நம்மை அறியாமல் தான் நமது பிறப்பு நிகழ்கின்றது. அந்த பிறப்பிற்கு நாம் எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது. ஆனால் நமக்கு நாமே உருவாக்கும் பிறப்பின் மூலமாக நம் நேற்றைய வாழ்க்கையை விட இன்றைய வாழ்க்கையை நிச்சயம் மேம்படுத்த முடியும். நமக்குள் நாமே இன்னொரு முறை பிறப்பது எளிதல்ல. ஒரு கடும் பிரசவ வலிக்கு நிகரான போராட்டம் தேவைப்படும்.
கடலில் குளித்து எழுந்து புத்துணர்ச்சியோடு வரும் புதுச் சூரியன் போல் எண்ண அழுக்குகளை அடித்து துவத்தோ, மென்மையாக ஊதி விட்டோ புதியதொரு வாழ்க்கையை தொடங்க முடியும். உலகில் உள்ள அனைத்துமே நம்மை விட்டு விலகிவிட்டாலும் கூட நாம் சுவாசிப்பதற்கான காற்று நம்மை நேசிக்கும் வரை.... வாழ்க்கை அர்த்தம் மிகுந்தது
இரவு விடியும், உறக்கம் கலையும் எனும் நம்பிக்கை மட்டுமே மனிதனுக்கு நிம்மதியான உறக்கத்தை தருகிறது. குழந்தையாய் தவழ்ந்து, நடக்க முயன்று தடுக்கி விழுந்த போது... தன்னம்பிக்கை தளர்ந்து போய் முயற்சியை கைவிட்டிருந்தால் இன்னும் மனிதன் நான்கு கால்களில் தானே நடந்து கொண்டிருப்பான்.
Subscribe to:
Post Comments (Atom)
விதைக்கப்படும் துயரங்கள்
நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான். உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...

-
வெயில் விழுதுகளாய் விழுந்து கொண்டிருக்கும் நடு மதிய நேரத்தில், கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந...
-
அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி ...
-
வலையுலக வாழ்வில் மிக நெகிழ்ச்சியான நிகழ்வு இன்று இனிதே நிறைவேறியது. சென்ற ஆண்டு கொஞ்சம் ஆசையோடு நடத்திய பதிவர் சங்கமம் கொடுத்த உற்சாகம் எங்க...
4 comments:
உண்மைதான்..வாழ்க்கை அர்த்தம் மிகுந்ததுதான்! நம்பிக்கைத்தானே வாழ்க்கை!
//உலகில் உள்ள அனைத்துமே நம்மை விட்டு விலகிவிட்டாலும் கூட நாம் சுவாசிப்பதற்கான காற்று நம்மை நேசிக்கும் வரை.... வாழ்க்கை அர்த்தம் மிகுந்தது//
அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்!
நன்றி சந்தனமுல்லை
நன்றி ராமலஷ்மி
ம்ம்ம்......அர்த்தமுள்ள வாழ்வு இனிது...
Post a Comment