பகிர்தல் (08.03.2010)

குட்டு:
உத்திரப் பிரதேசத்தின் ஒரு ஆசிரமத்தில் இலவசமாக அளிக்கப்பட்ட உணவு மற்றும் பாத்திரங்களை வாங்க ஏற்பட்ட நெரிசலில் 65 பேர் இறந்தது மிக மோசமான சம்பவம். அதைவிட மோசமான நிகழ்வு, அப்படி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க மாநில அரசிடம் நிதியில்லை என முதல்வர் மாயாவதி பெருமையாகத்(!!!) தெரிவித்துள்ளார்.

இதே முதல்வர் பெருந்தகைதான் தன்னுடைய உருவச் சிலையையும், தன் கட்சி சின்னமான யானை சிலையையும் வைக்க பல கோடி ரூபாய் செலவு செய்தது யாருக்கும் மறந்திருக்காது.

....ம்ம்ம் என்ன செய்யப்போகிறோம்.... இதையும் மவுனமாக கடந்து செல்வோம்


ஜொள்ளுதுர:
விஜய் தொலைக்காட்சியின் பெரும்பாலான நிகழ்ச்சிகள், வித்தியாசமாக அமைவதுண்டு. சமீபத்தில் ஒளிபரப்பாகும் ”வாங்க பேசலாம்” நிகழ்ச்சியும் அப்படிப்பட்ட ஒன்றே. குறிப்பாக சில வாரத்திற்கு முன் ஒரு நிகழ்ச்சியில், மென்பொருள் துறையில் மாதம் 70,000 சம்பாதிக்கும் ஒருவர் கோடீஸ்வரராக முடிவதில்லை, அதேசமயம் 70,000 ரூபாய் சம்பளமாகப் பெரும் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் எப்படி சில ஆண்டுகளில் கோடீஸ்வரராக முடிகிறது என்ற நேரிடையான கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் ஈவிகேஎஸ் இளங்கோவன் மழுப்பியதை மிக அழகாக ரசிக்க முடிந்தது.

அதே நிகழ்ச்சியில், இந்த வாரம் நடிகை ஷகீலாவை விருந்தினராக வைத்துக்கொண்டு டெல்லி கணேஷ்ம், பெரியார்தாசனும் ஜொள்ளு என்ற பெயரில அடித்த லூட்டி சகிக்கமுடியவில்லை. இருவருக்குமே ”ஜொள்ளுதுர” பட்டம் கொடுக்கலாம். ”ங்கொய்யாலே! கொடுத்த காசுக்கு மேல ஜொள்ளுராங்கடா”


யூத்து:
நித்தியானந்தா-ரஞ்சிதா குறித்த ஆபாச காணொளி குறுந்தகடுகள் விற்பனையில் சக்கை போடு போட்டதாக தகவல். குறுந்தகடுகளை மிக ஆர்வமாக வாங்கி பார்த்தவர்களில் அதிகப்படியானவர்கள் 45-60 வயது நபர்கள் என்பது (என்ன நியாயப்படுத்தினாலும்) எனக்கு ஆச்சரியமாக இருந்த செய்தி. ஆனால், இதற்கெல்லாம் கூடவா கணக்கெடுப்பார்கள். அப்போ! இணையத்துல நேரிடையாக பார்த்து, மின்னஞ்சல் மூலம் இணைப்புகளை பகிர்ந்துகொண்ட நம்மை மாதிரி(!!) யூத்துகள் இந்த கணக்கெடுப்பில் வரவில்லையோ!

அடர்கருப்பு:
தவறவிடாமல் தொடர்ந்து வாசிக்கும் வலைப்பூக்களில் முக்கியமான ஒன்று, தோழர் காமராஜ் அவர்களின் அடர்கருப்பு வலைப்பூவும் ஒன்று.

 

வாசிக்கும் பொழுதெல்லாம் முழுக்க முழுக்க யதார்த்தம் மட்டுமே மனதில் மிஞ்சி நிற்கும். சாதா(ரணமான) மனிதர்களின் வாழ்க்கையை மிக எளிதாக, மிக இயல்பாக போகிற போக்கில் பதிவு செய்து போகிறார். வாக்கிய சங்கிலிக்கும் தேர்ந்தடுக்கும் வார்த்தைகள் புதிதாய் இருந்தாலும் அந்நியப்படாத தன்மை இவருடைய பலம். வாசிக்கும் பொழுதெல்லாம் கரிசல் மண்ணின் வாசம் நம் நாசி நெருடுவது தவிர்க்க இயலாத ஒன்று.

________________________________________________________________

26 comments:

பிரேமா மகள் said...

இது என்ன செய்திகள் விமர்சனமா?

☼ வெயிலான் said...

அடர்கருப்பு - கரிசல் எழுத்துகளுக்கு என்னிக்குமே தனி மவுசுண்டு :)

க.பாலாசி said...

