எல்லா நகரங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் உயர்வகையான உணவு விடுதிகளில் நண்பர்களோடு அல்லது குடும்பத்தோடு உணவருந்துவதின் அடிப்படை ஒருபோதும் பசி என்பதாக இருப்பதில்லை. உயர்வகை உணவு விடுதிகளில் உணவருந்தியவர்களின் தட்டுகளிலும், வசதி படைத்தவர்களின் விருந்துகளிலும் மிஞ்சி வெளியில் கொட்டப்படும் உணவு கிட்டத்தட்ட முப்பது சதவிகிதத்திற்கும் மேலே.
நான்கு பேர் சேர்ந்து நடுத்தர நகரங்களில் உள்ள உயர்வகை உணவகத்தில் ஒருவேளை சாப்பிட்டாலே குறைந்தது ஐநூறு ரூபாய்க்கு மேல் கட்டணம் வருகிறது. அதில் சராசரியாக முப்பது சதவிகிதம் உணவு மீதியாக தட்டிலேயே வீணடிக்கப்படுகிறது. வீணடிக்கப்படுவது பற்றி பெரிதாக கவலையேதுமில்லை. தினமுமா சாப்பிடறோம், எப்போதாவதுதானே என்ற மேம்போக்குத் தனத்தால் இது ஒரு செலவாகவோ, வீணடிக்கப்பட்டதாகவோ அல்லது இழப்பாகவோ ஒருபோதும் உணரப்படுவதேயில்லை.
உயர்வகை உணவு விடுதிகளிலும், வசதி படைத்தவர்களின் விருந்துகளிலும் வீணடிக்கப்படுவது அவர்கள் காசாக இருந்தாலும், அந்த உணவுப்பொருட்கள் இன்னொரு மனிதனுக்கானது. நம் தேசத்தில் இன்னும் பெரும்பான்மையான மனிதர்களுக்கு ஒருவேளை உணவு கிடைப்பதே அரிது.
மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும். தினமும் பல ஆயிரங்களில் வருமானம் ஈட்டி ஒருவேளை உணவுக்கு பல நூறு ரூபாய் செலவிடத் தாயாராக இருக்கும் மனிதனும், ஒரு நாளைக்கு நூறு அல்லது இருநூறு ரூபாய் மட்டும் வருமானம் ஈட்டி, அதன் மூலம் தன் குடும்பத்திற்கே சோறு போடும் மனிதனும், ஒரே மாதிரியான பொருளை வாங்க முற்படுகின்றனர். பொருளை விற்பவர்களுக்கு இரண்டு பேருடைய தேவையும் புரியும் போது, இரண்டு பேருமே கட்டாயம் வாங்கியாக வேண்டும் என்ற எளிய அரசியலில் விலையை உயர்த்த முயல்கின்றனர். என்ன விலையானாலும் வசதி வாய்ப்பு கிடைத்தவர்கள் அதை வாங்க போட்டி போடும் பொழுது, மிகச் சிறிய வருமானம் கொண்டவர் தான் வாங்கும் சக்தியை இழக்கிறார்.
உதாரணத்திற்கு இருபது ரூபாய் இருக்கும் பொருளை வாங்க ஒருவனிடம் பத்து ரூபாய்தான் இருக்கிறது, இன்னொருவனிடம் நாற்பது ரூபாய் இருக்கிறது. பத்து ரூபாய் மட்டும் வைத்திருப்பவன் எப்போதும் அதை வாங்கமுடிவதில்லை. நாற்பது ரூபாய்க்கு வாங்க மற்றொருவன் தயாராக இருக்கும்போது பொருளை வைத்திருப்பவன் முப்பது ரூபாயில் போய் நிற்கிறான்.
மூன்று ரூபாய்க்குள் கிடைக்கும் முட்டை, வெங்காயம் சேர்த்து வறுக்கும்போது சில உணவகங்களில் ஆறு ரூபாய்க்கு கிடைக்கிறது, அடுத்த வீதியில் இருபது ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இருபது ரூபாய்க்கும் வாங்கும் திறனுள்ளவர்கள் நிச்சயம் பசியின் அடிப்படையில் அந்த முட்டையை வாங்குவதில்லை. அப்படி வாங்குபவர்கள் நிச்சயம் அதை முழுதாக உண்ண வேண்டிய கட்டாயமில்லை. எனெவே ஒரு பகுதி மீதம் வைக்கப்பட்டு குப்பைக்குப் போகிறது.
