மீட்டெடுக்கும் வார்த்தைகள்

வியாழக்கிழமை காலை படுக்கையிலிருந்து எழுந்த போது வலது கை கட்டை விரல் இணையும் இடத்தில் வித்தியாசமான வழியை உணர்ந்தேன், நடக்கும் போது இடது கால் முட்டியில் ஒரு இனம் புரியா இறுக்கம் தோன்றியது. காலை பதினொரு மணிக்கு உடலில் சூடு அதிகரிக்கத் துவங்கியது. மதியம் ஒரு மணிக்கு மருத்துவரைச் சந்தித்தேன். அவர் என்னுடைய உறவினர்.

சோதிக்கும் போதே சிரித்தார், “என்னப்பா நீயும் மாட்டிக்கிட்டியா? என்றார்.

“ஏங்க என்ன காய்ச்சல்ங்க ” என்றேன்

“சிக்கன்குன்யா மாதிரிதான் தெரியுது, நம்ம வீட்டு பக்கத்தில எல்லோரையும் இது பாடாப் படுத்திடுச்சு. எதுவும் பயப்படாதே, உடம்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து வலி குணமாவதும், நீடிப்பதும். மூனு நாளைக்கு மாத்திரை எடுத்துக்கோ. ரொம்ப களைப்பாக இருந்தால் மட்டுமே ஓய்வெடு, மத்தபடி சின்னச் சின்ன வேலையை செஞ்சுகிட்டே இரு, அப்போதான் மூட்டுகளில் இருக்கும் வலி கொஞ்சம் குறையும்” என்றார்

மருத்துவமனையை விட்டு வெளியில் வரும்போதே இரண்டு தோள்ப் பட்டை மற்றும் இடது கை முழுதும் வலி பரவியிருந்தது, சரி இனி எப்படி வலித்தாலும் சமாளித்துத்தான் ஆகவேண்டும் எனத் தோன்றியது. அடுத்த நாள் காலை எழும் போது கிட்டத்தட்ட உடம்பில் உள்ள அனைத்து மூட்டுகளிலும் வலி வஞ்சனையில்லாமல் நிரம்பி வழிந்தது.

“அடப்பாவமே சிக்கன்குன்யா-வா கொடுமையா வலிக்குமே, ஆறு மாசமானாலும் வலி போகதே” என சொல்றவங்களை சாமாளிப்பது தான் வலியைத் தாங்குவதைவிட மிகக் கடுமையாக இருந்தது. ஒரு வேளை அவர்களின் கூற்று சரியாகக் கூட இருக்கலாம், அதே நேரம் அவர்கள் சொல்வதைக்கேட்டு வலிக்கிறது என முடங்கிக் கிடப்பதும், வலியைத் தாங்கி, சற்றே அதோடு போராடி வலியிலிருந்து வெளி வர முயற்சி செய்வதும் முழுக்க முழுக்க என் கையில் மட்டுமே.

நட்போடு “எப்படியிருக்கிறது” என்று கேட்ட நண்பர்களிடம் தெளிவாகச் சொன்னேன் “காய்ச்சல் குறைந்து விட்டது, வலி தாங்க முடிகிறது, அதிக பட்சம் இரண்டே நாட்களில் மிக எளிதாக மீண்டு வருவேன்” என்று சொன்னேன்.

இப்படிச் சொல்ல முக்கியக் காரணம் “எனக்கு வலிக்கிறது, சமாளிக்க முடியவில்லை” என்று யாரிடம் சொன்னாலும் அதை முதலில் கேட்பது நானே. நான் சொல்வது எனக்கு எதிரே அமர்ந்து கேட்பவரின் காதுகளில் விழுமுன், வெறும் நாலு அங்குலத் தொலைவில் இருக்கும் என் காதுகளில்தானே முதலில் விழுகிறது. என் காதில் திரும்ப திரும்ப விழும் வார்த்தைகள் தானே என் எண்ணத்தை வழிநடத்தும்,

அப்படி நம் காதில் விழும் வார்த்தைகளுக்கு ஒரு சக்தியிருக்கிறது, அதைத்தான் Power of spoken word என்று அழைக்கிறோம். எப்படிப் பட்ட வார்த்தைகளை நாம் பயன் படுத்துகிறோமோ, அதுவாகவே நம் எண்ணம் செயல் பட முயற்சி செய்யும்.

