ஈரானின், தெஹ்ரான் நகரத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிடம்தான் கதையின் களம். ஈரானியர்களான கட்டிடப் பணியின் ஒப்பந்தக்காரர் மேமர் (Memar). தேநீர் பையன் லத்தீப்(Lateef), ஆப்கானிஸ்தான் அகதிகளான நஜாப் (Najaf), சுல்தான்(Soltan), ரகமத்(Rahmat) இவர்கள்தான் கதையின் முக்கியப் பாத்திரங்கள்.
ஈரானில் தஞ்சம் புகுந்திருக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகளை பணியில் அமர்த்த முக்கியக் காரணம் மிககுறைவான சம்பளத்தில் ஈரானியர்களை விட அதிக நேரம் வேலை செய்வதுதான். (நம் ஊரில் இருக்கும் பீகார் தொழிலாளிகள் நினைவுக்கு வருகின்றனர்). ஆனால் ஆப்கானிகளை வேலைக்கு வைப்பதை அரசு அனுமதிப்பதில்லை. அடிக்கடி ஆய்வுக்கு அதிகாரிகள் வருவதும், அப்படி வரும்போது ஆப்கான் அகதிகளை அந்தக் கட்டிடத்துக்குள் ஒளித்து வைப்பதும் வாடிக்கை.
கட்டிடத்தில் வேலை செய்பவர்களுக்கு தேநீர் தயாரித்து தருவதும், உணவுகளை விநியோகிப்பதும் லத்தீப்பின் வேலை. கட்டிடப் பணியில் தவறிவிழுந்த ஒரு காலை இழ்ந்த நஜாப்பின் குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு சுல்தான் கெஞ்சிக் கேட்டதையொட்டி சிறுவனாக இருக்கு நஜாப்பின் மகன் ரகமத்துக்கு மேமர் வேலைதர, ஏதோ காரணத்தால் அவனை லத்தீப்புக்கு பிடிக்கவில்லை.
ஒரு கட்டத்தில் லத்தீப்பின் தேநீர் தரும் வேலை பறிக்கப்பட்டு ரகமத்திடம் கொடுக்கப்பட்டு, லத்தீப்புக்கு கட்டிட வேலை தரப்படுகிறது. வேலையாட்கள் அனைவரும் ரகமத்தின் தேநீரை கொண்டாடுகின்றனர். வேண்டா வெறுப்பாக வேலை செய்யும் லத்தீப், ரகமத்திடம் இருந்து வரும் தேநீரை வாங்கிய வேகத்தில் கீழே கொட்டுகிறான். ரகமத்தின் சமையல் கட்டில் இருக்கும் பொருட்களை உடைத்து எறிகிறான்.
ஒரு கட்டத்தில் கட்டிடத்திற்கு ஆய்வு செய்ய வரும் அதிகாரி பரணை ஆப்கானி என அடையாளம் கண்டு துரத்தி பிடிக்க, பின்னால் துரத்திவரும் லத்தீப் அந்த அதிகாரியைத் தாக்கி பரணை தப்பிக்க வைக்கிறான். பரண் அதோடு காணாமல் போகிறாள்.
அபராதம் கட்டி வெளியில் வரும் லத்தீப் பல இடங்களில் தேடி சுல்தானைக் கண்டுபிடித்து, பரண் (ரகமத்) இருக்கும் இடத்தை தேடிக் கண்டுபிடிக்கிறான். அங்கு பரண் ஓடும் நீரில் இருந்து கல் மற்றும் மரங்களை எடுத்து வரும் மிகக் கடுமையான வேலை செய்து வருகிறாள். அதைக்காண முடியாத லத்தீப் அந்தக் குடும்பத்திற்கு உதவ முடிவு செய்து தான் இதுவரை வாங்காமல் வைத்திருந்த சேமிப்பு பணத்தை முதலாளி மேமரிடம் பொய் சொல்லி வாங்கிச் சென்று சுல்தானிடம் கொடுத்து நஜாப்பிடம் கொடுக்கச் சொல்கிறான். நஜாப் இதை வாங்கமாட்டார் என்று சுல்தான் சொன்னபோதும் வற்புறுத்தி கொடுத்து அனுப்புகிறான்.
