சுடும் வெம்மை

கடந்த ஐந்து வருடங்களாக பெங்களூருக்கு செல்வது வாடிக்கையான ஒன்றாக இருந்தாலும், பிப்ரவரி மாத இறுதியில் சென்ற போது நான் சந்தித்தவர்கள் அத்தனை பேரும் கேட்ட ஒரே கேள்வி. “என்ன சார் உங்க ஊரிலேயேயும் இப்படித்தான் கொளுத்துதா வெயில்!!!” கடந்த ஐந்து வருடத்தில் நான் நூறு முறைகளுக்கு மேல் பெங்களூரு சென்றிருப்பினும் ஒரு முறைகூட யாரும் கேட்காத கேள்வி

சமீபத்தில் அமெரிக்காவில் இருக்கும் சகோதரி தேவகி, நண்பர் அமரபாரதியோடு பேசும் போதும் அவர்கள் கேட்ட பொதுவான கேள்வி
“ஊர்ல என்னங்க விஷேசம்?” இருவரிடமும் நான் சொன்ன முக்கியமான ஒரே பதில் “பிப்ரவரி இறுதியிலேயே எப்போதும் இல்லாத அளவு வெயில் சகிக்க முடியாத அளவு கொளுத்துகிறது“ என்பதுதான்.

வெயில் குறித்து இது வரை என்னிடம் புகார் ஏதும் இருந்ததில்லை, ஆனால் இந்த முறை வரும் கோடை காலத்தில் நாம் சந்திக்கப் போகும் வெயில் மிகக் கடுமையாக இருக்குமென்றே தோன்றுகிறது. வெயில் குறித்து வரும் தகவல்களும் இதை உறுதிப்படுத்துவதாகவே இருக்கின்றன.

//அதிக அளவிலான கரியமில வாயு வெளியேற்றமே புவி வெப்பமடைவதற்கு முக்கிய காரணமாக திகழ்கிற நிலையில், மீத்தேன் வாயு வெளியேற்றமும் முக்கிய காரணியாக விளங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிப்பிரதேசமான அண்டார்டிகாவில் எதிர்பார்த்ததைவிட மீத்தேன் வாயு அதிக அளவில் வெளியேறி வருவதாக தெரிய வந்துள்ளது. ஆண்டுக்கு சுமார் 8 மில்லியன் டன் மீத்தேன் வாயு இங்கிருந்து வெளியேறுவதாகவும், இதனால் புவி வெப்பம் மேலும் அதிகரிப்பதாகவும் தெரியவந்துள்ளது.

கிழக்கு சிபேரியன் அண்டார்டிகா பனிப்பிரதேசத்தில் உறைந்து கிடக்கும் மீத்தேன் வாயு படிமங்களில் இலேசான பிளவு ஏற்பட்டால் கூட, அதிலிருந்து வெளியேறும் வாயுவினால் புவி வெப்பம் உடனடியாக அதிகரித்துவிடும் என்று அந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.//

புவி வெப்பத்தை கட்டுக்குள் கொண்டு வரவேண்டிய நாடுகளின் தலைமை அது குறித்து எந்த விதமான அக்கறையும் காட்டத் தயாரில்லை என்பது கண்கூடு. அதை மிக அழுத்தமாக தென்னாப்பிரிக்காவில் நடந்த கூட்டத்தில் நிரூபித்துமிருக்கிறார்கள்.

இன்னும் 30 ஆண்டுகளில் இமயமலை உருகிவிடும், 40 வருடங்களில் உலகின் மொத்த வெப்பம் 3-4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். அப்படி அதிகரிக்கையில் கடல் மட்டம் குறைந்தது 4-6 அடி வரை உயரும்.அப்படி உயரும் போது கடலோர நகரங்களின் நிலை என்னவாக இருக்கும்? 

இதுபோல் அடிக்கடி சுவாரஸ்யமின்றி துணுக்குச் செய்திகளாக வாசித்துக் கொண்டிருக்கிறோம். இது போல் எத்தனையோ பயமுறுத்தல்களை மிக அநாயசமாக இதனால் எனக்கென்ன வந்துவிடப்போகிறது என்ற மனோநிலையோடு கடந்து போய்க்கொண்டுதான் இருக்கின்றோம்.

