வளைந்தோடும் உன் கழுத்தோர
முடிக்கற்றைத் தூரிகையில்
ஆசையாய் தீட்டிப் பார்க்கிறேன்
அழகான என் காதலை
பின்னிப்பிரியும் கால் விரல்களில்
பிரித்தெடுத்துக்கொள்கிறேன் கொஞ்சம்
இளம் சூட்டினை நரம்புகளில் மிதக்கும்
இரத்த திசுக்களுக்காக
உன் பூவுடல் இறுகத் தழுவிய
முந்தானையின் ஒரு முனை
புயலாய் வந்து மெலிதாய் தடவிப்போகிறது
என் புறங்கழுத்து வியர்வைத் துளி இரண்டை
கைகளில் ஏந்தி, மடி மீது தாங்கி
பாதத்தில் மெலிதாய் பூட்டிய கொலுசு
செல்லமாய் சிணுங்குகிறது
இன்னும் கொஞ்சம் இறுகப் பூட்டச்சொல்லி
குறுக்கும் நெறுக்கும் பயணிக்கும்
ஓயாத பார்வைக்கோடுகள்
எப்படிப்படித்தாலும் இனிக்கும்
கவிதையின் தடம் புரண்ட வரிகளாக
தடம் புரண்ட வரிகள்
எழுதியது
ஈரோடு கதிர்
Subscribe to:
Post Comments (Atom)
33 comments:
கலக்கல் அண்ணா !
//கவிதையின் தடம் புரண்ட வரிகளாக//
அழகாக... மிக அழகாக கவிதை செதுக்கப்பட்டுள்ளது.
"குறுக்கும் நெறுக்கும் பயணிக்கும்
ஓயாத பார்வைக்கோடுகள்
எப்படிப்படித்தாலும் இனிக்கும்
கவிதையின் ..."
அருமையான வரிகள் ரசித்தேன்.
விகடன்ல படிச்சேன்... அருமை... என்ன வர வர... எல்லாரோட இடுகைளையும் காதல் ரசம் சொட்டுது....!
/கைகளில் ஏந்தி, மடி மீது தாங்கி
பாதத்தில் மெலிதாய் பூட்டிய கொலுசு
செல்லமாய் சிணுங்குகிறது
இன்னும் கொஞ்சம் இறுகப் பூட்டச்சொல்லி//
ரசித்தேன் கதிர்..
ரைட்டு. அழகான கவிதை. அதற்கேற்றார்போல் அழகான படம். பாராட்டுகள் கதிர்.
நல்லாருக்கு! ஆனா சும்மா சொல்லிட்டுப் போக முடியாது...
அதென்ன நெறுக்கும்?
குறுக்கும் நெடுக்கும்--இது மரபுத் தொடர்.
நெறுக்கும்னா?
நெறுக்கிக்கொண்ட அப்படின்னாலும், அதுல பொருட்பிழை இருக்கே? இஃகிஃகி!
அருமைங்க....
அப்படியே என் பக்கத்துக்கும் வந்து சில கேள்விகளுக்கு பதில் சொன்னா நல்லா இருக்கும்..
அருமை,கதிர்.விகடனுக்கு வாழ்த்துக்கள்!
அருமை!!! வாழ்த்துக்கள் !!
எனக்கு பிடித்தது
//பின்னிப்பிரியும் கால் விரல்களில்
பிரித்தெடுத்துக்கொள்கிறேன் கொஞ்சம்
இளம் சூட்டினை நரம்புகளில் மிதக்கும்
இரத்த திசுக்களுக்காக//
வாழ்த்துகள்
என்னங்க ப்ரபாகரும் நீங்களும் மாத்தி மாத்தி கலக்கறீங்க..
//குறுக்கும் நெறுக்கும் பயணிக்கும்
ஓயாத பார்வைக்கோடுகள்
எப்படிப்படித்தாலும் இனிக்கும்
கவிதையின் தடம் புரண்ட வரிகளாக//
வார்த்தைகள் வலித்தாலும்
உன்மேல உள்ள ல்தகாசைஆவினால்
மனசு வலிப்பதில்லை...
