நன்றி - குங்குமம் (கொஞ்சம் தாமதமாய்)



கடந்த மாதம் நிகழ்ந்த சம்பவத்தை அடிப்படையாக (உண்மை பாதி, பொய்மை பாதி) கொண்டு என் வலைப்பூவில் நகைச்சுவையாக பதிந்த “இன்னொரு 37 ரூபாய் 40 பைசா தள்ளுபடி”
http://maaruthal.blogspot.com/2009/06/37-40.html

பதிவு ஜூலை 2ம் தேதி குங்குமத்தில் 34ம் பக்கம் வந்துள்ளது.
இணையத்தில் வாசிக்க கீழே உள்ள தொடுப்பை சொடுக்கி 34ம் பக்கம் செல்லவும்..
http://ebooks.dinakaran.com/kungumam/ebook/2009/jul/02/default.html.

இரண்டு நாள் முன்பு “வீட்டுப் புறா” சக்தி இது பற்றி பின்னூட்டம் அனுப்ப,
நிச்சயமாக நம்பினேன் அவர் தவறுதலாக இன்னொருவருக்கு அனுப்ப வேண்டியதை
மாற்றி அனுப்பி விட்டாரென்று, அதே சமயம் துக்கினியூண்டு நம்பிக்கையோடு (இது தான் பலமே) அவரையே கேட்டேன் என்ன குங்குமத்திலா!!!??? என்று

இன்று மீண்டும் அவர் தன் பின்னூட்டத்தில் விபரமாக ஜூலை 2ம் தேதி குங்குமம் இதழ் எனக் கூற நம்பிக்கை நம்பிக்கையோடு வளர்ந்தது. கடைகளில் தேட கடைக்காரர் கொஞ்சம் வித்தியாசமாக பார்க்க, புத்தகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை தளர்த்திக்கொண்டு, ஊரில இருக்கிற எல்லாத்துக்கும் போன் போட்டு கேட்டாலும் எல்லோரும் ஒரே பதில சொன்னாங்க, குங்குமம் அந்த இதழ் இல்லையென்று.

மீண்டும் சோர்ந்து போய் உட்கார சந்துருவின் நெய்தல் வலைத்தளத்தில் குங்குமம் குறித்த அவர் பதிவை படிக்கும் போது என் பதிவு பற்றி அவர் குறிப்பிட்டதை படித்து

குங்குமத்தை இணையத்தில் தேடி.. கண்டுபிடித்து...

தாங்க முடியலையா!!! சரி சரி இத்தோட சுயபுராணத்தை நிறுத்திக்கரேன்..

மீண்டும் சந்திப்போம்... நன்றி குங்குமம், நன்றி சக்தி, நன்றி சந்துரு.

10 comments:

PPattian said...

குங்குமம் மற்றும் விகடனில் உங்கள் படைப்புகள் வந்தமைக்கும் வாழ்த்துகள்.

ஒரு சிறிய ஆலோசனை

"இதுவரை எழுதியவை" பகுதியில் கடைசியாக எழுதியவை முதலில் தெரியுமாறு மாற்றினால், வாசிப்போருக்கு எளிதாக இருக்கும் என எண்ணுகிறேன்.

க.பாலாசி said...

நமக்கே தெரியாமல் நம் திறமைகள் வெளியிடப்படும் போது அதில் கிடைக்கும் ஆனந்தமே அலாதிதான். வாழ்த்துக்கள்.

ஈரோடு கதிர் said...

நன்றி புபட்டியான்

//"இதுவரை எழுதியவை" பகுதியில் கடைசியாக எழுதியவை முதலில் தெரியுமாறு மாற்றினால், வாசிப்போருக்கு எளிதாக இருக்கும் என எண்ணுகிறேன்//
மாற்றிவிட்டேன்

//அதில் கிடைக்கும் ஆனந்தமே அலாதிதான்.//
ஆமாம் பலாஜி... நன்றி பாலாஜி

வால்பையன் said...

ட்ரீட் எப்போ தல!?

sakthi said...

நிச்சயமாக நம்பினேன் அவர் தவறுதலாக இன்னொருவருக்கு அனுப்ப வேண்டியதை
மாற்றி அனுப்பி விட்டாரென்று

ஏங்க இப்படி ஒரு அவநம்பிக்கை

உங்கள் படைப்பு அருமை

அதனால் உங்கள் முகவரியை மனதில் வைத்து தேடி வந்து பின்னூட்டம் இட்டு சென்றேன்

அவ்வளவே.....

மீண்டும் வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள் கதிர்.......

ஈரோடு கதிர் said...

// வால்பையன் said...
ட்ரீட் எப்போ தல!?//
விரைவில் வைச்சுருவோம் பாஸ்

sakthi said...
//அதனால் உங்கள் முகவரியை மனதில் வைத்து தேடி வந்து பின்னூட்டம் இட்டு சென்றேன் //
மிக்க நன்றி

// பிரியமுடன்.........வசந்த் said...
வாழ்த்துக்கள் கதிர்.......//

நன்றி வசந்த்

ஈரோடு கதிர் said...

//ராமலக்ஷ்மி said...
வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றி

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கல் கதிர்.. மேலும் புகழடைய வாழ்த்துகள்

ஈரோடு கதிர் said...

மிக்க நன்றி செந்தில்வேலன்