இதையும் தாண்டி


காந்தி படமிட்ட
காகிதக் கத்தையின்
கனத்திலே முடங்கிய
முரட்டு வாழ்க்கை...

பிள்ளைகள்
விளையாடாத
நாய்கள் உறங்கும்
மலட்டு வீதி...

திண்ணைகளின்
சமாதியில்
வேர்களை முடக்கிய
பூந்தொட்டிகள்...

அடிமைப்படுத்தி
கண்ணாடிச் சிறைக்குள்
அழகாய் நெளியும்
மீன் குஞ்சுகள்...

சிறுகச் சிறுக
சிறைப்படுத்திய
சின்னத்திரையின்
இடைவிடாக் கூச்சல்...

மாயவலைகளால்
விழிகளொடு விரல்களையும்
இழுத்துப் பிணைத்த
இணையம்...

இதையும் தாண்டி
எப்போதாவது வாழ்கிறோம்...

நள்ளிரவின் வெறிச்சோடிய
நகரத்து சாலைகளின் மௌனத்திலும்...

எங்கோ மெலிதாய் கசிந்துருகும்
நள்ளிரவு தேநீர்க் கடையின்
பண்பலை பழைய பாடல்களிலும்...



48 comments:

சூர்யா ௧ண்ணன் said...

//எங்கோ மெலிதாய் கசிந்துருகும்
நள்ளிரவு தேநீர்க் கடையின்
பண்பலை பழைய பாடல்களிலும்...//

அருமையான வரிகள்
நல்ல கவிதை...

vasu balaji said...

/இதையும் தாண்டி
எப்போதாவது வாழ்கிறோம்...

நள்ளிரவின் வெறிச்சோடிய
நகரத்து சாலைகளின் மௌனத்திலும்...

எங்கோ மெலிதாய் கசிந்துருகும்
நள்ளிரவு தேநீர்க் கடையின்
பண்பலை பழைய பாடல்களிலும்.../

அருமை.

நாடோடி இலக்கியன் said...

அருமை அருமை.

//பிள்ளைகள்
விளையாடாத
நாய்கள் உறங்கும்
மலட்டு வீதி...//

ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும்போது யோசிப்பேன்.எத்தனை அருமையா சொல்லிட்டீங்க.

//எங்கோ மெலிதாய் கசிந்துருகும்
நள்ளிரவு தேநீர்க் கடையின்
பண்பலை பழைய பாடல்களிலும்...//


சீக்கிரம் உங்களை நேரில் பார்க்க வேண்டும் கதிர்.

தமயந்தி said...

எங்கோ மெலிதாய் கசிந்துருகும்
நள்ளிரவு தேநீர்க் கடையின்
பண்பலை பழைய பாடல்களிலும்....

அட‌..ந‌ம்ம‌ க‌ட்சி...

அன்புடன் நான் said...

மிக செறிவா இருக்கு கவிதை... எனக்கு பிடித்திருந்தது.

சந்தனமுல்லை said...

/எங்கோ மெலிதாய் கசிந்துருகும்
நள்ளிரவு தேநீர்க் கடையின்
பண்பலை பழைய பாடல்களிலும்.../

அழகாக கவிதை..கடைசி வரிகள் - மிக ரசித்தேன்! :-)

நர்சிம் said...

//இதையும் தாண்டி
எப்போதாவது வாழ்கிறோம்...//

ம். இந்த ம் எங்கு வந்தால் நன்றாக இருக்கும்?

ஜெனோவா said...

முத்தான வரிகள் கதிர் !
கசிகிறது வாழ்க்கை உங்கள் வரிகளில் !

V.N.Thangamani said...

கதிர் அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள். நன்றி. உண்மையில் எப்போதாவதுதான் வாழ்கிறோம்.

அத்திரி said...

அருமை

Unknown said...

//நள்ளிரவின் வெறிச்சோடிய
நகரத்து சாலைகளின் மௌனத்திலும்...//

அனுபவித்தவர்களுக்கே இதன் அருமை தெரியும்....

பா.ராஜாராம் said...

சிலீரென உசுப்புகிறீர்கள் கதிர்...

பழமைபேசி said...

மனதைக் கொள்ளை கொண்டீர்கள்!

