கீச்சுகள் - 6


அசத்தும் ஒரு பாடலுக்கு, இசைக்கு மனிதனை மனிதனாக்கும் வல்லமையும், மனிதனை பைத்தியமாக்கும் வல்லமையும் ஒரு சேர உண்டு!

***
படுபாவிகளா, மனப்பாடப் பகுதின்னு ஒன்ன பள்ளிக்கூடத்துல வைக்காம இருந்திருந்தீங்னா பல பழந்தமிழ்ப் பாடல்களை ஒழுங்காப் படிச்சு புரிஞ்சு ரசிச்சிருப்போமே!

***
வாழ்ந்ததின் மிகப் பெரிய சாதனை, வயோதிகத்தில் தனக்கோ, பிறருக்கோ துன்பமேதுமில்லாமல் சட்டெனத் தழுவும் மரணம் மட்டுமே!  #நோய் கொடிது:(

***
ஏதோ ஒரு கணத்தில் ஒன்றின்மேல் கொண்ட அடர்த்தியான ஆர்வம் நீர்த்துப்போகிறது!

***
பிரச்சனையும் தீர்வும் சரக்கும் போதையும்போல! ஒரு குவார்ட்டர் சரக்குல நிரந்தர போதை கிடைச்சிடுமா! அது போலத்தான், அப்பப்ப வர்ற பிரச்சனைக்கு அப்பப்ப கிடைக்கிற தீர்வு” - இனிமே யாராச்சும் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கேட்டாக்க, அவங்களை உத்துப்பார்த்து கேளுங்கமச்சி ஒரு கோட்டர் சொல்லேன்” :)
***
 
தான் நல்லவன், திறமைசாலினு ஒருவர் சொன்னால் அவருக்கு தலைக்கனம் என்கிறோம். தான் கெட்டவன், முட்டாள் எனச்சொன்னால் அவரை நல்லவர் என்கிறோம்.

*********
ஒரு காலத்தில் பிள்ளையார் கோவில் திண்ணையில் உட்கார்ந்து ஊர்ஞாயம் பேசும் பெருசுகள் போல் ட்விட்டர் / ஃபேஸ்புக்கில் கிடக்கின்றோம்.

******
பசும் இலைகள் போர்த்திய உடல்ச் செடியில்
பூத்துக் குலுங்கும்  புத்தம்புது மலராய்
#
அவள் முகம்!
 
***
 
நான் சொல்வது எதுவுமே புரியலைன்னு வருத்தப்பட்டார் நண்பர்,
எனக்கும் நான் சொல்றது புரியறதில்லைனு சொல்லிவெச்சேன்.
புரிஞ்சு சந்தோசமாயிட்டார். :)

******
சக மனிதனிர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டதையே,
என்னை நோக்கும் சக மனிதர்களுக்கு தினிக்கின்றேன்.

***

விவாதத்தில் வெல்ல நினைப்பது வேறு, புரிந்து கொள்ள நினைப்பது வேறு. வெல்ல நினைக்கும் வாதம் புரிந்து கொள்ள அனுமதிக்காது!

***
எங்கிருந்தோ காற்று கடத்திவரும் மல்லிகை வாசம்,
இதமாக்குகிறது இப்போதைய சூழலை!

***
ஆளில்லாத கடையில டீ ஆத்துற மாதிரி, ரோட்ல அவசியமேயில்லாமப்ப்பீய், ப்ப்பீய்னு ஹார்ன் அடிக்குற ஆத்மாக்கள் காதுகளை கழட்டி வெச்சுருவாங்களோ!

******
எதுக்கெடுத்தாலும் இதெல்லா ஒரு கஷ்டமா என்பவர்களிடம் கேட்கிறேன்.......... “சின்ன வெங்காயம் உறிப்பது எவ்ளோ பெரிய கஷ்டம்னு தெரியுமா பாஸ்?” #Easytosay

***
பாராட்டு, புகழ் எதுவும் எதிர்பாராமல் நல்லகாரியம் செய்பவரை மனம் குளிர பாராட்டும்போது, அவர்கள் ஒருவித வெட்கத்தில் தடுமாறுவதே கவிதையாய் இருக்கும்!

***
மழையில் அவன் நனையும்போது அவனுக்கு சளி பிடிக்கிறது, அவள் நனையும்போது அவனுக்கு புயலடிக்கிறது.
#
பாவப்பட்டது எப்பவுமே அவன்தான். :)
 
***

ஏதோ ஒன்றின் விட்டகுறை தொட்டகுறையாய் சோர்ந்து துவளும்போது, நாம் அறிந்தும் அறியாமலும் ஏதோ ஒரு வகையில் நம்மை மீட்டெடுப்பது சகமனிதனின் அன்பு வழியும் கரமே. உணர்ந்து உற்று நோக்கும்போது அந்தக் கரங்களின் மேல் அன்பும் நேசமும் கூடுகிறது.
 
***

கொள்கை என உருவெடுப்பவர்கள் கொள்ளையில் நிறைவடைந்து விடுகிறார்கள்.
 
***

கிராமத்துல ஒரு காலத்துல, சோறு குடிச்சிட்டியானு கேப்பாங்க,
இப்பவெல்லாம் தண்ணி சாப்டுறீங்களான்னு கேக்குறாங்க.
#
டீஜண்டாம் :)

***
நான் பேசும் வார்த்தைகள் எனக்கெதிரே அமர்ந்து கேட்பவரின் காதுகளில் விழுமுன், என் செவிகளில், என் மனதில்தான் முதலில் விழுகிறது.

