பகிர்தல்... (16.11.09)


கெமிஸ்ட்ரி:
அதென்ன எப்போ பார்த்தாலும் டிவியில ரெண்டு பேர் டேன்ஸ் ஆடினவுடனே பயங்கர கெமிஸ்ட்ரி, பக்கா கெமிஸ்ட்ரி இருக்குதுனு சொல்றாங்களே, நானும் +2 தேர்வில் கெமிஸ்டிரியிலதான் அதிக மார்க் வாங்கினேன்.




கெமிஸ்ட்ரினா ஃபார்முலா இருக்கும், அதை அடிப்படையா வச்சி இரண்டு வேதிப்பொருட்களை கலக்கும் போது புகை வரும், அப்புறம் பெரும்பாலும் ஒரு மோசமான வாசனை வரும். ஆமா... இவங்க ஆடுறதுல என்னங்க கெமிஸ்ட்ரி இருக்கு... இல்ல இவங்க ஏதாவது கெமிஸ்ட்ரியில டேன்ஸ் பத்தி முனைவர் பட்டம் வாங்கியிருப்பாங்களோ!!!??

@@@@

பரோட்டா:
எங்கள் நகரத்தில் கிட்டத்தட்ட எல்லாக் குடும்பமும் பரோட்டாவுக்கு அடிமையாகி விட்டது. நான்கு ரூபாயிலிருந்து பத்து ரூபாய் வரை எல்லாச் சாலையோர மெஸ்களிலும் கிடைக்கிறது. இந்தக் கடைகளில் தினமும் மாலை ஏழு முதல் பத்து மணி வரை பார்சல் வாங்கிச்செல்ல கூட்டம் அலைமோதுகிறது. பரோட்டா வாங்கும் எல்லோரிடமும் எல்லோருக்கும் தெரிந்த ஒரு ரகசியம், கொஞ்சமாக பரோட்டா வாங்கிக் கொண்டு, அதற்காக கொடுக்கும் சட்னி, குழம்பை வைத்து வீட்டில் இட்லியோ, தோசையோ சுட்டுக்கொண்டால் இரவு பெரிதாக மெனக்கெட்டு சட்னி, சாம்பார் என வைக்க வேண்டியதில்லை.

கடைகளின் முன் வாசலிலேயே பரோட்டாக் கல் போடப்பட்டிருக்கும், கொடுமை என்னவென்றால் எல்லா கடைகளும் சாலையோரத்தில் மட்டுமே இருக்கின்றன. அந்தச் சாலையில் செல்லும் வாகனங்களால் பறந்து வந்து படியும் புழுதிகளுக்கும், குப்பைகளுக்கும் பஞ்சமில்லை... சரி சரி ......... பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருப்பதாக சொல்லப்பட்ட குளிர்பானங்களை சொகுசுக்கா குடித்துக் கொண்டுதானே இருக்கிறோம். இந்தச் சாலையோரப் புழுதியால் என்ன வந்திடப்போகுது. அப்படி ஏதாவது கெடுதல் வந்திடுமா என்ன?

@@@@

வாரஇதழ்:
ரொம்ப செயற்கைத் தனமாக வந்த விளம்பரத்தின் காரணமாகவே புதிய தலைமுறை இதழை நான் வாங்காமலிருந்தேன். கல்லூரிப் பேராசிரியையாக இருக்கும் தோழி ஒருவரின் வற்புறுத்தலினால் இந்த வாரம் வாங்கிப் படித்தேன்.
எளிமையாக அதேசமயம் தரமாக இருக்கும் படைப்புகள், நேர்த்தியான வடிவமைப்பு, தரமான, காகிதம் மற்றும் அச்சு என உண்மையிலேயே அற்புதமான இதழாகவே தொன்றுகிறது. ஒரு டீயின் விலை நான்கு ரூபாய் ஆகிவிட்ட நேரத்தில், புதிய தலைமுறை வாரஇதழ் ஐந்து ரூபாய்க்கு கிடைப்பது மிகப் பெரிய ஆச்சரியம். ஆச்சரியம் தொடரட்டும்.