ரோஸ்விக் said...

மெளனம் ரொம்பவே கசிந்து விட்டது போலும் :-)

நண்பா! ஒவ்வொரு வரிக்கும் பின்னூட்டம் போட வேண்டும் போல் உள்ளது. அவ்வளவு அருமையான வரிகள். கருத்து செறிவுடன். வார்த்தை பயன்பாடுகளும் மிக அருமை. கலக்குங்க...நான் கலங்கிபோயிட்டேன்.

பிரபாகர் said...

மலட்டு வீதிகளும்
மலராத தொட்டிகளும்
அழகுக்கு சிறையில்
அவதியில் மீன்களும்

வாழ்வே பணமென
வீணே மனிதரும்
வாழ்வின் நேரம்
விழுங்கும் வலையும்....

அருமை நண்பா... வாழ்த்துக்கள். உங்களால் தான் முடியும்...

நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் நாம் இழந்து, இன்று அனுபவிக்கும் அவலங்கள் ஆயிரம். சிலவற்றை மிக அழகாய் கவிதையாக்கி கலக்கி, கசியும் மௌனத்தையும் கலந்து விட்டிருக்கிறீர்கள்.

கவிஞர் கதிரை நண்பராய் கிடைத்ததில் பேறு பெற்றேன்...

பிரபாகர்.

ஆரூரன் விசுவநாதன் said...

இதையும் தாண்டி
எப்போதாவது வாழ்கிறோம்//


சரிதான் கதிர்..........

என்ன செய்வதென்றுதான் தெரியவில்லை

நேசமித்ரன் said...

மிக நண்ட்ராக வந்திருக்கிறது கவிதை நர்சிம் சொன்னதை நானும் சொல்ல விருப்பம்

:)

புலவன் புலிகேசி said...

//எங்கோ மெலிதாய் கசிந்துருகும்
நள்ளிரவு தேநீர்க் கடையின்
பண்பலை பழைய பாடல்களிலும்...//


எனக்குப் பிடித்த இசை இதுதான். மாறி வரும் உலகம் என்று பொய் வாழ்க்கை வால்கிரோம என அழாகாக சொல்லியுள்ளீர்கள்.

ஜோதிஜி said...

அருமையான உண்மைகள்

Ashok D said...

வாழ்க்கையிலிருந்து கசியும்
வார்த்தைகள்

கேட்க ஆரம்பித்துவிட்டன
பண்பலை பாடல்கள்
அவ்வளவு நெருக்கத்தை
அண்டிவிட்டது ’’இதையும் தாண்டி”

ஹேமா said...

கதிர்,இன்றைய வாழ்வின் இயலையும் அதைத்தாங்கமுடியாமல் மனம் தளர்த்தும் இடங்களையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
உண்மை என்றே ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது.

Rekha raghavan said...

மனதில் நின்ற கவிதை.அருமை கதிர்.

ரேகா ராகவன்

Kumky said...

பதிவையும், பின்னூட்டங்களையும் ஒருசேர வாசித்த பின்பே ஏதேனும் எழுத்துக்களை வீசிவிட்டு செல்வதே எனது வழக்கமாகிவிட்டது கதிர்..

கப்”பென பற்றிக்கொண்டது உங்களின் கடைசி நான்கு வரிகள்தான்போல...

ஒவ்வொருவர் ரசனையும் அனுவைப்போல....பிளக்க பிளக்க தோன்றிக்கொண்டே போகும்போல....

எத்தனை போல...தப்பித்துக்கொள்ளும் மனப்பாங்குடன்தான்..


இருந்தாலுமே பொதுப்பார்வையில் கணிசமாக அள்ளிக்கொண்டு போகிறீர்கள் மனதை..

கிறுக்கல்கள்/Scribbles said...

Very nice. Touching and realistic. Keep it up.

க.பாலாசி said...

//காந்தி படமிட்ட
காகிதக் கத்தையின்
கனத்திலே முடங்கிய
முரட்டு வாழ்க்கை...//

//இதையும் தாண்டி
எப்போதாவது வாழ்கிறோம்...//

உண்மைதான். இடிபாடுகளில் சிக்கிய மனித உயிரின் மீந்திருக்கும் இதயதுடிப்புகள்போல் அவ்வப்போது மனிதமும் வாழ்கிறது.