அப்படி மிதமிஞ்சி வீணடிக்கப்படும் பொருள் அதை வாங்க பொருளாதாரம் இல்லாதவனை, மிக நுட்பமாக, எளிதாக பசியோடு கிடத்திவிட்டு வீணடிக்கப்படுகிறது. இதே போல்தான் தண்ணீரும், உணவும் சிறிதும் மனசாட்சியில்லாமல் தொடர்ந்து வீணடிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.
பணம் இருக்கிறது என்று வித விதமாய் சாப்பிடுவதில் இருக்கும் நியாயம்(!!!), என் பணம் தானேயென்று அதை வீணடிப்பதில் ஒருபோதும் இருக்க முடியாது, ஏனெனில் அது இன்னொருவனை பட்டினியில் படுக்க வைத்திருக்கிறது.
தனியொரு மனிதனிக்கு உணவில்லையெனில்... க்ஹும்... எத்தனை உலகத்தை அழித்து விட்டோம்...
தொடர்ந்து... தொடர்ந்து... சக மனிதனைத் தானே பசியில் அழித்துக் கொண்டேயிருக்கிறோம்.
அடுத்த முறை உணவை மிச்சமாக தட்டில் வைத்துவிட்டு எழும் பொழுது கால்களும், மனதும் இடற வேண்டும். பசியில் எங்கோ ஒருவனின் வயிறு சப்தமிடுவது செவிகளில் கனமாக விழ வேண்டும். மனது சிறிதேனும் கூச வேண்டும்.
குறைந்த பட்சம் உணவை, தண்ணீரை வீணடிக்காத சமுதாயத்தை சொல்லிச் சொல்லி உருவாக்குவோம், முடியும்!
பொறுப்பி: யூத்ஃபுல் விகடனின் முதல் மின்னிதழில் வெளியான கட்டுரை. மின்னிதழை தரவிறக்கம் செய்ய இங்கே சுட்டுங்கள்
44 comments:
தினமும் பல ஆயிரங்களில் வருமானம் ஈட்டி ஒருவேளை உணவுக்கு பல நூறு ரூபாய் செலவிடத் தாயாராக இருக்கும் மனிதனும், ஒரு நாளைக்கு நூறு அல்லது இருநூறு ரூபாய் மட்டும் வருமானம் ஈட்டி, அதன் மூலம் தன் குடும்பத்திற்கே சோறு போடும் மனிதனும், ஒரே மாதிரியான பொருளை வாங்க முற்படுகின்றனர்.
சிந்திக்க வேண்டிய உண்மை...
ஆம் உண்மை ..........நாம் யாருடைய உணவையோ வீணாக்குகிறோம் ......
நெகிழ்ச்சியாகவும் உண்மையாகவும் இருந்தது ..........நாமெல்லாம் மூன்று வேலை சாப்பிடுகிறோம் ....பல பேரின் உணவை வீணடிக்கிறோம் ..........பொருள் என்பது பணம் அல்ல பொருளே....பணம் கொடுத்தால் வீணடிக்கலாமா .....சரியான ஆழமான பதிவு
உண்மையிலேயே பசிச்சு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு கதிர், பசிய உணர்றவனுக்குத்தான் அடுத்தவனோட பசி தெரியும்.
மற்றுமொரு அருமையான படைப்பு உங்களிடமிருந்து. மின்னிதழ் மட்டுமின்றி மென்மேலும் பல்லூடகங்களில் புகழ் பரவ உங்களுக்கும் செந்திலுக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள்
இளமை விகடனின் முதல் மின்னிதழில் இடம் பெற்ற முதல் தரமான கட்டுரை என்பதில் மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள் கதிர்.
/ இது ஒரு செலவாகவோ, வீணடிக்கப்பட்டதாகவோ அல்லது இழப்பாகவோ ஒருபோதும் உணரப்படுவதேயில்லை./
சரியான கருத்து
/என்ன விலையானாலும் வசதி வாய்ப்பு கிடைத்தவர்கள் அதை வாங்க போட்டி போடும் பொழுது, மிகச் சிறிய வருமானம் கொண்டவர் தான் வாங்கும் சக்தியை இழக்கிறார்./
பதுக்கலுக்கும் கள்ளச் சந்தைக்கும் இது வழிகோலும்.