நஜாப்பை மகிழ்ச்சியோடு சந்திக்கச் செல்லும் லத்தீப்புக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. நஜாப் அந்தப் பணத்தை தான் வாங்கவில்லையென்று தன்னைவிட மிக மோசமான குடும்ப சூழ்நிலையில் இருக்கும் சுல்தானை ஆப்கானிஸ்தான் போவதற்காக வைத்துக் கொள்ளச் சொல்லி விட்டதாகக் கூறி சுல்தான் கொடுத்த ஒரு காகிதத்தை லத்தீப்பிடம் கொடுக்கிறார். லத்தீப் பிரித்துப்பார்க்கிறான் “கடவுள் மீது ஆணையாக உன் பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுவேன் என்று இருக்கிறது”
இந்நிலையில் மிக மோசமான குடும்ப சூழ்நிலையின் காரணமாக நஜாப் மேமரிடம் பணம் கேட்க, தன்னிடம் பணம் இல்லாததால் மேமர் உடனடியாக பணம் கொடுக்க இயலாத நிலையைச் சொல்கிறார்.
மீண்டும் உதவ நினைத்த லத்தீப் தன் அடையாள அட்டையை விற்று அந்த பணத்தை மேமர் கொடுத்ததாக நஜாப்பிடம் கொடுக்கிறான். அடுத்த நாள் நஜாப் வீட்டிற்கு செல்லும் போது தான் வாகனம் ஏற்பாடு செய்துவிட்டதாகவும் அடுத்த நாள் குடும்பத்தோடு ஆப்கானிஸ்தானுக்கு திரும்பிச் சென்று விடுவதாகவும் கூறுகிறார்.
வீட்டில் உள்ள பொருட்களை வண்டியில் ஏற்ற லத்தீப் உதவிசெய்கிறான். கடைசியாக வீட்டிலிருந்து அழகிய தேவதையாக கிளம்புகிறாள் பரண். கையில் வைத்திருந்த பை கைதவறி விழுந்து, காய்கறிகள் சிதறுகிறது. லத்தீப்பும் கீழே குனிந்து பொருட்களை எடுத்து கூடையில் போடுகிறான். ஒருகணம் பரண் முகம் பிரகாசிக்கிறது, லத்தீப்பை பார்த்து அழகாய் புன்னகைக்கிறாள், லத்தீப் நிமிர்ந்து பார்க்கும் முன்னர், சட்டென தன் பர்தாவால் முகத்தை மூடிக்கொண்டு, வண்டியை நோக்கி நகர, ஒரு கால் ஷூ சேற்றில் புதைந்து கொள்கிறது, லத்தீப் அந்த ஷூவை சேற்றில் இருந்து எடுத்து துடைத்து அவள் காலின் கீழ் வைக்கிறான், சூவை அணிந்து கொண்டு வண்டியில் ஏறுகிறாள் பர்தா மூடிய முகத்தோடு அந்த பழைய வண்டி வளைந்து வளைந்து செல்வதோடு படம் நிறைவடைகிறது.
பிடித்த காட்சிகள்:
ரகமத் கொடுக்கும் தேநீரை வாங்கிய வேகத்தில் கீழே கொட்டும் காட்சி
சமையலறைக் கண்ணாடியில் ரகமத்தை பெண் என உணரும் காட்சி
சுல்தான் கொடுத்த கடிதத்தை லத்தீப் படிக்கும் காட்சி.