இப்போது, மீண்டும் பழைய உற்சாகத்துடன் இருப்பது போல் உணர்கிறேன்.


_____________________________________________________
பொறுப்பி: இரண்டு நாட்களாய் உடலோடு மனமும் களைத்துக் கிடந்ததாலே யாருடைய இடுகைகளையும் படிக்கவியலாமல் போனது. வரும் நாட்களில் இடுகைகளை தொடர்ந்து வாசிப்பேன்

54 comments:

நாகா said...

//பொறுப்பி: இரண்டு நாட்களாய் உடலோடு மனமும் களைத்துக் கிடந்ததாலே யாருடைய இடுகைகளையும் படிக்கவியலாமல் போனது. வரும் நாட்களில் இடுகைகளை தொடர்ந்து வாசிப்பேன்//

ஆனாலும் உங்க கடமை உணர்ச்சி மெய்சிலிர்க்குதுங்கண்ணா. போயி ஒடம்ப சரி பண்ணற வழியப் பாருங்க, பதிவர்களும் இடுகைகள் எங்கயும் ஓடிப் போயிர மாட்டாங்க. இதுமாதிரி சமயத்துல கம்ப்யூட்டருலயே கண்ண வச்சுட்டிருக்காதீங்க. உண்மையான அக்கறை இருக்கற எல்லோரும் புரிஞ்சுக்குவாங்க, நீங்க விளக்கம் சொல்லணும்னு அவசியமே இல்லை. விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.

vasu balaji said...

ம்கும். ராத்ரி 2 மணிக்கு டைட்டில் மாத்தி போட்டு இடுகை போடுறப்பவே தெரியுது. =))

கலகலப்ரியா said...

wish you a speedy recovery kathir..! =)) ithukkullayum idugaiyaa.. hmm.. ya rt.. positive words.. which will keep you harmonious & healthy..!

ஈரோடு கதிர் said...

நன்றி @@ நாகா

நன்றி @@ பிரியா

நன்றி @@ வானம்பாடிகள்
(அதுதான் மதியம் நீங்க போன் பண்ணினப்போ அசந்து தூங்கினேனே அப்புறம் எங்க போய் தூக்கம் வரும், என்னமோ திரட்டியில தப்புப் பண்ணிப்புட்டேன் அதுதான் திரும்பவும் தலைப்ப மாத்தி, போராடி ஒருவழியாச் சேர்த்துட்டேன்)

பா.ராஜாராம் said...

நம்பிக்கை தெறிக்கும் பதிவு கதிர்.இதை பாதிப்பில் இருக்கும் போது எழுதுவது மிக உன்னதம்.உங்களை எதுவும் ஒன்னும் பண்ணாது.குட்!சியரப்!!

சீமான்கனி said...

உங்கள் தன்னம்பிக்கைக்கு தலை வணகுகிறேன் அண்ணே...
சிக்கிரம் முழுமையாய் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்....

பழமைபேசி said...

வாங்க மாப்பு, வாங்க!

கலகலப்ரியா said...

http://www.youtube.com/watch?v=L_0f1gvqGUE

=)).. ethukkum unga comment ku bathil paarthukkidunga namma idugaila... thappaa ethuvum sollala saami..! yabbe..!

பிரபாகர் said...

கதிர்,

உங்களிடமிருந்து மன தைரியத்தையும் கற்றுக்கொண்டிருக்கிறேன். உங்கள் பேச்சு எழுத்து இரண்டுமே நம்பிக்கை ஊட்டுவதாய் இருக்கிறது. கஷ்டங்கள் வருவது நம்மை செம்மைப் படுத்திக்கொள்ள, மற்றோரை புரிந்துகொள்ள...

விரைவில் இன்னும் வேகமாய் வாருங்கள்...

பிரபாகர்.

