Mar 13, 2014

பிறிதென்ன





ஒரு இரவு
ஒரு பிறை நிலா
ஒரு தாழ்வாரம்
ஒரு சொல்
ஒரு முத்தம்
ஒரு உறவு
ஒரு பயணம்
ஒரு தருணம்
ஒரு உண்மை
ஒரு நெகிழ்வு
ஒரு துடிப்பு
ஒரு பரவசம்
ஒரு வாசிப்பு
ஒரு பொய்
ஒரு கடி
ஒரு விலகல்
ஒரு அணைப்பு
ஒரு கவிதை
ஒரு வன்மம்
ஒரு துளி கண்ணீர்
ஒரு ஆறு
ஒரு மரத்தடி
ஒரு பார்வை
ஒரு மயக்கம்
ஒரு பாடல்
ஒரு சீண்டல்
ஒரு மீட்பு
ஒரு அழுகை
ஒரு மணல்வெளி
ஒரு வருடல்
ஒரு வெளிச்சம்
ஒரு வியர்வைத்துளி
ஒரு தென்றல்
ஒரு மழை
ஒரு நொடி
ஒரு விடியல்
ஒரு கதகதப்பு
நீ
நான்
பிறிதென்ன?

-

5 comments:

Unknown said...

# I just feel my flashback ,,,,,, re-winding but not binding !

Unknown said...

ஒரு ... ஒரு ... ஒரு ... நல்லாருக்கு கதிர் !

மகிழ்நிறை said...

பிரிதென்ன??எல்லா இனிய சொற்களையும் நீங்கள் கவிதையில் பயன்படுத்திக்கொண்டபின் வேறு எப்படி கருத்திட?!!!!
அருமை!!

'பரிவை' சே.குமார் said...

பிரிதென்ன அண்ணா...
எல்லாம் சுகமே

பிரதீபா said...

ஒரு FaceBook Status

--விட்டுட்டீங்களே !

முதியதோர் உலகு

அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி ...