ஒரு 25 நிமிட நடையின் வரலாறு(!!??)


புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது போல், எங்கு பார்த்தாலும் மனிதர்கள் சமீபமாக வாக்கிங் போய் கொண்டிருப்பதைக் கண்டு, நானும் வாக்கிங் போகலாம் என்று முடிவு செய்து ஷூ வாங்கி வைத்து இரண்டு வருடமாகி விட்டது. ஷூ வாங்கிய முதல் இரண்டு மூன்று நாட்கள் அலாரம் வைத்து, அது அடிக்கும் போது ஆப் செய்து விட்டு, சுகமாய் தூக்கத்தை தொடர, சில நாள் மட்டும் வாக்கிங் போவது போல் கனவு வர... வாக்கிங் வெறும் கனவாகவே போய்விடும் போல் தோன்றியது. அவ்வப்போது அம்மா வேறு போன் செய்து “என்ன சாமி... வாக்கிங் போனையா!!??” என்று கேட்க, நானும் ஏதேதோ காரணம் சொல்லி சமாளிக்க, சிறிது நாட்களில் எங்கள் பகுதியில் நான் போகாத வாக்கிங்கும், புதுசா வாங்கின ஷூவும் ரொம்ப பிரபலமாகிவிட்டது.

எங்க பாப்பா ஸ்கூல் போய்ட்டு வந்து, உபயோகப் படுத்தாமலே அழுக்காகி கொண்டிருந்த என் ஷூவை தன்னுடைய விளையாட்டுப் பொருளாக, பல விதங்களில் பயன் படுத்தத் துவங்க, தங்கமணி வேறு “க்கும் இந்த ஷூவ வாங்குனுதுக்கு, ஒரு சீல எடுத்துக் கொடுத்திருந்தாலாவது ஆகும் னு” சொல்ல, என்னுடைய இயலாமையை நினைத்து லேசாக மனது வலிக்க ஆரம்பித்தது. சில நாட்களிலேயே அம்மா மறுபடியும் போன் செய்து நெஞ்சு வலி பற்றி ஒரு விரிவான லெக்சர் கொடுத்து வாக்கிங் போவென்று கண்டிப்போடு அறிவுறுத்த மறுபடியும் ஷூவை தூசு தட்ட முடிவு செய்து வீட்டில் “நாளை முதல் வாக்கிங் போகிறேன்” என்று பந்தாவாக சபதம் செய்ய... எங்கள் விட்டு கொள்கை பரப்பு செயலாலர் (அட... எங்க பாப்பா தான்) பக்கத்து வீட்டிற்கெல்லாம் போய் “மாமா எங்கப்பா வாக்கிங் போறாங்களே”, “அத்த எங்கப்பா வாக்கிங் போறாங்களே”னு பந்தாவிட, எனக்கு மிகப்பெரிய கட்டாயமாகி விட்டது.

சரி கண்டிப்பாக வாக்கிங் போய்விட வேண்டும் என முடிவு செய்து, காலை 5.30 மணிக்கு அலாரம் வைத்து விட்டு தூங்க, நடு இரவிலேயே ஆர்வத்தில் இரண்டு, மூன்று முறை அலாரம் அடித்திருக்குமோ என்று எடுத்துப் பார்த்ததில் ரொம்ப டயர்டு ஆகி ஆழ்ந்து தூங்கும் போது “கவுசல்யா சுப்ரஜா”னு மொபைல் அலற ஆரம்பித்தது. கண்ணைத் திறக்காமலே ஸ்னூஸ் பட்டனை அழுத்தி 5 நிமிடம் தூங்க, மீண்டும் மொபைல் அலறியது, மீண்டும் ஸ்னூஸ் பட்டனை அழுத்தி 5 நிமிடம் தூங்க, மீண்டும் மொபைல் அலறியது, மீண்டும் ஸ்னூஸ் பட்டனை அழுத்தி 5 நிமிடம் தூங்க, மீண்டும் மொபைல் அலறியது, மீண்டும் ஸ்னூஸ் பட்டனை அழுத்தி 5 நிமிடம் தூங்க, மீண்டும் மொபைல் அலறியது, மீண்டும் ஸ்னூஸ் பட்டனை அழுத்தி 5 நிமிடம் தூங்க, மீண்டும் மொபைல் அலறியது, ... ம்... என்ன படிக்க முடியலையா? படிக்கிற உங்களுக்கே இப்படி இருந்தா எனக்கு எப்படியிருந்திருக்கும்...

