கோடைமழையில் கரைந்த
சாலையில் தீட்டியிருந்த
ஓவியம்...
சுழற்றியடித்த சூரைக்காற்றில்
நூலறுந்து சிறகடித்த
பட்டம்...
ஓடிவந்த கடலலை
கரைத்துவிட்டுப்போன
மணற்கோட்டை...
சுவாரசியமிகு புதினத்தின்
களவு போயிருந்த
கடைசிப் பக்கங்கள்...
இது எதுவுமே இழப்பாக
தெரியவில்லை...
தொடர்வண்டிப் பயணத்தில்
சன்னல் வழியே விழுந்த
மகளின் கிலுகிலுப்பைக்கு முன்னே...
~
18 comments:
அழகான கவிதை!
இது தான் ஒரு தந்தையின் பாசமோ? உங்கள் கவிதைகள் தனிதன்மையோடு இருக்கிறது..
//புகைவண்டிப் பயணத்தில்
சன்னல் வழியே
விழுந்த என் மகளின்
கிலுகிலுப்பைக்கு முன்னே...//
கவிதை, உண்மையில் அனுவனுவாய் ரசித்தேன்.
குழந்தையின் சிரிப்பொலிக்கு முன்னே ஓப்பாரிகள் கூட ஒன்றுமில்லாமல் போய்விடும்.
பாராட்டிற்கு
நன்றி செந்தில் வேலன்.
பாலாஜி...
விரைந்து வரும்
உங்கள் கருத்துகள்
எனக்கு மிகப்பெரிய உந்துதல்
நன்றி நண்பா!
அட்டகாசமான கவிதை
வருகைக்கும் பாராட்டிற்கு நன்றி ஜோதி
பசிபிக் கடலின் ஆழம்,
இமயமலையின் உயரம்,
பில்கேட்சின் சொத்து,
சீனாவின் மக்கள் தொகை
இவை எல்லாவற்றிலும் பெரியது
இந்த தந்தையின் பாசம்.
வாழ்த்துக்கள் கதிர் உங்கள் கவிதை இளமை விகடனில்
நெகிழ்ச்சியான வாழ்த்திற்கு
நன்றிகள் சந்திரா.
வசந்த் மிக்க நன்றி
ஆனால் இளமை விகடனை
வாசிக்க தொடுப்பு இருந்தால்
அனுப்புங்கள்
அல்லது புத்தகவடிவில் உள்ளதா!?
புகைவண்டிப் பயணத்தில்
சன்னல் வழியே
விழுந்த என் மகளின்
கிலுகிலுப்பைக்கு முன்னே//
தந்தையின் பாசத்துக்குமுன்
எதுவுன் இணையில்லை!!
அருமை கதிர்.. இன்றைய இளமை விகடனில் Good blogs பிரிவில் உங்கள் கவிதை. வாழ்த்துக்கள்..
http://youthful.vikatan.com/youth/index.asp
அற்புதம்.
தேவன் மாயம்
நாகா
ராமலக்ஷ்மி
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
மெளனம் கசிவது போல் இல்லையே....வெள்ளப் பெருக்கெடுத்து வருவது போலிருக்கிறதே...
வாழ்த்துக்கள்
அப்படியா... வாழ்த்துக்களுக்கு நன்றி கோமா
//Good Work//
Thanks Ravi
அருமையான கவிதை கதிர்,
ரசித்துப் படித்தேன்.கொஞ்சம் மெருகேற்றி ஆ.வி க்கு அனுப்புங்க.
//நாடோடி இலக்கியன் said...
அருமையான கவிதை கதிர்,
ரசித்துப் படித்தேன்.கொஞ்சம் மெருகேற்றி ஆ.வி க்கு அனுப்புங்க.//
செய்கிறேன்
நன்றி @@ பாரி...
அட....
Post a Comment