தொடரும் உறுத்தல்...

செருப்பில்லாதவன் ந‌ட‌க்கும்
பாதையிலே உமிழ்ந்த எச்சில்
காலணிக்குள் உறுத்துகிறது
சிறு கல்லாய்...


புகைவண்டியில் சீப்பு
விற்கும் குருடனிடம்
பேசிய பேரம் எரிகிறது
கண்ணுக்குள் நெருப்பாய்..


ழுகையோடு உறங்கிய‌
என் குழந்தையின் கண்ணீர்
இரவு முழுவதும் மழைநீராய்
சொட்டுகிறது கனவில்......................

21 comments:

Anonymous said...

பிரமாதமான வரிகள் அண்ணே...

காமராஜ் said...

முகத்திலடிக்கும் குறுங்கவிதை.
நெடு நாள் கழித்து கிடைத்திருக்கிறது.
ஒளித்து வைக்காத பொருட்களோடு
நிஜத்தை விவரிக்கும் தரமான கவிதைகள்.

முன்னேறுங்கள் கதிர் அருமை.

காமராஜ் said...

இப்போதுதான் படித்தேன் எல்லாப்பதிவுகளும்
ஈர்ப்பு மிகுந்தவை.

காமராஜ் said...

வாருங்கள் பதிவுலகுக்கு இதுபோல
நல்ல பொருள் பொதிந்த தீக்கவிதை
தாருங்கள்

கதிர் said...

பாராட்டுகளுக்கு நன்றி... இங்கிலீஷ்காரன்

கதிர் said...

அன்பு காமராஜ்..

//இப்போதுதான் படித்தேன் எல்லாப்பதிவுகளும்
ஈர்ப்பு மிகுந்தவை//

தங்களின் ஆழமான பாராட்டிற்கும்,
வாழ்த்திற்கும் நன்றிகள்.

//ஒளித்து வைக்காத பொருட்களோடு
நிஜத்தை விவரிக்கும் தரமான கவிதைகள்.//

தங்கள் பாராட்டே இனிய கவிதையாக இருக்கிறது...

பிரியமுடன்.........வசந்த் said...

அசாத்தியமான கவிதைகள்

இதுக்கு வாழ்த்தாம போனா எனக்கும் மனசு உறுத்தும்

கதிர் said...

மனது இனிக்கிறது வசந்த்.... நன்றி

Joe said...

நல்ல கவிதைகள்.

ஹைக்கூ மூன்று வரிகளுக்குள் அடங்க வேண்டுமில்லையா?

கதிர் said...

//ஹைக்கூ மூன்று வரிகளுக்குள் அடங்க வேண்டுமில்லையா?//

நன்றி... ஜோ.. முயற்சிக்கிறேன்

kk said...

dv

பழமைபேசி said...

அருமை அருமை கவி கதிர்!

கதிர் said...

// kk said...
dv//

!!!????


நன்றி... பழமை

Baskar said...

Very srong & powerful thoughts. Nice one

கதிர் said...

நன்றி பாஸ்கர்

ராமலக்ஷ்மி said...

வெகு அருமை. உறுத்தல்கள் தொடர்கையில் பழக்கங்கள் தானாக மாறிவிடும். உறுத்தலே இல்லாதவர்களுக்கு? நல்ல கவிதை கதிர்!

கதிர் said...

நன்றி ராமலக்ஷ்மி

ச.செந்தில்வேலன் said...

ஒவ்வொரு கவிதையும் உறுத்துகிறது கதிர்.. சிறப்பு!!

selvarajan muthusamy said...

அருமையான கவி வரிகள் தோழரே .....

selvarajan muthusamy said...

அருமையான கவி வரிகள்
தோழரே....

Amudha Murugesan said...

True lines!