/குறைந்த பட்சம் உணவை, தண்ணீரை வீணடிக்காத சமுதாயத்தை சொல்லிச் சொல்லி உருவாக்குவோம், முடியும்!/
ம்ம்.
//என்ன விலையானாலும் வசதி வாய்ப்பு கிடைத்தவர்கள் அதை வாங்க போட்டி போடும் பொழுது, மிகச் சிறிய வருமானம் கொண்டவர் தான் வாங்கும் சக்தியை இழக்கிறார்.//
//அப்படி மிதமிஞ்சி வீணடிக்கப்படும் பொருள் அதை வாங்க பொருளாதாரம் இல்லாதவனை, மிக நுட்பமாக, எளிதாக பசியோடு கிடத்திவிட்டு வீணடிக்கப்படுகிறது//
//தொடர்ந்து... தொடர்ந்து... சக மனிதனைத் தானே பசியில் அழித்துக் கொண்டேயிருக்கிறோம்.//
உண்மைதான், இதை நானும் பலநேரங்களில் உணர்ந்திருக்கிறேன்.
//பசியில் எங்கோ ஒருவனின் வயிறு சப்தமிடுவது செவிகளில் கனமாக விழ வேண்டும். மனது சிறிதேனும் கூச வேண்டும்.//
கூசும் என்றே நினைக்கிறேன். ஒவ்வொருமுறை உணவில் கைவைக்கும்போதும் இந்த உணர்வு உங்களின் இடுகையினால் ஏற்படும் என்றே நினைக்கிறேன். எனக்கு ஏற்படும்.
நல்ல சிந்தனை இடுகை....யூத்புல் மின்னிதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்....
//அடுத்த முறை உணவை மிச்சமாக தட்டில் வைத்துவிட்டு எழும் பொழுது கால்களும், மனதும் இடற வேண்டும். பசியில் எங்கோ ஒருவனின் வயிறு சப்தமிடுவது செவிகளில் கனமாக விழ வேண்டும். மனது சிறிதேனும் கூச வேண்டும்.//
குத்துகின்ற வரிகள் அண்ணே !
நிச்சயமாய் எல்லோரும் சிந்திக்கவேண்டிய நல்ல பதிவு !
விகடனில் வந்தமைக்கு வாழ்த்துக்கள் !
:(
இனி சாப்பிடுவதை மிச்சம் வைக்கும் போது உங்கள் கட்டுரை நியாபகத்திற்கு வரும்.
//அடுத்த முறை உணவை மிச்சமாக தட்டில் வைத்துவிட்டு எழும் பொழுது கால்களும், மனதும் இடற வேண்டும். பசியில் எங்கோ ஒருவனின் வயிறு சப்தமிடுவது செவிகளில் கனமாக விழ வேண்டும். மனது சிறிதேனும் கூச வேண்டும்...//
உண்மைதான் கதிர் மிக சரியான இடுகை வாழ்த்துகளும் பாராட்டுகளும்
//குறைந்த பட்சம் உணவை, தண்ணீரை வீணடிக்காத சமுதாயத்தை சொல்லிச் சொல்லி உருவாக்குவோம், முடியும்!
//
கண்டிப்பா முடியும் கதிர்..
முடியாததுன்னு ஒண்ணு உலகத்தில இருக்கா என்ன?
விகடன் மின் மலரில் வந்தமைக்கும் வாழ்த்துக்கள்
மக்களும் மனங்களும் படிப்படியாக தாராளமயமாக்கப்பட்டுவிட்டனர் கதிர்.
இது பற்றிய உணர்வு கூட அற்ற நிலையில்தான் வாழ்வும் போக்கும் சுயநலத்தன்மைகளின் அடிப்படையில் போய்க்கொண்டிருக்கின்றன..
ஒரு பக்கம் இருப்பவன் ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றான்
இன்னொரு பக்கம் இல்லாதவன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறான்.
கால நேர இடைவெளிகளில் பொறுமை தீர்ந்துபோய் அவனவனுக்கு தோன்றிய வழியில் முயற்சிக்கத்தான் செய்வான்...
எத்தனை பாதுகாப்பு கொடுத்து ஏதுமில்லா கோடீஸ்வரகளிடமிருந்து எல்லாமிருக்கும் கோடீஸ்வரர்களை காப்பாற்ற முடியும் என தோன்றவில்லை....
vazhththukkal kathir...! officela...appuram parkkaren..!
