தாயின் ஸ்பரிசத்தை உணர்கிறேன்...

பெரும்பாலும் என் அம்மாவிற்கு
என்னை முறையாக பாரட்டக்கூட
தெரியாமலிருக்கும்...

ஆனால் என் வெற்றிக்கு
இதயத்தில் சிரிப்போடு...
நரம்புகளில் மகிழ்ச்சியோடு...
தலையை தடவி மகிழும் தருணத்தில்
அவருடைய இதயத்திலிருந்து
ஒரு இனம் புரியாத வாழ்த்தொலியின்
அதிர்வை என் இதயம் உணரும்...

அதற்கு நிகரான ஒரு உணர்வை

பிரியமுடன் வசந்த் சுவாரஸ்யப் பதிவர் விருது வழங்கிய போதும்

பழமைபேசி நயம்மிகு பதிவர் விருது வழங்கிய போதும் உணர்ந்தேன்.


அப்படிப்பட்ட உணர்வோடு என் இதயத்தில் புரளும்
செல்லமான இந்த விருதை நானும் உங்களில்
சிலருக்கு பகிரலாம் என்று நினைக்கிறேன்.

நான் பகிர நினைக்கும், என்னைக் கவர்ந்த சில இதயங்கள்

பழமைபேசி தங்கத்திற்கு நிகரான என் செல்லமான பதிவர்.

காமராஜ் மனதைப் பிசையும் நுணுக்கமான சிந்தனை கொண்ட நான் நேசிக்கும் பதிவர்.

நாகா தவமிருந்து பெறத் தகுதியான நட்புக்குரிய பதிவர்.

ராமலஷ்சுமி வார்த்தைகளை வலிக்காமல் வழங்கும் நேசம் மிகுந்த பதிவர்.

நிகழ்காலத்தில் அன்பும் அறிவும் இணைந்த பதிவர்.


பாலாஜி வளர வேண்டிய இனிய, வலிமையுள்ள பதிவர்.


இந்த விருது ஏற்கனவே ஒருவேளை இவர்களில் யாருக்கேனும் கிடைத்திருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி.
இனிய இதயங்களே வாழ்த்துக்கள்!

10 comments:

நிகழ்காலத்தில்... said...

தங்களின் அன்பை உணர்கிறேன்

ஏற்று அகம் மகிழ்கிறேன்

வாழ்த்துக்கள்

நாகா said...

அன்புக்கு நன்றி கதிர்.

பாலாஜி said...

ஆகா. இது என்ன?

தங்களின் அன்பிலும் பண்பிலும் அமிழ்ந்து ஏற்றுக்கொள்கிறேன் நன்றிகளுடன்.

பிரியமுடன்.........வசந்த் said...

வாழ்த்துக்கள் கதிர்

வால்பையன் said...

அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

பழமைபேசி said...

நன்றிங்க நன்றிங்க....

ராமலக்ஷ்மி said...

விருதுக்கு மிகவும் நன்றி கதிர்.

விருதினைப் பெறுகையில் பெற்றத் தாயன்பை உணர்ந்திட்ட விதத்தை அழகாய்க் குறிப்பிட்டிருக்கிறீர்கள். உங்களுக்கும் இப்போது விருது பெற்றிருக்கும் மற்றவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்!

பாலாஜி said...

சார் எனக்கு சில சந்தேகங்கள். எனது கைபேசி எண்ணை குறித்துக்கொள்ளுங்கள். (9003705598) ஒரு குறுகிய அழைப்பு செய்யவும். நான் உங்களை தொடர்பிடுகிறேன்.

Amudha Murugesan said...

Just now came across....well deserved! late but still "Congratulations"

lakshmi indiran said...

super