உ.பி.ய விடுங்க... இங்கணயும் அந்த நெலம வந்தாலும் வரலாம்...அந்தன்னைக்கு எப்டி மௌனமா கடந்துபோறோம்னு பாப்போம்....

ஆமா...உங்களுக்கு மட்டும் எப்டி இந்தமாதிரி ஜொள்ளு நிகழ்ச்சிகளா கெடைக்குது...

கரிசல் வாசங்களை உறிஞ்சிக்கொண்டுவரும் காமராஜ் அவர்களின் எழுத்துக்களுக்கு நானும் அடிமையே....

Anonymous said...

தகவல்களை தொகுப்பாய் கொடுத்து இருக்கீங்க..அடர்கருப்பு இனி யானும் வாசிக்கிறேன்....

எம்.எம்.அப்துல்லா said...

//அப்போ! இணையத்துல நேரிடையாக பார்த்து, மின்னஞ்சல் மூலம் இணைப்புகளை பகிர்ந்துகொண்ட நம்மை மாதிரி(!!) யூத்துகள் இந்த கணக்கெடுப்பில் வரவில்லையோ!

//

ஒரு யூத்தோட மனசு இன்னோரு யூத்துக்குத்தான் தெரியுது :)

Chitra said...

அரசியல் நிலவரம் ...... :-(

பிரபாகர் said...

மாயாதேவியிம் அறிக்கையை படித்தவுடம், சிலை, அதை வைக்க ஆன செலவு, பாதுகாக்க செய்யப்பட்ட... என எல்லாம் நினைவிற்கு வந்து என்ன ஒரு ஈனப்பிறவி என நினைத்தேன்! நீங்களும்...

பிரபாகர்.

ராமலக்ஷ்மி said...

இன்றுதான் அடர்கருப்பு காணக் கிடைத்தது. நீங்களும் இங்கு சொல்லிவிட்டிருக்கிறீர்கள்:)!

காமராஜ் said...

இப்போது வலையெழுதுகிற யாரும் சோடையில்லை என்பதே என் அபிப்ராயம். அவரவர்க்கென தனி மொழி,எரியா தேர்வு கைவந்திருக்கிறது.தமிழில் சிறுகதை தேங்கிப்போனதாக ஒரு கூட்டத்தில் பேசினார்கள். பேசியவர் யாவரும் கட்டுரையாளர்கள்.நான் அதை மெலிதாக மறுத்தேன்.ஆனால் வலையில் மிக மிக வலுவான செய்திகலந்த சிறுகதைகளும் வருகிறது.

நானும் உங்கள் எல்லோருடைய ரசிகன் என்பதை சொல்லிக்கொள்ள வழிவிடுங்கள்.

கொஞ்ச நாள் நாமிருவரும் சந்திக்கவில்லை என்கிற பசியை இவ்வளவு இனிப்புக்கொடுத்து கண்கலங்க வைக்கக்கூடாது கதிர்.
திகட்டாத அன்புக்கு நன்றி

ஈரோடு கதிர் said...

@@ பிரேமா மகள்
//இது என்ன செய்திகள் விமர்சனமா?//

இப்படித்தான் விமர்சனம் எழுதுவீங்களா!!?

@@ வெயிலான்
//கரிசல் எழுத்துகளுக்கு என்னிக்குமே தனி மவுசுண்டு :)//
உண்மையே!

@@ க.பாலாசி
//அந்த நெலம வந்தாலும் வரலாம்...அந்தன்னைக்கு எப்டி மௌனமா கடந்துபோறோம்னு பாப்போம்....//
(:

//ஆமா...உங்களுக்கு மட்டும் எப்டி இந்தமாதிரி ஜொள்ளு நிகழ்ச்சிகளா கெடைக்குது...//
அதுக்குத்தான்யா யூத்தா இருக்கனும்ங்கிறது

@@ தமிழரசி
//அடர்கருப்பு இனி யானும் வாசிக்கிறேன்....//
நல்லது

@@ எம்.எம்.அப்துல்லா
//ஒரு யூத்தோட மனசு இன்னோரு யூத்துக்குத்தான் தெரியுது :)//
யூத்து யூத்தோடதானே சேரும்ங்கண்ணா

@@ Chitra
நன்றி


@@ பிரபாகர்
//ஒரு ஈனப்பிறவி என நினைத்தேன்! //
இதுக்கும் ஒரு சிலை வச்சாலும் வச்சிடுவாங்க

@@ ராமலக்ஷ்மி
//இன்றுதான் அடர்கருப்பு காணக் கிடைத்தது//
மகிழ்ச்சி

@@ காமராஜ்
//திகட்டாத அன்புக்கு நன்றி//
மிக்க மகிழ்ச்சி

Romeoboy said...

அடர்கருப்பு - இரண்டு பதிவுகளை படித்தேன் தல. ரொம்ப அருமையா இருக்கு.