லத்தீப் ஓடும் ஒரு நீண்ட காட்சி
ஊன்றுகோல் வாங்கி வரும்போது காரில் லிப்ட் கேட்பது...... இது போல் பல காட்சிகளைச் சொல்லலாம்
மிக மெல்லிய காதல் கதையும், அகதிகளின் பின்புலத்தில் இருக்கும் வலியுமே இந்த படத்தின் பலம்
”பரண்” BARAN என்ற 94 நிமிடம் ஓடும் இந்த படத்தை இயக்கியவர் ஈரானின் மிக முக்கிய இயக்குனரான மஜித்மஜிதி. படம் வெளியான ஆண்டு 2002.
பொறுப்பி : சாட்டில் எப்போது வந்தாலும் உலகப்படங்கள் பார்த்தீங்களா என அன்பாய் கும்மும் பதிவர் கும்க்கி மற்றும் உலகப்படங்களின் மிகப்பெரிய ரசிகர் கார்த்திக் ஆகியோருக்கு நன்றி
27 comments:
//உலகப்படங்கள் பார்த்தீங்களா என அன்பாய் கும்மும் பதிவர் கும்க்கி//
அது வேற படங்க ! நீங்க வேற ! அவர பரங்கி மலை ஜோதி தியேட்டர் பக்கம் தெனமும் பாக்கலாம்
//(நம் ஊரில் இருக்கும் பீகார் தொழிலாளிகள் நினைவுக்கு வருகின்றனர்)..//
அவங்களுக்கு என்ன கொறச்சல் ! அதான் நம்மபாசத் தலைவர் நேத்து காக்கா பிரயாணி பொட்டலம் குடுத்து கௌரவிச்சு இருக்காராம் ! அவங்க அது பிரியாணியா இல்ல அதுவும் தோட்டா தரணி தயாரிச்ச டூப்பானு தெரியாம பேந்த பேந்தமுழிச்சாங்களாம்
//பொறுப்பி//
இன்னா பி !
ரைட்டு ! உலகப் படத்தையும் தராசுல வெச்சாச்சு .... அடுத்தது என்ன கதிர் அண்ணா ! புத்தக வெளியீடு தான! கலக்குங்க !
பாக்கணுமே....
//ராஜன் said...
ரைட்டு ! உலகப் படத்தையும் தராசுல வெச்சாச்சு .... அடுத்தது என்ன கதிர் அண்ணா ! புத்தக வெளியீடு தான! கலக்குங்க !//
ஓகோ... இந்த ஆசவேற இருக்குதா!!!!
என்றுமே என் மனம் கவர்ந்த இயக்குநர் மஜித் மஜிதிதான்.
அருமை.
//ஓகோ... இந்த ஆசவேற இருக்குதா!!!!//
கதிர் : மொதல்ல வில்லனா நடிக்கப் போறேன் மணி கிட்ட பேசியாச்சு அப்பறம் ஹீரோ அப்பறம் சி எம் அப்பறம் அப்பிடியே டெல்லி !
கேமராதான் வாங்கியாச்சே, சீக்கிறம் நீங்களும் ஒரு படமெடுத்து போடுங்க.. :)
நல்ல படம் பார்த்த நிறைவு. பகிர்வுக்கு நன்றி
கதையினை அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்..
அவர் ஈரானின் முக்கிய இயக்குனர் மட்டுமல்ல...உலக அளவில் பல பரிசுகளை வென்ற அற்புதமான இயக்குனர்.
இன்னொன்று மஜித்தின் படங்களுக்கு சப் டைட்டிலோ அல்லது கதையோ புரிய வேண்டுமென்ற அவசியமல்ல...
படத்தின் ஒவ்வொரு ப்ரேமும் மனித உணர்வுகளால் ஆனவை..அதை ரசிக்க தகுந்த சூழ்நிலையும் பொறுமையும் மட்டுமே நமக்குத்தேவை..
இவ்வளவு நுட்பமாக வாழ்வை அதன் போக்கில் பதிவு செய்ய முடியுமா என அதிசயிக்கவைக்குமளவும் கொண்டாப்படக்கூடியவர் மஜித்..