12-13 தடவை ஸ்னூஸ் பட்டனை அழுத்தி அழுத்தி, ஒரு கட்டத்தில் ஸ்னூஸ் பட்டனை அழுத்த எனக்கே வெட்கமாக இருந்ததால் கடைசியாக ஒரு வழியாக எழுந்து பார்த்த போது மணி 6.40... ஆஹா வழக்கமா எழுந்திருக்கும் 7.30 மணிக்கு பதிலாக 6.40க்கே எழுந்துவிட்ட என்னுடைய திறமையை நானே கொஞ்சம் வெட்கத்தோடு மெச்சிக்கொண்டு... ஷூவை மாட்டிக்கொண்டு வெளியில் வரவும் பக்கத்து வீட்டிலிருந்து “என்னங்க வாக்கிங் கிளம்பிட்டீங்க போலிருக்கே”னு சொன்னது இன்னைக்கு வரைக்கும் புரியல, அது பாராட்டா, கிண்டலானு.

வீட்டிலிருந்து கிளம்பி எந்த வழியா வாக்கிங் போறதுன்னு கொஞ்சம் குழப்பத்தோடு இரண்டு வீதி தாண்டுவதற்குள் மூன்று தெரிந்த முகங்கள் வாக்கிங் முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர், எல்லோரும் “ஹலோ என்ன வாக்கிங் போறீங்களா!!???” என்ற கேள்வியையே திரும்ப திரும்ப கேட்டார்கள். நானும் கொஞ்சம் கூச்சத்தோடு “ஆமாங்க”னு சொல்ல, “ஓ வெரி குட் எப்போயிருந்து போறீங்க” அய்யயோ என்ன சொல்லலாம் இன்னைக்குத் தான் பர்ஸ்ட்னு எப்படி சொல்றது, பிரஸ்டீஜ் (!!!???) என்ன ஆகுறதுனு நினைத்துக்கொண்டே “இப்போ ஒரு நாலு மாசமாங்க”னு கூச்சப்படாம பொய் சொல்ல, அடுத்த விநாடி யோசிக்க கூட விடாமல் “அப்படியா, ஒரு நா கூட உங்கள பாக்கலையேன்னு” கேட்க நான் பேய் முழி முழிக்க “ஓ வேற ரூட்ல போவீங்களோ”னு கேட்க, நான் தலையை இட வலமாய், மேலும் கீழுமாய் தலையை ஆட்டி, இப்படியாக அந்த மூன்று நபர்களையும் தாண்டுவதற்கே மூச்சு முட்டி லேசாக வியர்த்தது. 25 நிமிடம் நடந்ததிலேயே கால் வலிப்பது போல் உணர... வீட்டிற்கு திரும்பினேன்.

வீட்டிற்கு வந்தும் வராமல் கேட்ட கேள்வி எவ்வளவு தூரம் போனீங்கனு, உடனே நானும் போன வீதிகளின் பெயரையெல்லாம் கொஞ்சம் இழுத்து, நீ...ட்ட்ட்ட்ட்...டி, நீ...ள...மா...க... சொன்னேன். உடனே பாப்பா “அப்பா எங்கள் ஸ்கூல் வேன் அந்த வழியாத்தான் போகும்பா” என்றதும், ஒரு நிம்மதி வந்தது “ஆகா... நாம போன வாக்கிங்க நம்பிட்டாங்க”னு.

பல நாட்கள் அதிகாலையில் வாகனத்தில் போகும் போது பார்த்த, சாலைகளில் வாக்கிங் போன உருவங்கள் நினைவுக்கு வந்தனர், அவர்களும் அப்படித்தான் ஆரம்பித்திருப்பார்களோ என்று?

