக போட்டிருந்தால் மகுடம் சூடீயிருப்பேன்..(எப்படியா புரியா விட்டாலும் குத்தி விடுகிறீர்கள்?)//

தல. டீலா நோ டீலா!. இங்கயே போடுறேன் பின்னூட்டம். ஆழமான கவிதை. அற்புதமான உணர்வு சொல்லும் கவிதை.

காக்கை,குடை,அமாவாசை..இத்தனைகருப்புக்குள் காளான் என்ற வெள்ளை மனசை அடையாளம் காணவைத்த அழகு வியக்கவைக்கிறது.

நாளைக்கு நேத்து பின்னூட்டம்னு மட்டும் போட்டு லின்க் குடுத்து ஒரு இடுகை போடுங்க. மொத்த பேரும் குத்துறோம்.

ஈரோடுவாசி said...

\\காலம் வென்றது; வெல்கிறது; வெல்லும்!\\

Repeatuuuuuuu....

வால்பையன் said...

ரொம்ப குழப்பமா இருக்கிங்க போல!

எதிர்ல இருக்குற கடையில பார்லி டீ சாப்பிடுவோமா!?

Chitra said...

அவர்கள் பற்றி எந்த செய்தி வந்தாலும் இதழோரம் ஒரு குறும் புன்னகையோடு கடக்க முடிகிறது. இதில் வென்றது மனதா, உள்ளே ஆடிய உணர்வா? என்று பார்த்தால் அது இரண்டும் இல்லை, காலம்தான் மௌனமாய் அதன் போக்கில் இதையும் இப்போது கடந்து செல்ல துணை புரிகிறது.

..........இந்த மௌனம், காலத்தின் போக்கில் நம்மை ஊமை ஆக்குவதை அருமையாய் சொல்லி இருக்கீங்க.

அகல்விளக்கு said...

உண்மைதான் அண்ணா...

காலம் மாற்றுகிறது... அல்லது மறக்கடிக்கிறது..

பனித்துளி சங்கர் said...

இதுகூட நல்லாத்தானே இருக்கு . இனி நாங்களும் பண்ணுவோம்ல !

தாராபுரத்தான் said...

எல்லா மனிதர்களுக்கும் இன்னொரு பக்கம் இருக்கும்.என் மற்றொருபக்கத்தை நானே வார்த்தைகளில்லாவது நாசூக்காவது தெரியபடுத்தி கொள்ள வேண்டும்.அப்பத்தான் தப்பிக்க முடியும்.சாரு தப்பிக்க பார்க்கிறாரு...இந்த மேட்டரில் உங்களை மாதிரித்தான் நாமும்...சாமியாரை விட அதை பாத்துபோட்டு பீலா காட்டுகிற ஆளுக கவனிக்க படவேண்டியது.

Unknown said...

//ரொம்ப குழப்பமா இருக்கிங்க போல!

எதிர்ல இருக்குற கடையில பார்லி டீ சாப்பிடுவோமா!?//

பார்லி டீ சாப்பிட எங்களையும் கூப்புடுங்க சாமிகளா

பித்தனின் வாக்கு said...

// என்னை விட குறைந்த வயதில் மிகப் பெரிய அளவில் சொத்தும், புகழும் சேர்த்ததின் விளைவாகவோ அல்லது ஒரு சினிமா நடிகையுடன் கொண்ட உறவின் மேல் ஏற்பட்ட ஒரு இனம் புரியாத பொறாமையின் வெளிப்பாடாக என் உணர்வுகள் வர்ணம் மாறியிருக்குமோ? //
நல்ல கருத்துக்கள் கதிர், ஆழ்மனதின் விருப்பு வெறுப்புக்கள் தான் நம்மை அறியாமல் வெளிப்படுகின்றது. ஆனால் அதனை வெளிப்படையாக ஒத்துக் கொள்ள மறுக்கும். மிக நல்ல கருத்துக்கள். நம்ம ஸ்ரீலஸ்ரீ, தொப்பையானந்தா பதிவில் கூட சொல்லியிருக்கின்றேன். நமது முதுகின் அழுக்கையும்,அரிப்பையும் சொறிந்து கொள்ள முடியாத போது அடுத்தவர் முதுகை எப்படி சொறிவது என்று. நன்றி.

பிரேமா மகள் said...

மிக நல்ல பதிவு... ஒருதருக்கு கஷ்டம் வரும் போது, கை கொட்டி சிரிக்கிற மனநிலையில்தான் நாம இருக்கிறோம்.. அதுக்கு காரணம் அவங்களுக்கு கிடைச்ச பணம், புகழ், பெருமை எல்லாம் நமக்கு கிடைக்கவில்லையே என்கிற அடிமன ஏக்கமாவும் இருக்கலாம்...

கண்ணா.. said...

//அந்த சாமியாரை ஒரு போதும் நான் வணங்கியதில்லை, போதனையை கேட்டதில்லை, ஆனாலும் அந்த மனிதன் மாட்டிக்கொண்டபோது மகிழ்ச்சி, குதூகலம், கோபம், வெறுப்பு என சகலமும் என்னுள்ளே வந்து போனது. அது எதன் பொருட்டு என்னுள்ளே நிகழ்ந்திருக்கும்.//

இதேதான் நானும் நினைத்திருந்தேன்.. ஆனால் நீங்கள் வார்த்தைகளில் அழகாய் வடித்து விட்டீர்கள்.

க.பாலாசி said...

உண்மைய சொல்லனும்னா... எனக்கு அந்த ஆளு குமுதத்துல எழுதுறாருன்னு தெரியுமேயொழிய வேறெந்த யெழவும் தெரியாது. ஆனாலும் மாட்டிகிட்டாருன்னவொடனே நம்ம வாயிக்கும் பட்டாணி கெடச்ச கதையா ரொம்ப ஜாலியாத்தான் இருந்துச்சு.

//ங்கொய்யாலே ஒரு மனிதனின் பேச்சு பற்றும் சில சித்து விளையாட்டுத் தனத்தை எந்தக் கேள்விக் குட்படுத்தாமல் புனிதப்படுத்தி, என்னமா ஆட்டம் போட்டீங்க” என்று நினைத்து ரௌத்திரம் கொண்ட மனதின் மாய ஆட்டமாகவும் இருக்கலாம்.//

எனக்குள்ளும் இந்த எண்ணமே இருந்திருக்கும்னு நினைக்கிறேன்.

மோனி said...

காலம்...
மிகச்சிறந்த போதகர் .

ரோகிணிசிவா said...

"நாம்ப தப்பு பண்றோம் ஆனா மாட்டிக்கலை,
அவன் சிக்கிடன்!
போடு,அப்படி போடு தான்!"
ஏதோ ஒரு வெறுப்பு,பொறாமை,எல்லாம் சேர்ந்து தான் !
well said kathir , goes for all of us !

ரோகிணிசிவா said...

self reproach?
when in contradiction,check ur premises,one is always wrong!-AYNRAND !
அடுத்தவன் நம்பள ஏமாத்திறான் அப்படின,தப்பு நம்புளுதன் !

Thamira said...

நல்ல பகிர்வு. நீங்கள் சொன்ன அத்தனை உணர்வுகளுமே கூடுதல் குறைவான விகிதாச்சாரங்களுடன் கலந்த தன்மையே அனைவரிடமும் இருக்கலாம் என கருதுகிறேன்.

gurumoorthi said...

Excellent. u had refelected the common man's mind.