@@@@

திரைப்படம்:
தொலைக்காட்சியில் பாண்டவர் பூமி படம் ஓடிக்கொண்டிருந்தது. படம் வெளியாகி ஒன்பது வருடம் ஆகிவிட்டது. மறக்கவே மறக்க முடியாமல் மனதில் பதிந்தது ராஜ்கிரண் மற்றும் கதாநாயகி ஷமிதா நடிப்பு.


விஷம் கலந்த நீரை குடித்து மாடுகள் ஒவ்வொன்றாய் விழும் காட்சியில் ஒவ்வொரு மாட்டிடமும் பதறியடித்து ஓடும் காட்சியில் ராஜ்கிரணும், சிறையில் இருந்து திரும்பிய ரஞ்சித் தன்னை மணந்து கொள்ள காத்திருக்கும் அக்கா மகள் ஷமிதா முகத்தை கைகளில் ஏந்தி, அதில் தன் தங்கையை பார்ப்பதாக சொல்லும் விநாடிகளில்...... இறுகிப்போயிருந்த முகத்தில் மெதுவாக கண்கள் படபடக்க ஒரு குறும்புன்னகையும், வேகமாக மூச்சுவிடுவதையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கும் நடித்த ஷமிதாவும் மறக்க முடியாத பாத்திரங்கள்.

39 comments:

vasu balaji said...

ஆஹா. கலியாண விருந்து. தலைப்ப மாத்துங்க சாஆஆஆஆஆர்=)). எனக்கும் இந்த கெமிஸ்ட்ரி எரிச்சலா இருக்கும். எவன் கண்டு புடிச்சதோ?

அன்புடன் அருணா said...

நல்ல தொகுப்பு!

க.பாலாசி said...

//நானும் +2 தேர்வில் கெமிஸ்டிரியிலதான் அதிக மார்க் வாங்கினேன். //

நானும்தான். 70. (50 செய்முறைக்கு) நமக்குள்ள கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகலையோ?

//இட்லியோ, தோசையோ சுட்டுக்கொண்டால் இரவு பெரிதாக மெனக்கெட்டு சட்னி, சாம்பார் என வைக்க வேண்டியதில்லை.//

இது எங்க ஐடியா....யாரோ திருடிட்டாங்க....இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

//அப்படி ஏதாவது கெடுதல் வந்திடுமா என்ன?//

வேறொன்றும் பெரிசாக வரப்போவதில்லை. ஏதாவது வயிற்றுக்கோளாறு மட்டும வரும்.

//புதிய தலைமுறை வாரஇதழ் ஐந்து ரூபாய்க்கு கிடைப்பது மிகப் பெரிய ஆச்சரியம். //

ம்ம்ம்...முயற்சி செய்வோம்....(வாங்கத்தான்)

பாண்டவர் பூமியில எனக்கு பிடித்தது அந்த தோழா...பாடல்தான். நல்ல படம்.

கண்ணகி said...

படா மொககை இது.

இராகவன் நைஜிரியா said...

கெமிஸ்டிரி...

இத வேற எல்லாம் பார்த்துகிட்டு இருக்கீங்களா...

அவங்க செல்வதைக் கேட்டு நமக்கு புகையுது இல்ல அதனாலத்தான் அது கெமிஸ்ட்ரி...

கலகலப்ரியா said...

பகிர்ந்தமைக்கு நன்றி கதிர்... எல்லாம் நல்லா இருக்கு.. !

அது என்ன கடைசில @@@@ ஆன்லைன் கேம் ரூம்ஸ்ல... கெட்ட வார்த்தை யூஸ் பண்ணா... பில்ட்டர்ல வடிகட்டி இப்டித்தான் போடுவான்.. =)).. சாக்கிரத..

பிரபாகர் said...

நன்றாய் பகிந்திருக்கிறீர்கள் கதிர். புதிய தலைமுறையை பற்றிய தகவல் அருமை. உண்மை நிலையை அறிய உதவியாய்... ரோட்டோர சுகாதாரமற்ற பரோட்டாக்களை ஒடுக்குதல் உடல் நலத்துக்கு நன்று என எண்ணுகிறேன்.

கலக்கல், வாரம் ஒருமுறை தொடருங்கள்...

பிரபாகர்.

தேவன் said...