பத்து ரூபாய் மட்டும் வைத்திருப்பவன் எப்போதும் அதை வாங்கமுடிவதில்லை. நாற்பது ரூபாய்க்கு வாங்க மற்றொருவன் தயாராக இருக்கும்போது பொருளை வைத்திருப்பவன் முப்பது ரூபாயில் போய் நிற்கிறான் //
உண்மை
ஆழமான, சிந்திக்க வேண்டிய பதிவு.
அந்த படம் பதற வைக்கிறது. :((((
விகடன் மின் மலரில் வந்தமைக்கும் வாழ்த்துக்கள்
கொடுமையிலும் கொடுமை. பசிக்கொடுமை. வாழ்த்துக்கள் தம்பி.
அருமையான கட்டுரை கதிர்... வாழ்த்துக்கள் உஙக மின்னிதழ் கட்டுரைக்கு
கேபிள் சங்கர்
///வீணடிக்கப்படுவது அவர்கள் காசாக இருந்தாலும், அந்த உணவுப்பொருட்கள் இன்னொரு மனிதனுக்கானது///
உண்மை...!
நீங்க சொல்வது மிகவும் சரி. எனக்கும் வீட்டிலும் சரி வெளியிலும் சரி உணவுப் பொருட்களை வீணாக்குவது பிடிக்காது.
நெடுநாட்களுக்கு பிறகு படித்த அர்த்தமுள்ள பதிவு. பொருளாதார மாற்றம் மற்றும் மேன்மைபடுத்தபட்ட இந்தியா என்பதின் உண்மை நிலை பற்றிய உணர்வை நீங்கள் கொண்டுள்ளதில் மகிழ்ச்ச்சி.
கதிர்.. அருமையான படைப்பு. நாம் அனைவரும் உணர்ந்து திருந்த வேண்டும். இது உணவில் மட்டுமில்லை. உடை, உணவு, பொழுதுபோக்கு என அனைத்து துறைகளிலும் காலூன்றி எளியவர்களை மேலும் ஏழையாக்குகிறது.
//.. குறைந்த பட்சம் உணவை, தண்ணீரை வீணடிக்காத சமுதாயத்தை சொல்லிச் சொல்லி உருவாக்குவோம், முடியும்! ..//
முடியும்.. இதைத்தான் நாணயம் ஏன் நண்பர்களிடம் அடிக்கடி சொல்லுவேன்..
என்னால் முடிந்த அளவு உணவை நான் வீணடிப்பதில்லை, வலுக்கட்டாயமாக சிலசமயங்களில்(விருந்தோம்பல்ங்கற பேர்ல ஒரு சட்டிய கொட்டுவாங்களே அப்போ) மட்டும் என்னால் உண்ண முடியாமல் வீணடித்து வருத்தப்பட்டதுண்டு..
// தனியொரு மனிதனிக்கு உணவில்லையெனில்... க்ஹும்... எத்தனை உலகத்தை அழித்து விட்டோம்...
தொடர்ந்து... தொடர்ந்து... சக மனிதனைத் தானே பசியில் அழித்துக் கொண்டேயிருக்கிறோம். //
சு(ட்)டும் வரிகள். அருமையான இடுகை. பகட்டு வாழ்க்கை வாழ்வோரில் மிகச் சிலரேனும் இப்பதிவின் மூலம் மாறியிருந்தால், அது உங்களுக்கு கிடைக்கும் உயரிய மரியாதை.
வாழ்த்துக்கள் கதிர். தரமான வலைப்பூவாக உங்கள் தளம் இருப்பதில் மகிழ்ச்சி. :-)
வாழ்த்துக்கள் கதிர்.நான் நாள்தோறுமே என் மக்களை நினைத்துக்கொள்வேன்.ஒரு பருக்கை உணவைக்கூட வீணாக்குவதில்லை.
//என் பணம் தானேயென்று அதை வீணடிப்பதில் ஒருபோதும் இருக்க முடியாது, //
அருமையான கட்டுரை. இன்னும் எனக்கு உணவுப்பொருட்களை வீணாக்குவது பிடிக்கவே பிடிக்காது. அப்படி கொட்டுபவர்களை நேரடியாகவே செய்யாதீர்கள் என்று சொல்லியிருக்கிறேன்.
எனது நண்பரிடமிருந்து சமுதாய நோக்கோடு இன்னுமொரு முத்து... உங்களின் சமுதாயப்பார்வை எல்லோருக்கும் இருந்தால்? ஏக்கமாயிருக்கிறது கதிர்.