நிலாமதி said...

மீண்டு வருவேன்.".......உங்கள் நம்பிக்கை உங்களை நலம் பெறவைக்கும். .நலம் பெற என் பிரார்த்தனைகள்.

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

விரைவினில் குணமடைய
பிரார்த்தனைகளுடன் கூடைய நல்வாழ்த்துகள்

எதையும் தாங்கும் மனம் வேண்டும் - நல்ல சிந்தனை

Rajasurian said...

விரைவில் முழு உடல் நலம் திரும்ப என் பிரார்த்தனைகள்

ப்ரியமுடன் வசந்த் said...

சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன்...

உங்க தன்னம்பிக்கை வாழ்க வளர்க...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இப்போது, மீண்டும் பழைய உற்சாகத்துடன் இருப்பது போல் உணர்கிறேன்//

விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.

நிகழ்காலத்தில்... said...

உணவு முறைகளில் மாற்றம் கொண்டு வாருங்கள்,

என் மனைவிக்கு சிக்கன் குனியா., ஆனால் எடுத்துக்கொண்டது ஹோமியோபதி மருந்துகள் மட்டுமே.,

படுப்பது,அல்லது ஓய்வு என்பதே இல்லை

வலி இருந்தது நிசம்,

மனதிடம் சொல்லிவிடச் சொன்னேன்.

’இதெல்லாம் இங்கே வேலைக்குஆகாது’ என

அவள் என்னைவிட மனஉறுதியானவள்,

இப்போது சிலநாட்களில் முழுமையாக நலம்.

பலரையும் முன்னேற்றும் பயிற்சியாளரால் முடியக்கூடிய சாதாரண விசயம்தான்.

வாழ்த்துக்கள் கதிர்

ஈரோடு கதிர் said...

நன்றி @@ பா.ராஜாராம்

நன்றி @@ seemangani

நன்றி @@ பழமைபேசி

நன்றி @@ பிரபாகர்

நன்றி @@ நிலாமதி

நன்றி @@ cheena (சீனா)

நன்றி @@ Rajasurian

நன்றி @@ பிரியமுடன்...வசந்த்

நன்றி @@ T.V.Radhakrishnan

நன்றி @@ நிகழ்காலத்தில்
(இதெல்லாம் இங்கே வேலைக்கு ஆகாது’ - கிட்டத்தட்ட நானும் இதற்கு நிகரான எண்ணத்தைத்தான் மனதில் கொண்டிருந்தேன், தங்கள் பகிர்தல் அருமையான பாடமும் கூட)

அனைவரின் அன்பிற்கும், பிராத்தனைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் தோழர்களே..

இன்று காலை எழுந்தபோது மிகவும் நலமாக உணர்கிறேன்... நன்றி

மாதேவி said...

உங்கள் தன்னம்பிக்கைக்குப் பாராட்டுக்கள்.

விரைவில் நலமடைய வேண்டுகிறோம்.

கிறுக்கல்கள்/Scribbles said...

உடலினை உறுதி செய்து விரைந்து வருக! நல் இடுகைகள் தருக!!

உயிரோடை said...

விரைவில் குணமடைய வாழ்த்துகள்.

நல்லதொரு பதிவு.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//ஆனாலும் உங்க கடமை உணர்ச்சி மெய்சிலிர்க்குதுங்கண்ணா. போயி ஒடம்ப சரி பண்ணற வழியப் பாருங்க, பதிவர்களும் இடுகைகள் எங்கயும் ஓடிப் போயிர மாட்டாங்க. இதுமாதிரி சமயத்துல கம்ப்யூட்டருலயே கண்ண வச்சுட்டிருக்காதீங்க. உண்மையான அக்கறை இருக்கற எல்லோரும் புரிஞ்சுக்குவாங்க, நீங்க விளக்கம் சொல்லணும்னு அவசியமே இல்லை. விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்//

கதிர்.. நாகாவின் வார்த்தைகளை அப்படியே வழிமொழிகிறேன். உடல்நலம் தான் முக்கியம்!!

Anonymous said...