நிச்சயம் கலர் ஆப் பேரடைஸும், சில்ரன் ஆப் ஹெவனும் பார்பீர்களென நம்புகின்றேன்..
இவ்விரண்டு படங்களை ஒப்பிடுகையில் பாரன் கொஞ்சம் லைட் சப்ஜெக்ட்தான்..
ப்ராபல பதிவராகிவருகிறார்...ராஜன்.
பல பேர் ரகசியமாகவாகிலும் படித்து ரசிக்குமளவிற்கு சைக்கிள்கடை வைத்து பெட்ரோமாக்ஸ் வாடகைக்கும் விட்டு வருகிறார்...
எப்படியும் ராஜனுக்கு., சாருவுடனும், வால்பையனுடனும் ஒரு ஸ்டார் ஹோட்டலில் எளக்கிய சந்திப்பு நிகழ்ந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது நீண்டநாள் ஆசை...
நீங்களுமா? ரைட்டு.
//எப்படியும் ராஜனுக்கு., சாருவுடனும், வால்பையனுடனும் ஒரு ஸ்டார் ஹோட்டலில் எளக்கிய சந்திப்பு நிகழ்ந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது நீண்டநாள் ஆசை...
.//
வெளங்கிரும் ! நான் வேணா இன்னொரு மார்பியஸ் ஹாப் வாங்கித் தாரேன் ! என்னால வால் பையன் அலும்பையே தாங்க முடியல ! இதுல அது வேறயா ! நாங்க தனியா எதுனா அட்டு லாட்ஜ் பாத்துக்கறோம் ... அவன அடிப் பொடிக கூடயே சுத்தச் சொல்லுங்க
நல்ல திரை விமர்சனம். சாயங்காலம் வந்து CD வாங்கிக்கிறென்
அருமையா இருக்கு...
ஐய்... ஜாலி.. பீரியா இருக்கும் போது யூ டூப்பில் பார்க்க ஒரு புது படம் பற்றி தெரிந்து கொண்டேன்...
மிகமிகச்சாமான்யர்களின் கதையாக வரும் ஈரானியப்படங்கள் எல்லாமே, பெரும் அழுத்தமான இடத்தை பிடிக்கின்றன.
அந்த வரிசையில் வந்த இதன் கதை கேட்டசந்தோசம் படம் பார்க்கும் ஆவலைத்தூண்டுகிறது.
நன்றி தோழா.
//ஈரானியர்களை விட அதிக நேரம் வேலை செய்வதுதான். (நம் ஊரில் இருக்கும் பீகார் தொழிலாளிகள் நினைவுக்கு வருகின்றனர்).//
The Indian software engineers/computer programmers in U.S.A :).
படம் பாக்கணும்க்கிற ஆசைய தூண்டுது
ரைட் தலைவரே இதே மாதிரி சில படங்களை எழுதுங்க
படத்தை பதிவிறக்கம் செய்யனும்...
நண்பரே படம் பார்க்கும் ஆர்வத்தை அதிகரித்துவிட்டது உங்கள் விமர்சனம் . பகிர்வுக்கு நன்றி !
\\\ நல்ல திரை விமர்சனம். சாயங்காலம் வந்து CD வாங்கிக்கிறென் \\\
ரீப்ப்ப்ப்ப்ப்ப்பிட்ட்ட்ட்டேய்ய்ய்......
என்ன அப்படி பார்க்குறீங்க ? புதியதாக பதிவு எதுவும் போட்டு இருக்கீங்களானு பார்க்கவந்தேன் .
மீண்டும் வருவான் பனித்துளி !
மிக அருமையான படம் என கேள்விப்பட்டு இருக்கிறேன் உங்கள் விமர்சனமும் பார்க்கத்துண்டுகிறது நன்றி கதிர்
இது என்னோட முதல் ப்ளாக். சினிமா பற்றி. டைம் இருக்கப்போ படிச்சுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.
http://worldmoviesintamil.blogspot.com
Post a Comment