புதியகள் செய்தி நன்றி!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

super.:-)

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

அருமை அருமை

கெமிஸ்ட்ரின்னா எனக்கும் ரொம்ப நாளா அது என்னானு புரியாம இருந்திச்சி - வெளியே சொல்றதில்ல - இப்ப எனக்கு ஒரு கம்பெனி கிடைச்சிட்டுது

பரோட்டா உண்மையிலேயே ரோட்டோரம் சாப்பிட எனக்கும் பிடிக்கும் - தவறில்லை

வார இதழ் நன்றாய் இருக்குன்னு கேள்விப்பட்டேன் - வாங்கணும்

திரைப்படம் ஜோர் தான்

ஆமா பகிர்தல் நன்று - நல்வாழ்த்துகள்

ப்ரியமுடன் வசந்த் said...

தலைவா தாங்களும் ஆரம்பிச்சாச்சா?

பகிர்தல் தொடரட்டும்.

கெமிஸ்ட்ரின்னா விஜயும் சிம்ரனும் மட்டும்தான்.....

தமிழ் அமுதன் said...

பகிர்ந்தமைக்கு நன்றி...!

வால்பையன் said...

பரோட்டா கடைக்கு கூட்டிட்டு போங்க தல!

நிலாமதி said...

பகிர்தலை பதிந்தமைக்கு நன்றி .

அகல்விளக்கு said...

கெமிஸ்டிரி என்றால் ஆடுபவர்களுக்குள் இருக்கும் 'புரிதல்' என்பதுதான்.

புரிதல் என்றால் - understanding.

அதாவது ஆடும்போது அங்கன இங்கன கை கால் பட்டால் கண்டுக்கப்படாது.

நிச்சயமாக ஆடும்போது தவறுதலாகத்தான் பட்டது அப்படின்னு ஆடுற பொண்ணு (?) புரிஞ்சிக்கனும்.

அதிகபட்ச கெமிஸ்ட்டிரி என்னானு மாஸ்டர்ட கேட்டா மேடைலயே கட்டிப்புடிச்சி முத்தம் கொடுக்கணும்னு கூட சொன்னாலும் சொல்வாங்க.... அத நம்ம மச்சான் மச்சினிகளும் ஒத்துக்குவாங்க.

:-(

(மாஸ்டர்ன்றதா தப்பா புரிஞ்சிக்காதீங்க தோழர்களா !!!)

ஹேமா said...

கதிர் உடம்பு சுகம்தானே.நான் உண்மையில் நீங்கள் சுகமில்லையென்று சும்மாதான் சொல்கிறீர்கள் என்றே நினைத்துவிட்டேன்.மன்னிப்போடு.

இன்றைய தொகுப்பை ரசித்தேன்.என்ன கெமிஸ்ட்ரியோ !ஓ...ஒருவேளை இணையத்திலயும் கெமிஸ்ட்ரி சரிவராததாலதானோ சிலபேர் சிலபேரின் பதிவுகளுப் போறதுமில்ல.ஓட்டுப் போடுறதுமில்ல.நானும்தான்.

பாண்டவர் பூமி எனக்கும் பிடித்த படம்.

சீமான்கனி said...

இந்த கெமிஸ்ட்ரி மட்டும் இல்லனே...அவங்க சொல்லற பல வார்த்தைகளுக்கு எனக்கு அற்தமே புரியல....ஆசைக்கு எப்பாவது பொய் சாப்ட்டா ஒன்னும் இல்ல...அருமையான தகவல் அண்ணே...தொடருங்கள்...

தாராபுரத்தான் said...

மிக நேர்த்தியாக மிக நேர்த்தியாக

காமராஜ் said...

கெமிஸ்ட்ரி,
புரோட்டா,
ஷமிதா

மழைக்கால பதிவா இது.
என்ன நடக்கு கதிர்.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ வானம்பாடிகள்

நன்றி @@ அன்புடன் அருணா

நன்றி @@ க.பாலாசி

நன்றி @@ வாத்துக்கோழி

நன்றி @@ இராகவன் நைஜிரியா

நன்றி @@ கலகலப்ரியா

நன்றி @@ பிரபாகர்

நன்றி @@ கேசவன் .கு

நன்றி @@ ஸ்ரீ

நன்றி @@ cheena (சீனா)

நன்றி @@ பிரியமுடன்...வசந்த்

நன்றி @@ ஜீவன்

நன்றி @@ வால்பையன்

நன்றி @@ நிலாமதி

நன்றி @@ அகல் விளக்கு

நன்றி @@ ஹேமா
(இப்போது நலமாக இருக்கிறேன் ஹேமா)

நன்றி @@ seemangani

நன்றி @@ அப்பன்

நன்றி @@ காமராஜ்

V.N.Thangamani said...

