ஆயினுமென்ன


துளிருக்கும்
பழுத்த இலைக்கும்
இடைப்பட்ட மௌனமாய்
கிடக்கும் காலம்
வெயிற்சொட்டொன்றில்
துடிக்கவும்
முத்த ஈரத்தில்
சிலிர்க்கவும்
சிதறும் கண்ணீரில்
நடுங்கவும்
நுனி விரற்கோதலில்
குழையவும்
கூர்மைக் கீறலில்
உதிரம் விடவும்
ஆயினுமென்ன
துடித்துச் சிலிர்த்து
நடுங்கிக் குழைவதில்
உயிரோடுதானே!

-

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை தான்...

Ramani S said...


துளிருக்கும்
பழுத்த இலைக்கும்
இடைப்பட்ட மௌனமாய்
கிடக்கும் காலம்/

அற்புதம்
வாழ்த்துக்கள்/

lakshmi indiran said...

அட...அட....அருமை..ஒரு உயிரின் ஜீவததும்பல் இது