14 comments:

Anonymous said...

ஐயய்யோ அப்படியே என் அனுபவம்.என் இனமடா நீ.

நிகழ்காலத்தில்... said...

வார்த்தைக்கு வார்த்தை உண்மை

வாழ்த்துக்கள்

sakthi said...

இதே இதே பிரச்னை தான் எனக்கும்

அழகிய வாக்கிங் வரலாறு

பழமைபேசி said...

நயம்மிகு பதிவர் விருதை ஏற்றுக் கொள்ளுங்கள் மாப்பு!

பழமைபேசி said...

ஏற்கனவே கொடுத்திருக்காங்களா? சரி, அதனால என்ன, வாங்கிக்குங்க மறுக்காவும்....

ப்ரியமுடன் வசந்த் said...

ஆஹா ...... என்ன திடீர்னு வாக்கிங் தொப்பை போட்டுவிட்டதா கதிர்?

க.பாலாசி said...

//... ம்... என்ன படிக்க முடியலையா? படிக்கிற உங்களுக்கே இப்படி இருந்தா எனக்கு எப்படியிருந்திருக்கும்...//

Sir, ennamo kavalaiyoda irundha mathuri sollreenga.

Summa sogama irunthirukkume.

ஈரோடு கதிர் said...

//Anonymous said...
என் இனமடா நீ.//
அட... இதுக்கு கூடவா கூட்டுச் சேத்துக்குவீங்க

//நிகழ்காலத்தில்... said...
வார்த்தைக்கு வார்த்தை உண்மை//

ஆமாம். நன்றி நிகழ்காலத்தில்

// sakthi said...
இதே இதே பிரச்னை தான் எனக்கும்//

அட!!.. நன்றி சக்தி

//பழமைபேசி said...
நயம்மிகு பதிவர் விருதை ஏற்றுக் கொள்ளுங்கள் மாப்பு!//

நன்றி பழமை

//பிரியமுடன்.........வசந்த் said...
தொப்பை போட்டுவிட்டதா கதிர்?//

புதுசா என்ன போடறது... ரொம்ம்ம்ம்ப நாளாவே
நன்றி வசந்த்

//பாலாஜி said...
Summa sogama irunthirukkume.//

ஆமா..மா... ரொம்ம்ம்ம்ம்ப சொகம்தான்..
நன்றி பாலாஜி

நாகா said...

அருமையான நடை அண்ணே!(எழுத்தைத்தான் சொல்றேன்). மத்தபடி நானும் உங்க கட்சிதான் ஸ்னூஸ் போட்டு ஸ்னூஸ் போட்டு தூங்கறவன்..

ஈரோடு கதிர் said...

// நாகா said...
அருமையான நடை அண்ணே!(எழுத்தைத்தான் சொல்றேன்).//

என்னா ஒரு வில்லத்தனம்.


//மத்தபடி நானும் உங்க கட்சிதான் ஸ்னூஸ் போட்டு ஸ்னூஸ் போட்டு தூங்கறவன்..//

நாகா நம்முளுக்காவத்தான் ஸ்னூஸ் பட்னயே கண்டுபுடுச்சிருக்கானுவ

Thamira said...

நல்ல ரசனையான பதிவு.

http://www.aathi-thamira.com/2009/05/blog-post.html

இதை வாசித்துப்பாருங்கள். ஒருவேளை உங்களுக்குப் பிடிக்கலாம்.

ஈரோடு கதிர் said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
நல்ல ரசனையான பதிவு.//

நன்றி... ஆதி

nila said...

ஹா ஹா ஹா...
இப்போ தொடர்ந்து வாகிங் போறிங்களா இல்லையா???

ஈரோடு கதிர் said...

//nila said...
இப்போ தொடர்ந்து வாகிங் போறிங்களா இல்லையா???//

போகிறேன்... மாலை நேரங்களில், மிகவும் சுகமாக...