நாகா said...
//பொறுப்பி: இரண்டு நாட்களாய் உடலோடு மனமும் களைத்துக் கிடந்ததாலே யாருடைய இடுகைகளையும் படிக்கவியலாமல் போனது. வரும் நாட்களில் இடுகைகளை தொடர்ந்து வாசிப்பேன்//

ஆனாலும் உங்க கடமை உணர்ச்சி மெய்சிலிர்க்குதுங்கண்ணா. போயி ஒடம்ப சரி பண்ணற வழியப் பாருங்க, பதிவர்களும் இடுகைகள் எங்கயும் ஓடிப் போயிர மாட்டாங்க. இதுமாதிரி சமயத்துல கம்ப்யூட்டருலயே கண்ண வச்சுட்டிருக்காதீங்க. உண்மையான அக்கறை இருக்கற எல்லோரும் புரிஞ்சுக்குவாங்க, நீங்க விளக்கம் சொல்லணும்னு அவசியமே இல்லை. விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.

நானும் இதை வழிமொழியறேன் உங்க உடல் நிலையை கவனிச்சிக்கோங்கப்பா... நல்லா ஓய்வு எடுங்க...

பின்னோக்கி said...

உடல் நலனை கவனித்துக்கொள்ளுங்கள் கதிர். தேவையான ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். கம்ப்யூட்டருக்கு பதிலாக புத்தகம் வாசியுங்கள்.

சந்தனமுல்லை said...

மீண்டு வந்ததுக்கு வாழ்த்துகள்!!

/நாகா said...

//பொறுப்பி: இரண்டு நாட்களாய் உடலோடு மனமும் களைத்துக் கிடந்ததாலே யாருடைய இடுகைகளையும் படிக்கவியலாமல் போனது. வரும் நாட்களில் இடுகைகளை தொடர்ந்து வாசிப்பேன்//

ஆனாலும் உங்க கடமை உணர்ச்சி மெய்சிலிர்க்குதுங்கண்ணா. போயி ஒடம்ப சரி பண்ணற வழியப் பாருங்க, பதிவர்களும் இடுகைகள் எங்கயும் ஓடிப் போயிர மாட்டாங்க. இதுமாதிரி சமயத்துல கம்ப்யூட்டருலயே கண்ண வச்சுட்டிருக்காதீங்க. உண்மையான அக்கறை இருக்கற எல்லோரும் புரிஞ்சுக்குவாங்க, நீங்க விளக்கம் சொல்லணும்னு அவசியமே இல்லை. விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.
/

நாகாவை வழிமொழிகிறேன்...

ஈரோடு கதிர் said...

அனைவரின் அன்பிற்கும், வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் நட்புள்ளங்களே..

நன்றி @@ மாதேவி

நன்றி @@ கிறுக்கல்கள்

நன்றி @@ உயிரோடை

நன்றி @@ ச.செந்தில்வேலன்

நன்றி @@ தமிழரசி

நன்றி @@ பின்னோக்கி

நன்றி @@ சந்தனமுல்லை

ஜெனோவா said...

விரைவில் குணமடைய பிராத்தனைகள் .
நல்ல நேர்மறையான இடுகை !.

Deepa said...

//அப்படி நம் காதில் விழும் வார்த்தைகளுக்கு ஒரு சக்தியிருக்கிறது, அதைத்தான் Power of spoken word என்று அழைக்கிறோம். எப்படிப் பட்ட வார்த்தைகளை நாம் பயன் படுத்துகிறோமோ, அதுவாகவே நம் எண்ணம் செயல் பட முயற்சி செய்யும்.//

அவசியமான வார்த்தை. நன்றி!

சீக்கிரம் பரிபூரண குணமடைய வாழ்த்துக்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

positive attitude.. good.. wish u a speedy recovery nanbaa..:-)))

tamiluthayam said...

