தெரிந்தும் தெரியாதது


தெரிந்தும் தெரியாதது....
எனக்குத் தெரியும் இரு நாளாய்
இடைவிடாத பணி உனக்கு

மாலைப் பேருந்தில் கவனித்தேன்
களைத்துத் துவண்டு தூங்கிச்சென்றதை...

எதையும் நினைக்க நேரமில்லா உனக்கு
என்னையும் நினைக்க நேரமில்லை

எனக்கு இன்னொன்றும் தெரியும்
எதைவிடவும் என்னை அதிகம் நேசிப்பது

இருந்தாலும் ஏனோ...
அடிக்கடி அலைபேசியைப் பார்க்கிறேன்
நீ அனுப்பாத குறுந்தகவலுக்காக?


தடுமாறும் கோடு....
இடதில் நீ வலதில் நான்
ஆளுக்கொன்றென இணையாய்
வரைந்தோம் இரு கோடுகள்...

இணையாய் இருந்தும்
இணையாத கோடுகளாய்
நானும் நீயும்....

எங்கோ நீ இருந்தாலும்
இடதுபக்க கோடு கிடக்கிறது
இணையாய் அழிபடாமல்

அழிக்கமனமில்லை, ஆதலால்
வலது கோட்டினை மட்டும்
வளைத்து நீட்டித்துக் கொள்கிறேன்

எல்லோரும் என்
முதுகு தட்டுகிறார்கள்
நீளமாய், நளினமாய் இருப்பதாய்

எனக்கு மட்டும்தானே தெரியும்
நீட்டித்த புள்ளியில் முடிச்சாய்
கோடு கொஞ்சம் தடுமாறியிருப்பது...

____________________________________________

40 comments:

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

அய்யா நான்தான் பர்ஸ்ட் .
கவிதை நல்லா இருக்கு . வாழ்த்துக்கள் .

நினைவுகளுடன் -நிகே- said...

அழகான கவிவரிகள்
காதல் உணர்வை மென்மையாய் சொன்ன வரிகள் அழகு

Madurai Saravanan said...

அருமை நண்பரே....பாராட்டுக்கள்.

வானம்பாடிகள் said...

/இருந்தாலும் ஏனோ...அடிக்கடி அலைபேசியைப் பார்க்கிறேன்நீ அனுப்பாத குறுந்தகவலுக்காக?//

ஆஹா!

/எனக்கு மட்டும்தானே தெரியும்நீட்டித்த புள்ளியில் முடிச்சாய்கோடு கொஞ்சம் தடுமாறியிருப்பது.../

ம்ம்

முதல் கவிதை அழகு!

கலகலப்ரியா said...

நல்லாருக்கு... ரெண்டும்...

முகிலன் said...

ரெண்டு கவிதையும் நல்லாருக்கு.

ரோகிணிசிவா said...

"எனக்கு இன்னொன்றும் தெரியும்
எதைவிடவும் என்னை அதிகம் நேசிப்பது
இருந்தாலும் ஏனோ...
அடிக்கடி அலைபேசியைப் பார்க்கிறேன்
நீ அனுப்பாத குறுந்தகவலுக்காக?"

என்ன தான் தெரிஞ்சாலும் வாய்விட்டு சொன்னா இன்னும் சுகம்!
ம்ம்ம்ம் ரெண்டு கவிதையும் நல்லா தான் இருக்கு !

ஆன எழுதுன ஆள் தான் நல்லா இல்ல போல!
பீல் பயங்கரமா இருக்கு,
அது தான் சந்தேகமா இருக்கு?
என்ன நடக்குது ?
யாராவது என்னைய வழிமொழியுங்களேன்!

seemangani said...

இரண்டு அழகான கவிதை இதயத்தை நெருங்கியே இருக்கிறது அண்ணே...அருமை...

நிலாமதி said...

அழகான் ஆழமான...வரிகள் மேலும்பல கவி படைக்க் வாழ்த்துக்கள்.

நீச்சல்காரன் said...

ரசித்தேன்

பா.ராஜாராம் said...

கதிர்,

சமீபமாக உங்கள் கவிதையின் போக்கு,மழை நின்ற பிறகு மூக்கில் குறு குறுக்கும் காற்று போல இருக்கிறது.மென்மையான இடங்களை தொடுகிறது.வருடுகிறது..

ரெண்டுமே ரொம்ப பிடிச்சிருக்கு மக்கா.முதல்,ரொம்ப ரொம்ப!

தாராபுரத்தான் said...

எனக்கு இன்னொன்றும் தெரியும்
எனக்கு மட்டும் தானே தெரியும்...தெரிஞ்சு போச்சு..

தாராபுரத்தான் said...

எனக்கு இன்னொன்றும் தெரியும்
எனக்கு மட்டும் தானே தெரியும்...தெரிஞ்சு போச்சு..