Romeoboy said...

மாயாவதி மேட்டர் ஒரு பக்கம் கோவமும், இன்னொரு பக்கம் காமெடியா இருக்கு.

Unknown said...

//.. நம்மை மாதிரி(!!) யூத்துகள் ..//

நீங்க சிரிப்பான் போடுறதுக்கு பதிலா ஆச்சர்ய குறி போட்டுடிங்களோனு தோணுது.. :-)

தேவன் மாயம் said...

மாயாவதி சிலை - கண்டிக்க வேண்டிய ஒன்று!

ஜோசப் பால்ராஜ் said...

கோடிக்கணக்கில் செலவு செய்து மாயவதிக்கும் , யாணைக்கும் சிலை வைத்துக் கொண்டிருப்பதால் தானே இன்னும் கும்பலில் உயிரைப் பணயம் வைத்து முண்டியடித்து போய் உதவிகளை பெற வேண்டிய துர்பாக்கிய நிலையில் மக்கள் இருக்காங்க.
எது எதுக்கோ பொது நல வழக்கு போடுறாங்களே, இதுக்கு ஒரு வழக்கு போடக் கூடாதா?

மாதேவி said...

பகிர்தலுக்கு நன்றி.

*இயற்கை ராஜி* said...

//எம்.எம்.அப்துல்லா said...
//அப்போ! இணையத்துல நேரிடையாக பார்த்து, மின்னஞ்சல் மூலம் இணைப்புகளை பகிர்ந்துகொண்ட நம்மை மாதிரி(!!) யூத்துகள் இந்த கணக்கெடுப்பில் வரவில்லையோ!

//

ஒரு யூத்தோட மனசு இன்னோரு யூத்துக்குத்தான் தெரியுது :)
//



இந்த "யூத் "கள் தொல்லை தாங்கல சாமி...
:-))

*இயற்கை ராஜி* said...

ம்ம்.. நல்ல ப‌கிர்வு.. நியாயமான கவலைகள்

Jerry Eshananda said...

சாட்சியமான பகிர்தல்

அமர பாரதி said...

நல்ல பகிர்வு கதிர்.

கலகலப்ரியா said...

வழக்கம் போல நல்ல பகிர்வு கதிர்... அடர்கறுப்பு அறிமுகத்திற்கு நன்றி... பார்க்கறேன்...

ராம்ஜி_யாஹூ said...

Hi

I read mayavathi did not give compensation because people were rushing to a human saint and not because of finance deficit

கார்த்திகைப் பாண்டியன் said...

கலவை.. நல்லா வந்திருக்கு நண்பா..

சீமான்கனி said...

பகிர்தல் பக்குவமாய் இருக்கு நானும் பருகினேன்....
நன்றி அண்ணே...

ஈரோடு கதிர் said...

@@ ROMEO
//அடர்கருப்பு - இரண்டு பதிவுகளை படித்தேன் தல. ரொம்ப அருமையா இருக்கு.//
தொடர்ந்து படியுங்கள்

@@ திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்)
//நீங்க சிரிப்பான் போடுறதுக்கு பதிலா ஆச்சர்ய குறி போட்டுடிங்களோனு தோணுது.. :-)//

பொறாமை படாதீங்க திரு

@@ தேவன் மாயம்
//மாயாவதி சிலை - கண்டிக்க வேண்டிய ஒன்று!//
ஆமாங்க

@@ ஜோசப் பால்ராஜ்
//எது எதுக்கோ பொது நல வழக்கு போடுறாங்களே, இதுக்கு ஒரு வழக்கு போடக் கூடாதா? //

பொது நல வழக்கு போடறவங்கள பைத்தியம்னு பல தடவ சொல்றமே

@@ மாதேவி
நன்றி

@@ இய‌ற்கை
//இந்த "யூத் "கள் தொல்லை தாங்கல சாமி...//

நீங்களும் யூத்துனு சொல்லிக்கோங்க

@@ ஜெரி ஈசானந்தா
//சாட்சியமான பகிர்தல்//
நன்றி

@@ அமர பாரதி
//நல்ல பகிர்வு கதிர்//
நன்றி

@@ கலகலப்ரியா
//அடர்கறுப்பு அறிமுகத்திற்கு நன்றி... பார்க்கறேன்...//

நல்லது

@@ ராம்ஜி_யாஹூ
//I read mayavathi did not give compensation because people were rushing to a human saint and not because of finance deficit//

நான் செய்தியில் பார்த்த போது, அவர் பேசியதற்கு இப்படித்தான் மொழி பெயர்த்தார்கள்

@@ கார்த்திகைப் பாண்டியன்
//கலவை.. நல்லா வந்திருக்கு நண்பா..//
நன்றி

@@ seemangani
//பகிர்தல் பக்குவமாய் இருக்கு நானும் பருகினேன்....//
நன்றி

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு கதிர்