நல்ல கவிதை ரசித்தேன்.

தேவன் மாயம் said...

அடிமைப்படுத்தி
கண்ணாடிச் சிறைக்குள்
அழகாய் நெளியும்
மீன் குஞ்சுகள்...//

ரசனைமிக்க வரிகள்!!!

பின்னோக்கி said...

ம்.ம்..வாழ்ந்துதானே ஆக வேண்டியிருக்கிறது எல்லாவற்றையும் தாண்டி.

வண்டிக்காரன் said...

//நாய்கள் உறங்கும்
மலட்டு வீதி..
கவிதைக்கெனவே கற்பம் தரித்தவர்களின் வார்த்தை பிரயோகம்.பலர் எழுதுகிற கருதான் என்றாலும் உங்கள் வரிகளில் ஒரு வீச்சு இருக்க்கிறது.

RAMYA said...

//
காந்தி படமிட்ட
காகிதக் கத்தையின்
கனத்திலே முடங்கிய
முரட்டு வாழ்க்கை...
//

ஆமாங்க அது இல்லேன்னா வாழ்க்கையே இல்லீங்க :(

//
பிள்ளைகள்
விளையாடாத
நாய்கள் உறங்கும்
மலட்டு வீதி...
//

நல்ல உவமானம்!

//
திண்ணைகளின்
சமாதியில்
வேர்களை முடக்கிய
பூந்தொட்டிகள்...
//

வேர்களை முடக்கிய பூந்தொட்டிகள், அதாவது அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்துவது இல்லையா?

//
அடிமைப்படுத்தி
கண்ணாடிச் சிறைக்குள்
அழகாய் நெளியும்
மீன் குஞ்சுகள்...
//

ஆமாம் அதை பார்க்கும் போது தொட்டியில் இருந் கிணற்றில் விட்டுவிடலாமான்னு தோணும் :(

//
சிறுகச் சிறுக
சிறைப்படுத்திய
சின்னத்திரையின்
இடைவிடாக் கூச்சல்...
//

அது முடியாதுங்க அப்புறம் எப்பூடி டைம் பாஸ் பண்றதுன்னு எல்லாரும் கேப்பாங்க!

//
மாயவலைகளால்
விழிகளொடு விரல்களையும்
இழுத்துப் பிணைத்த
இணையம்...
//

ஆமாம் அதனால்தான் வலையில் இன்று எல்லாரும் பிரபலம் :)

//
இதையும் தாண்டி
எப்போதாவது வாழ்கிறோம்...
//

ஆமாம் உணமைதான்..........

//
நள்ளிரவின் வெறிச்சோடிய
நகரத்து சாலைகளின் மௌனத்திலும்...
எங்கோ மெலிதாய் கசிந்துருகும்
நள்ளிரவு தேநீர்க் கடையின்
பண்பலை பழைய பாடல்களிலும்...
//

மனதை பறிக்கும் சூழ்நிலைகள் இல்லையா ??

மொத்தத்தில் உங்கள் கவிதை வரிகள் அனைத்தும் அற்புதமான உணர்வுகள்...

மாதவராஜ் said...

இறுதி வரிகளில், தொலைந்த கணங்களை ஒலிக்கச் செய்கின்றன. ரசித்தேன்.

ஷண்முகப்ரியன் said...

இந்தக் கவிதையைப் படித்ததினாலேயே நான் பெருமை அடைந்தேன்,கதிர்.
மனதை மனம் புரிந்து கொள்ளும் சுகம்.

ஆ.ஞானசேகரன் said...

//எங்கோ மெலிதாய் கசிந்துருகும்
நள்ளிரவு தேநீர்க் கடையின்
பண்பலை பழைய பாடல்களிலும்...//

ரசித்தேன் மகிழ்ச்சி ...நன்றிங்க கதிர்

சீமான்கனி said...

ஒவ்வொரு வரிஉம் அவ்வளவு அருமை அண்ணே...

மணிஜி said...

கதிரோவியம்

வெண்ணிற இரவுகள்....! said...

நாம் வாழவில்லை ................வசித்து கொண்டிருக்கிறோம் .............................................
மனிதன் ஒரு எந்திரன் போல ஆகி கொண்டிருக்கிறான் நண்பா

ராகவன் said...