T.V.ராதாகிருஷ்ணன் said...

அழகான வரிகள்

இய‌ற்கை said...

இரண்டும் முத்துக்கள்.. அருமை:-)

இய‌ற்கை said...

கவிதைல ரியலிசம் அதிகமா தெரியுதே.... ம்ம்ம்ம்...
பாயிண்ட் நோட்டட். போட வேண்டிய இடத்தில் போடப்படும் :-)

thenammailakshmanan said...

//இருந்தாலும் ஏனோ...
அடிக்கடி அலைபேசியைப் பார்க்கிறேன்
நீ அனுப்பாத குறுந்தகவலுக்காக?//

அருமை கதிர்

புலவன் புலிகேசி said...

நல்ல கவிதை..

பழமைபேசி said...

//தாராபுரத்தான் said...
எனக்கு இன்னொன்றும் தெரியும்
எனக்கு மட்டும் தானே தெரியும்...தெரிஞ்சு போச்சு..
//

ஆகா.... அண்ணனுக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்கே?!

ஜெரி ஈசானந்தா. said...

எனக்கு இன்னொன்றும் தெரியும் கதிர்,நீங்கள் கவிதையை நேசிக்கிறீர்கள் என்று

vidivelli said...

ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.

சி. கருணாகரசு said...

முதல் கவிதை மிக நேர்த்தி இரண்டாம் கவிதை... சரியா விளங்கல.... தடுமாறுதுங்க

ராமலக்ஷ்மி said...

இரண்டும் அருமை.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ பனித்துளி சங்கர்
//நான்தான் பர்ஸ்ட்//
ஆஹா

நன்றி @@ நினைவுகளுடன் -நிகே-

நன்றி @@ Madurai Saravanan

நன்றி @@ வானம்பாடிகள்
//முதல் கவிதை அழகு!//
ம்ம்ம்... சரி சரி

நன்றி @@ கலகலப்ரியா

நன்றி @@ முகிலன்

நன்றி @@ ரோகிணிசிவா
//ஆன எழுதுன ஆள் தான் நல்லா இல்ல போல!
பீல் பயங்கரமா இருக்கு,
அது தான் சந்தேகமா இருக்கு?
என்ன நடக்குது ?
யாராவது என்னைய வழிமொழியுங்களேன்!//

பல்லுக்கு பல்லுங்களா பல் டாக்டர்... சவுதியில இருப்பதை காட்டுகிறீர்கள்

நன்றி @@ seemangani
//இதயத்தை நெருங்கியே இருக்கிறது//
மகிழ்ச்சி

நன்றி @@ நிலாமதி

நன்றி @@ நீச்சல்காரன்

நன்றி @@ பா.ராஜாராம்
//மழை நின்ற பிறகு மூக்கில் குறு குறுக்கும் காற்று போல இருக்கிறது.//

இதுவே கவிதையா இருக்கே


நன்றி @@ தாராபுரத்தான்
//தெரிஞ்சு போச்சு..//
என்ன இருந்தாலுன் நீங்க யூத்துங்கண்ணே

நன்றி @@ T.V.ராதாகிருஷ்ணன்

நன்றி @@ இய‌ற்கை
//போட வேண்டிய இடத்தில் போடப்படும் :-)//

ஏன் ராஜி... இந்த கொலவெறி

நன்றி @@ thenammailakshmanan
நன்றி @@ புலவன் புலிகேசி

நன்றி @@ பழமைபேசி
//ஆகா.... அண்ணனுக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்கே?!//
பாருங்க மாப்பு....

நன்றி @@ ஜெரி ஈசானந்தா
//நீங்கள் கவிதையை நேசிக்கிறீர்கள் என்று//
நன்றிங்க

நன்றி @@ vidivelli

நன்றி @@ சி.கருணாகரசு
//இரண்டாம் கவிதை... சரியா விளங்கல.... தடுமாறுதுங்க//

பழைய உறவின் பிரிவுக்குப் பின், புதிய உறவின் தொடக்கத்தில் வரும் நெருடல்ங்க

நன்றி @@ ராமலக்ஷ்மி

பித்தனின் வாக்கு said...

ஆகா பாசக்கார பயபுள்ள என்னமா ஃபீல் பண்ணி கூவி இருக்கான்பா. ஆமா இடத்தை சொல்லவில்லை, பன்னீர் செல்வம் பார்க்கா அல்லது காளை மாடு பஸ் ஸ்டாப்பா?
எங்கிட்டு இருந்தா என்ன இராசா, நல்லா பீல் பண்ணறங்கிளே அதுதான் முக்கியம்.

வழக்கம் போல கவிதையில் அழுத்தமும், ஆழமும் உள்ளது. கதிர் டச் என்று அழுத்தமான கவிதைகளுக்கு ஒரு இலக்கனம் வகுக்கலாம் போல. மிக்க நன்றி.