விகடன் வாழ்த்துக்கள், அன்பு செந்திலுக்கும் அருமை சகோதரிக்கும் சேர்த்து....
பிரபாகர்.
நல்ல கருத்துக்கள் கதிர். அருமை. நன்றி.
எங்க ஊர் இட்லி கடைகளுக்குத் தண்ணி கழிவறைகள்லருந்து எடுத்து வரப்படுது பாஸ்..
விகடம் மின்னிதழில் வந்தமைக்கு நல்வாழ்த்துகள்
சிந்தனை அருமை - வீண்டிப்பது என்பது தவிர்க்க இயலாததாக இருப்பினும் - தவிர்க்க வேண்டும் என்ற சிந்தனை வளர வேண்டும் - அது தவிர்க்க உதவும் என்பது உண்மை
நல்ல தலைப்பு.தலைப்புக்கேற்ற நல்ல பதிவு,கதிர்.
கதிர்...இந்தப் பதிவை நேற்று காலை தான் யூத்ஃபுல் விகடனின் முதல் மின்னிதழில் படித்தேன். அருமை நண்பரே...
உணவை விட தண்ணீரை அதிகம் வீணாக்குகிறோம். மேலை நாடுகளில் ஒரு கிலோ நெல் விளைவிக்க இத்தனை லிட்டர் தண்ணீர் (விர்ச்ச்வல் வாட்டர்) என்று அதற்கும் காசு வாங்க முடிவு செய்துள்ளனர்.
நல்ல பதிவு
வாழ்த்துக்கள்
உண்மையில் உலக மக்கள் அனைவரும் சிந்தித்து செயல் படவேண்டிய விஷயம்.
அற்புதமான பதிவு. நன்றி கதிர் .
மிகவும் அவசியமான சிந்தனைகள். உணவு வீணாக்கப்படக் கூடாது என்பதில் மிகவும் கவனமாகவே இருக்கிறேன் எப்பவும்.
மீண்டும் வலியுறுத்தியதற்கு நன்றி.
கசப்பான உண்மை.....
என்னைக்குத்தான் இந்த உலகம் திருந்துமோ.........
தங்கள் கருத்துக்களையும், வாழ்த்துக்களையும், அன்பையும் பகிர்ந்த அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்...
உண்மை
தான் விசேஷ வீடுகளில் வீணாகும் உணவின் சதவீதம் இன்னும் அதிகம்...அதை வீணாக்காமல் ஆனதை இல்லங்களுக்கு உடனே எடுத்து சென்றால் அது பலரின் பசி போக்கும்...அருமையான நல்லா பதிவு நன்றி...அண்ணே... மீண்டும் ஒரு அருமையான பதிவு...
மீண்டும் ஒரு அருமையான பதிவு. மின்னிதழ் கட்டுரைக்கு என் வாழ்த்துக்கள்.
பெரும்பாலும் இல்லாது போனாலும் சில நேரங்களில் நானும் உணவை வீணடிப்பதுண்டு ஆனாலும் மனசு வருந்தும்..இப்ப மேலும் வருந்துகிறேன் இனி இத்தவறு நிகழாமல் பார்க்கிறேன் கதிர்..
//பணம் இருக்கிறது என்று வித விதமாய் சாப்பிடுவதில் இருக்கும் நியாயம்(!!!), என் பணம் தானேயென்று அதை வீணடிப்பதில் ஒருபோதும் இருக்க முடியாது, ஏனெனில் அது இன்னொருவனை பட்டினியில் படுக்க வைத்திருக்கிறது.//
உண்மைதான் கதிர். முடிந்த வரையில் மாறவும், மாற்றவும் முயன்றுகொண்டே இருப்போம்.
-ப்ரியமுடன்
சேரல்
மிகவும் பயனுள்ள சமுதாய நோக்கு கொண்ட பதிவு. வாழ்த்துக்கள்
Very nice article
very nice article
கண்டிப்பாக இன்றைய இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டிய செய்தி இது...நம்நாட்டில் குறைந்தபட்ச சம்பளம் 2000/- வாங்குபவர்களும் அதிகபட்ச சம்பளம் 2,00,000/- அதிகமாக வாங்குபவர்களும் இருக்கும் வரை பட்டினி இருந்து கொண்டே இருக்கும்...
Post a Comment