தீர்ந்துபோகும் உலகம்



துணி மாட்டும் கவ்விகளில்
முனைப்பாய் தன் நேரத்தை
விதைக்கிறது அந்தக் குழந்தை
ஒன்றோடோன்றை பிணைத்து பிரித்து
வீடு கட்டி மகிழுந்து ஓட்டி
அரைவட்டம் தீட்டி கோபுரம் எழுப்பி
எழுத்துகள் பரப்பி எண்கள் அமைத்து
தம்பிப் பாப்பாவுக்கு கிலுகிலுப்பை செய்து
பறவைக்கு இறக்கை பொருத்தியென….

நிமிடங்களுக்கு நிமிடம்
மாற்றிமாற்றி சிருஷ்டிக்கிறது
அதற்கானதொரு அழகிய உலகத்தில்…

அழகிய உலகம் அவ்வப்போது தீர்ந்துபோவதுமுண்டு
விளையாட்டு அலுத்துப்போகும் தருணங்களிலும்
உலரும் துணி உதிராமல் இருக்க
அம்மா பிடுங்கிச்செல்லும் தருணங்களிலும்

-0-

21ஆகஸ்ட் 2011 திண்ணை இணைய இதழில் வெளியான கவிதை. நன்றி திண்ணை!

.

10 comments:

சத்ரியன் said...

தீரா உலகம் வேண்டும் குழைந்தைகளின் ஏக்கத்தை அருமையாய் பதிவு செய்திருக்கீங்க கதிர்.

vasu balaji said...

அந்தக் குழந்தையே நீங்கதான் மேயரே:))

RaThi Mullai said...

குழந்தைப் பருவத்துக்கே ஒரு முறை போய் விட்டு வந்துவிட்டேன்.அருமை

க.பாலாசி said...

செமயா இருக்கு...

Chitra said...

அழகிய உலகம் அவ்வப்போது தீர்ந்துபோவதுமுண்டு
விளையாட்டு அலுத்துப்போகும் தருணங்களிலும்
உலரும் துணி உதிராமல் இருக்க
அம்மா பிடுங்கிச்செல்லும் தருணங்களிலும்


..... அசத்தல்! படமும் பொருத்தம்.

ஓலை said...

Cute.

VELU.G said...

very nice one

தெய்வசுகந்தி said...

அருமை!!

தராசு said...

சூப்பர்......

vidivelli said...

நிமிடங்களுக்கு நிமிடம்
மாற்றிமாற்றி சிருஷ்டிக்கிறது
அதற்கானதொரு அழகிய உலகத்தில்…/

supper...