******
மனிதனைத் தள்ளாட வைக்காவிடில், அரசாங்கம் தள்ளாடிவிடும்!
#
டாஸ்மாக்

***
அடுத்தவரின் அந்தரங்கம் என அறியப்படுவது, நமக்குள்ளே நிறைவேறாமல் கிடப்பதோ () யாருக்கும் தெரியாமல் நிறைவேற்றிக் கொண்டதோதான்

***
இணைப்பைவிட துண்டிப்பு பல நேரங்களில் எளிதாகவும், சில நேரங்களில் மிகக் கடினமானதாகவும் இருக்கின்றது.

***
சில கண்டுபிடிப்புகளைக் காணும்போது, மனிதனுக்கு மூளைக்குப் பதிலா களிமண்ணையே வெச்சிருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.
#
புடுங்குற ஆணி எல்லாமே தேவையான ஆணியா என்ன? :)

******
மௌனம் ஓர் ஆயுதம். சில நேரங்களில் வெற்றிபெறவும், பல நேரங்களில் யுத்தத்திலிருந்து மீளவும் உதவுகிறது.
#
உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? :))
***

14 comments:

*இயற்கை ராஜி* said...

:-) இப்போ போறேன்..அப்புறம் கண்டிப்பா வருவேன்

ILA (a) இளா said...

இந்தத் தொகுப்பு அருமை. புஸ்தகமா போடலாமே.. யோசிங்க..

vasu balaji said...

tweettunnu peru vechchalum vechchanga chivukku chivukkunnu koovikkitte irukkeenga:))

KSGOA said...

கீச்சுகள் அருமை.3வது நிதர்சனமான உண்மை.

Anonymous said...

//வாழ்ந்ததின் மிகப் பெரிய சாதனை, வயோதிகத்தில் தனக்கோ, பிறருக்கோ துன்பமேதுமில்லாமல் சட்டெனத் தழுவும் மரணம் மட்டுமே! #நோய் கொடிது:(//

மெகா உண்மை..இந்த வகை மரணம் வரமோன்னு கூட தோனும்..

Anonymous said...

எல்லாமே சிறப்பா இருக்கு கதிர்.. நீங்க எப்பவும் ரெட் சிக்னலில் இருப்பதை பார்த்து பிசின்னு நினைப்பேன்..ஹிஹிஹி இப்ப தான் பிரியுது நீங்க இம்புட்டு விசயத்தை சிந்திச்சிகிட்டு இருக்கீங்கன்னு...

க.பாலாசி said...

கலக்கல்...

Mahi_Granny said...

கீச்சுகள்அருமை. நல்லா யோசிக்கிறீங்க கதிர்

நாடோடி இலக்கியன் said...

// நான் சொல்வது எதுவுமே புரியலைன்னு வருத்தப்பட்டார் நண்பர்,
எனக்கும் நான் சொல்றது புரியறதில்லைனு சொல்லிவெச்சேன்.
புரிஞ்சு சந்தோசமாயிட்டார். :)//

//விவாதத்தில் வெல்ல நினைப்பது வேறு, புரிந்து கொள்ள நினைப்பது வேறு. வெல்ல நினைக்கும் வாதம் புரிந்து கொள்ள அனுமதிக்காது!//

//அடுத்தவரின் அந்தரங்கம் என அறியப்படுவது, நமக்குள்ளே நிறைவேறாமல் கிடப்பதோ (அ) யாருக்கும் தெரியாமல் நிறைவேற்றிக் கொண்டதோதான்//

அட! அப்படின்னு இருந்துச்சுங்க கதிர்.

//மனிதனைத் தள்ளாட வைக்காவிடில், அரசாங்கம் தள்ளாடிவிடும்!
#டாஸ்மாக்//

ஹி ஹி

//ஏதோ ஒரு கணத்தில் ஒன்றின்மேல் கொண்ட அடர்த்தியான ஆர்வம் நீர்த்துப்போகிறது!//

கெட்டித்து கூட போயிடுச்சு போல இந்த நீர்த்தும்,மௌனமும் படுற பாடு உங்ககிட்ட..
:-)

//*பசும் இலைகள் போர்த்திய உடல்ச் செடியில்
பூத்துக் குலுங்கும் புத்தம்புது மலராய்
# அவள் முகம்! //

//மழையில் அவன் நனையும்போது அவனுக்கு சளி பிடிக்கிறது, அவள் நனையும்போது அவனுக்கு புயலடிக்கிறது.
# பாவப்பட்டது எப்பவுமே அவன்தான். :)//

சரி நீங்க யூத்துதான்.ம்ம் ...

ராமலக்ஷ்மி said...

ILA(@)இளா said...
//இந்தத் தொகுப்பு அருமை. புஸ்தகமா போடலாமே.. யோசிங்க..//

ஆமாம்:)!

ஓலை said...

Sema tweet. Nice kathir.

singam said...

நமக்கு அப்போது குடிக்கும் வசதி தான் இருந்தது .
இப்போது அனைவருக்கும் சாப்பிடும் வசதி வந்து இருக்கிறது.
உண்மை

singam said...

நமக்கு அப்போது குடிக்கும் வசதி தான் இருந்தது .
இப்போது அனைவருக்கும் சாப்பிடும் வசதி வந்து இருக்கிறது.
உண்மை

Anu said...

அருமை !!