ஆனால், புவி வெப்பம் மிகக் கடுமையான தாக்கத்தை பருவ நிலையில்தான் ஏற்படுத்தப்போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பருவ நிலையில் குளறுபடியாகும் போது, பருவ மழையை மட்டுமே பெரிதும் நம்பியிருக்கும் நம் போன்ற நாடுகளின் விவசாயம் என்னவாகும் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. மாறிவரும் பருவ மாற்றத்தால் உணவு உற்பத்தி பாதிக்கும் போது, இத்தனை கோடி மக்களுக்கான உணவுத் தேவையை எது கொண்டு ஈடு செய்யப்போகிறோம்.இருக்கும் நிலையை கொஞ்சம் அனுசரித்து இந்தத் தலைமுறை எப்படியோ முட்டி மோதி கடந்து போய்விடலாம். ஆனால் பாராட்டி, சீராட்டி, கொண்டாடி வளர்க்கும் நம் வாரிசுகளுக்கு எந்த வித உலகத்தை கையளித்துச் செல்லப்போகிறோம்.

இது குறித்து சலிக்கச்சலிக்க பேசி ஓய்ந்த போது மனதில் வலியோடு படிவது “எல்லாம் காலம் கடந்து விட்டது, இனி நாம் பேசி என்ன செய்து விடப்போகிறோம்” ”தலைக்கு மேலே வெள்ளம் போய்க்கொண்டிருக்கிறது, என்ன செய்யப்போகிறோம், இப்படியே வாழ்ந்துவிட்டுப் போவோம்” என்ற கையலாகத்தனத்தின் கசடுகள் மட்டுமே. எப்போதெல்லாம் இது குறித்து பேசுகிறோமோ, சிந்திக்கிறோமோ அப்போதெல்லாம் ஒரு அயர்ச்சி மனதில் கனமாய் வந்தமர்கிறது.

இது உண்மைதானா... காலம் கடந்து விட்டதா? இனி எதுவுமே செய்ய முடியாதா? அல்லது இதற்காக எதுவுமே செய்ய நமக்கு விருப்பம் இல்லையா? மனதில் குடியேறும் அயர்ச்சியை துரத்தியடிக்க என்ன செய்யவேண்டும்.

விடை தேட எந்த நிலத்தில் விதை போடுவது?, இதற்கான நியாயமான கோபக் கனலை எந்தப் பொந்தில் யார் வைப்பது?.
___________________________________________________

45 comments:

பிரபாகர் said...

//ஆனால் பாராட்டி, சீராட்டி, கொண்டாடி வளர்க்கும் நம் வாரிசுகளுக்கு எந்த வித உலகத்தை கையளித்துச் செல்லப்போகிறோம்.
//
நல்ல கேள்வி... தற்கொலைக்கு ஒப்பான காரியத்தை செய்துகொண்டிருக்கிறோம் புவி வெப்பமயமாதல் விஷயத்தில்...

பிரபாகர்...

ஜீவன்சிவம் said...

இனி எதுவுமே செய்ய முடியாது...
போதும் சார் வாழ்ந்தது. எங்கிருந்து வந்தோமோ அங்கேயே போய் சேருவோம். இனியொரு புதிய யுகம் பிறக்கையில் மீண்டும் வருவோம்..
பூமி வாழ்வதற்கு நாதியற்ற இடமாகிவிட்டது..

ஸ்ரீ said...

நல்ல பதிவு கதிர்.பாராட்டுகள்.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

உலக நாடுகள் ஒற்றுமையுடன் முடிவுசெய்து செயல் படுத்துவதுதான் தீர்வு
கதிர் சார்..

thenammailakshmanan said...

உண்மை கதிர் புவி வெப்பமாதலை போல உங்கள் இடுகையும் அதி உஷ்ணமாக இருக்கு கதிர்

வானம்பாடிகள் said...

பயமுறுத்தும் யதார்த்தங்கள்.