அன்பு கதிர்,

கடைசி பத்தி, வரிகள் அழகு!

எல்லோரையும் மீண்டு வரச் சொல்லும் அழைப்புகள் அவை!

நம்ம பக்கமே ஆளக்கானோம்!

அன்புடன்
ராகவன்

Rajasurian said...

எத்தனை முறை படித்தாலும் மீண்டும் மீண்டும் படிக்க வைக்கும் அற்புத வரிகள்

இதையும் தாண்டி
எப்போதாவது வாழ்கிறோம்...

நள்ளிரவின் வெறிச்சோடிய
நகரத்து சாலைகளின் மௌனத்திலும்...

எங்கோ மெலிதாய் கசிந்துருகும்
நள்ளிரவு தேநீர்க் கடையின்
பண்பலை பழைய பாடல்களிலும்...

இது போன்ற எழுக்களை வாசிக்கும்போதும்...

கலகலப்ரியா said...

அசத்தல்...!

ஈரோடு கதிர் said...

@@ சூர்யா க௧ண்ணன்

@@ வானம்பாடிகள்

@@ நாடோடி இலக்கியன்

@@ தமயந்தி

@@ சி. கருணாகரசு

@@ சந்தனமுல்லை

@@ நர்சிம்

@@ ஜெனோவா

@@ வி.என்.தங்கமணி

@@ அத்திரி

@@ பேநா மூடி

@@ பா.ராஜாராம்

@@ பழமைபேசி

@@ ரோஸ்விக்

@@ பிரபாகர்

@@ ஆரூரன் விசுவநாதன்

@@ நேசமித்ரன்

@@ புலவன் புலிகேசி

@@ ஜோதிஜி. தேவியர் இல்லம்

@@ D.R.Ashok

@@ ஹேமா

@@ KALYANARAMAN RAGHAVAN

@@ கும்க்கி

@@ கிறுக்கல்கள்

@@ க.பாலாசி

@@ தேவன் மாயம்

@@ பின்னோக்கி

@@ வண்டிக்காரன்

@@ RAMYA

@@ மாதவராஜ்

@@ ஷண்முகப்ரியன்

@@ ஆ.ஞானசேகரன்

@@ seemangani

@@ தண்டோரா

@@ வெண்ணிற இரவுகள்

@@ ராகவன்

@@ Rajasurian

@@ கலகலப்ரியா

வாசித்து, ரசித்த இதயங்களுக்கு நன்றிகள்...

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அருமை.கலக்கிட்டீங்க.

thiyaa said...

//
காந்தி படமிட்ட
காகிதக் கத்தையின்
கனத்திலே முடங்கிய
முரட்டு வாழ்க்கை..
//

ஆரம்பமே அசத்தலா இருக்கு

நல்ல கவிதை வரிகள்

நிலாமதி said...

எல்லோரும் அழகாக சொல்லி விடார்கள். நான் சொல்ல என்ன இருக்கிறது." கவிதைக்கதிருக்கு " பாராடுக்கள். உண்மையில் வாழ்க்கை இப்படி தான் போகிறது.

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமை..:-)))

Thamira said...

ரசனையான கவிதை.

உயிரோடை said...

அருமையான‌ க‌விதை

பின்னோக்கி said...

கலக்குறீங்க கதிர். 5 மைனஸ் ஓட்டு வாங்குற அளவுக்கு மிகப்பெரிய பதிவாளர் ஆகியதற்கு என் வாழ்த்துக்கள். மேலும்..மேலும்..மைனஸ் ஓட்டுக்கள் பெற்று முன்னேற என் வாழ்த்துக்கள்

ஊடகன் said...

//எங்கோ மெலிதாய் கசிந்துருகும்
நள்ளிரவு தேநீர்க் கடையின்
பண்பலை பழைய பாடல்களிலும்...//

என்னை பாதித்த வரிகள்...........

காமராஜ் said...

இரண்டு நாள் சங்கவேலை இந்த அற்புதமான கவிதையைத் தொலைக்க இருந்தது. மீட்டுவிட்டேன்.
தோழா கொடுங்கள் கையை. கவிதை உங்களை உயரத்தூக்குகிறது.