சங்கமம்-2011 வர்றீங்கதானே?

சங்கமம்-2011
இணையச் சிலந்திக்கூட்டில் பல தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் நம்மை ஒரு கோட்டில் மீண்டும் இருத்திப்பார்க்க, இந்த ஆண்டும் ஈரோடு தமிழ்வலைப்பதிவர்கள் குழுமம் அழகானதொரு சந்திப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது.


வலைப்பக்கம்(blog), WordPress, Facebook, Twitter, BUZZ போன்ற பல தளங்களில் உறவாடும் இணைய உறவுகளை ஒன்று திரட்டி அகமகிழும் முகமாக ”சங்கமம் 2011” எனும் கூடல்த்திருவிழா ஈரோட்டில் நடைபெறவுள்ளது.

2009, 2010ஆம் ஆண்டுகளில் இது போன்ற கூடல்கள் மிகச் சிறப்பாக நடந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதே போன்று இந்த ஆண்டும் டிசம்பர் 18ம் தேதி ஈரோட்டில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆண்டுகளின் சங்கமம் குறித்த இடுகைகள்.

எங்கு, எப்போது, என்ன?
சங்கமம்-2011 நிகழ்வு 18.12.2011 ஞாயிறன்று, ஈரோடு, பெருந்துறை சாலை, பழையபாளையத்தில் உள்ள ரோட்டரி CD அரங்கில், மிகச்சரியாக காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் இரண்டு மணிக்கு நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்வில் மிக வித்தியாசமான அங்கீகாரங்கள், மிகச்சிறந்த ஆளுமைகளின் சிறப்புரை, அர்த்தமிகு கலந்துரையாடல், மதிய விருந்து என எங்கள் குழு வடிவமைத்துக் கொண்டிருக்கிறது.

ஏன் சங்கமம்?
ஏன் இப்படியான நிகழ்வை மிகுந்த பொருட்செலவோடு, கடினப் பணிக்கிடையிலும் நடத்த வேண்டும் என்ற கேள்விகள் எப்போதாவது எழுந்தாலும், இணைய உலகத்தில் இதயத்திற்கு நெருக்கமாகக் கண்டெடுத்த எம் தமிழ்சொந்தங்கள் அந்தக் கேள்விகளை அகற்றி ஆண்டுக்கொருமுறை கூடிப் பழகவேண்டும் என்று ஆவலை நிறையவே ஊட்டுகிறது.

எல்லாச் சன்னல்களையும் திறந்துவிட்டு, இந்த இணைய சமூக வலைத்தளம் நம் பசிக்குத் தீனி போட்டு, உள்ளே உருண்டு, புரண்டு கொண்டிருப்பதை நம்மிலிருந்து வெளியே எடுத்து, தனக்குள் தாங்கி, பலதரப்பட்ட வகையில் அங்கீகாரம் அளித்து, புதியதொரு உலகத்திற்கான சன்னல்களைத் திறந்து வைத்திருக்கிறது. வெறும் எழுத்துகளாலும், படங்களாலும் மட்டுமே சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் எப்போதாவது நேரிலும் சந்தித்து மகிழலாமே என்ற ஆசையின் வெளிப்பாடுதான் இந்தக் கூடல்.

கலந்துகொள்ள:
முதன்முறையாக வலைப்பக்கம் (Blog / Wordpress) என்பதைத்தாண்டி FaceBook / Twitter / BUZZ போன்ற சமூக வலைத்தளங்களில் இருப்போர் என அழைப்பதில் பெருமகிழ்வு கொள்கின்றோம். அதே சமயம் அதில் எங்களுக்கு இருக்கும் சின்ன நெருக்கடி, அதிலிருந்து எத்தனைபேர் கலந்துகொள்வார்கள் எனும் சரியான எண்ணிக்கைதான். எனவே, சங்கமம்-2011  நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் அனைவரும், தங்கள் வருகையை 15.12.2011 வியாழக்கிழமைக்குள் erodesangamam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு
 
தங்கள் பெயர்
தொடர்பு எண் (optional)
மின்மடல் முகவரி
வலைப்பக்க(blog-Facebook-Twitter ID) முகவரி / பெயர்
..... ஆகியவற்றுடன் மின் மடல் செய்யவேண்டுகிறோம். 