ஆனால் ஓசோன் ஓட்டைக்கும் கரியமில வாயுக்கும் சம்பந்தமில்லை. இயற்கை தன்னைத்தானே அழித்து புதுப்பித்துக் கொள்ளும் ஒரு மாற்றம் என்ற புதுக் கருத்தும் வலுப் பெறுகிறது கதிர்.

க.பாலாசி said...

ஈரோட்டுல கொஞ்ச நாளைக்கு முன்னாடி மந்தியானம் 2 டு 4 கரண்ட்ட கட் பண்ணாங்க. அப்பதான் எனக்கு தெரிஞ்சிது... என்னடா இந்த மாசமே இந்தளவுக்கு வெய்யல் பொளந்துகட்டுதுன்னு. இங்கணத்தான் இப்டியிருக்குன்னா எங்க ஊருக்கு சமீபத்துலப்போனப்ப அங்கயும் பகல் முழுசும் சரியான வெய்யல்... நொந்தே போயிட்டேன். எப்போதும் பக்கத்து குளத்துல தண்ணி தேங்கி கெடக்கும். இப்பயும் இருந்துச்சு. ஆனா கொஞ்சங்கூட அந்த குளுமை ஒடம்புல ஒட்டல. காரணமா என்னத்த சொல்லன்னு தெரியல. கிராமத்தோட நிலமையும் இப்டித்தான் இருக்குது.

நீங்க சொன்னமாதிரி உங்க காலம் ஓடிடும். நான்தேன் 40 வயசுக்குமேலயே உயிர்வாழ்வனான்னு தெரியல....

ஆப்ரிக்க நாடுகளில் வறுமையின் பிடியில் ஓட்டிய மார்பும் ஓடுங்கிய கண்ணங்களுமாக உயிரைமட்டும் மென்று வாழும் மக்கள் எப்போதும் என்கண்முன் நிழலாய் வருவதுண்டு. விழுங்க எச்சிலில்லை விழித்துப்பார்க்க திராணியில்லை எனும்படியான அவர்களின் பொழுதுகள் நமக்கும் புலர்ந்துவிடுமோ என்ற அச்சமும் இப்போது கவ்விக்கொண்டுள்ளது...

கனலைமென்று காலந் தள்ள முடியுமாயென்ன...???

மிக நல்ல இடுகை....

ஆதிமூலகிருஷ்ணன் said...

பதிலற்ற கேள்விகளுடன் இன்னொரு பதிவு.

குடிநீர்த்தேவையும், புவி வெப்பமாதலும் மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகிறது அடுத்த தலைமுறைக்கு. நாம் இப்படியே பேசிக்கொண்டிருந்துவிட்டு போய்ச்சேர்ந்துவிடுவோம் என்றுதான் நினைக்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

ஆமாம் எந்தவருடமும் இல்லாத அளவு வெயில் பெங்களூரில்!

’சுடும் வெம்மை’யின் கருத்துக்களும் சரியான சூடு. எல்லோரும் உணருவது எப்போது:(?

வால்பையன் said...

//இது உண்மைதானா... காலம் கடந்து விட்டதா? இனி எதுவுமே செய்ய முடியாதா? அல்லது இதற்காக எதுவுமே செய்ய நமக்கு விருப்பம் இல்லையா? மனதில் குடியேறும் அயர்ச்சியை துரத்தியடிக்க என்ன செய்யவேண்டும்.//


குவாட்டர் அடித்து குப்புற படுக்க வேண்டும்!

எவறொருவர் வாகனம் இல்லாமல் நடந்தோ, மிதிவண்டியிலோ தூரத்தை கடக்கிறீர்களோ, அவர்கள் என் மீது கல்லெறியட்டும்!

Chitra said...

காலம் கடந்து விட்டதா? இனி எதுவுமே செய்ய முடியாதா? அல்லது இதற்காக எதுவுமே செய்ய நமக்கு விருப்பம் இல்லையா? மனதில் குடியேறும் அயர்ச்சியை துரத்தியடிக்க என்ன செய்யவேண்டும்.


.......From time of "Ice-age" , it is warming up. Evolution.

http://www.aproundtable.org/tps30info/globalwarmup.html

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நல்ல பகிர்வு நண்பரே .

