எக்மோர் ரயில்எக்மோர் ரயில்
ஊத்துக்குளியில்
நிற்கிறது
இறங்கிய
மனதை
இழுத்து
அமர வைத்தாகிவிட்டது
ஈரோடு வரப்போகிறது
இறங்கியாக வேண்டும்
கொடுமுடி
கரூர்
திருச்சி
தாம்பரமென
எக்மோர் வரை
ரயில் வாசத்தோடு
செல்ல விழைகிறது
மனம்

ஈரோட்டில்
மனதுதிர்த்த
உடலொன்று
உடன் பயணிக்கும்
சாத்தியங்களுமுண்டு!

-

3 comments:

lakshmi prabha said...

பயணம் .. அலாதி அனுபவம் ..!

திண்டுக்கல் தனபாலன் said...

அட...! சூப்பர்...!

Bagawanjee KA said...

மண் பாசம் அவ்வளவு லேசிலே விடாது !