இது கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை எங்களுக்கு உறுதிப் படுத்தியதையொட்டியே நிகழ்வுக்கான இருக்கைகள், உணவு ஏற்பாடு செய்யமுடியும். இவ்வளவு வலியுறுத்திக் கேட்பதன் மிக முக்கியக்காரணம் மதியம் சைவ / அசைவ உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது. சரியான எண்ணிக்கை தெரியாத போது உணவு போதாமல் அமையவோ, கூடுதலாக அமைந்து வீணாகவோ வாய்ப்பிருப்பதை முற்றிலும் தவிர்க்கவே. நிகழ்ச்சியன்று அரங்கிற்குள் 9.30க்குள் தங்கள் வருகையை உறுதிசெய்யவும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கட்டணம் ஏதுமில்லை.
மேலதிக விபரங்களுக்கு:

தாமோதர் சந்துரு (தலைவர்) 93641-12303 ,
க.பாலாசி   (செயலர்) 90037-05598,
கார்த்திக்
  (பொருளர்)  97881-33555,
ஆரூரன்
- 98947-17185 ,
கதிர்
– 98427-86026,
வால்பையன் - 99945-00540,
ஜாபர்
- 98658-39393,
ராஜாஜெய்சிங்
- 95785-88925,
சங்கவி – 9843060707

நிகழ்வின் வெற்றியும் சிறப்பும் தங்கள் கைகளில் மட்டுமே அமைந்திருக்கின்றது என்ற நம்பிக்கையோடு வரவேற்கத் தயாராக இருக்கின்றோம்

வர்றீங்கதானே!?
-0-

31 comments:

வானம்பாடிகள் said...

வழமைபோல் சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.

பழமைபேசி said...

வழமைபோல் சிறப்பெய்த வாழ்த்துகள்!

kaanchan said...

நல்ல முயற்சி....
நட்பு பாராட்டி நவில்வோம் நல்ல சிந்தனைகளை .......
“மௌனம் கசிய” ,
“மனங்கள்,மனித நேயங்கள்” .... “சங்கமிக்க” ......
வாழ்த்துகின்றேன் தோழமையுடன்......

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துகள்.

dheva said...

சங்கமம் சிறப்பாக நடை பெற வாழ்த்துக்கள்!

ashokpriyan said...

வாழ்த்துகள்.

காமராஜ் said...

வழ்த்துக்கள். நிகழ்ச்சிக்கும் திரளப்போகும் வலைமக்களுக்கும் வாழ்த்துக்கள். இதுபோன்ற கூடல்கள் புதிய உற்சாகத்தைக்கொண்டுவரும்.

manasuanbu said...

வாழ்த்துகள்.

manasuanbu said...

வாழ்த்துகள்.

Mahi_Granny said...

வாழ்த்துக்கள் சங்கமம்

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - வழக்கம் போல சங்கமம் சிறப்பாக நடை பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Rathnavel said...

மனப்பூர்வ வாழ்த்துகள்.

துரைடேனியல் said...

Advance congrats to program.

butterfly Surya said...

வாழ்த்துகள். ஆவலாய் இருக்கிறது. பணியும் துரத்துகிறது. முயற்சி செய்கிறேன்.

மென்பொருள் பிரபு said...

உங்கள் ஆர்வத்தை பார்த்து ஆச்சரியப்படுகிறேன். நன்றி.

ஓலை said...

nice gathering. Congratulation.

nellai ram said...

மனப்பூர்வ வாழ்த்துகள்.

kashyapan said...

கதிர் அவர்களே! வயதும்(76) , நீண்ட தூரமும் (நாகபுரி) தடுக்கிறது. வர ஆசைப்படுகிறேன். நிகழ்ச்சி நடக்கும் அன்று இரவே அதுபற்றிய இடுகையை எதிர்பார்க்கிறேன் .(படங்களுடன்)---காஸ்யபன்

! சிவகுமார் ! said...

சங்கமம் வெற்றி பெற வாழ்த்துகள்!!

முனைவர்.இரா.குணசீலன் said...

அன்பு நண்பரே..

எனது வலையில் தங்கள் இணையபக்கத்தின் சுட்டியோடு அழைப்பு வெளியிட்டிருக்கிறேன்.

நன்றி..

http://gunathamizh.blogspot.com/2011/12/blog-post_10.html

சத்ரியன் said...

ஈரோடு சங்கமம் - 2011 கூடல்விழா சிறப்பாக நிகழ வாழ்த்துக்கள்.

(கலந்துக்கனும்னு ஆசை மட்டும் இருந்து என்ன செய்ய , நான்?)

ராமலக்ஷ்மி said...

இந்த வருடமும் சிறப்பாக நடைபெற என் வாழ்த்துகளும்.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

நன்றி திரு கதிர். என் பிளாகிலும் அப்படியே எடுத்து போட்டுவிட்டேன்..

http://coralsri.blogspot.com/2011/12/2011.html

சங்கர் நாராயண் @ Cable Sankar said...

வாழ்த்துக்கள்

பரிசல்காரன் said...

All the best!

பரிசல்காரன் said...

All the best!

Kousalya said...

நடைபெறபோகும் அருமையான சங்கமம் நிகழ்ச்சிக்கு என் வாழ்த்துக்கள். சிறப்பான ஏற்பாடுகள் அனைத்துக்கும் பாராட்டுகள்.

r.v.saravanan said...

சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் கதிர்

விமலன் said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

மரா said...

கெளம்பி வந்துடறேன் பாஸ் இந்தவாட்டி :-)