மீண்டும் வருவான் பனித்துளி !

தாமோதர் சந்துரு said...

//சமீபத்தில் அமெரிக்காவில் இருக்கும் சகோதரி தேவகி, நண்பர் அமரபாரதியோடு பேசும் போதும் அவர்கள் கேட்ட பொதுவான கேள்வி“ஊர்ல என்னங்க விஷேசம்?” \\

அண்ணா கதிரண்ணா அமரபாரதி இப்படியெல்லா கேப்பாருன்னா ரொம்ப
கவலைப்பட வேண்டிய விஷயந்தானுங்கோ.
//இதுக்கெல்லாம் ஒரே வழி நம்ம வாலு
சொல்றாப்புல
குவாட்டர் அடித்து குப்புற படுக்க வேண்டும்!//

பா.ராஜாராம் said...

//விடை தேட எந்த நிலத்தில் விதை போடுவது?, இதற்கான நியாயமான கோபக் கனலை எந்தப் பொந்தில் யார் வைப்பது?//

ஆத்மார்த்தமான கேள்வி கதிர்..பயமாகத்தான் இருக்கு-சந்ததிகளை நினைத்தால்.

ச.செந்தில்வேலன் said...

நல்ல பதிவு கதிர். நியாயமான கேள்விகள்!! கோபன்ஹேகனில் நடந்ததைப் பார்க்கும் பொழுது, எவருக்கும் கவலையில்லை என்றே தோன்றுகிறது.

காமராஜ் said...

பேருந்து நிறுத்தத்தில் சாட்டையடித்து ரத்தம் சிந்தும் பசிக்கலைஞன்.இந்தியாவைக்கைஅயகப்படுத்த வரும் வறுமைப் புள்ளிவிபரம்.எதையும் விற்கத்தயாராக இருக்கும் மல்டிநேசனல்,விலை உயர்வு,வேலையில்லாத்திண்டாட்டம்,பறிபோகும் விளைநிலங்கள் இப்படி நாம் பார்த்துக்கண்ணீர் வடிக்கிற விடயங்கள் ஏராளம்.இதில் சொன்ன சொல்லாதவற்றையெல்லாம் சுண்டியிழுக்கிற பதிவாக்கியிருக்கிறீர்கள் தோழா.இந்தக்கேல்விகளுக்கு பதில்சொல்லவேண்டிய பாராளுமன்றம் ஆட்சியாளர்கள் எல்லாம்
ஜாய்சில் விட்டுவிட்டுப்போய்விடுகிறார்கள்.ஆனாலும் பற்றவைத்த கங்குகள் கனன்றுகொண்டே இருக்கும்.

ஜெரி ஈசானந்தா. said...

iam using only TFL lambs in my home kathir.

அமர பாரதி said...

நல்ல பதிவு கதிர். சந்துரு அண்ணா, ////இதுக்கெல்லாம் ஒரே வழி நம்ம வாலு சொல்றாப்புல குவாட்டர் அடித்து குப்புற படுக்க வேண்டும்!//// :-)

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

எங்கோ அல்ல இங்கேயே, கண் முன்னே பருவ நிலை மாற்றங்கள்...:(

முகிலன் said...

நம்மாலான சிறு முயற்சிகளாக,
1. நம் வீட்டைச் சுற்றி இருக்கும் காலி இடங்களில் மரங்களை நட்டு வளர்ப்போம்
2. பெரும்பாலான இடங்களுக்கு பப்ளிக் சர்வீஸையே உபயோகிப்போம்.
3. வாகனங்களை உபயோகிப்போர் தங்கள் வாகனங்களின் emission check செய்து வைத்துக் கொள்வது உத்தமம்.
4. பலர் ஒரே இடத்துக்கு செல்ல வேண்டுமானால் ஒரே வாகனத்தில் செல்லலாம் (Car pool).
5. மின்சாரம், எரிவாயு போன்ற வற்றை சேமிப்போம்.
6. மறு சுழற்சி செய்வோம்

seemangani said...

நல்ல பகிர்வு அண்ணே...எதாவது செய்யணும்....!!!!என்ன செய்யலாம்???தெரியலையே...