எத்தனை கடுமையான வியாதி வந்தாலும் இல்லாதவன் வேலைக்கு போய் தான் ஆக வேண்டும். ஆஸ்பத்திரிக்கு போக முடியாது. மெடிக்கல் ஷாப்பில் ரெண்டு மாத்திரைகளை வாங்கி போட்டு கொண்டு, வேலைக்கு ஒட வேண்டும். வசதி படைத்தவனுக்கும் அதே வியாதி வருகிறது. பகட்டான அந்த ஆஸ்பத்திரிக்குள் நுழைகிறார். ஸ்டார் ஹோட்டலா அல்லது ஆஸ்பத்திரியா என்கிற சந்தேகம் வரும். கண் கவர் நர்சுகள் மூன்று பரிசோதனை செய்வார்கள். யூரின். ப்ளட் மற்றும் மோஷன் என்று. எல்லாம் முடித்து வர அறை நாள் ஆகும். டாக்டர் "பெட் ரெஸ்ட்ல" இருக்கச் சொன்னார் என்பதால் வேலை வெட்டிக்கு போகாமல் புரண்டு புரண்டு படுக்க வேண்டியது தான். இருப்பவருக்கும், இல்லாதவருக்கும் இரண்டு நாளில் குணமானது. எப்படி. இல்லாதவர் படுத்தே கிடந்தால் அவருக்கு வியாதி குணமாகாது. இருப்பவர் வேலை பார்த்தால் அவரின் வியாதி குணமாகாது. ஏன். மருந்து பாட்டிலிலா உள்ளது. அல்ல. மனசில் உள்ளது.

ஆ.ஞானசேகரன் said...

//“சிக்கன்குன்யா மாதிரிதான் தெரியுது, நம்ம வீட்டு பக்கத்தில எல்லோரையும் இது பாடாப் படுத்திடுச்சு. எதுவும் பயப்படாதே, உடம்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து வலி குணமாவதும், நீடிப்பதும். மூனு நாளைக்கு மாத்திரை எடுத்துக்கோ. ரொம்ப களைப்பாக இருந்தால் மட்டுமே ஓய்வெடு, மத்தபடி சின்னச் சின்ன வேலைய், அப்போதான் மூட்டுகளில் இருக்கும் வலி கொஞ்சம் குறையும்” என்றார்//

உடம்பை நல்லபடியாக பாருங்க நண்பா.... பதிவுவை பின்னர் பார்க்கலாம்.... உங்களுக்காக என்றும் காத்திருப்போம்ம்ம்...

இராகவன் நைஜிரியா said...

இன்று ஒரு நல்ல விடயம் உங்களிடம் இருந்து கற்றுக் கொண்டேன். நன்றி.

விரைவில் உடல் நலம் தேற வாழ்த்துகள்.

ஈரோடு கதிர் said...

அனைவரின் அன்பிற்கும், வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்

கடந்த இரண்டு நாட்களும் ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே ஓய்வெடுத்தேன். ஓய்வாக படுத்திருப்பது எனக்கு மூட்டுகளில் வலியை மிகக் கொடியதாக மாற்றியது. ஒரு மாதிரி கஷ்டப்பட்டு எழுந்து அலுவலகம் (2 கி.மீ தான்) சென்றடைந்து கணினியில் அமர்ந்து விட்டால் கொஞ்சம் கொஞ்சமாக வலியிலிருந்து விடுபட ஆரம்பித்தேன்.(பதிவுக்காக அல்ல என் வேலையும் முழுக்க முழுக்க கணினியில்தான்)

நேற்று ஒரு M.D மருத்துவரிடம் கலந்தாலோசிக்கும் போது கூறினேன் ஓய்வாக இருந்தால் வலிக்கிறது, அதனால் அலுவலகம் செல்கிறேன் என்று, அவரும் சொன்னார் அலைச்சல் மட்டும் அதிகம் வேண்டாம், அதே சமயம் உங்களால் எவ்வளவு முடியுமோ அது வரை வேலை செய்து கொள்ளுங்கள்... இன்று காலை முதல் பழைய நிலைமைக்கு கிட்டத்தட்ட திரும்பியிருக்கிறேன்.

