உறங்காத முயல்குட்டியாய்வெயில் தணியும்
மாலை நேரமது
கிழக்கு நோக்கி
மெல்ல நடக்கின்றோம்...

நிழல் நீண்டு
வளர்ந்து கொண்டிருக்கிறது
என் மேல் இருக்கும்
உன் நேசம் போல்...

வெதுவெதுப்பாய்
முதுகில் தடவும் சூரியன்
கதகதப்பாய்
இதயத்தில் முழுதும் நீ...

நடக்கும் அசைவில்
உரசிப் பற்றும் விரல்களில்
சொட்டுச் சொட்டாய்
ஊடுருவுகிறது புத்துணர்ச்சி...

உன் கண்கள் படபடத்து
பேசும் போதெல்லாம்
என் உதடுகள்
இரண்டும் உறைநிலையில்

நீ மௌனிக்கும்
நிமிடங்களிலெல்லாம்
மணந்து கொண்டிருக்கிறது
நீ பேசிய வார்த்தைகள்...

உன் உள்ளங்கையில்
என் முகத்தை ஏந்துகையில்
உலகம் சுருங்குகிறது
உள்ளம் விரிகிறது...

குளிர் சூழும் இரவுகளில்
மூடிய போர்வைக்குள்
கதகதப்பான முயல்குட்டியாய்
உறங்காமல் உன் நினைவு...

~

4 comments:

kk said...

நிழல் நீண்டு
கொண்டே போகிறது
என் மேல் இருக்கும்
உன் பாசம் போல்...

சூப்பர் யார் அந்த கொடுத்து வைத்த தேவதை. அந்த தேவதை மேல் தான் யவளவு நம்பிக்கை Super Kathir Keep it up

பிரியமுடன்.........வசந்த் said...

அந்தி நேர தென்றலாய் கவிதை செம டச்

Amudha Murugesan said...

Nice lines!

lakshmi indiran said...

பலமுறை படிக்க தூண்டிய அழகு கவிதை...உணர்வை கவிதையாய் மாற்றுவதில் கில்லாடி..அத்தனை சொற்களும் அழகு சேர்க்கின்றன காதல் காவியத்திற்கு.....