மக்களுக்கே தெரியாமல், மக்கள் மனதில் வன்மத்தை கரைக்கும் தொலைக்கட்சிக்காரர்களின் அல்டாப் வார்த்தைகளுக்கெல்லாம் டிக்ஸனரியில்
அர்த்தம் தேடாதீர்கள் கதிர்.

புலவன் புலிகேசி said...

//ஒரு டீயின் விலை நான்கு ரூபாய் ஆகிவிட்ட நேரத்தில், புதிய தலைமுறை வாரஇதழ் ஐந்து ரூபாய்க்கு கிடைப்பது மிகப் பெரிய ஆச்சரியம். ஆச்சரியம் தொடரட்டும்.
//

இது தொடர வாய்ப்பே இல்லை. ஆரம்பம் இப்ப்டித்தான் இருக்கும். இதில் நாம் ஏமாறத் தொடங்கும் போது விலையேற்றமும் நடக்கும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

கெமிஸ்ட்ரி //

எனக்கு இந்த வார்த்தைய கேட்டாலே கலா மாஸ்டர் ஞாப்கம் வரும் கூடவே கடுப்பும் வரும் :)

ஊடகன் said...

நானும் மெய்மறந்து தான் பாண்டவர்பூமியை சென்ற வாரம் பார்த்தேன்.......... மிக அருமையான படம்.........

ஆரூரன் விசுவநாதன் said...

great kadir....

nice article

arur

நிஜாம் கான் said...

நல்லாயிருக்கு தலைவரே!

நர்சிம் said...

காதல் உணர்வின் போது வெளிப்படும் சுரப்பிகள் தங்கள் வேலையச் செய்வதால் காதல் உணர்வு அடுத்த கட்டம் போகும்

Dopamine சந்தோஷச் சுரப்பி எனக் கொள்க(pleasure chemical)
கூடவே estrogen,testosterone என இது போன்ற மேட்டர்களால்,முதன் முதலில் கெளதம் மேனன்,காக்க காக்க படம் வெளியானவுடன் ஆரம்பித்து வைத்த வார்த்தை ‘சூர்யா -ஜோ கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆச்சு’

சொன்னாலும் சொன்னார்,சுழட்டி சுழட்டி அடிக்கிறாங்க அந்த வார்த்தைய எல்லோரும்.

பகிர்வு..அருமை.

Thamira said...

கலகலப்பான பகுதிகள். ரசனை.!

//விஷம் கலந்த நீரை குடித்து மாடுகள் ஒவ்வொன்றாய் விழும் காட்சியில் ஒவ்வொரு மாட்டிடமும் பதறியடித்து ஓடும் காட்சியில் ராஜ்கிரணும்//
சிறப்பாக எடுக்கப்பட்ட காட்சி. மறக்கையலாத ஒன்று.

Thamira said...

அமிர்தவர்ஷினி அம்மா said...
கெமிஸ்ட்ரி //

எனக்கு இந்த வார்த்தைய கேட்டாலே கலா மாஸ்டர் ஞாபகம் வரும் கூடவே கடுப்பும் வரும் :)

//

எனக்கும்தான். கூடுதலாக ஆத்திரமாகவும் பக்கத்தில் எங்காவது சுவற்றில் முட்டிக்கொள்ளலாமா என்ற எண்ணமும் வரும்.!

அன்புடன் நான் said...

நல்ல பகிர்வுங்க கதிரண்ணா... இப்பதான் படிச்சேன். உங்கள போலவே எனக்கும் அந்த வேதியியல் புரியலிங்க... மற்றவையும்...சிறந்த பகிர்வே!

RAMYA said...

நிறைய விஷயங்களை ஒரே பதிவுலே போட்டு அசத்தி இருக்கீங்க!