நிகழ்காலத்தில்... சிவா சொன்ன ’இதெல்லாம் இங்கே வேலைக்கு ஆகாது’ என்ற வரி எனக்கும் பிடித்திருக்கிறது... இப்படிச்சொல்வதால் மீண்டு வரலாம், ஒருவேளை அப்படியில்லாமல் இருக்கலாம், ஆனால் தன்னம்பிக்கையோடு உரத்த குரல் கொடுப்பதில் எந்த நஷ்டமும் இல்லையே...

இந்த இடுகை எழுதியதின் அடிப்படைக் காரணம் கூட வலுக்கட்டாயமாக, பரீட்சாத்தமாக நோயிலிருந்து நானே விடுபட முயன்றதை பகிர்ந்து கொள்ளவே...

பொறுப்பி போட்ட காரணம் எல்லோரின் இடுகைகளையும் திறந்து பார்த்தேன், மிகச் சிலவற்றைப் படிக்க முயன்றேன்.... ஆனால் மனதில் இருந்த களைப்பால் வாசிக்க மனமில்லை என்பதற்காக மட்டுமே...
வாழ்க நம் நட்பு

நன்றி @@ ஜெனோவா

நன்றி @@ Deepa

நன்றி @@ கார்த்திகைப் பாண்டியன்

நன்றி @@ tamiluthayam

நன்றி @@ ஆ.ஞானசேகரன்

நன்றி @@ இராகவன் நைஜிரியா

ஹேமா said...

உடம்பு சுகமடைய வாழ்த்துக்கள் கதிர் !(உண்மையா சுகமில்லையா?)

நல்லதோ கெட்டதோ நானும் முதல்ல என்கிட்டதான் சொல்லிக்குவேன் !

விஜய் said...

நானும் ஒருவார வைரல் காய்ச்சலில் மாட்டிக்கொண்டேன். ஆனால் எந்த வேலையையும் குறைக்கவில்லை. அதுவே நமது தன்னம்பிக்கை. நீங்கள் வெகுசீக்கிரம் நலமடைந்து விடுவீர்கள்

விஜய்

தேவன் மாயம்! said...

இப்போது, மீண்டும் பழைய உற்சாகத்துடன் இருப்பது போல் உணர்கிறேன்.///

உடல் நலம்பெற வேண்டுகிறேன்!!

தேவன் மாயம்!!

நசரேயன் said...

மீண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள்

கண்ணகி said...

ithellam oru valiyaa kathirukku. onRum seiyaathu. ellam viraivil sarikaakividum . varuththappadatheerkaL.nalam pera vaazththum..

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

வெகு விரைவில் நல்ல உடல்நலம் வாழ்த்துக்கள்..!!

RAMYA said...

சீக்கிரம் குணமடைய எனது பிரார்த்தனைகள்!


தன்னம்பிக்கையோடு எழுதிய இடுகை!

Ashok D said...

ஏற்கனவே இரு நாள் ஓடியிருந்தால் என் கணிப்பு அடுத்த 5 நாட்களில் பூரண குனமடைவீர்.

கவிஞன் வாக்கு பொய்க்காது :)

கணேஷ் said...

Get Well Soon!

Please Take Care!

பாரதி said...

விரைவில் உடல் நலம் தேற வாழ்த்துகள்.

velji said...

get well soon,kathir!

ரோஸ்விக் said...

இன்னா தல இது....எல்லா விலங்குகள் பேருலயும்(பன்றி காய்ச்சல், சிக்கன் குனியா) நமக்கு வியாதி வருது...அநேகமா அட்ரஸ் மாறி வந்துருதுனு நினைக்கிறேன்.

மன வலிமையோடு எதிர் கொள்ளுங்கள்...(கொள்கிறீர்கள்). விரைவில் குணமடைவீர்கள். வாழ்த்துக்கள்.

ஈரோடு கதிர் said...

அனைவரின் அன்பிற்கும், வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்

நன்றி @@ ஹேமா

நன்றி @@ கவிதை(கள்) விஜய்

நன்றி @@ தேவன் மாயம்

நன்றி @@ நசரேயன்

நன்றி @@ வாத்துக்கோழி

நன்றி @@ முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்

நன்றி @@ RAMYA

நன்றி @@ D.R.Ashok

நன்றி @@ கணேஷ்

நன்றி @@ பாரதி

நன்றி @@ velji

நன்றி @@ ரோஸ்விக்

க.பாலாசி said...