இராகவன் நைஜிரியா said...

திரு. முகிலன் அவர்கள் கூறியதோடு ஒத்துப் போகின்றேன்.

நம்மால் முடிந்த அளவு மரம் வளர்க்கப் பாடு பட வேண்டும்.

மழை நீர் சேகரிப்பு இந்த சமயத்தில் மிக மிக அவசியம்.

பழமைபேசி said...

வணிகம், இயற்கையை வென்றதா? கொன்றது!!

புலவன் புலிகேசி said...

//ஆனால் பாராட்டி, சீராட்டி, கொண்டாடி வளர்க்கும் நம் வாரிசுகளுக்கு எந்த வித உலகத்தை கையளித்துச் செல்லப்போகிறோம். //

வாரிசுகளீடமே காட்டும் சுயநலம் இது...கலம் இன்னும் இருக்கிறது. நமக்குத்தான் மனமில்லை. ஒவ்வொருவருக்கும் அந்த மனநிலை வர வேண்டும். இனி ஏ.சி உபயோகிக்கப் போவதில்லை என உறுதியெடுத்துக் கொள்ள நான் தயார். கைகோர்க்க யார் தயார்?

அன்புடன் அருணா said...

/விடை தேட எந்த நிலத்தில் விதை போடுவது?, /
என்னைப் பொறுத்தவரை நம்பிக்கையுடன் விதையை மாணவர்களின் மனதில் விதைக்கிறேன்..

தண்டோரா ...... said...

என்ன பதில் ?

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

சமூக அக்கறை உள்ள சிறந்த புனைவு நண்பரே ! வாழ்த்துக்கள் நானும் இதைப் பற்றி விரைவில் ஒரு பதிவு எழுதுகிறேன் . நம்மால் இயன்ற விழிப்புணர்வுகளை நம்மை சுற்றி இருப்பவர்களிடமும் ஏற்படுத்து வோம் .


மீண்டும் வருவான் பனித்துளி !

ஈரோடு கதிர் said...

@@ பிரபாகர்
@@ ஜீவன்சிவம்
@@ ஸ்ரீ.கிருஷ்ணா
@@ ஸ்ரீ
@@ thenammailakshmanan
@@ வானம்பாடிகள்
@@ க.பாலாசி
@@ ராமலக்ஷ்மி
@@ ஆதிமூலகிருஷ்ணன்
@@ வால்பையன்
@@ Chitra
@@ பனித்துளி சங்கர்
@@ தாமோதர் சந்துரு
@@ பா.ராஜாராம்
@@ ச.செந்தில்வேலன்
@@ காமராஜ்
@@ ஜெரி ஈசானந்தா.
@@ அமர பாரதி
@@ முகிலன்
@@ seemangani
@@ இராகவன் நைஜிரியா
@@ பழமைபேசி
@@ புலவன் புலிகேசி
@@ அன்புடன் அருணா
@@ தண்டோரா

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நட்பு உள்ளங்களுக்கு நன்றி

பிரேமா மகள் said...

க.பாலாசி said..

//நீங்க சொன்னமாதிரி உங்க காலம் ஓடிடும். நான்தேன் 40 வயசுக்குமேலயே உயிர்வாழ்வனான்னு தெரியல....//

கதிர் அங்கிள் வயசானவர்‍ன்னு சொல்லிட்டிங்க.. இப்போ சந்தோஷமா பாலாண்ணா.......

(என்ன ஒரு கெட்ட எண்ணம்)..

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

என்னால் முடிந்த அளவு மரங்களை நட்டு வருகிறேன்..
வீட்டிலும் குண்டு பல்ப் பயன்படுத்துவது இல்லை..

வாகன உபயோகத்தைதான் குறைக்க முடியவில்லை..

ராஜ நடராஜன் said...

புலவர் 33ம் புலிகேசி வீட்டுக்குப் போயிட்டு இங்க வந்துட்டேன்!டவுனல சுத்துற கிராமத்து வேர் அறிமுகம் நல்லாயிருக்குதுங்ண்ணா!

ராஜ நடராஜன் said...