பரோட்டா, கெமிஸ்ட்ரி, பாண்டவர்பூமி பட ரசனை எல்லாமே அற்புதம்!

நல்ல பகிர்வு கதிர்.

உடல் நலம் தேறிவிட்டதா ??

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வு நல்லாயிருக்கு தோழரே

வெண்ணிற இரவுகள்....! said...

சரி ......... பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருப்பதாக சொல்லப்பட்ட குளிர்பானங்களை சொகுசுக்கா குடித்துக் கொண்டுதானே இருக்கிறோம்//

ஆம் நாம் குடித்துக்கொண்டிருப்பது பூச்சி கொல்லி மருந்துகளையே ,,,,,,,,,,,,அதற்க்கு விஜய்,சூர்யா டோனி சச்சின் போன்ற விளம்பர விரும்பிகள் வேறு ........தோழா நான் உங்கள் கட்சி

வெண்ணிற இரவுகள்....! said...

பாண்டவர் பூமி .....அற்புதமாய் ஒரு படம் .........மண்ணின் இயக்குனர் சேரன் ஒரு உலக இயக்குனர்

வெண்ணிற இரவுகள்....! said...

இந்த வேதியல் ....எங்கு பொய் செல்லப் போகிகிறதோ தெரியவில்லை

CS. Mohan Kumar said...

அவரவர் வாழ்க்கையில் பாடல் அற்புதமான ஒன்று அனைவருக்கும் பொருந்தும் பாடல். படமும் நல்ல படம் தான்

மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com

உயிரோடை said...

ந‌ல்ல‌ ப‌கிர்வு. ஜோடி ந‌ட‌ன‌த்தில் பேச‌ப்ப‌டும் கெமிஸ்டிரி என்ப‌து ஆயுஃத‌ எழுத்தில் சுஜாதா எழுதி "காக்க‌ காக்க‌" கௌத‌ம் மேன‌னால் பிர‌பல‌ம்(ப்ராப‌ள‌ம்) ஆனா விச‌ய‌ம்... ம்ம் என்ன‌ செய்ய‌

பாண்ட‌வ‌ர் பூமி மிக‌ ந‌ல்ல‌ ப‌ட‌ம்

அவ‌ர‌வ‌ர் வாழ்க்கையில் ஆயிர‌ம் ஆயிர‌ம் மாற்ற‌ங்க‌ள் ம‌ற‌க்க‌ இய‌லாத‌ பாட‌ல்

பின்னோக்கி said...

என்னது. மானாட மயிலாட மாதிரி “A" நிகழ்ச்சியெல்லாம் கதிர் பார்க்குறார் அப்படிங்குறதே அதிர்ச்சியா இருக்கு. என்னது கெமிஸ்ட்ரியில அதிக மார்க்கா ? இன்னொரு அதிர்ச்சி இது. நான் +2 ல மூணு தடவை எழுதுன சப்ஜெக்ட் இது. கடைசிவரை 150 தாண்ட முடியலை. பொறாமையா இருக்கு.

---
புரோட்டாவுக்கு குடுக்குற சால்னா (அப்படித்தான் நாங்க சொல்லுவோம். உங்க ஊர்ல எப்படின்னு தெரியலை) டேஸ்ட்டே தனிதான்

---
பாண்டவர் பூமி - சில விஷயங்களை மாற்றி செஞ்சு இருந்தா அருமையா ஓடியிருக்க வேண்டிய படம் :(
---

ஈரோடு கதிர் said...

நன்றி @@ வி.என்.தங்கமணி

நன்றி @@ புலவன் புலிகேசி

நன்றி @@ அமிர்தவர்ஷினி அம்மா

நன்றி @@ ஊடகன்

நன்றி @@ ஆரூரன்

நன்றி @@ இப்படிக்கு நிஜாம்

நன்றி @@ நர்சிம்

நன்றி @@ ஆதிமூலகிருஷ்ணன்

நன்றி @@ சி. கருணாகரசு

நன்றி @@ RAMYA

நன்றி @@ ஆ.ஞானசேகரன்

நன்றி @@ வெண்ணிற இரவுகள்

நன்றி @@ Mohan Kumar

நன்றி @@ உயிரோடை

நன்றி @@ பின்னோக்கி