//இப்படிச் சொல்ல முக்கியக் காரணம் “எனக்கு வலிக்கிறது, சமாளிக்க முடியவில்லை” என்று யாரிடம் சொன்னாலும் அதை முதலில் கேட்பது நானே//

உண்மைதான் தன்னம்பிக்கையும், அதன்மூலம் நாம் வெளிக்கொணரும் வார்த்தைகளுமே வியாதிகளை விரட்டி மருந்துகளின் முழுபலனையும் நம் உடலுக்கு கொடுக்கிறது. நம்மிடையே இந்நம்பிக்கையில்லையெனில் எவ்வளவு மருந்துகள் எடுத்துக்கொண்டாலும் வீணாய்த்தான் போகும்.....

கருத்துக்களுடன் கூட நல்ல இடுகை...நலம் பெற்றமைக்கும் வாழ்த்துக்கள்.

வெண்ணிற இரவுகள்....! said...

வார்த்தைகளே செயல்களை உருவாக்கும்

கண்ணகி said...

ஆண்ட்டீ.... எங்கப்பாவுக்கு லேசாத்தான் காய்ச்சல். அதுக்கு இப்படி உட்கார்ந்துட்டார். நானெல்லாம் சமத்தா அம்மா குடுத்த மாத்திரையை சாப்டுட்டு சமத்தா ஸ்கூல் போய்ட்டேன். எங்கப்பா பாரு சேம்...சேம்....அவ்வ்வ்வ்வ்வ். பழிப்பு.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ பாலாசி

நன்றி @@ வெண்ணிற இரவுகள் கார்த்திக்


//நதிவதனா.... said...
ஆண்ட்டீ.... எங்கப்பாவுக்கு லேசாத்தான் காய்ச்சல். அதுக்கு இப்படி உட்கார்ந்துட்டார். நானெல்லாம் சமத்தா அம்மா குடுத்த மாத்திரையை சாப்டுட்டு சமத்தா ஸ்கூல் போய்ட்டேன். எங்கப்பா பாரு சேம்...சேம்....அவ்வ்வ்வ்வ்வ். பழிப்பு.//

என்னா ஒரு வில்லத்தனம்....
ஆனா... அழகான புத்திசாலித்தனம்
யாருப்பா இந்த புத்திசாலி எங்க குட்டிப் பாப்பா பேர்ல...

V.N.Thangamani said...

இதற்கு ஸெல்ப் சக்கசன் என்று சொல்வார்கள். நம் ஆழ்மனதில் பதிய வைத்து செயல்படுத்துவது. மெடிடேசன் செய்தால் இந்த தொந்தரவுகளை வராமலே தடுக்கலாம்.

ஊடகன் said...

சிக்கன்குன்யா-வா???????????????????????

//இப்போது, மீண்டும் பழைய உற்சாகத்துடன் இருப்பது போல் உணர்கிறேன்.//

உங்கள் தன்னபிக்கைக்கு வாழ்த்துக்கள்...........

புலவன் புலிகேசி said...

உங்கள் உடல் நிலையை கவனித்துக் கொள்ளுங்கள்....

//வழியை உணர்ந்தேன்//

இங்கு வலி தானே வரும்...

ஈரோடு கதிர் said...

நன்றி @@ வி.என்.தங்கமணி

நன்றி @@ ஊடகன்


நன்றி @@ புலவன் புலிகேசி
வலி தான் வந்தது... இஃகிஃகி)

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல சிந்தனையை மனதில் உருவாக்கிய பதிவு.

பகிர்வுக்கு நன்றி.

தீபா நாகராணி said...

ம்ம்... நல்லா தான் இருக்கு டெக்னிக்...
வலியை, வலி என்று அலட்டிக்கொள்ளாத வலிமை, பெரிய விஷயம்!