ல்றான்னெஏ
"ன்நா னைன்உ ன்றேகிக்லிதகா"
உளத்தின் அடித்தளக்காதலின் உவமைகளாக உருவகங்கள் அருமை
வாழ்த்துக்கள்
விஜய்
//(விகடன் முகப்பிலும், இளமை விகடனிலும் வெளிவந்த கவிதை) //
வாழ்த்துகள் தோழரே!
கவிதை நல்லாயிருக்கு நண்பரே
/குறுக்கும் நெறுக்கும் பயணிக்கும்
ஓயாத பார்வைக்கோடுகள்
எப்படிப்படித்தாலும் இனிக்கும்
கவிதையின் தடம் புரண்ட வரிகளாக /
மனசும் கொஞ்சம் தடம் புரண்டுதான் போயிருக்குபோல??அழகாய் வந்திருக்கு,,,
அழகான வர்ணனை. வாழ்த்துக்கள்.
தடம் புரண்ட வரிகள் கூட
தளிர்ந்து மிளிர்ந்திருமே
தொட்டேழுத கதிரெடுத்து
தமிழோடு கைகோர்த்தால்....
அருமை கதிர். கவிதையில் எனக்கும் அய்யாவும் நீங்களும் கற்றுக்கொள்ளும் பாடசாலை...
பிரபாகர்.
எப்படிப்படித்தாலும் இனிக்கும்
கவிதையின் தடம் புரண்ட வரிகளாக //
ஆஹா.
என்னை விட்டுச் சென்று விடுவேன் என்று பயமுறுத்திக் கொண்டிருக்கும் இளமையை, மிரட்டித் திருப்பிக் கொண்டு வந்து சேர்க்கின்றன உங்கள் வரிகள்.
அத்ற்காகவே நன்றிகள்,கதிர்!
//பாதத்தில் மெலிதாய் பூட்டிய கொலுசு
செல்லமாய் சிணுங்குகிறது
இன்னும் கொஞ்சம் இறுகப் பூட்டச்சொல்லி//
கிறங்கடிக்கும் சங்கீதம்.
கலக்கறீங்க கதிர்.. அழகான கவிதை.. அருமையான வார்த்தைகள்.
ஒவ்வொருவமே காதல் வயப்படும் போது காதலை புதுசாக பார்க்கின்றனர். அதனால் தான் அவர்களின் கவிதை இத்தனை அழகாக மிளிர்கிறது. யாராலும் காதலிக்க படாத துக்கம் என்னுள்ளே பெருகி வழிகிறது.
அருமையான இளமையான வரிகள்.
உங்களுக்கு வயதானாலும் உங்கள்எழுத்துக்களுக்கு வயதாவதில்லை
முதல் வரி என்னோடது. 2வது வரி வசந்த் எழுத சொன்னது :)
நல்ல கவிதை.வாழ்த்துகள்.
கவிதைக்குத் தடம் புரண்ட வரிகள்ன்னு பேர் வச்சிட்டு காதலின் தடத்தோட அழகா நடக்கிறீங்க கதிர்.படமே கவிதை சொல்லுதே !விகடனிலும் பார்த்தேன்.வாழ்த்துக்கள்.
கொஞ்ச நாட்களாக வலைப்பூக்கள் வந்து வாசிக்க நேரமில்லாமல் போய்விட்டது. அதற்குள் பல பதிவுகள் எழுதியிருக்கிறீர்கள். மொத்தமாய் வாசிக்கணும்.
இந்தக் கவிதையை ரசித்தேன்.
nice one
புயலாய் வந்து மெலிதாய் தடவிப்போகிறது
காதல் ரசமா ?
அன்பின் கதிர்
அருமை அருமை - இளமை துள்ளும் காதல் கவிதை அருமை
இறுகத் தழுவிய முந்தானை புயலாய் வந்து மெலிதாய் தடவுகிறதா - பின்கழுத்தின் வியர்வையினை
நல்ல சொல்லாடல்
நல்வாழ்த்துகள் கதிர்
//குறுக்கும் நெறுக்கும் பயணிக்கும்
ஓயாத பார்வைக்கோடுகள்
எப்படிப்படித்தாலும் இனிக்கும்
கவிதையின் தடம் புரண்ட வரிகளாக
//
அழகிய வரிகள் ....
அருமை,கதிர் sir....விகடனுக்கு வாழ்த்துக்கள்!
Post a Comment