பசலை படர்ந்த பந்தல்
வர்ணங்கள் தேய்ந்து வலியோடு
உதிர்ந்து கொண்டிருக்கிறது
நாம் சந்திக்காத நாட்களின்
நாள்காட்டி காகிதங்கள்....

மெதுவாய் என்னை மூடும்
கனவு வலையின் துளைகளில்
கசிந்து வருகிறது சுகந்தமான
உன் நினைவு வெளிச்சம்...

பளபளவென கூர்தீட்டிய
மௌன கத்திகளின் ரசலில்
அறுந்து தொங்குகின்றது
நம் சந்தோசச் சங்கிலி...

சாலையோர பூக்கடையின்
உறங்காத மல்லிகை வாசம்
வெறுமை கனக்கும் மனதில்
உன்னை நிரப்பிவிட்டுப் போகிறது...
___________________________________________________

29 comments:

பழமைபேசி said...

//உன்னை நிரப்பிவிட்டுப் போகிறது//

இன்னுமாங்க மாப்பு?

காவிரிக்கரையோன் MJV said...

சாலையோர பூக்கடை மல்லிகை வாசம் தாங்கி, வந்த கருத்துக்கள் உன்னதம் கதிர். கவிதை நன்றாய் படைத்துள்ளீர்கள் . வாழ்த்துக்கள்.

அகநாழிகை said...

கவிதை நல்லாயிருக்கு கதிர்.

தண்டனை இல்ல, பூங்கொத்துதான்.

- பொன்.வாசுதேவன்

ரோகிணிசிவா said...

"மெதுவாய் என்னை மூடும்
கனவு வலையின் துளைகளில்
கசிந்து வருகிறது சுகந்தமான
உன் நினைவு வெளிச்சம்..."

-சுகமான சிந்தனை !!!

பின் குறிப்பு :
போர்வையை போர்த்தி தூங்குவது
நலம் பயக்கும் -வெளிச்சம் உறுத்தாது!!!!

அகல்விளக்கு said...

/சாலையோர பூக்கடையின்
உறங்காத மல்லிகை வாசம்
வெறுமை கனக்கும் மனதில்
உன்னை நிரப்பிவிட்டுப் போகிறது...//

அருமையான வரிகள்...

அட்டகாசம்...

வால்பையன் said...

அப்புறம்!

இயற்கை ராஜி said...

/வர்ணங்கள் தேய்ந்து வலியோடு
உதிர்ந்து கொண்டிருக்கிறது
நாம் சந்திக்காத நாட்களின்
நாள்காட்டி காகிதங்கள்..../


அருமையாய் எளிமையாய்..... ம்ம் நடத்துங்க‌

வானம்பாடிகள் said...

/மெதுவாய் என்னை மூடும்கனவு வலையின் துளைகளில்கசிந்து வருகிறது சுகந்தமானஉன் நினைவு வெளிச்சம்.../

ஆஹா!

/உறங்காத மல்லிகை வாசம்வெறுமை கனக்கும் மனதில்உன்னை நிரப்பிவிட்டுப் போகிறது.../

க்ளாஸிக்.

றமேஸ்-Ramesh said...

கடைசி வரிகள் மனசுக்குள்
நல்லா இருக்குங்க

கும்மாச்சி said...

\\பளபளவென கூர்தீட்டியமௌன கத்திகளின் உரசலில்அறுந்து தொங்குகின்றதுநம் சந்தோசச் சங்கிலி...//

வாழ்த்துகள்.

thenammailakshmanan said...

மௌனக்கத்தியால் வெட்டுப்படும் சந்தோஷச் சங்கிலி உண்மை கதிர்...

seemangani said...

//சாலையோர பூக்கடையின்
உறங்காத மல்லிகை வாசம்
வெறுமை கனக்கும் மனதில்
உன்னை நிரப்பிவிட்டுப் போகிறது...//

ரெம்ப பிடிச்ச வரிகள் ரசித்தேன் அழகு அண்ணே..வாழ்த்துகள்..

padma said...

ஏக்கம் ஏக்கம் .......இருக்கட்டும் கவிதை வரும் நிறைய
நல்ல கட்டமைப்பான கவிதை

அகல்விளக்கு said...

//சாலையோர பூக்கடையின்
உறங்காத மல்லிகை வாசம்
வெறுமை கனக்கும் மனதில்
உன்னை நிரப்பிவிட்டுப் போகிறது..//

மனம் லயித்து நிற்கிறது...

அட்டகாசம்...

நிலாமதி said...

அழகான் கவி நயம் மிக்க கவிதை

Madurai Saravanan said...

/பளபளவென கூர்தீட்டிய
மௌன கத்திகளின் உரசலில்
அறுந்து தொங்குகின்றது
நம் சந்தோசச் சங்கிலி.../அருமை வாழ்த்துக்கள்

நேசமித்ரன் said...

மிக நல்ல வெளிப்பாடு

காமராஜ் said...

இது பசலையா ?
பவர்புல் அனுகுண்டு.
யப்பா...

முன்னெப்போதோ படித்த
உங்கள் கவிதையிலிருந்து
ஒரு நீள முடி முகத்தில்
படறுகிற அதே
பரவசம் கொட்டிக்கிடக்கிறது
இந்த பசலையிலும்.

தாராபுரத்தான் said...

வெறுமை கனக்கும் மனதில்
.....என்னமோ பண்ணுது.ங்ககோ

பிரபாகர் said...

ரொம்ப நல்லாருக்கு கதிர் உங்களால் கசியவிடப்பட்ட இந்த கவிதை...

பிரபாகர்.

Anonymous said...

அதெப்படி கதிர் உங்க மெளனம் மட்டும் இப்படி பட்ட அழகிய கவிதை பிரசவிக்கிறது

அஹமது இர்ஷாத் said...

//உரசலில்அறுந்து தொங்குகின்றதுநம் சந்தோசச் சங்கிலி...//

அசத்தல் வரி...

க.பாலாசி said...

//சாலையோர பூக்கடையின்உறங்காத மல்லிகை வாசம்வெறுமை கனக்கும் மனதில்உன்னை நிரப்பிவிட்டுப் போகிறது...//

ஓ... அந்தளவுக்கு ஆயிடுச்சா...

சூப்பர்...

சே.குமார் said...

//சாலையோர பூக்கடையின்
உறங்காத மல்லிகை வாசம்
வெறுமை கனக்கும் மனதில்
உன்னை நிரப்பிவிட்டுப் போகிறது...//

வரிகளில் காதல் நிரம்பிக்கிடக்கிறது கதிர் அவர்களே...!

அருமை... வேறென்ன சொல்ல..!

புலவன் புலிகேசி said...

அருமை...

கலகலப்ரியா said...

நன்னாயிட்டு உண்டு..

Dr. Srjith. said...

அருமை நண்பரே...

r.v.saravanan kudandhai said...

பளபளவென கூர்தீட்டிய
மௌன கத்திகளின் உரசலில்
அறுந்து தொங்குகின்றது
நம் சந்தோசச் சங்கிலி...


அருமை வரிகள் மிகவும் ரசித்தேன்

lakshmi indiran said...

ம்ம்...அழகு