முய் வைக்கிறவங்க பேர ஒண்ணா சொல்லி கூப்பிட்டா சண்டைக்கு வரமாட்டாங்க?

மாதேவி said...

அவசியமான இடுகை.விழிப்பு வரவேண்டும்.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

அடுத்த தலைமுறையை நினைத்தால் வருத்தம் தான்.உங்களின் இந்தப்பதிவு விகடனின் குட் பிளாக்.வாழ்த்துக்கள் சார்!

ரோஸ்விக் said...

அறியாமலே அனைவரும் தற்கொலைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். விழிப்புணர்வு தேவை.

நல்ல பதிவு... :-)

தாராபுரத்தான் said...

வெளிச்சம் பாட்டு காட்டியாச்சு. புரிஞ்சா புரிஞ்சுக்க..,புருஞ்சுக்காட்டி.....

Baiju said...

உண்மை சுடுகிறது..

சே.குமார் said...

நல்ல பதிவு கதிர்.பாராட்டுகள்.

காவிரிக்கரையோன் MJV said...

கதிர் கண்டிப்பா நம்மால முடிஞ்சத செஞ்சுட்டு போகலாம். மரம் வைக்கிறது, மகிழுந்தில் செல்வதை குறைத்துக் கொள்ளுதல்னு கண்டிப்பா எங்காவது சிறு சிறு மாற்றங்களை நம்மாலும் கொண்டு வர முயும் கதிர். ஆனாலும் நாம் அடுத்த தலைமுறைக்கு செய்வது துரோகம் தான்....

வி.என்.தங்கமணி, said...

முடியும். எதுவும் முடியும் மனசிருந்தால்.
எனது வாழ்வில் இரண்டு நோக்ககங்கள் உண்டு.
ஓன்று உலக வெப்பமயமாதலை தடுத்தல்.
இரண்டு போரில்லா நல்லுலகம் சமைத்தல்.
உலக வெப்பமயமாதலை தடுக்க ஒரு செயல் திட்டம்
வகுத்துக்கொண்டுள்ளேன். விரைவில் அத்திட்டத்தைப் பற்றி
எனது தளத்தில் இடுகிறேன்.
நல்ல பதிவு கதிர் வாழ்க வளமுடன். நன்றி.

ஜீயெஸ்கே said...

குறைந்தபட்சம் ஆளுக்கொரு மரம் வளர்ப்பதும், வளர்ந்த மரங்கள் தேவையின்றி வெட்டப்படும் போது பார்த்தால் அதை தடுப்பதுமே உங்கள் கேள்விக்கான பதிலாக இருக்க முடியும் என்பது என் கருத்து.

thenammailakshmanan said...

விகடனின் குட் ப்ளாக்ஸில் பார்த்தேன் பாராட்டுக்கள் கதிர்...

:D

S.Sivashanmugam said...

விருட்சத்தின் விதைகளை ஒவ்வொருவரம் இந்த மண்ணில் விதையுங்கள்.

விதைத்தால் மட்டும் போதாது அதை பேணி பாதுகாத்து வளருங்கள்.

வலை பதிகளும் கட்டுரைகளும் போதும், தோழர்களே தோழிகளே செயலில் ஈடுபடும் காலம் கடக்கும் முன்பே நம்மால் ஆனமட்டில், இராமாயணத்தில் கல் சுமந்த அணிலைபோல் செய்துகொண்டிருப்போம்.

http://www.projectgreenhands.org/

gunalakshmi said...

உங்களுடைய படைப்புகள் புதியவை சிந்திக்க வைப்பவை... வாழ்த்துக்கள்!

dhanalakshmi said...

Vanakkam !
indha vaara vikadanil ungal kavidhai yadhaarthamaana, azhagaana padhivu! Kurippaaga pugaivandip payanathil norukku theeni saapidubavargal matravargalukkum "pasi oottuvadhaaga" amaitha varigal arumai.kuzhandhaigalai kaanumbodhu num vayadhai marakkiroam enbadhaiyum sariyaana soozhalodu poruthiirundhadhu, meanmai. thodarga, vaazhthukkal!
-dhanalakshmibaskaran,trichy