Anonymous said...

கவிதைகள் காதலின் சுவையை அதிகரிக்கிறது...

//எதையும் நினைக்க நேரமில்லா உனக்குஎன்னையும் நினைக்க நேரமில்லை
எனக்கு இன்னொன்றும் தெரியும்எதைவிடவும் என்னை அதிகம் நேசிப்பது //

உணர்ந்தால் அறியும் உண்மை அறிந்தது எப்படிங்க....

Anonymous said...

//அடிக்கடி அலைபேசியைப் பார்க்கிறேன்நீ அனுப்பாத குறுந்தகவலுக்காக?//

நீயும் என் போல் தானா? என்ற பாடல் வரி நினைவுக்கு வருகிறது,,,,

Anonymous said...

//எங்கோ நீ இருந்தாலும்இடதுபக்க கோடு கிடக்கிறதுஇணையாய் அழிபடாமல்
அழிக்கமனமில்லை, ஆதலால்வலது கோட்டினை மட்டும்வளைத்து நீட்டித்துக் கொள்கிறேன்//

so beautiful kathir....

Baiju said...

கவிதைகள் இரண்டும் அருமை. அதிலும் முதல் கவிதை காதலின் ஏக்கம் அருமையான வேளிபாடு

அகல்விளக்கு said...

அழகாய் பேசுகிறது கவிதை....

அருமை....

க.பாலாசி said...

ஸ்ஸப்பா.... இப்பவே கண்ண கட்டுதே....ராத்திரியானா ராகம்பாட ஆரம்பிச்சிடுறாரே....

முதல் கவிதை சாதாரணமாத்தான் தெரியுது...இருந்தாலும் வெளிப்படையான உண்மைக்காதலின் ஏக்கம்....

செகண்ட்...ம்ம்ம்ம்.......

பிரேமா மகள் said...

எனக்கு இன்னொன்றும் தெரியும்
எதைவிடவும் என்னை அதிகம் நேசிப்பது

இருந்தாலும் ஏனோ...
அடிக்கடி அலைபேசியைப் பார்க்கிறேன்
நீ அனுப்பாத குறுந்தகவலுக்காக?

உங்க வீட்டம்மா‍வுக்கு இந்த விசயம் தெரியுமா?

KALYANARAMAN RAGHAVAN said...

//எனக்கு மட்டும்தானே தெரியும்
நீட்டித்த புள்ளியில் முடிச்சாய்
கோடு கொஞ்சம் தடுமாறியிருப்பது//

அருமை அருமை.

ரேகா ராகவன்.

ROMEO said...

\\தெரிந்தும் தெரியாதது....//

எப்படி அண்ணே என்னைய மாதிரி ஆளுங்க படிப்பாங்கன்னு தெரிஞ்சே இந்த பேரு வச்சிங்களா ??

முதல் கவிதை ஏதோ புரியுது (தெரியுது) ரெண்டாவது ஹி ஹி ஹி (தெரியல).

அம்பிகா said...

\\இருந்தாலும் ஏனோ...
அடிக்கடி அலைபேசியைப் பார்க்கிறேன்
நீ அனுப்பாத குறுந்தகவலுக்காக?\\


\\அழிக்கமனமில்லை, ஆதலால்
வலது கோட்டினை மட்டும்
வளைத்து நீட்டித்துக் கொள்கிறேன்\\
அருமை

Venki said...

///Baiju said...
கவிதைகள் இரண்டும் அருமை. அதிலும் முதல் கவிதை காதலின் ஏக்கம் அருமையான வேளிபாடு///

Repeat..

Kathir - But firts one seems to be a personal (Live / Current) experience..... All the best..

நர்சிம் said...

//பா.ராஜாராம் said...
கதிர்,

சமீபமாக உங்கள் கவிதையின் போக்கு,மழை நின்ற பிறகு மூக்கில் குறு குறுக்கும் காற்று போல இருக்கிறது.மென்மையான இடங்களை தொடுகிறது.வருடுகிறது..

ரெண்டுமே ரொம்ப பிடிச்சிருக்கு மக்கா.முதல்,ரொம்ப ரொம்ப!
//

உண்மை..ரசிப்பு, லயிப்பு.

சத்ரியன் said...

//எதையும் நினைக்க நேரமில்லா உனக்கு
என்னையும் நினைக்க நேரமில்லை
.....
இருந்தாலும் ஏனோ...
அடிக்கடி அலைபேசியைப் பார்க்கிறேன்
நீ அனுப்பாத குறுந்தகவலுக்காக?//

கதிர்,

ஒளிவீசுகிறது... கவிதை.

neela said...

காதல் வரிகள் வைரவரிகளாய் ஜொலிக்கிறது.மிக அருமை.

ராஜ நடராஜன் said...

நான் கவிதையில கொஞ்சம் மார்க் கம்மி!